16 நவம்பர் 2014

கனவில் வந்த காந்தி 2


நண்பர்களே நாம், எண்ணற்ற நட்புகளோடு பழகியிருப்போம், பழகிக் கொண்டே வருகின்றோம். ஆயினும் சிலரைப் பார்த்த உடனேயே, பேசத் தோன்றும், நட்பாய்ப் பழகத் தோன்றும். உண்மைதானே.

தேவகோட்டை கில்லர்ஜி




மதுரையில், இந்த மீசைக்கார நண்பரை முதன் முதலாய் நேரில் கண்டபோது, ஏதோ ஓர் பழைய நட்பினைப் புதுப்பித்துக் கொண்ட உணர்வுதான் ஏற்பட்டதே தவிர, புதிய நட்பாக தோன்றவேவில்லை.

மீசைக் கார நண்பருக்குப் பாசம் அதிகம்.

     யார், யார் கனவிலோ, யார், யாரோ வரும் இக்காலத்தில், இவர் கனவில் காந்தி வந்திருக்கிறார். நமது எண்ணங்கள்தானே கனவில் வரும்.

உயர்ந்த, உன்னத எண்ணத்திற்குச் சொந்தக்காரர் இவர்.

     கனவில் வந்த காந்தி, இவரிடம் கேட்ட பத்து கேள்விகளை, நம் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார்.


     
காந்திக்குத் தமிழர்கள் மீது அன்பு அதிகம். காந்தி தமிழ் கற்றவர். தமிழில் பேசவும் அறிந்தவர்.

      இந்தியன் ஒப்பீனியன் என்னும் இதழில் 5.6.1909 அன்று காந்திஜி அவர்கள், தான் எழுதிய கட்டுரையில், தாம் அக்கறையுடன் தமிழைக் கற்க வேண்டும் என்று விரும்பியதற்கான காரணத்தை, அவரே கீழ்க் கண்டவாறு விளக்கி எழுதியிருக்கிறார்.
இந்தப் போராட்டத்தில் தமிழர்களுக்கு இணையான அளவு, இந்தியர்களில் வேறு எவருமே பங்கேற்கவில்லை. ஆகையால் தமிழை நான் மிகுந்த கவனத்துடன் கற்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வேறு காரணத்திற்காக அல்லாவிட்டாலும், என் மனதளவிலாவது, என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக நாம் தமிழைக் கற்றேன். நான் அம்மொழியைப் படிக்கப் படிக்க, அதனுடைய அழகுகளை கண்டு அனுபவிக்கிறேன். அது மிக மிக எழில் நிறைந்த இனிய மொழி. அதனுடைய அமைப்பில் இருந்தும், அதில் நான் படித்தவற்றுள் இருந்தும், தமிழர்கள் மத்தியில், புத்திக் கூர்மையும், சிந்தனா சக்தியும் உள்ள, விவேகம் நிறைந்த ஏராளமான மக்கள் இருந்திருக்கிறார்கள். மேலும் மேலும் அவர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறேன்.
     அதனால்தான், அபுதாபியில், வேலை செய்து அசந்து போய், உறங்கிக் கொண்டிருந்த, மீசைக்கார நண்பரின் கனவில், காந்தி தோன்றியிருக்கிறார். கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

     தேவகோட்டையாரே, இதோ, தங்களிடம் காந்தி கேட்ட கேள்விகளுக்கு, எளியேனின் எண்ணங்களையே பதிலாய் தருகின்றேன்

01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
     மீண்டும் கரந்தையில் பிறக்கவே ஆசை

02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
ஆகா. நடக்கிற காரியமா?
ஒரு நாட்டினை நல்லரசாக, வல்லரசாக மாற்றும் சக்தி பெற்றவை, வல்லமை பெற்றவை ஆயுதங்கள் அல்ல. ஆயுதங்களை விட வலிமையான, கல்வியே.
எனவே கல்வித் துறை அரசுடமையாக்கப் படும்.
ஏழு வயதில்தான் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கவே அனுமதிக்கப் படுவர்.
பத்து வயது வரை அரை நாள் பள்ளி
பதினைந்து வயது வரை, மதிப்பெண்ணில் முதலாம் இடம், இரண்டாம் இடம், கிடையவே கிடையாது.
விரும்பும் மேற்படிப்பு.

03.   இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
இந்தியாவே நல்லரசாய், வல்லரசாய் மாறியபின், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் என்ன வேலை.

04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
இன்றிருக்கும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் நூலகங்களாக மாற்றப்படும்.  50 வயதிற்கும் மேல் அனைவருக்கும் ஓய்வூதியம். பெற்றோருடன் வாழும் வரைதான், பிள்ளைகளுக்கு அரசுப் பணி. இல்லையேல் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும், அவர்களும் முதியோர்கள் ஆக்கப் படுவார்கள்.

05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
ஒரு முறை, ஒரே முறைதான் பதவி வகிக்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்று இந்திய அரசியல் பணி என்னும் படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தந்தை அரசியலில் பதவி வகித்தவராக இருந்தால், அவரின் மகனுக்கும், மகளுக்கும், இத்தேர்வு எழுத தடைவிதிக்கப் படும்.

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
வாய்ப்பே இல்லை. தேர்வுகள் அனைத்தும் ஆன் லைன் முறையிலேயே நடத்தப் பெறும். தேர்வர் ஒவ்வொருவரின் விடைகளும், அப்பொழுதே, அக்கணமே இணையத்தில் தானாகவே பதிவேற்றம் செய்யப்பெற்று, பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் படும். தேர்வர் தேர்வறையை விட்டு வெளியே வரும் முன்னே, தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிடும்.

07.   விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
விஞ்ஞான வளர்ச்சிக்கென்று தனி நிதி ஒதுக்கீடு கிடையாது. ஆனால் விஞ்ஞானிகள் கேட்கும் எந்த பொருளும், அது எவ்வளவு தொகையாக இருந்தாலும், கேள்விகள் ஏதுமின்றி, உடன் கிடைக்கும்.

08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
செய்துதான் ஆக வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், முதலில் பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவும் ஆன் லை முறையில். நூறு சதவீத மக்களும் வாக்களித்தே ஆக வேண்டும்.

09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
நூறு சதவிகித வேலை வாய்ப்பு

10.   எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?
மீண்டும் பிறவாமை வேண்டும்.
பிறப்பின் பறவையாய், அகண்ட வானில் உலகை வலம் வர வேண்டும்.

இவ்வினியப் பதிவினைத் தொடர, நான் அழைக்கும் நண்பர்கள்

01.   திருமிகு கவிஞர் முத்துநிலவன்

02.   திருமிகு திண்டுக்கல் தனபாலன்

03.   திருமிகு இரா.எட்வின்

04.   நண்பர் ஜோக்காளி பகவான்ஜி

05.   சகோதரி வேலு நாச்சியார் மு.கீதா

06.   சகோதரி மகிழ்நி றை மைதிலி கஸ்தூரி ரங்கன்
http://makizhnirai.blogspot.com/

07.   நண்பர் சிட்டுக்குருவி விமலன்

08.   திருமிகு மணவை ஜேம்ஸ்
manavaijamestamilpandit.blogspot.in

09.   நண்பர் ம னசு பரிவை சே. குமார்

10.   நண்பர் தளிர் சுரேஷ்

நண்பர்களே, தாங்கள் ஒவ்வொருவரும், பத்து நண்பர்களை அழைத்து, கருத்துக்களைப் பகிரச் சொல்லலாமே.








73 கருத்துகள்:

  1. ஆகா,வாழ்த்துக்கள்,சீரிய பணி சிறக்க,பொதுவாகவே இது போல செய்கைகள் செய்ய விரிந்த மனம் வேண்டும் என்பார்கள்.அது தங்களுக்கு கைவரப்பெற்றிருக்கிறது,வாழ்த்துக்கள் திரும்பவுமாய்/

    பதிலளிநீக்கு
  2. அருமையான சிந்தனை. நனவா(க்)க முயல்வோம்.. முயற்சிப்போம் .
    சுதாகர்.கரந்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நலமா
      நேரில கண்டு பேசி, நீண்ட நாட்களாகிவிட்டன
      நன்றி நண்பரே

      நீக்கு
  3. மிக அருமை.சிந்தனையில் உள்ளங்களை கிரங்கடித்துவிட்டீர்கள்.வருங்கால இந்தியாவை திரும்பிப்பார்க்கவைக்கும் அற்புதக்கருத்துக்கள் .உங்களின் எழுத்திற்கு சிறம்தாழ்ந்த வணக்கங்கள்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எங்களையும் இதில் இழுத்துள்ளார் ஆனால் நாளைதான் முடியும் என்று நினைக்கின்றோம்....

    நல்ல பதில்கள்! ரசித்தோம்...

    நாங்கள் கொடூஅ வேண்டும் என்ற இணைப்புகளை நீங்கல் கொடுத்து விட்டீர்கள். தாம்தம் ஆகும் போது நாங்கள் யாரை இணைக்க வேண்டும் என்று தேட வேண்டும் போல....
    பாசக்காரர்தான்...ஆனா பாசத்த இப்படியா எங்கள மாட்டிக் காட்டுவது...மீசைக்காரார்!!! அஹஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசத்தைக் காட்ட இதுவும் ஒரு வழிதானே நண்பரே
      நன்றி நண்பரே

      நீக்கு
  5. தமிழைப் பற்றி காந்திஜியின் கருத்து மகிழ்ச்சி தருகிறது! கில்லர்ஜியிடம் தப்பித்து உங்களிடம் மாட்டிகிட்டேனே,பதில் சொல்ல முயற்சிக்கிறேன்!
    த ம +1

    பதிலளிநீக்கு
  6. ஏன் அண்ணா!
    y திஸ் கொலைவெறி:))) ரைட்டு யாரு சிக்கலைன்னு பார்கிறேன்:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் யார் எல்லாம் இப்பட்டியலில் விடுபட்டுள்ளார் என்பதை விரைவாகவே பார்த்துவிடுங்கள்
      இல்லையெனில் யாரும் சிக்க மாட்டார்கள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  7. என்னையும் கோர்த்துவிட்டுட்டீங்க! உங்க அளவுக்கு பதில் சொல்ல முடியுமா தெரியலை! முயன்று பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இனிய கனவு. நனவாகட்டும். நலம் விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா16 நவம்பர், 2014

    நல்ல கேள்விகளும் பதில்களும்.
    பதிவிற்கு நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. Vanakkam ayya
    Pathilkal anaithum Arumai ayya. Nalla sinthanaiyalar nengal enpatharku pathil Saatchi. Ithainai Tamil ulagam nangariyum. Santhippom Ayya.

    பதிலளிநீக்கு
  11. நல்ல சிந்தனை... நல்ல பதில்கள்...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா.
    ஒவ்வொரு பதிலும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. என்னையும் கனவு காண அழைத்துள்ளார் முனைவர் ஜம்புலிங்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவு காணுங்கள் ஐயா
      அக்கனவினை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  14. கில்லர்ஜி நம் சிந்தனையை நன்கு தூண்டிவிட்டுள்ளார் என நினைக்கிறேன். உங்களது மறுமொழிகளைக் கண்டேன். அருமையாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அன்பு நண்பருக்கு வணக்கம் எனது விண்ணப்பத்தை ஏற்று என்னையும் மதித்து காந்திஜி அவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக ஆசிரியர் என்ற முறையிலேயே சிந்தித்து பதில்கள் சொல்லி அசத்தி விட்டீர்கள் அருமையிலும் அருமை நன்றி. எப்படியும் மீண்டும் காந்திஜி இந்தவாரம் எனது கனவில் வருவார் தங்களது பதில்களை அவரிடம் சமர்ப்பிக்கிறேன் மீண்டும் நன்றி.

    காந்திஜி அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியும் என்பதே தங்களது பதிவில்தான் தெரிந்து கொண்டேன் அதில் எனக்கு குழப்பம் என்னவென்றால் ? என்னிடம் அவர் ஏன் ? தமிழில் பேசவில்லை என்பதுதான், ஒருவேளை சம்பவம் அபுதாபியில் நடந்த்து என்பதால்கூட இருக்கலாம் காரணம் இங்கு இந்தியர்களை கண்டவுடன் ஹிந்தியில் பேச்சைத் தொடங்குவதுதான் இந்தியர்களின் மரபு அதன் பிறகே மொழியறிந்து பேச்சுக்கள் மாறும் பரவாயில்லை மறுமுறை காணும்போது நானே தமிழில் தொடங்கி விடுவேன்.

    குறிப்பு – இவ்வளவு விரைவாக தங்களது பதிவு வெளியாகுமென நான் எதிர் பார்க்கவில்லை மீண்டும் நன்றி.

    அன்புடன்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் உத்தரவிட்டபிறகு
      அதனை உடனடியாக நிறைவேற்றிவிட வேண்டியதுதானே என் கடமை
      அதனைத்தான் செய்துள்ளேன் நண்பரே
      நன்றி நண்பரே

      நீக்கு
  16. பெயரில்லா16 நவம்பர், 2014

    அரசியல்வாதிகளுக்கான திட்டம் அருமை ஐயா. அமெரிக்காவில் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்கிற விதி இருக்கிறது. அதுபோல் இங்கும் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் ஒரு நாள் மாறித்தானே ஆக வேண்டும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  17. பதில்கள் ஒவ்வொன்றும் அருமை...

    தொடர முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  18. ஆஹா... அனைத்தும் அருமையான பதிவுகள் ஐயா...
    இதில் என்னையும் இழுத்து விட்டிருக்கிறீர்களே... நாங்களெல்லாம் கத்துக்குட்டிகள்... எப்படி... சரி முயற்சிக்கிறேன்...
    அழைப்புக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களா கத்து குட்டி?
      தொடருங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
    2. பதில்களில் கலக்கிட்டீங்க ஐயா...
      உங்களோடு ஓப்பிடும் போது நாங்கள் இன்னும் மாணாக்கர்களே...

      நீக்கு
    3. இல்லை நண்பரே
      தங்கள் எழுத்தைப் படிக்கும் அனைவருமே அறிவர் தாங்கள் மாணவரா இல்லையா என்று
      நன்றி நண்பரே

      நீக்கு
  19. இந்தியாவை மாற்றம் காண வைக்கும் சிந்தனைக் கருத்துகளுடன் பதில்கள் ஐயா.

    அருமை!

    பதிலளிநீக்கு
  20. ஆஹா அண்ணா என்னையுமா ஆனா கொஞ்சம் காலம் கொடுங்க எழுதிடுறேன்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டிய காலம் எடுத்துக் கொண்டு எழுதுங்கள் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  21. சிறந்ததொரு சிந்தனை ....நன்றாக ரசித்துப்படித்தேன் ....நன்றிகள் .......................................உடுவை

    பதிலளிநீக்கு
  22. நல்ல பொறுப்பான பதில்கள். வாழ்த்துகள் அய்யா! பந்தை புதுகைக்கும் அனுப்பியிருக்கிறீர்கள் தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான சிந்தனை பொதிந்திருக்கும் பதில்கள்.

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான பதில்களை வழங்கி முத்திரை பதித்து விட்டீர்கள்.
    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  25. ஒவ்வொரு பதிலும் அருமை ஜெயக்குமார் சார்.
    காந்திஜிக்கு, தமிழ் தெரியும் என்பதை தங்களின் இந்த பதிவு மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  26. கரந்தை ஆசிரியரின் இலட்சியக் கனவுகள் நிறைவேறட்டும்/
    த.ம.6

    பதிலளிநீக்கு
  27. ஐந்தாவது கேள்விக்கான பதில் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. பதில்களால் மட்டுமே என்னைத் தொட்ட தங்களின் காந்தி உண்மையில் அகிம்சை வாதிதான்!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது காந்தியா
      நமது காந்தி நண்பரே
      நான் படித்த வரையில்
      எந்த செய்தியாக இருந்தாலும்,
      அது ஆன்மீகமாக இருந்தாலும்,
      பகுத்தறிவு வாதமாக இருந்தாலும்
      விவாதிப்பதற்கு தயாராக இருந்தவர்தான் காந்தி
      விவாதங்களின் தாய் காந்தி
      நன்றி நண்பரே

      நீக்கு
  29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    முற்றிலும் மாறுபட்ட சிந்தனைக் களத்துடன் தங்களின் அற்புதமான பதில்களால் இந்தப் பதிவு அமர்க்களமாக அமைந்து விட்டது. தீ மூட்டிய கில்லர்ஜி அவர்களுக்கும் அந்தத் தீயை வலைப் பூ முழுவதும் பரவ விட்ட புயல் காற்றாகிய தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  30. காந்தியைப் போலவே பதில்கள்
    எளிமையாகச் சொல்லப்பட்டாலும்
    ஆணித்தரமாகச் சொல்லப்பட்டது அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    பதிலளிநீக்கு
  32. அனைத்துப் பதில்களுமே அருமை.
    அதிலும் 2 & 6 வெகு அருமை.
    ஆசிரியரல்லவா! :-)

    பதிலளிநீக்கு
  33. ஒரு நல்ல ஆட்சியாளரை நாடு இழந்துவிட்டதே என்று வருத்தமாக உள்ளது தங்கள் பதில்களைப் பார்க்கையில். மிகவும் அருமையான பதில்கள். பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  34. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு