01 நவம்பர் 2014

சிம்பனி


ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள்.

    
கரோலின் உங்கர்

ஒரு பாடகி, 21 வயதே நிரம்பிய கரோலின் உங்கர். மற்றொரு பாடகி, 18 வயதே நிரம்பிய ஹன்ரிட்டீ சன்டாங்.

     இவர்களை நோக்கியவாறு, அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தன் முதுகினைக் காட்டியவாறு நின்கின்றார், அரங்கில் அரங்கேற இருக்கின்ற இசைக்குச் சொந்தக்காரர்.

    


ஒரு நாள், இரு நாள் அல்ல, இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு இசைக் கருவியினையும், மனதிலேயே வாசித்து வாசித்து, பற்பல இசைக் கருவிகளை ஒருங்கிணைத்து, இசைத்தால், எழும் நாதம் எவ்வாறு ஒன்றிணைந்து ஒலிக்கும் என்பதையும், மனதிலேயே இசைத்து, இசைத்து, ரசித்து, ரசித்து, இழைத்து, இழைத்து உருவாக்கிய இசை இது.

     சிம்பனி இசை.

     பொதுவாக, சிம்பனி இசை என்பது, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப் படும் இசையாகவே அன்று வரை இருந்து வந்தது.

     இன்றுதான் முதன் முதலாக, சிம்பனி இசையுடன், இரண்டறக் கலந்து, இரு மங்கையரின் இனிய குரலும், இணைந்து ஒலிக்கப் போகிறது. ஷில்லர் என்னும் கவியின் கவிதையினை, சில நேரங்களில், குழுவினருடன் இணைந்தும், சில நேரங்களில், தனித்தும் பாடுவது போல், இசை கோர்க்கப் பட்டிருந்தது.

       நண்பர்களே, இதோ இசை தொடங்கி விட்டது. இசையமைப்பாளர், சிறிய கழி ஒன்றினைக் கையில் வைத்துக் கொண்டு, இசைப்பவர்களுக்கு, சைகையால், கட்டளைகள் பிறப்பிக்கத் தொடங்குகிறார்.

     அடுத்த நொடி, அரங்கே இசை மழையால் நனையத் தொடங்கியது. அதுநாள் வரை யாருமே கேட்டிராத, ஓர் புதிய ராகம், ஆனந்த ராகம், அபூர்வ ராகம், அற்புத ராகம் அனைவரின் செவிகளிலும் நுழைந்து, அனைவரையும், இவ்வுலகினையே மறக்கச் செய்தது.

     ஒரு மணி நேரத்திற்கும் மேல், இசை, இடைவெளியின்றி, நீண்டு கொண்டே செல்கிறது. அரங்கில் இருந்தவர்களுக்குச், சில நிமிடம், இருளடர்ந்த காட்டில் நடப்பதை போல் ஓர் உணர்வு, மறு நிமிடம், கடற்கரையில் நின்று, ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசிப்பது போல் ஓர் உணர்வு, அடுத்த நிமிடம் நெடிது உயர்ந்த மலையில் ஏறுவதைப் போல் ஓர் உணர்வு, திடீரென்று அமைதியான கிராமச் சூழலில்,பரந்து விரிந்து நிழல் கொடுக்கும், மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போல் ஓர் உணர்வு.

     வாழ்வில் இதுவரை அனுபவித்திராத ஓர் அனுபவம், கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாத, ஓர் இன்னிசை. அனைவருமே மயங்கித்தான் போனார்கள்.

     இசை மேதையோ, அசராமல் கைகளை ஆட்டி, இசைக் கலைஞர்களை இயக்கிக் கொண்டே இருக்கிறார். சில சமயம் நிமிர்ந்து நின்றும், சில நேரம் கூனிக் குறுகி, தரையிலே அமர்வது போலவும், குனிந்தும், நிமிர்ந்தும், கழிகளை ஆட்டி, சைகை செய்து கொண்டே இருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவும், செய்கையும், மேடையிலுள்ள இசைக் கருவிகள் ஒவ்வொன்றினையும், அவரே, வாசிப்பது போலத்தான் தோன்றுகிறது.

     ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இசை, நிறைவிற்கு வந்த பொழுது, இசைக் கலைஞர்களைப் பார்த்தபடியே, அமைதியாக நிற்கிறார். தன் இசை, தன் உயிரினையும், உணர்வினையும் கலந்து உருவாக்கிய இசையினை, அரங்கில் உள்ள மக்கள் ஏற்றுக் கொண்டார்களா, இல்லையா என்பது கூடத் தெரியாமல், புரியாமல், சோகமே உருவாய் அசந்து போய் நிற்கிறார்.

      இசைக் கருவிகளை வாசித்த, கலைஞர்களின் முகங்களைப் பார்க்கிறார். ஒவ்வொருவரின் முகத்திலும், மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இசை மேதைக்குக் காரணம்தான் புரியவில்லை. மேலும் கீழும் சைகை காட்டி, காட்டி, ஓய்ந்த கைகளைத் தொங்க விட்டபடியே சோகமாய் நிற்கிறார்.

      தன் இசை ஏற்றுக் கொள்ளப் பட்டதா?  இல்லையா என்பது புரியவில்லை.

      பாடகி கரோலின் மெதுவாக முன்னே வந்து, இசை மேதையினை நெருங்கி, அவரது தோள்களைத் தொட்டு, அவரை, அரங்கில் குழுமியிருக்கும் மக்களை நோக்கித் திருப்புகிறார்.

      இதுவரை அரங்கத்து மக்களுக்குத், தன் முதுகினையே காட்டியபடி நின்ற மேதை, மெதுவாகத் திரும்பி, மக்களைப் பார்க்கிறார்.

     அரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த மக்கள் அனைவரும், தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, கைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கைக் குட்டைகளை, தொப்பிகளை உயர்த்தி, உயர்த்தி, தங்களின் மகிழ்ச்சியினை, பாராட்டினை, வாழ்த்தினை தெரிவித்த வன்னம் உள்ளனர்.

     இக் காட்சியைக் கண்ட இசை மேதையின் கண்கள் கலங்குகின்றன. கண்களில் இருந்து கண்ணீர், ஆறாகப் பெருக்கெடுத்து, கன்னங்களை நனைக்கிறது. தன் இசையை இவ்வுலகு ஏற்றுக் கொண்டு விட்டது என்பது புரிகிறது. மக்கள் கை தட்டும் காட்சியைக் காண்கிறார். கைக் குட்டைகளை உயர்த்தி ஆட்டும் காட்சிகளைக் காண்கிறார். பாதிக்கும் மேற்பட்டோர், தங்கள் தொப்பிகளை உயர்த்தி, மகிழ்ச்சியினை வெளிப் படுத்தும் காட்சிகளைக் காண்கிறார். ஆயினும் அவரைப் பொறுத்தவரை, அரங்கு முழுதும் ஓர் நிசப்தம் குடி கொண்டிருக்கிறது.

      அம்மேதையைப் பொறுத்தவரை எங்கும், எங்கெங்கும் அமைதி, அமைதி.

     நண்பர்களே, புரியவில்லைதானே? சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த இசை மேதையின் காதுகள், கேட்கும் திறனற்றவை. ஒலிகளை உணரும் சக்தியற்றவை. நம்புவது கடினம்தான் நண்பர்களே, ஆனால் அதுதான் உண்மை.

        ஜெர்மனியில் உள்ள பான் நகரத்தில் 1770 இல் பிறந்த இவருக்கு, சிறு வயது முதலே, இசையின் மீது தீராத காதல். சின்னஞ்சிறு வயதில், இவர் பியானோ வாசிப்பதைக் கேட்ட பலரும் சொக்கித்தான் போனார்கள். தொடர்ந்து ஆர்கன், வயலின், வயோலா போன்ற பல இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார்.

இசை மேதை பிறந்த இல்லம்
     1800 வது ஆண்டில்தான், தனது 30 வது வயதில், கேட்கும் தன்மையை, தனது செவிகள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை உணர்ந்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல, நிலைமை மோசமாகி, 1819 ஆம் ஆண்டில், இவர் முழுச் செவிடராகவே மாறிப் போனார்.

      நண்பர்களே, இசை என்பது செவிகளால் கேட்டு ரசிக்கக் கூடியது. இசையை ரசிப்பதற்கே செவிகள் முக்கியம். ஆனால் இவரோ, செவிடரான பிறகுதான், இவ்வுலகு உள்ளவரை நிலைத்து நிற்கக் கூடிய இசையை உருவாக்கினார்.

     இரண்டு ஆண்டுகள், மனதிற்குள்ளாகவே, ஒவ்வொரு கருவியாய் இசைத்து இசைத்து, இழைத்து இழைத்து, உருவாக்கிய இசையை, கடந்த 12 ஆண்டுகளாகவே மேடையே ஏறாதவர், இதோ இன்று மேடையேறி, உலகிற்கு அர்ப்பணித்துள்ளார்.




நண்பர்களே, இந்த இசையின் பெயர்தான்
சிம்பனி 9
இந்த இசை உருவாக்கிய இசை மேதைதான்
பீத்தோவன்.

இசை மேதை பீத்தோவனைப்

போற்றுவோம்.


80 கருத்துகள்:

  1. இசைவான இசைப்பதிவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. படித்தேன், அறிந்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இசைமேதை சிம்பனி பீத்தோவன் அவர்களைப்பற்றிய மாபெரும் சாதனையை அறியதந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா!

    சிம்பனி இசையைப் பற்றி இத்தனை
    சிறப்புத் தகவல்களா?
    வியந்து நிற்கின்றேன்! உங்கள் தேடலை
    மெச்ச வார்த்தைகள் இல்லை
    மிக மிக அருமை ஐயா!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    த ம.2

    பதிலளிநீக்கு
  5. தங்கள் எழுத்தில் கசிகிறது இசை!
    த ம 3

    பதிலளிநீக்கு
  6. அறிந்த தகவல்! ஆனால் தங்களின் நடையில் விறுவிறுப்பாகவும் அழகாகவும் அமைந்தது! பாராட்டுகள் நண்பரே! தொடருங்கள் இதுபோன்று சிறப்பான பகிர்வுகளை! காத்திருக்கிறேன் வாசிக்க!

    பதிலளிநீக்கு
  7. அறியாத பல தகவல்களை உங்களின் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது 'இசை 'வான உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்!
    த ம +1

    பதிலளிநீக்கு
  8. இசை நாடி நரம்புகளை
    அசைக்கும் வடிவம்

    அம்மேதையின் வாழ்வை
    அருமையாய் சொன்னீர்

    பதிலளிநீக்கு
  9. அத்துணை சிம்பனிகளையும் தரவிறக்கம் செய்யமுடியும் அண்ணா..
    அப்புறம் த.மா ஆறு

    பதிலளிநீக்கு
  10. அருமையன பதிவு! அறிந்த தகவல்களே ஆனாலும் தாங்கள் எவ்வலவு அழ்காக எழுதிய விதம் அருமையாக உள்ளது! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. நன்றி ஐயா காணொளி கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன்

      நீக்கு
  12. அரங்கில் அமர்ந்து இசை கேட்ட அற்புத உணர்வு - வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
  13. அங்கே பீத்தோவான்,இங்கே நம்ம ராஜா,,,,,,/

    பதிலளிநீக்கு
  14. சிம்பொனி குறித்த மிகவும் அருமையான பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு. பீத்தோவனின் இந்த இசையை ரசிக்காதர்வர்கள் யாருமே இருக்க முடியாது. அட்டகாசமான எழுத்து பாணி. தொடர்ந்து எழுதிங்கள் வாத்தியாரே..

    பதிலளிநீக்கு
  16. இசைக்கலைஞர் பீத்தோவான் பற்றியும் அவரது சிம்பொனி இசை பற்றியும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    த.ம.8

    பதிலளிநீக்கு
  17. இசை பற்றிய ஆய்வு
    ஒரு
    சிறந்த தகவல் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  18. இசைமேதையைப் பற்றி உணர்வுகரமாக விவரித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  19. அறிந்த தகவல் ஒன்று தங்களுடைய கைவண்ணத்தில் மிளிர்கின்றது. உணர்வுபூர்வமான எழுத்து நடை.. மனமார்ந்த பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  20. அருமையான தகவல்கள் என் மாணவிகளிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்கின்றேன்..சகோ

    பதிலளிநீக்கு
  21. அபூர்வ திறமைசாலியைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  22. பீத்தோவன் காது கேட்கும் குறை உள்ளவர் என்ற அளவில் தெரிந்திருக்கிறேன் பல செய்திகள் அறியாதவை. அதுவும் உங்கள் நடையில் படிப்பது மகிழ்வளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா02 நவம்பர், 2014

    பதிவு அருமை ஐயா. உணர்வுபூர்வமான விவரிப்பு. காட்சியை நேரில் கண்டதுபோல் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  24. பீத்தோவன் கேட்கும் திறன் அற்றவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்! சிம்பனி அமைத்த நிகழ்வினை நேரில் பார்த்தார்போல அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. இசைமேதை பீத்தோவன் பற்றி மிக நெகிழ்வாக எழுதியிருக்கிறீர்கள். கேட்கும் திறனை இழந்தபின் அவர் இசை மேதை ஆனார் என்பது வியப்பான செய்தி. உங்கள் எழுத்துக்கள் அவரை கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது.

    பதிலளிநீக்கு
  26. இசைமேதை பற்றிய அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  27. கரந்தையாரின் பேனாவில் இசை அருவி வழிந்து மனதில் இசையின்பம் பரவி காற்றில் மிதந்தோம்....

    பதிலளிநீக்கு
  28. அந்த நாளில் நடந்த இசையருவியை தங்களின் இந்த பதிவு மூலம் படித்து உணர்ந்தோம். அருமை ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    சிம்பொனி இசையை உருவாக்கிய இசை மேதை பீத்தோவன் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு நிறைய செய்திகளை அறிய உதவியது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் ஒருங்கிணைந்தால் காது கேளாதவர் கூட இசை சாதனை செய்ய முடியும் என்பதை நிரூபித்த இசை மேதையை வணங்குகிறோம். வரலாற்றினைப் பதிவிட்ட தங்களை வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  30. உங்கள் பதிவும் சிறப்பு சேர்க்கிறது

    பதிலளிநீக்கு
  31. இசை மேதைக்கோர் இனிய பதிவு!

    பதிலளிநீக்கு
  32. இசை மேதைக்கோர் இனிய பதிவு!

    பதிலளிநீக்கு
  33. நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள், தங்களை மதுரையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்ததில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே

      நீக்கு
  34. சிறப்பான பகிர்வு. சிம்பனி 9 கேட்டு ரசித்தண்டு. ஆனால் அவர் பற்றிய தகவல்கள் இன்று தான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா04 நவம்பர், 2014

    நீங்கள் ராஜாவைப் பற்றித் தான்
    சொல்ல வருகிறீர்களோ என்று நினைத்தேன்.
    இல்லை அது பீத்தோவன்.
    நல்ல பதிவு.
    வேதா. இலங்காதிலகம்.

    (இப்போதெல்லாம் எல்லார் பதிவிற்கும் கருத்திடும் போது
    பிறீவியூ வந்து உறுதிப் படுத்தும் இலக்கம் போடவே கருத்து
    ஏற்றுக் கொள்ளப் படுகிறது. உங்களிற்கும் இப்படி நடக்கிறதா?
    அல்லது எனக்கு மட்டும் தானா??????...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      பல பதிவுகளில் திடீரென்று பிரிவ்யூ வந்து உறுதிபடுத்தும் இலக்கம் போடத்தான் கூறுகிறது. ஏனென்று புரியவில்லை

      நீக்கு
  36. அருமையான பதிவு
    இசை வெள்ளத்தில் பயணித்தது போல் இருந்தது
    வாழ்த்துக்கள்
    வாழ்க் வளமுடன்

    பதிலளிநீக்கு
  37. மாபெரும் இசை மேதையை தங்கள் பாணியில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இவரைப் பற்றி நான் முன்னர் படித்துள்ளபோதிலும் தாங்கள் அவரை அறிமுகப்படுத்தியுள்ள விதம் எங்களை அந்த மேடைக்கே அழைத்துச் சென்றதுடன் இசையின் நுணுக்கங்களில் எங்களில் ஆர்வமாக இழுத்தது என்பதை உண்மை. வாழ்த்தக்கள்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம்
    ஐயா.
    இசை மேதை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்..அறியாத தகவல் அறிந்தேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  39. பீத்தோவனின் அரங்கேற்றத்தை அப்படியே மனக்கண்ணில் காண வைத்து விட்டீர்கள்.
    அருமை அய்யா.

    பதிலளிநீக்கு
  40. காது கேட்கும் திறனை இழந்தவர் இசை வல்லுனர் என்பது சிறுவயதில் படித்தது .அரங்கேற்றம் அறியா தகவல் !!!!

    பதிலளிநீக்கு
  41. திரு. ஜெயக்குமார்,

    பெய்டோவனை கற்பனை செய்யவே அலாதி இன்பமாக இருக்கிறது. அந்த அளவுக்கு மிக சிறப்பான வர்ணனைகள் எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள். பெய்டோவன் என்றாலே அடுத்தடுத்து மொஸார்ட், பாக், ஹைடன், விவால்டி என பெயர்கள் நீளும்.

    பெய்டோவன், மொஸார்ட் என்ற இரண்டு மேற்கத்திய செவ்வியல் இசை சகாப்தங்கள் ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு