01 அக்டோபர் 2014

செடிகளின் காதலர்


அப்பா

மகனின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார் தந்தை.

என்னோட மேற்படிப்புப் பற்றி, உங்களுடன் சிறிது நேரம் பேச வேண்டுமப்பா.

      தந்தை மகனை வியப்புடன் பார்க்கிறார். தன் மகனின் வயதுடைய மற்ற பிள்ளைகள் எல்லாம் பொறுப்பின்றி, எதிர்காலச் சிந்தனைகள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாக, ஊர் சுற்றித் திரியும்போது, இவன் மட்டும், படிப்பைப் பற்றிக் கவலைப் படுகிறானே. தந்தைக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.

சொல்லப்பா

நான் ஐ.சி.எஸ்., படிக்க விரும்புகிறேன் அப்பா. ஆனால் இப் படிப்பைப் படிக்க இலண்டனுக்குத்தான் சென்றாக வேண்டும். செலவு அதிகமாகும்.

செலவு கிடக்கட்டும். ஐ.சி.எஸ்., படித்து முடித்துவிட்டு, நீ என்ன செய்யப் போகிறாய்.


      மகன் குழம்பித்தான் போனான். எதற்காகத் தந்தை, தெரியாதது போல் கேட்கிறார். அந்தக் கால ஐ.சி.எஸ்., என்பது, இன்றைய ஐ.ஏ.எஸ்., படிப்பிற்கச் சமமானது. படித்து முடித்துவிட்டால் அரசுப் பணிதான்.

      சொல்லு மகனே, ஐ.சி.எஸ்., படித்து முடித்துவிட்டுத் திரும்பி வந்து, நீ என்ன செய்வாய்?

மகன் அமைதி காக்கிறான்.

நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும், இந்த வெள்ளைக் காரர்களுக்குச் சேவகம் செய்யப் போகிறாயா?

     தந்தையின் வார்த்தைகளில் இருந்த நியாயம், மகனின் நெஞ்சைச் சுட்டது.  மகன் பல நாள் யோசித்தான். ஒரு முடிவிற்கு வந்தான்.

அப்பா, நான் மருத்துவராகப் போகிறேன்.

     இங்கிலாந்து, இலண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தான். புதிய தேசம், புதிய சூழ்நிலை, புதிய வகுப்பு, புதிய பாடம் எல்லாமே பிடித்துத்தான் இருந்தது.

      ஆனால் அனாடமி வகுப்பு மட்டும் சுத்தமாய் ஒத்தே வரவில்லை. அனாடமி அறைக்குள் நுழைந்தாலே, குப்பென்று மூக்கைத் துளைக்கும், அந்தத் துர்நாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை.

      மிகுந்த சிரமத்துடன், மூக்கைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான்., மனித உடல் அறுக்கப் படுகின்ற காட்சியைக் கண்டதும் அவனுக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. அப்படியே மூக்கைப் பிடித்துக் கொண்டு சரிந்தான்.

     இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல். ஒருவாறு உடல் நலம் தேறினான். மீண்டும் அனாடமி வகுப்பு. மீண்டும் அதே துர்நாற்றம். மீண்டும் மயக்கம். மீண்டும் காய்ச்சல்.

      அனாடமி படிக்காமல் எப்படி மருத்துவர் பட்டம் பெறுவது? மருத்துவப் படிப்பிற்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டான்.

     வேறுவழியின்றி இலண்டனிலேயே, ஒரு அறிவியல் கல்லூரியில் சேர்ந்தான். விருப்பம் இன்றித்தான் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தான். சில நாட்களிலேயே புரிந்து விட்டது, தனது கல்லூரி இதுதான். தான் படிக்க வேண்டிய படிப்பும் இதுதான் என்பது புரிந்து விட்டது.

     நண்பர்களே, இம்மாணவன் யார் என்று தெரிகிறதா? ஈ, எறும்பு முதல் மனித உயிர்களுக்கு மட்டுமே உயிர் உண்டு என்று பல நூறு ஆண்டுகளாக, நம்பப்பட்டு வந்த உண்மையை, சுக்கு நூறாக உடைத்து, மரம், செடி, கொடிகளுக்கும் உயிரும், உணர்வும் உண்டு என்பதை நிரூபித்துக் காட்டிய இந்திய மாமேதை இவர்தான்.

     என்னது? தாவரங்களுக்கும் உயிர் உண்டா, உலகமே இவரைப் பார்த்து சிரித்தது. யாரும் நம்பவில்லை. 1901 ஆம் ஆண்டு இலண்டன் ராயல் சொசைட்டியே, இவரது சொல்லை நம்பாமல், அழைத்தது. நீரூபித்துக் காட்டு எனச் சவால் விட்டது. இலண்டன் சென்றார்.
    

தாவரங்களும் நம்மைப் போலவே சுவாசிக்கின்றன, வளர்கின்றன, களைப்புறுகின்றன, புயலுக்கும், சூறாவளிக்கும் அதிர்கின்றன. நாம் மரங்களை வெட்டுகிறோமல்லவா? அப்பொழுது அவை சொல்லொண்ணா வேதனையினை அனுபவிக்கின்றன என்றார்.

பேசியது போதும் நிரூபித்துக் காட்டு என்றனர்.

      ஒரு தொட்டியில் இருந்து வேரூடன் ஒரு செடியை எடுத்து, வேறொரு தொட்டியில், அச்செடியைத் தண்டுவரை நீரில் மூழ்குமாறு செய்தார். அந்தச் செடியுடன், ஒரு கருவியை இணைத்து, அச்செடியின் நாடித் துடிப்பை, ஒரு திரையில், ஒளி வடிவத்தில் காட்டினார்.

     ராயல் சொசைட்டி ஒரு நிமிடம் மூச்சு விடவே மறந்தது.

     அடுத்ததாக, தொட்டியில் இருந்த நீரை வெறியேற்றிவிட்டு, அத்தொட்டியில், புரோமெட் என்னும் விஷ திரவத்தை ஊற்றினார்.

     செடியின் நாடித் துடிப்பு, மெல்ல மெல்ல குறைந்து, பிறகு ஒரு வித நடுக்கத்தோடு, நாடித் துடிப்பு நின்றே போனது. கண்முன்னே ஒரு செடியின் மரணம்.

      ராயல் சொசைட்டி ஒரு நிமிடம் மௌனமாய் எழுந்து நின்று, அச்சிறு செடிக்கு அஞ்சலி செலுத்தியது. மறுநிமிடம் கைத்தட்டல்கள் விண்ணைப் பிளந்தன.
      

மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிற, இவரின் திரு உருவப் படத்தினை, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மாளிகையில் வைத்துப் பாராட்ட வேண்டும் என்றார், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.


நண்பர்களே,
இவர்தான் இந்திய மாமேதை

ஜெகதீஸ் சந்திர போஸ்.

68 கருத்துகள்:

 1. உயிருள்ள தகவல்கள் .... அருமையோ அருமை.

  பதிலளிநீக்கு
 2. மாமேதையைப் பற்றி மறுபடி நினைக்க வைத்தீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மிகச் சிறந்த வெளியீடு நண்பரே.

  http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40209241&format=html

  சி. ஜெயபாரதன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்ணை இதழில் தங்களின் கட்டுரை கண்டு மகிழ்ந்தேன்
   நன்றி ஐயா

   நீக்கு
 4. அறிவியலாளர்களின் அறிமுகம் இன்றைய தேவை அதை அருமையாய் சொன்னீர் நன்றி

  பதிலளிநீக்கு
 5. இந்திய ஜெகதீஸ் சந்திரபோஸ் பற்றிய தகவல்கள் உண்மையில் மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிறப்பான பதிவு

  பதிலளிநீக்கு
 6. சிறந்த அறிமுகம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 7. செடிகளின் காதலர் என்றவுடனே நீங்கள் ஜெகதீஸ் சந்திர போசைப் பற்றித்தான் கூறப்போகிறீர்கள் என நினைத்தேன். அவ்வாறே இருந்தது. அருமை.

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு. உங்கள் பதிவில் எப்போதுமே ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை கற்று கொள்ளலாம். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையான தகவல்கள்! செடிகளின் காவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களைப்பற்றி அனைவரும் அறியத்தந்ததற்கு அன்பு நன்றி!

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா01 அக்டோபர், 2014

  இத்தகவலை அறியத் தந்ததற்கு மிக நன்றி.
  அரிய உண்மை.
  இனிய வாழ்த்து சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா01 அக்டோபர், 2014

  பயனுள்ள பதிவு ஐயா. ஜெகதீஷ் சந்திர போஸ், இன்னும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர். ரேடியோ அலைகள் அவற்றில் முக்கியமானது. மார்கோனிக்கும் முன்னதாகவே அவர் இந்த சாதனையை படைத்திருந்தார். ஆனால், அடிமை இந்தியாவில் பிறந்த காரணத்தால், அவரது கண்டுபிடிப்பு, உலகின் கவனத்தை ஈர்க்காமல் போனதுதான் சோகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோகம்தான் நண்பரே
   இந்தியாவில் பிறந்ததர்கான கூலி அது
   நன்றி நண்பரே

   நீக்கு
 12. சிறப்பான தகவல் பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அற்புதமான தகவல்கள் நண்பரே,, மனம் ஒரு நிமிடம் குற்ற உணர்வில் நடுங்கியது உண்மையே... எனது பதிவு.
  http://killergee.blogspot.ae/2014/09/my-india-by-devakottaiyan.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வலைக்கு வந்தன் நண்பரே
   தங்களின் பன் மொழி வித்தகத் திறமை கண்டு வியந்தேன்
   வாழ்த்துக்கள் நண்பரே

   நீக்கு
 14. மரம், செடி, கொடிகளும் நம்மைப் போலவே உயிரும், உணர்வும் உள்ளவை என நிரூபித்த மாமேதை ஜதீஷ் சந்திர போஸ் அவர்களை நினைவு கூர்ந்த அருமையான பதிவு.
  மனமார்ந்த பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 15. செடிகளின் காதலரை நீங்கள் அறிமுகம் செய்த விதம் ரசிக்கும் படி இருக்கிறது !
  த ம 2

  பதிலளிநீக்கு
 16. மாமேதை சந்திரபோஸ் பற்றிய தகவல்கல் அருமை நண்பரே! செடிகளும் உயிர் உள்ளவையே! என்பதை நிரூபித்துச் சொல்லியவர்! அருமையான பதிவு!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. கட்டுரையில் விஞ்ஞானியின் படத்தைப் பார்த்ததுமே மனது சந்திரபோஸ் என்று கூறியது. முழு கட்டுரையும் படித்த பிறகு விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ் வரலாற்றை பள்ளிப் பருவத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. அந்த சிறு செடியின் மரணத்தினை உருக்கமாகவே சொல்லி இருந்தீர்கள்.
  த.ம.3

  பதிலளிநீக்கு
 18. அறியாத தகவல்.

  ஒரு செடிக்காக ராயல் சொசைட்டியையே எழுந்து நிற்க வைத்திருக்கிறார்.

  விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ்க்கு நமது ராயல் சல்யுட்!!
  த.ம.4

  பதிலளிநீக்கு
 19. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று உணர்த்தி சாதிக்கவிருக்கும் மெல்லிய மனம் அறுபட்டுக்கிடக்கும் உடற்கூறுகளைப் பார்த்து மயங்கிவிழுந்ததில் ஆச்சர்யம் என்ன? சாதனையாளர் ஜெகதீஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றிய அற்புதமான பதிவுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் தங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 20. தெரிந்த விஷயம்தான் என்றாலும் உங்களின் எழுத்தில் படிக்க மிக சுவாரஸ்யமாக இருந்தது. மீண்டும் மீண்டும் மாணவர்களுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட வேண்டிய விஷயம் இது.

  பதிலளிநீக்கு
 21. ஒவ்வொரு பதிவிலும்
  கண்டறிய முடியாத
  மாணிக்கங்களை எங்களுக்கு
  அறிமுகப்படுத்தும் உங்களுக்கு
  மனமார்ந்த நன்றிகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 22. தங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது ஜெயக்குமார் சார். வரலாற்று பொக்கிஷங்களை பாமரனும் பாமரனும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எழுதும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 23. ஆறாம் வகுப்பில் இவரைக் குறித்த பாடம் வந்திருந்தது. இப்போதெல்லாம் இவரைக் குறித்து அறிந்தவர்கள் குறைவாகவே இருக்கும். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாணவர்கள் இவரைப் பெரும்பாலும் மறந்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேன்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 24. தங்களின் ஒவ்வொரு பதிவும் ஓங்கி வளர்கிறது உயிருள்ள தாவரங்களைப்போல. வாழ்த்துக்கள் அய்யா.

  பதிலளிநீக்கு
 25. ஜே. சி. போஸ் பற்றிய தகவல்கள் சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 26. த.ம ஆறு
  ஜே.சி. போஸ் குறித்து ஒரு கூடுதல் தகவல்.
  இவர்தான் வானொலியைக் கண்டுபிடித்தவர்.
  மார்க்கோனி அல்ல. அவருக்கு முன்பே இவர் கண்டறிந்துவிட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   அடிமை இந்தியாவில் பிறந்ததால் அல்லவா இவரின் வானொலி கண்டுபிடிப்பு வெளிப்படாமல் போயிற்று

   நீக்கு
 27. உயிர்கள் எங்கும் முக்கியமானவைதான்/

  பதிலளிநீக்கு
 28. தாவரங்களின் மத்தியில் வளர்கிற களை பயிர்களுக்கு ஆவதில்லை.ஆனால் ஆடு மாடுகளுக்கு தீவனமாய் ஆகிப்போகிறதே/ஒன்றின் புறக்கணிப்பு ஒன்றின் பயனாய்,,,,,,/
  இயற்கை விநோதம்,,,,,/

  பதிலளிநீக்கு
 29. காட்டில் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை வேட்டையாடுது குறித்து அதில் ஒரு சமநிலை இருக்கிறது என்கிறார்கள் பெரியவர்கள்/அது போல் தாவரங்களின் சமநிலை தத்துவம் சில மரிப்பதில் சில உயிர் பிழைத்தலில்,,,/

  பதிலளிநீக்கு
 30. எத்தனையோ அறிவாளிகள் மறைக்கப் படுகின்றார்கள். மறக்கப் படுகின்றார்கள். ஜெகதீஷ் சந்திரபோஸ் அவர்களின் கண்டுபிடிப்புக்கள் மனதுக்கு ஒரு வித அற்புத உணர்வை ஏற்படுத்துகின்றது. நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டில் நன்மரம் என உணர்வற்ற மரம் என்றிருந்த நிலை மாற்றி ராயல் சொசைட்டியே எழுந்து நின்று மரத்திற்கு அனைத்தும் என்று நிருபித்துக் காட்டிய மேதையை எமக்கு அழகு தமிழில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுகளைத் தவற விடுவோமேயாகில் பாரிய இழப்பைப் பெற்றவர்களாவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வார்த்தைகள் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன சகோதரியாரே நன்றி

   நீக்கு
 31. இந்த அறிவாளிக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே. சிறப்பான பதிவு /பகிர்வு

  பதிலளிநீக்கு
 32. அன்புள்ள அய்யா திருமிகு.கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு,
  வணக்கம்.
  இந்திய மாமேதை ஜெகதீஸ் சந்திர போஸ் பற்றி ஒர் அருமையான பதிவை இட்டீர்கள். வாழ்த்துகள்.

  தாவரங்களும் நம்மைப் போலவே சுவாசிக்கின்றன, வளர்கின்றன, களைப்புறுகின்றன, புயலுக்கும், சூறாவளிக்கும் அதிர்கின்றன. நாம் மரங்களை வெட்டுகிறோமல்லவா? அப்பொழுது அவை சொல்லொண்ணா வேதனையினை அனுபவிக்கின்றன என்பதை அவர் நிருபித்துக் காட்டினார்.

  அவர் விரும்பிய படிப்புகளை அவரே படிக்க முடிக்கவில்லை பார்த்தீர்களா? அதிலும் ஒரு நன்மைதானே!

  எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திடஅன்புடன் வேண்டுகிறேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வலையைக் கண்டேன் மகிழ்ந்தேன் ஐயா
   இனி தொடர்வேன்

   நீக்கு
 33. ஜெகதீஷ் சந்திர போஸ் எப்படி நிரூபித்தார்னு இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் அண்ணா! நன்றி! தம எட்டு!

  பதிலளிநீக்கு
 34. மிக அருமையான பதிவு.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 35. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த அறிவியல் அறிஞர் ஜகதீஸ் சந்திர போஸ் அவர்களைப் பற்றிய உங்களின் பதிவு மிகவும் அருமையாகவும் சுருக்கமாகவும் அமைந்துள்ளது. பாராட்டுகள். தங்களின் பதிவை வாசிப்பவர்கள் அனைவரும் தங்கள் பதிவினைத் தங்களுக்கு தெரிந்த மாணவச் செல்வங்களுக்குஅறிமுகம் செய்ய ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 36. புதுச்சேரி உத்தமம் மாநாட்டில் தமிழ் வலைப்பதிவுகளுக்கான பரிசில் மூன்றாம் பரிசை வென்றமைக்கு வாழ்த்துகள்; பாராட்டுகள். தொடர்ந்து பற்பல பரிசுகளைப் பெறவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 37. உயிருள்ள பதிவு .

  பகிர்வுக்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 38. மேதைகள் பற்றியும் தியாகிகள் பற்றியும் பல அறியாத தகவல்களுடன் நீங்கள் எழுதும் பதிவுகள் அனைத்தும் வரலாற்று ஆவணங்களாய் பாதுகாக்கப்பட வேண்டியவை.

  மதுரை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் தங்கள் நூல் வெளியீடும் இருப்பதாக அறிந்தேன்... அதற்கும், புதுச்சேரி பரிசிலுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 39. நல்ல பகிர்வு நான் அறியாத விடயம் தான். நிறைய நல்ல மேதைகளை பற்றி அறியத் தருவது மிகவும் சிறப்பே. தங்கள் புத்தக வெளியீடு சிறக்க என் வாழ்த்துக்கள் சகோ! மிக்க நன்றி அருமையான விடயம் சகோ !

  பதிலளிநீக்கு
 40. ஜகதீஸ் சந்திரபோஸ் மகாபாரத கதையில் வரும் கர்ணனை மிகவும் விரும்பியவர். கர்ணனின் சிறப்பைக் கூறுவது யாதெனில், கவசக் குண்டலத்தை கண்ணனுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் நிகழ்வு எனலாம். அதுபோல் முதன்முதலாக தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்ற அறிவியல் கண்டுபிடிப்பினை விஞ்ஞானிகளிடம் விளக்கிய ஜகதீஸ் சந்திரபோஸ்
  அவர்களை பற்றிய பதிவினை என்போன்றவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்த கரந்தையார் அவர்களே நீங்களும் எந்தன் கண்களுக்கு கலியுகக் கர்ணனாகவே தெரிகின்றிர்கள். நான் பிறந்த மண்ணில் (புதுவை/புதுச் சேரி) பரிசினை வென்ற தங்களை மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
  புதுவை வேலு
  kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 41. வணக்கம்
  ஐயா.
  அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு