27 அக்டோபர் 2014

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம்


மதுரை மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் விருப்பப்படி, திருமலை நாயக்கர் மகாலைக் கட்டிட, மண் வளம் வாய்ந்த ஓர் இடத்தினைத் தேர்வு செய்து, அங்கு, 305 மீட்டர் நீளமாகவும், 290 மீட்டர் அகலமாகவும் தோண்டித் தோண்டி மண் எடுத்துச் சுட்டு, செங்கல் கற்களை உருவாக்கினர்.

      நாயக்கர் மகாலும் அழகுற கம்பீரமாய் உருவானது. மண் தோண்டி எடுத்த இடத்தில், பாங்குற ஒரு குளமும் உருவானது. இக்குளம்தான், வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளம்


       இத்தெப்பக் குளத்தின் நடுவே ஓர் மைய மண்டபம். மண்டபத்தில் விநாயகர். மண்டபத்தைச் சுற்றிலும் அழகிய தோட்டம். தெப்பக் குளத்தின் தோற்றமே, காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

      மாரியம்மன் தெப்பக் குளத்தின் கரையில், அழகுற காட்சியளிக்கிறது,
கீதா நடன கோபால நாயகி மந்திர்.


நாள் 26.10.2014 ஞாயிற்றுக் கிழமை. காலை 9.00 மணி. சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், நான், எனது மனைவி, மகள் நால்வரும் அரங்கினுள் நுழைகிறோம்.

    அரங்கமே பரபரப்பில் மூழ்கி இருந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. தமிழ் நாடு முழுமையும் இருந்தும், கடல் கடந்தும் பதிவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

     ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு, கரம் பற்றி, எழுப்பிய உற்சாகக் குரல் ஒலி, அரங்கம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

     முகம் நோக்காது இதுநாள் வரை பழகிய உறவுகள், முகங் கண்டு, அகம் மகிழ, சிரித்து மகிழும், இக்காட்சியைக் காண, கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.

     அக்கொடுப்பினை, இவ்வாண்டு எனக்குக் கிடைத்தது.


மதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா, ரமணி ஐயாவை சந்திக்க வேண்டும் என்பது எனது நெடு நாள் கனவு. இதோ முதலாவது ஆளாக நிற்கிறார். கரம் பற்றி நலம் விசாரித்தேன்.


     தேவ கோட்டையில் பிறந்து, அபுதாபியில் பணியாற்றும், பன் மொழி வித்தகர் கில்லர்கி, முகத்தினையே மறைக்கும் மீசையுடன், முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, இரு கரம் நீட்டி, இழுத்து அணைக்கிறார். வாருங்கள் நண்பரே, வாருங்கள் நண்பரே என மனம் மகிழ அழைக்கிறார்.

     இதோ மின்னல் வரிகள் பால கணேஷ். தமிழ் மணத்தில், முதலிடத்தை, நிலையாய் பிடித்து வைத்துப் பாதுகாக்கும், ஜோக்காளி பகவான்ஜி.

     வலைப் பூவில் நான், கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடரினை எழுதிய போது, அன்போடு அழைத்துப் பேசிப், பாராட்டி, தமிழ் மணம் வாக்குப் பட்டையினை, வலையில் இணைத்துக் கொடுத்த, மூங்கில் காற்று திரு டி.என்.முரளிதரன்.

     தனது வயதையும் பொருட்படுத்தாது, சிறு குழந்தைபோல், திரு ஜி.எம். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள்.

     வங்கிப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தேனீ போல் சுறு சுறுப்பாய், சுழன்று, சுழன்று படமெடுத்து, பதிவில் பாங்குற இணைக்கும், திருச்சியின் மூத்த பதிவர், எனது எண்ணங்கள் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள்.
  கையில் நீண்ட புகைப் பட கருவியுடன், திரையுலக ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா போல், தருமி அவர்கள்.
    

கவிதைகளால் மனங்களைக் கொள்ளையடிக்கும், சிவகுமாரன் கவிதைகள் திரு சிவ குமார் அவர்கள்.உலகம் சுற்றும் வாலிபன்
கடற் பயணங்கள் சுரேஷ் அவர்கள்
    அநீதி கண்ட இடத்து வெகுண்டு எழும், வேல் வெற்றியின் திரு அ. வேல் முருகன் அவர்கள்.

      தனது தனித்துவமான நடையால், மனதைக் கவர்ந்திழுத்துச் சொக்க வைக்கும், சிட்டுக் குருவி திரு விமலன் அவர்கள்.


முக நூலில் உலகையே கலக்கும்,
ஸ்ரீவில்லிப் புத்தூர்
திரு இரத்தினவேல் நடராஜன் அவர்கள்

அரங்கத்து வாசலில் ஒரு வேன் வந்து நிற்க, ஒட்டு மொத்த, புதுக் கோட்டைப் பதிவர் உலகமும், முழுதாய் வந்து இறங்கியது.

       வளரும் கவிதை திரு கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில், மலர்தரு கஸ்தூரி ரங்கன், மகிழ்நிறை சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன், வேலுநாச்சியார் சகோதரி மு. கீதா, நண்பர் மகா சங்கர், சகோதரி கல்வியாளர் ஜெய லட்சுமி, சகோதரி மாலதி என புதுக் கோட்டைப் பதிவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், அனைவரையும் காண, அனைவருடனும் பேச, இரு கண்களும், ஒரே ஒரு வாயும் போதவே இல்லை. அவற்றைக் கடன் வாங்கவும் வழியேயில்லை. தவித்தே போய்விட்டேன்.

     ஒவ்வொரு பதிவராய் மேடையேறி அறிமுகம் செய்து முடிக்கவே, அரை நாள் கடந்து விட்டது., இடையில் நாவினிக்க, உடல் குளிர ஓர் ஜிகர்தண்டா.

     பிற்பகல் நிகழ்ச்சியாக, குடந்தையூர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் தயரான, ஓர் குறும் படம்.
சில நொடி சிநேகம்

     இக்குறும் படம் ஓடியதென்னவோ, ஏழே ஏழு நிமிடங்கள்தான். ஆனால் அதன் தாக்கம் விலகத்தான் நீண்ட நேரம் பிடித்தது.

குடந்தையூர் சரவணன் அவர்கள்,
எதிர்காலத்தில், திரையுலகில்
ஓர் நிரந்தர இடத்தினை
எட்டிப் பிடிப்பார் என்பது உறுதி.

வாழ்த்துக்கள் நண்பரே.

     நண்பர் தில்லையகத்து துளசிதரன், கோவை ஆவி, கரை சேரா அலை அரசன் மூவரும், ஏதோ நீண்ட கால அனுபவமிக்க நடிகர்கள் போல், இயல்பான நடிப்பால் உள்ளம் கவர்ந்தனர்.

வாழ்த்துக்கள் நண்ப, நடிகர்களே.

அடுத்த நிகழ்வாக, நூல்கள் வெளியீட்டு விழா.

கரந்தை மாமனிதர்கள்

    தமிழ் வலைப் பதிவர்களின் திருவிழா, மதுரையில் நடைபெற விருக்கின்றது, என்ற செய்தியினை அறிந்த மறு நிமிடமே, வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். எனது நூல் ஒன்றினை வெளியிட விரும்புகிறேன் என்றேன். மகிழ்ச்சி, மகிழ்ச்சி வெளியிடுங்கள் என்றார்.

    அதன் பின்னரே, என்ன வெளியிடலாம் என்று யோசித்தேன். வலைப் பதிவுத் திருவிழாவிற்கென்றே உருவான நூல்தான கரந்தை மாமனிதர்கள்.
     பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க, மதுரை மாவட்டச் செயலாளர், மனித நேயப் பண்பாளர் திரு எஸ். சூரியன் அவர்கள், தனது பல்வேறு அலுவலகப் பணிகளுக்கு இடையிலும், பல்வேறு தொழிற் சங்க அலுவல்களுக்கு இடையிலும், அரை நாள் நேரம் ஒதுக்கி, மன மகிழ்ந்து, அரங்கிற்கு வருகை தந்து, நூலினை வெளியிட்டு, வாழ்த்தி மகிழ்ந்தார்.

     வலைப் பூ உலகிற்கு, என்னைக் கரம்  பிடித்து இழுத்து வந்து, வழி காட்டிய, நெறி படுத்திய, சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், முதற் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.

      இந்த எளியேனின் மீது, அளவு கடந்த அன்பு வைத்துள்ள, கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், கரந்தை மாமனிதர்களின் முகப்பு அட்டையினை, மின்னஞ்சல் வழி பெற்று, மேடையில் வெளியிடுவதற்கான, புத்தக மாதிரியினை, பெரிய அளவில், தயாரிக்கச் செய்து வழங்கி மகிழ்ந்தார்.

மதுரை எஸ்.சூரியன் அவர்களுக்கும்,
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும்
கவிஞர் நா.முத்து நிலவன் அவர்களுக்கும்
இருகரம் கூப்பி,
என் நெஞ்சார்ந்த
நன்றியினைத்
தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.


தேன் மதுரத் தமிழ்
சகோதரி கிரேஸ் பிரதீபா அவர்களின்,
துளிர் விடும் விதைகள்

வேலுநாச்சியார்
சகோதரி மு.கீதா அவர்களின்
ஒரு கோப்பை மனிதம்

சட்டப் பார்வை
திரு பி.ஆர்.ஜெயராமன் அவர்களின்
நல்ல எழுதுங்க... நல்லதையே எழுதுங்க

என புத்தம் புது நூல்கள், அடுத்தடுத்து வெளியிடப் பெற்றன.

    வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், நன்றி கூற வலைப் பதிவர் விழா சிறப்புடன் நிறைவுற்றது.

     என்ன, விழா அதற்குள் நிறைவு பெற்று விட்டதா? மணி ஐந்தாகி விட்டதா? அனைவருமே, நம்பாமல், தங்கள் கை கடிகாரத்தினை மீண்டும், மீண்டும் பார்த்து வியப்படைந்தனர்.

     காலை முதல் மாலை வரை, ஒரு பதிவர் கூட அரங்கை விட்டு வெளியே செல்லாமல், விழாவில் மனமகிழ்வோடு கலந்து கொண்டதே,
இவ்வாண்டின் பதிவர் திருவிழா
வெற்றி    வெற்றி    வெற்றி
என்பதை பறைசாற்றியது.

     ஒரு நாள் பதிவர் திரு விழா சிறப்புடன் அரங்கேற, பல மாதங்கள் அயராது பாடுபட்ட, தங்களின் சொந்தப் பணிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு,
முழு மூச்சாய் களமிறங்கிச்
செயலாற்றி
சாதித்துக் காட்டிய
தமிழ்வாசி பிரகாஷ்
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்
பகவான் ஜி
தமிழன் கோவிந்தராஜ்
மதுரை சரணவன்

நிகழ்ச்சியினைத் தொய்வின்றித் தொகுத்து வழங்கிய
மகேந்திரன் பன்னீர்செல்வம்
தீபா நாகராணி
மற்றும்
இவர்களை,
தங்களது நல் அனுபவத்தால், நல் வழி காட்டி இயங்கிய
அன்பின் சீனா
தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி
அவர்களுக்கும்,
மனமார்ந்த நன்றியினை
வலைப் பூ நண்பர்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

இவ்விழா வெற்றி பெற, பால மாதங்கள்
அலைந்து, அலைந்து
சிறித இளைத்தே போய்விட்ட
தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு
மீண்டும் ஒரு முறை நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

சாதித்துவிட்டீர்கள் நண்பர்களே.


112 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. அருமை அண்ணா...மிகச்சிறப்பாக விளக்கமான பதிவு நான் மறந்தவைகளை நினைவூட்டி விட்டீர்கள் தங்களை குடும்பத்துடன் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 3. இந்தப்பதிவின் மூலம் ’மதுரையில் மகிழ்ச்சி வெள்ளத்தில்’ எங்கள் அனைவரையும் மூழ்க வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நான்காம் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்க்கும் நான்மாடக் கூடல் நகர், மதுரையில்.

  சி. ஜெயபாரதன்.

  பதிலளிநீக்கு
 5. முகம் நோக்காது இதுநாள் வரை பழகிய உறவுகள், முகங் கண்டு, அகம் மகிழ, சிரித்து மகிழும், இக்காட்சியைக் காண, கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்./

  இனிய பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 6. அன்பின் அய்யா, துணைவியார் மகள் எனக் குடும்பத்துடன் வந்து இது நமது குடும்பவிழா என்பதை உணர்த்திய தங்களின் அன்பு மிகப்பெரிது. “கேளாரும் வேட்ப“ தங்களின் விழாத் தொகுப்பு இருந்தது. தங்களின் நூலை வெளியிட்டு, உணர்வுப்பூர்வமாகப் பேசிய திரு சூரியன் அவர்கள் உள்ளிட்டோரின் பேச்சைத் தனிப்பதிவாகத் தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன். பணியுமாம் என்றும் பெருமை என்பது எப்போதும் தங்களை நினைவூட்டும் குறள்! தாங்கள் இன்னும் உயர்வீர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களால் பண்பாளர் திரு சூரியன் அவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தமையை பெருமையாக நினைக்கின்றேன் ஐயா
   தாங்கள் வெளியீட்டிற்காக வழங்கிய புத்தக மாதிரி அனைவராலும் பாராட்டப்பட்டது மிகுந்த மகிழ்வளிக்கிறது ஐயா
   நன்றி ஐயா

   நீக்கு
 7. அண்ணா ஒரு படம் தங்கள் அனுமதியுடன் எடுத்துக்கொள்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 8. அண்ணா பரிசு கொடுத்தாங்களே..ஒரு பைல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோதரியாரே
   அன்பளிப்பாய் பை வழங்கிய நிகழ்சினைச் சொல்ல மறந்துவிட்டேன்

   நீக்கு
 9. வலைப் பதிவர் சந்திப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றதை அறிந்து மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 10. அருமையாய் நிகழ்வினை பதிவு செய்து விட்டீர்கள் !
  மதுரை பதிவர் திருவிழாவை வெற்றிகரமாய் ஆக்கியதற்கு மிக்க நன்றி!
  மூன்றாவது புகைப் படத்தில் முதலில் நிற்பது அடியேன் ,அடுத்து பால கணேஷ் ஜி ,அடுத்து ரமணி ஜி ,அடுத்து கில்லர்ஜி.இந்த விளக்கம் எதற்கு என்றால் புகைப் படத்தின் கீழ் உள்ள வாசகம் சேர்ந்து வருவதால் !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்வினை அளித்தது நண்பரே
   இதுபோன்ற சந்திப்புகள் தொடர வேண்டும்
   நன்றி நண்பரே

   நீக்கு
 11. மறுபடியும் பதிவர் திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வு.பகிர்வுக்கு நன்றி அய்யா. தங்களைப் போன்றோரை சந்தித்தது என் வாழ்நாள் பேறு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. தங்களைப் போன்ற கவியின் நட்பினைப் பெற நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நண்பரே
   நன்றி

   நீக்கு
 12. அய்யா, தாங்கள் அனுமதி தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு புகைப்படம் இந்தப் பதிவிலிருந்து எடுத்து என் வலையில் இணைத்துக் கொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லவேத் தேவையில்லை நண்பரே
   இது தங்களின் வலை,தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்
   நன்றி நண்பரே

   நீக்கு
 13. நிகழ்வு பற்றிய உயிரோட்டமான தொகுப்பு,,,,வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 14. மதுரைப் பதிவர் திருவிழாவை
  நேரில் வந்து பார்த்தது போன்ற
  சுகமளித்த அருமைான பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 15. இந்த வலைப்பதிவர்கள் திருவிழா மூலம் தங்களை சந்தித்தது எனக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. தங்கள் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. படங்கள் நிகழ்வை மேலும் மனதில் பதிய வைத்துள்ளது.

  மேலும் மேடையில் நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக வலைப்பூவும் சட்டம் மற்றும் வணிகம் என்ற தலைப்பில் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் காலம் கருதி பேச இயலவில்லை. எனினும் பிறகு ஒரு நிகழ்வில் பேசுவோம்.

  அந்தந்த துறையில் ஆர்வம் உடைய பதிவர்களை கொண்டு மற்றும் ஒருங்கிணைத்து, அனைவரும் பயன் பெறத் தக்க வகையில் நிறைய செயல்கள் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா
   தங்களின் பணி தொடரட்டும் ஐயா
   நன்றி

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன் ஐயா
   மிகவும் பயனுள்ள தளம்
   இனி தொடர்வேன் ஐயா நன்றி

   நீக்கு
 17. சிறப்பான படங்களும் தொகுப்பும் அருமை நண்பரே.ரமணி அய்யா எல்லோரின் விருப்பான பதிவரும் நண்பரும் கூட

  பதிலளிநீக்கு
 18. பதிவர் சந்திப்பு விழா
  பற்றிய பதிவு
  இனிக்கிறது தீபாவளி
  இனிப்புக்கள் போல்
  நன்றி KJ

  பதிலளிநீக்கு
 19. உங்கள் பரவசம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது. எங்களையும் தொற்றிக் கொண்டது. புகைப்படப் பகிர்வு கவர்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 20. Dear Mr.Jayakumar,
  Excellent presentation.I felt as if I was present there.It is great oppurtunity to meet so many who were mentally familiar to you but physically not.If a souvenir is prepared please post me a copy,what ever be the cost.
  colonel(Retd)
  P.Ganesan,943 H Block,17th main road,Annanagar,Chennai 600040.
  Thank you.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது நூலினை தங்களுக்கு அனுப்பியுள்ளேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 21. மிகச் சிறப்பாக அருமையாக எந்த நிகழ்வும்
  விட்டுப்போகாது தொகுத்துக் கொடுத்தவிதம்
  மிக மிக அருமை

  காலை நிகழ்வினில் மேடைவிட்டு இறங்காது
  இருக்க நேர்ந்தததாலும் மாலை நிகழ்வுகள் தொய்வின்றி
  மிகச் சிறப்பாகத் தொடர்ந்த காரணத்தாலும்
  பல பதிவர்களை சந்தித்துப் பேசி மகிழ இயலவில்லை
  (மிகக் குறிப்பாக தங்களுடனும் இரத்தினவேல் ஐயா
  அவர்களுடனும் )

  குடும்பத்துடன் வந்திருந்து சிறப்பித்தது அதிக
  மகிழ்வளிக்கிறது

  மீண்டும் சந்திப்போம்..வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை ஐயா
   அது நிறைவேறிவிட்டது
   மீண்டும் சந்திப்போம் ஐயா
   மிக்க நன்றி

   நீக்கு
 22. வண்டியூர் தெப்பக்குளம் உருவான வரலாறு தெரிந்து கொண்டேன். சொன்னதற்கு நன்றி! இந்த இனிய விழாவில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பல வலைப்பதிவர்களோடு
  உங்களை படங்களில் பார்க்கும்போது உங்களின் ஆர்வம் பாராட்டிற்குரியது. நான் அதிகம் படங்கள் எடுக்கவில்லை. களைப்பும் ஒரு காரணம்.

  வலைப்பதிவில் படங்களின் பகிர்வும் கட்டுரையும் சிறப்பாக உள்ளன. உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களைப்பையும் பொருட்படுத்தாது நீண்ட தொலைவு பயணித்து
   நிகழ்ச்சி தொகுப்பினையும் முதன் முதலாத தங்களின் பதிவினில் வெளியிட்டு, மதுரை நிகழ்விற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் ஐயா
   தங்களைச் சந்தித்ததில் பெரு மகிழ்வு அடைந்தேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 23. ஓர் அருமையான நிகழ்வினை தாங்கள் பதிந்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. சந்தித்த நண்பர்கள், வலைப்பூ முகவரிகள் என ஒவ்வொருவர் பெயரையும் விவரமாகத் தாங்கள் தந்து அவர்கள் அனைவரையும் மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். தங்களுடன் விழாவில் கலந்துகொண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். தங்கள் நூலினை வெளியிட வாய்ப்பளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. எழுத்துலகில் தனித் தடம் பதித்து வரும் தாங்கள் வலைப்பூ உலகிலும் தனி முத்திரை பதித்துள்ளீர்கள். தாங்கள் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுக்குத் துணை நிற்கும் தங்களின் குடும்பத்தார்க்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்வேறு அலுவல்களுக்கு இடையேயும் மதுரைக்கு வந்திருந்து, நூலின் முதற்படியினைப் பெற்றுச் சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 24. நேரில் வந்து பங்கேற்ற உணர்வை ஏற்படுத்தியது தங்களின் பதிவு! விழா சிறக்க உழைத்த பங்காற்றிய அனைவருக்கும் என் பாராட்டுகள்! பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 25. இரு கண்களும் ஒரு வாயும் போதவில்லை... அருமையாச் சொன்னீங்க ஜெயக்குமார் ஸார் உணர்வுகளை.. நாங்க எல்லாரும் ஃபீல் பண்ணினதும் இதத்தான். புத்தக வெளியீட்டப்ப பெரிய சைஸ் மாதிரிகளை முத்துநிலவன் ஸார் செஞ்சிருந்ததும் ரம்யமா இருந்துச்சு. இனி புத்தக விழா வெச்சா நானும் இதத்தான் செய்யணும்னு தோணிச்சு. இதுபோன்ற அடுத்த மகிழ்ச்சித் திருநாளுக்காக புதுக்கோட்டையை நோக்கி ஆவலோட காத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்தித்தது பெரு மகிழ்வினை அளித்தது ஐயா
   மீண்டும் சந்திப்போம்
   நன்றி ஐயா

   நீக்கு
 26. பதில்கள்
  1. நன்றி நண்பரே
   இருமுறை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதும்
   நேரில் சந்தித்து உரையாடியதும் மிகுந்த மகிழ்வினை அளித்தது நண்பரே
   இதுபோன்ற சந்திப்புகள் தொடர வேண்டும்
   நன்றி நண்பரே

   நீக்கு
 27. என் மனமெல்லாம் மாநாடு.
  என் கண்கள் இரண்டும் திரை கண்டு
  நேரடி ஒளி பரப்பில்
  காணாத செய்தி பலவும்
  கண்டு எனை மகிழச் செய்த
  தங்களை சந்திக்க இயலவில்லை
  என்பதே
  பெரிய குறை.

  மற்ற எல்லோரையுமே கடந்த பதிவர்
  மாநாட்டில் சந்தித்து இருக்கிறேன்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா
   தங்களைச் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை
   விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 28. ஒரு முக்கிய பணியின் நிமித்தம் சென்னையில் இருக்க வேண்டியிருந்ததால் உங்களையெல்லாம் மதுரை வலைப்பதிவர் விழாவில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனாலென்ன அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திக்கலாம். தங்கள் பதிவு மூலம் சிலரை ‘பார்க்கும்’ வாய்ப்பு கிடைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பதிவர் சந்திப்பில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 29. நண்பரே! மிக அருமையான பதிவு! நெரில் கண்டது போன்ற விளக்கமான ஒரு தொகுப்பு! நாங்கள் வர முடியாமல் போனது மிகவும் வருத்தம்தான்.

  எல்லோரையும் நேரில் காணும் ஒரு வாய்ப்பு போயது! எங்கள் இயக்குனரையும், குழுவையும், படத்தையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே! தங்களை எல்லாம் நேரில் சந்திக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது!

  மிக்க நன்றி! படிர்விற்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும் படம் அருமை நண்பரே
   தங்களை விரைவில் சந்திக்கும் காலம் நிச்சயம் வரும் நண்பரே
   நன்றி

   நீக்கு
 30. பெயரில்லா28 அக்டோபர், 2014

  பதிவைப்படித்ததும், நேரில் கலந்து கொண்டதைப்போன்ற அனுபவம் கிடைத்து விட்டது. மகிழ்ச்சி, மகிழ்ச்சி ஐயா.

  பதிலளிநீக்கு
 31. வழக்கம் போல் விழா நிகழ்சி பற்றிய தொகுப்பு அருமை! நான் பலமுறை சொல்லியதைப் போல தங்கள் பதிவுகள் நூலாக வெளிவந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் பலமுறை கூறியதன் படியே நூலினை வெளியிட்டேன் ஐயா
   தங்களைச் சந்திக்க இயலவில்லையே என்னும் வருத்தம்தான் மனதில் உள்ளது
   விரைவில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டும் என எண்ணுகின்றேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 32. ரசிக்கும்படியாக நிகழ்ச்சி தொகுப்பு சிறப்பு... நன்றி ஐயா...

  அடுத்த மாதம் முதல் புதுக்கோட்டை வலைப்பயிற்சிக்கு ஆயித்தமாகி விட்டேன்... சந்திப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   புதுக் கோட்டையில் சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 33. தங்களின் இந்த பதிவு மூலம், விழா எவ்வளவு அருமையாகவும், சிறப்பாகவும் நடேந்தேறியிருக்கிறது என்பதை அறிவ முடிகிறது, வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம் = கரந்தை ஜெயக்குமார் = மதுரையில் வலைப்பதிவர்கள் திருவிழா - 26.10.14 பற்றி அற்புதமான பதிவு. எல்லா பதிவுகளின் இணைப்புகளும் இருக்கின்றன. அவைகளைப் பயன்படுத்தி பதிவுகள் படிக்கிறேன். உங்கள் அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். உங்களை குடும்பத்துடன் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி & வாழ்த்துகள் திரு கரந்தை ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு ஐயா
   அக்கனவு நிறைவேறிவிட்டது
   மிக்க மகிழ்ச்சி ஐயா
   முகநூல் பகிரிவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 35. பெயரில்லா28 அக்டோபர், 2014

  இனிய பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!
  ரசிக்கும் நிகழ்ச்சி தொகுப்பு சிறப்பு...
  மகிழ்ச்சியடைந்தேன்!
  நன்றி
  வாழ்த்துக்கள்
  Vetha.Langathilakam

  பதிலளிநீக்கு
 36. அருமையான பதிவு. உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு பெற்றோம். அனைவரையும் உங்கள் மூலம் படங்களில் கண்டு மகிழ்ந்தோம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 37. உடல் நிலை காரணமாக வர இயலாத நிலை. எண்ணமெல்லாம் மாநாட்டையே சுற்றி வந்தது.வேறு பதிவர்கள் மாநாட்டு வருணனை யை வழங்கிக் கொண்டிருந்தாலும். கரந்தையாரின் கைவண்ணத்தில் படிக்கும் போது அதன் சுவையே தனி தானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்திக்க இயலாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது ஐயா
   விரைவில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எண்ணுகின்றேன்
   நன்றி ஐயா

   நீக்கு
 38. சற்றே வித்தியாசமான பார்வை சார், அதிலும் அந்த முதல் இரு பாராக்கள் இந்தப் பதிவுக்கு இன்னும் சுவை சேர்த்தது... தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே

   நீக்கு
 39. மிக சிறப்பாக வரலாற்று சிறப்புமிக்க பதிவர் சந்திப்பை தொகுத்தளித்திருக்கிறீர்கள் ஐயா! தங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா
   மிக்க நன்றி

   நீக்கு
 40. மதுரையில் நடந்த பதிவர் மாநாட்டின் தொகுப்புரையை சிறப்பாகத் தொகுத்தளித்தமைக்கு நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 41. எங்கள் நண்பர் குடந்தையூர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் உருவான 'சில நொடி சிநேகம்' குறும்படத்தைப் பாராட்டி, நண்பருக்கு வாழ்த்து சொன்னதற்கும் அதில் பங்கேற்ற பதிவர் நண்பர்களின் நடிப்பை பாராட்டியமைக்கும் நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 42. தங்கள் புத்தக வெளியீட்டிற்கு மகிழ்ச்சி சார்!

  பதிலளிநீக்கு
 43. 3 -ஆம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா 2014-மதுரை
  காணக் கிடைக்காத காட்சிகளை கண்முன் கொண்டுவந்து தந்தமைக்கு கரந்தையாருக்கு கரம் தந்து பாராட்ட வேண்டும் போல் உள்ளது
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 44. படித்து மிக மகிழ்ந்தேன், ஐயா.

  பதிலளிநீக்கு
 45. அன்பின் ஜெயக்குமார்

  விழாவில் மேடையிலேயே அமர்ந்திருந்ததால் தாங்கள் உள்ளிட்ட சக பதிவர்களுடன் நேரம் செலவழிக்க இய்லவில்லை. புதுக்கோட்டையில் பதிவர்களுடன் மட்டுமே நேரத்தினைச் செல்வழிக்க விரும்புகிறேன்.

  இப்பதிவு அருமை - படங்களூம் அதற்கு உண்டான விளக்கங்க\ளும் அருமை. மிக மிக இரசித்தேன்.

  விழாவின் அத்தனை நிகழ்வுகளையும் விபரமான விளக்கத்துடன் ப்திவிட்டது நன்று .

  தங்களீன் புத்தக வெளியீடும் சிறப்பாக நடை பெற்றது.

  சிறப்பாக நடைபெற்ற திருவிழா -

  அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீ னா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்வினை அளித்தது ஐயா
   தங்களின் மேற்பார்வையில் வழி கர்ட்டுதலில் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது ஐயா
   மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

   நீக்கு
 46. அனைவரும் நன்கு தெரிந்தவர்கள். அதனால் இப்பதிவைப் பார்க்கின்ற போது நாம் கலந்து கொள்ள முடியவில்லையே என்று கவலையாக இருந்தது. பதிவுகளால் கலக்குபவர்கள் நிகழ்வுகளை நிறைவில்லாமல் நடத்துவார்களா? தொடருங்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 47. தங்கள் குடும்பத்தோடு இனியதொரு சந்திப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன் நண்பரே

   நீக்கு
 48. தங்கள் பகிர்விலே சந்தோஷம் தெரிகிறது ஐயா...
  தங்கள் புத்த்க வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.
  போட்டோக்கள்... அதைப் பகிர்ந்த விதம் அருமை...

  பதிலளிநீக்கு
 49. தங்களை குடும்பத்தோடு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார் ...

  பதிலளிநீக்கு
 50. உங்களிடம் தனியாக நன்றியும் வாழ்த்துக்களும் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் அன்றைய பரபரப்பில் சொல்ல இயலாமல் போனது, இப்போது சொல்லிவிடுகிறேன் ...

  கரந்தை மனிதர்கள் நூலுக்காக மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஆக்கப் பூர்வமான முயற்சி ...

  நன்றியை நேரில் சொல்கிறேன் சார் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   குறும் படத்தில் த்ங்களின் யதார்த்த நடிப்பு கண்டு மகிழ்ந்தேன்
   வாழ்த்துக்கள் நண்பரே

   நீக்கு
 51. நேரில் பார்த்ததுபோன்ற அனுபவத்தை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 52. நேரம் இல்லாததாலும் அன்று இரவே சென்னை செல்ல வேண்டி இருந்ததாலும் மதியமே புறப்பட்டு விட்டோம். புத்தக வெளியீட்டு விழாவையும் குறும் படத்தையும் க்ண்டு ரசிக்க முடியாமல் போய் விட்டது. இளம் பதிவர்களுடன் மனம் விட்டுப் பேசவும் முடியவில்லை. நீங்கள் உங்கள் துணைவியாருடனும் மகளுடனும் வந்திருந்ததை என் மனைவி பிற்பாடு சொன்னாள். எனக்கு அறிமுகப் படுத்தவில்லையே. இப்போதுதான் ஓரோர் பதிவாக விஜயம் செய்கிறேன். அருமையான தொகுப்பு உங்களுடையது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனைவியையும் த, மகளையும் அன்றிருந்த பரபரப்பில் தங்களிடம் அறிமுகப் படுத்த மறந்து விட்டேன் ஐயா
   மன்னிக்கவும்,
   இந்நிகழ்விற்காக பெருந்தொலைவு பயணம் செய்து வந்தது கண்டு மகிழ்ந்தேன் ஐயா
   மிக்க நன்றி

   நீக்கு
 53. தமிழர்கள் வலைப்பதிவின் திருவிழாவில் கலந்துகொண்டு மதுரைமாநகரின் மற்றும் ஒரு சிறப்பாய் கரந்தை மாமனிதர்கள் என்ற நூலினை வெளியிட்டு விழாவில் சிறப்பு சேர்த்து பாராட்டினைப்பெற்ற தங்க்களுக்கு என் உளம் கனிந்த்த வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 54. அன்பின் ஜெயக்குமார்

  மறுபடி ஒரு தடவை பொறுமையாகப் படித்து உள்வாங்கி மனதில் அசை போட்டு மகிழ்ந்தேன் - தங்களீன் பதிவு பாராட்டுக்குரியது

  இப்பதிவில் எனது இரண்டாவது மறுமொழி

  பாராட்டுகள்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 55. அன்பின் ஜெயக்குமார்

  மறுபடி ஒரு தடவை பொறுமையாகப் படித்து உள்வாங்கி மனதில் அசை போட்டு மகிழ்ந்தேன் - தங்களீன் பதிவு பாராட்டுக்குரியது

  இப்பதிவில் எனது இரண்டாவது மறுமொழி

  பாராட்டுகள்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 56. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  உங்களுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியினை நேரிடையாக பார்த்த உணர்வினை ஏற்படுத்தியுள்ளது தங்களின் இந்த அற்புதமான பதிவு. நாம் பயின்ற பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம், நாம் வசிக்கும் ஊர் போன்ற இடங்களில் உள்ளோரிடம் நாம் பழகி வருவது போன்று வலைப்பூக்களில் இருப்போரும் பழகி ஒரு உறவாகப் பழகி விழாக்கள் நடத்துவது அற்புதம். அந்நிகழ்ச்சியினை தாங்கள் விவரித்த விதம் மிக அற்புதம். தொடருட்டும் வலைப்பூ நட்பும் வளரட்டும் வலைப்பூ உறவும்.

  பதிலளிநீக்கு
 57. வணக்கம்
  ஐயா.
  வலைப்பதிவு சந்திப்பு நடை பெற்றஅன்று நேரலையில் பார்க்க கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ஐயா
  2016 சந்திப்புக்கு வருவதற்கு சாத்தியம் உள்ளது.. பார்க்கலாம்... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு