24 செப்டம்பர் 2014

கரந்தை தர்மாம்பாள்

   



ஆண்டு 1938. நவம்பர் மாதம் 13 ஆம் நாள். சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. மக்கள் ஆங்காங்கே, கூட்டம் கூட்டமாய்க் கூடிப் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களின் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சியை அவர்களால் நம்ப முடியவில்லை.

    சென்னையை அன்று வந்தடைந்த தொடர் வண்டிகள் அனைத்தில் இருந்தும், பேரூந்துகள் அனைத்தில் இருந்தும், பெண்கள் கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கினர். சென்னையே பெண்களால் நிரம்பத் தொடங்கியது.


     அருகாமையில் இருந்த ஊர்களில் இருந்து, பெண்கள் மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும் வந்த வண்ணம் இருந்தனர். அடுப்பூதிக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியில் எங்கும் வராமல், வீட்டிலேயே இத்தனை காலமும் முடங்கிக் கிடந்த பெண்களா இவர்கள்? பார்த்தவர்கள் மலைத்துத்தான் போனார்கள்.

     தமிழகம் அதுவரை கண்டிராதக் காட்சி. ஆண்களால் அன்று வரை, நினைத்துக்கூடப் பார்க்க இயலாத ஓர் செயல், அவர்களின் கண் முன்னே, உயிர் பெற்று, உருப் பெற்றுக் கொண்டிருந்தது.

     நண்பர்களே, புரியவில்லையா? சென்னையில் ஓர் மாநாடு நடைபெற இருந்தது. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் மாநாடு, தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு.

     இதோ மாநாடு தொடங்கி விட்டது. அரங்கில் எங்கு பார்த்தாலும், பெண்கள், பெண்கள், பெண்கள். அமருவதற்குக் கூட இடமின்றி, நின்று கொண்டே, மாநாட்டு நிகழ்வுகளைக் கவனித்தப் பெண்கள் ஏராளம், ஏராளம்.

     தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு என்னும் பெயரில், இம்மாநாடு செயலாக்கம் பெற முழு முதற் காரணமாய் இருந்தவர், பம்பரமாய்ச் சுழன்று, செயலாற்றி, செயற்படுத்திக் காட்டியவர் ஒரு பெண். அவர்தான்,


சமூக சேவர், மருத்துவமணி
டாக்டர் எஸ்.தர்மாம்பாள்.

     நண்பர்களே, டாக்டர் எஸ்.தர்மாம்பாள். இவரது பெயரினை உச்சரிக்கும் போதே, பெருமையால் என் நெஞ்சம் விம்முகிறது. உடலெங்கும் ஓர் இனம் புரியா உணர்ச்சி பரவுகிறது. மனம் மகிழ்ச்சியால் ஆனந்தக் கூத்தாடுகிறது.

      காரணம் என்ன தெரியுமா நண்பர்களே. இவர், நான் வளர்ந்த, படித்த, பணியாற்றுகின்ற கரந்தையில் பிறந்தவர்.

     சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அக்காலத்திலேயே சித்த மருத்துவம் பயின்றவர். சென்னையில் மருத்துவமனை ஒன்றினை நிறுவி, மருத்துவப் பணியினைச் சேவையாகவே செய்து வந்தவர்.

     விதவைகள் மறுமணம், கலப்பு மணம் மற்றும் பெண் கல்வி என இம்மூன்றிற்கும், தன் வாழ்வினையே அர்ப்பணித்தவர்.

      இதோ, டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின் அயரா முயற்சியின் பயனாய் பெண்கள் மாநாடு.

    

பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை ஏற்க, இவர் அழைத்தது யாரைத் தெரியுமா? திருவரங்க. நீலாம்பிகை அம்மையார் அவர்களை.

     நண்பர்களே, இப்பெயர் நமக்குத் தெரிந்த பெயராகத் தோன்றுகிறது அல்லவா? இழந்த தமிழின் பெருமைகளை மீட்க, காக்க, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளாரின் திருமகள்தான் இவர்.

     இம்மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக வேறொருவரையும் அழைந்திருந்தார். சிந்தனையில் புரட்சி, பேச்சில் புரட்சி, எழுத்தில் புரட்சி, செயலில் புரட்சி, முடிவெடுப்பதில் புரட்சி என, தான் தொட்ட அனைத்துச் செயல்களிலும் முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்ட, தமிழ் நாட்டில் புரட்சி என்ற சொல்லுக்கு, உண்மையான சொந்தக்காரராகிய, ஈ.வெ.இராமசாமி அவர்களைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

     பெண் என்றாலே, பிள்ளைப் பெற்றுத் தரும், உயிரும், இரத்தமும், சதையுமுள்ள ஓரு இயந்திரமே, என்ற எண்ணம், புரையோடிப் போயிருந்த, அக்கால மனிதர்களிடம், பெண்களின் உரிமைக்காகப் போராடியவர் அல்லவா, ஈ.வெ.இராமசாமி அவர்கள். அதற்காகத்தான் அவரை அழைத்திருந்தார்.

     நண்பர்களே, ஈ.வெ.இராமசாமி. ஈ.வெ.இராமசாமி என இருமுறைக் குறிப்பிட்டு விட்டேன். தந்தைப் பெரியார் எனக் குறிப்பிடாமல், பெயரை மட்டுமே குறிப்பிட்டது, தங்களுக்கு  வியப்பாகக் கூட இருக்கலாம். 
    

இம்மாநாட்டிற்கு வரும் வரை, இவர் ஈ.வெ. இராமசாமி மட்டும்தான். இம் மாநாட்டில்தான், இந்தத் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில்தான், டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்கள்

ஈ.வெ.இராமசாமி அவர்களுக்குப்
பெரியார்
என்னும் சீர்மிகு பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அந்நொடி முதல்தான், அந்நிமிடம் முதல்தான், அந்நாள் முதல்தான், உலகமே, இவரைப் பெரியார், தந்தைப் பெரியார் என அழைக்கத் தொடங்கியது.

     இச்செய்தி உண்மை நண்பர்களே உண்மை. வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவு செய்யப் பெற்ற உண்மை. ஆனால் தந்தைப் பெரியாருக்குப் பெரியார் என்னும் மகத்தானப் பட்டத்தை வழங்கிய டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களைத்தான், இவ்வுலகு மறந்து விட்டது.

     டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின் செயல், சாதனை இத்துடன் முடிவடைந்து விடவில்லை.

      இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பல முறை சிறை சென்றார். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசையினை வளர்ப்பதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த இவரை, மற்றவர்களை விட, அதிகம் போற்ற வேண்டியவர்கள், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியவர்கள், இன்றைய தமிழாசிரியர்களே ஆவார்கள்.

     நண்பர்களே, விளங்கவில்லையா? 1940 ஆம் ஆண்டு வரை, சமுதாயத்தில், தமிழாசிரியர்களுக்கு உரிய மதிப்பு இல்லாமல்தான் இருந்தது. குறைவான ஊதியம். மற்ற பாட ஆசிரியர்களைவிட, மிகக் குறைவான ஊதியமே, தமிழாசிரியர்களுக்கு வழங்கப் பட்டு வந்தது. ஆனால், அரசை அதட்டிக் கேட்பதற்குத்தான், கோரிக்கையினை முன்வைத்துப் போராடத்தான் ஆளில்லை.

     டாக்டர் எஸ்.தர்மாம்பாள் போராட்டத்தைத் தொடங்கினார். தமிழாசிரிகளுக்கு உரிய ஊதியத்தைக் கொடு என முழங்கித் தொடர் போராட்டத்தைத் தொடங்கினார்.

      நண்பர்களே, இவர் தொடங்கிய, தொடர்ந்து நடத்திய, போராட்டத்தின் பெயர் என்ன தெரியுமா?
இழவு வாரம்.
ஆம், போராட்டத்திற்கு இழவு வாரம் எனப் பெயரிட்டுத்தான் போராடினார், அன்றைய அரசைச் சாடினார்.

    போராட்டத்தைக் கண்டும், போராட்டத்தின் பெயரைக் கண்டும், அரசு வெட்கித் தலை குணிந்தது.

     அன்றைய கல்வி அமைச்சர் திருமிகு அவிநாசிலிங்கம் செட்டியார், பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, தமிழாசிரியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார்.

     தமிழாசிரியர்களே, நாம் இவரைப் போற்ற வேண்டாமா.

     மாணவர் மன்றம். முன்னாள், இந்நாள் மாணவர்களும், ஆசிரியர்களும், நன்கு அறிந்த மன்றம், மாணவர் மன்றம்.

     தமிழ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும், உருவாக்கப்பட்ட மாணவர் மன்றத்தின், எழுச்சிமிகு தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றியவர் இவர்.



நண்பர்களே, தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய,
நடிப்பு, பாட்டு என கொடி கட்டிப் பறந்த,
எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு,
ஏழிசை மன்னர்
என்ற பட்டத்தினையும் வழங்கியவர் இந்த தர்மாம்பாள் அவர்கள்தான்.

பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், பாடுபட்ட,
கரந்தை டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களுக்கு,
அன்றைய தமிழர்கள்,
வீரத் தமிழன்னை
என்னும் செம்மாந்தப் பட்டத்தினை வழங்கி மகிழ்ந்தனர்.

பெண்ணாய்ப் பிறந்து, தனது தன்னலமற்ற உழைப்பால்,சேவையால், தொண்டால், வீரத் தமிழன்னையாக உயர்ந்த,
கரந்தை எஸ்.தர்மாம்பாள் அவர்கள்,
தனது 69 வது வயதில்,
கண்ணயர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கிய ஆண்டு 1959.

நண்பர்களே, தமிழ்கூறும் நல்லுலகம் மறந்த,
எண்ணற்ற மனிதர்களுள் ஒருவராகிவிட்ட,
வீரத் தமிழன்னை
மருத்துவ மணி
கரந்தை எஸ். தர்மாம்பாள் அவர்களை,
நாமாவது நினைவில் ஏந்திப் போற்றுவோம்.


( டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களின்
புகைப் படத்தினை வழங்கி உதவிய
திராவிடர் கழகத்திற்கும்,
டாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக்
கல்லூரி முதல்வர் அவர்களுக்கும்

என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்)

67 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா
    டாக்டர் எஸ். தர்மாம்பாள் அவர்கள் பற்றிய மிகவும் சிறப்பான கட்டுரை. எத்தனை முறை படித்தாலும் தங்கள் எழுத்து நடை ஈர்க்கிறது அய்யா. ஒரே பதிவில் தந்தை பெரியார் பற்றியும் புகழ்ந்துள்ளது கூடுதல் சிறப்பு. தமிழாசியன் என்ற முறையில் தர்மாம்பாள் அவர்களுக்கு என் நன்றிகள் சொல்லியே நினைவில் வைத்து போற்றுவேன். இழவு வாரம் போராட்டத் தலைப்பு புதிய மற்றும் அரிய தகவல் தொடரங்கள் அய்யா..

    பதிலளிநீக்கு
  2. //தமிழ்கூறும் நல்லுலகம் மறந்த,
    எண்ணற்ற மனிதர்களுள் ஒருவராகிவிட்ட,
    வீரத் தமிழன்னை
    மருத்துவ மணி
    கரந்தை எஸ். தர்மாம்பாள் அவர்களை,
    நாமாவது நினைவில் ஏந்திப் போற்றுவோம்.//

    நிச்சயம் தர்மாம்பாள் அவர்களை நினைவில் வைத்து போற்றுவோம்!!

    பதிலளிநீக்கு
  3. தேமதுரத் தமிழ் உலகெல்லாம் பரவ முக்கியமான காரணம் நீங்களும் ஐயா... என்னே ஒரு திரட்டல், பதிவு மிகவும் அருமை ஐயா !!! இங்கு நீங்கள் குறிப்பிட்டவர்களுல் பெரியாரைத் தவிர வேறெவரையும் அறிந்திருக்கவில்லை. அறியாத தலைவர்களுடன் அரிய தகவல்களையும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா....தொடருங்கள்.. தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  4. அடேயப்பா!!! எத்தனை தகவல்கள்!! அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா.
    டாக்டர் எஸ்.தர்மாம்பள் பற்றி நான் அறிந்தில்லை அவரைப்பற்றி மிக அருமையாக கூறியுள்ளீர்கள் பெரியார் அவர்களுக்கு தந்தை பெரியார் என்ற பட்டம் எப்படி வந்தது என்ற வினாவுக்கான விடையும். தர்மாம்பள் ஒரு புரட்சி தலைவி என்பதையும் ஆசிரியர்களுக்கு வேதன உயர்வு கொடுக்க வேண்டும் என்று போராடிய வீரத் தாய் பற்றி மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துகள் ஐயா
    த.ம1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான உணர்ச்சிபூர்வமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றிகள்.

    //ஆனால் தந்தைப் பெரியாருக்குப் பெரியார் என்னும் மகத்தானப் பட்டத்தை வழங்கிய டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்களைத்தான், இவ்வுலகு மறந்து விட்டது.//

    அதுதான் ஐயா ..... உலக வழக்கம்.

    பதிலளிநீக்கு
  8. வீரத் தமிழன்னை
    மருத்துவ மணி
    கரந்தை எஸ். தர்மாம்பாள் அவர்களை,
    நாமாவது நினைவில் ஏந்திப் போற்றுவோம்./

    பதிலளிநீக்கு
  9. தந்தை பெரியாரைத் தெரியும், ஏழிசை மன்னரையும் தெரியும் ஆனால் ? வீரத் தமிழன்னை டாக்டர் எஸ்.தர்மாம்பாள். அவர்களை தாங்கள் சொல்லித்தான் தெரியும் நண்பரே,,, வாழ்க உமது தொண்டு.

    பதிலளிநீக்கு
  10. தர்மாம்பாள் அவர்கள் வழங்கிய பெரியார் பட்டமும் ,ஏழிசை வேந்தர் பட்டமும் இன்னும் வாழ்கிறது .வீரத் தமிழ் அன்னையை நாம் மறந்தது சோகமே!
    வாழ்க அவர் புகழ் !
    த ம +1
    த ம +1

    பதிலளிநீக்கு
  11. அதிகம் அறியப்படாதவராய் இருந்த தர்மாம்பாள் பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே ! பெரியார் என்னும் பட்டத்தினை வழங்கியவரையே பெரியார் மறந்திருப்பார் போலும் அதுதான் தர்மாம்பாள் பற்றிய சிந்தனைகள் வெளிவராமல் போனதோ ! எது எவ்வாறாயினும் இனியாவது எல்லோரும் அறிவோம் அனைவருக்கும் அறியவைப்போம் !

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா25 செப்டம்பர், 2014

      தர்மாம்பான் பெயர் கேள்விப்பட்டுள்ளேன்.
      இவ்வளவு விவரமாகத் தெரியாது.
      மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.

      நீக்கு
  12. அன்பு நண்பருக்கு வணக்கம்.

    நான் அறிந்திராத ஆளுமை இவர்.

    கரந்தையில் இருந்து இப்படி ஒரு சாதனைப்பெண்மணி!

    இப்படி நாம் வந்தடைந்த பாதைகளின் வழிகாட்டிகளை தொடர்ந்து அறிமுகம் செய்க..

    உங்கள் தளத்தை பேசாமல் தமிழ்நாடு கல்வித்துறை துணைப்பாடமாக அறிவித்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
  13. பெரியார் பட்டம் உட்பட அனைத்து தகவல்களும் பிரமிப்பு + சிறப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  14. வியப்பூட்டும் தகவல்கள். நான் இந்தத் தகவல்கள் பற்றி இன்றுதான் அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா25 செப்டம்பர், 2014

    வணக்கம் ஐயா. தர்மாம்பாள் பற்றிய கட்டுரை படித்தேன். இளைய தலைமுறையினருக்கு தெரியாத பல தகவல்கள் இருந்தன. மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா. கணினியில் எனக்கிருந்த பிரச்னைகளை தீர்த்து விட்டேன் ஐயா. ஆகவே இனி வலையில் உலா வருவதில் தடையேதும் இல்லை ஐயா. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  16. ஹப்பா எத்தனைத் தகவல்கள்! சூப்பர் நண்பரே! வலைச்சரம் பக்கம் வந்து எட்டிப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  17. நேற்று இரவே வாசித்து விட்டோம்...இப்போதுதான் பின்னூட்டம் இட முடிந்தது!

    பதிலளிநீக்கு
  18. கரந்தைப் பெண்மணி புதிய தகவல் நண்பரே! ஆஹா! அட போட வைத்த ஆச்சரியப்படுத்திய பெண்மணி!

    பதிலளிநீக்கு
  19. வீரத்தமிழன்னை டாக்டர் S.தர்மாம்பாள் அவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமை. அவர்களைப் பற்றி நான் அறிந்தில்லை.. மிக அருமையாக கூறியுள்ளீர்கள்.

    பெரியார் அவர்களுக்கு பட்டம் கொடுத்து கௌரவித்த பெண்மணி என்றறியும் போது வியப்பு மேலிடுகின்றது..

    வீரத்தமிழன்னையை இதுவரை அறிந்ததில்லை. ஆயினும் -
    இனி மறக்க மாட்டோம் அல்லவா!..

    பதிலளிநீக்கு
  20. அந்த காலத்தில் பெண்கள் மாநாடு - ஆச்சிரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லவில்லை என்றால், எனக்கு இப்படி ஒரு நிகழ்வூ நடந்ததை பற்றியும், வீரத்தமிழன்னை டாக்டர். தர்மாம்பாள் அன்னையாரைப் பற்றியும் தெரிந்திருக்காது.
    நன்றி ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்!

    வீரத் தமிழன்னை பற்றி பல தெரிந்து கொண்டோம் தங்களின் கட்டுரை வாயிலாக...!

    கரந்தையில் பிறந்து புகழோடு வாழ்ந்ததை நினைத்து நெஞ்சம் மகிழ்ச்சியால் பூரிக்கிறது...!

    ஓங்குக அம்மையாரின் புகழ்!!

    மகிழ்ச்சியுடன்,

    இரா. சரவணன்

    -------------------------------------------------------------------------------

    அனைவருக்கும் நவராத்திரி விழா நல்வாழ்த்துக்கள்

    மும்பையில் 9 நாட்கள் தாண்டியா நடனம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. கண்டுகளிக்கிறேன்.

    தஞ்சையில், ( வடவாறு, செட்டியார் சத்திரத்தில்) கரந்தையில் கொலு இப்போது நடக்கிறதா?

    தங்கள் பதில் மூலம் அறிய ஆவல்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்சமயம் கரந்தை கந்தப்ப செட்டியார் சத்திரம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது நண்பரே
      அவ்விடத்தில் கொழு வைத்து இருபது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
      உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா, இச் சத்திரத்தில்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற்றது
      நன்றி நண்பரே

      நீக்கு
  22. என்ன செய்வது?
    முத்துக்கள் கடலின் ஆழத்தில்தான் கிடக்கின்றன.
    உங்களைப் போன்ற முத்துக் குளிப்பவர்களின்
    மூலம்தான் அவைகள் ஆதவனின் ஒளியைக் காண முடிகிறது.தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. தங்கள் வலை ஓர் அருமையான வரலாற்றுத் தகவல் களஞ்சியம் என்பதற்கு, இப் பதிவு மேலும், ஓர் எடுத்துக் காட்டாகும்!

    பதிலளிநீக்கு
  24. நம் பகுதியில் இப்படி ஒரு சாதனை வீர மங்கை இருந்தார் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
    உங்கள் தேடல் எங்களை போன்றவருக்கு ஒரு மலை சாரல் . சாரல் பொழியட்டும் .

    என்றும் அன்புடன்
    சுதாகர் - கரந்தை

    பதிலளிநீக்கு
  25. மிக அருமையான அற்புதமான பதிவு.புரட்சிப்பெண்மனி டாக்டர்.தர்மாம்பாள் அவர்களின் சேவை தமிழர்களின் கிடைத்தரியா பொக்கிசம்.அவர்களை நினைவுகூர்ந்து கட்டுரையை உருவாக்கிய தங்களுக்கு நன்றிகள் பல.தொடரட்டும் தங்களின் தேடல்கள் தோழமையுடன் பின்தொடர்வோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  26. தர்மாம்பாள் என்ற பெயரை கேள்விப்பட்டு இருந்தாலும் அவரைப் பற்றிய செய்திகளை அறிந்தது இல்லை! விரிவான பல தகவல்களை சொன்னது பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. அறியாத தகவல்கள் பல தாங்கி வந்தபதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. அறியாத பல தகவல்கள் இங்கறிந்தேன் ஐயா!

    உங்கள் தேடல் மிகச் சிறப்பு!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  29. வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவு செய்யப் பெற்ற உண்மையை
    பெண்கள் மாநாட்டில் டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அவர்கள்


    ஈ.வெ.இராமசாமி அவர்களுக்குப்
    பெரியார்
    என்னும் சீர்மிகு பட்டத்தை வழங்கியதையும், தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய,
    நடிப்பு, பாட்டு என கொடி கட்டிப் பறந்த,
    எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு,
    ஏழிசை மன்னர்
    என்ற பட்டத்தினையும் வழங்கிய செய்திகளையும் இப்பதிவின் மூலம் மட்டுமே நான் அறிந்துகொண்டேன். வேண்டியவருக்கு வேண்டியதை தரும் வேங்கடேசன் போல் எங்களுக்கு வேண்டிய படைப்புகளை வழங்கும் சிறந்த படைப்பாளி.
    புதுவை வேலு(KUZHALINNISAI.BLOGSPOT.COM)

    பதிலளிநீக்கு
  30. மிக நல்ல பதிவு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், என்ற பெயரில் நலத் திட்டம் ஒன்று செயல்படுத்தப் பட்டு வருகிறது. அல்லவா? விரிவான தகவல்களை அறிந்ததில் மகிழ்ச்சி
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி ஐயா

      நீக்கு
  31. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கரந்தை தர்மாம்பாள் என்ற தங்களின் பதிவினைப் படித்தப்பொழுது ஒரு சிந்தனை எனக்கு தோன்றியது. இந்த வணிக உலகில் எதனைச் செய்தாலும் விளம்பரத்துடன் செய்தால் மட்டுமே நம் மக்களின் பெரும்பான்மையினர் வாசிக்கவோ பார்க்கவோ விரும்புகிறார்கள். மருத்துவமாமணியாம் கரந்தை எஸ், தர்மாம்பாள் அவர்கள் விளம்பரமின்றி பல அற்புத தொண்டுகளை செய்ததால் அவர் மேல் அதிக ஈர்ப்பின்றி நம்முடைய கவனம் இன்றைய நடிக, நடிகையர், அரசியல்வாதிகள் மீது உள்ளது என்பதை கசப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். கரந்தை எஸ்.தர்மாம்பாள் அவர்களின் பெயரில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியாவது இருக்கிறதே என்ற அளவில் நமக்கு சற்று ஆறுதல் ஏற்படுகிறது. கரந்தைப் பகுதியில் நானும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவன் என்ற நிலையில் தங்களின் இந்த அற்புதமான பதிவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. கரந்தை தர்மாம்பாள் என்றதும் சட்டென்று எனக்கு யாரென்று அறியமுடியவில்லை. அப்புறம் டாக்டர் எஸ்.தர்மாம்பாள் மறைமலை அடிகளின் மகள் என்றதும்தான் அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் நினைவுக்கு வந்தன. தமிழக மக்கள் மறந்து போன இவர் போன்ற பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை தேடிப் பிடித்து சொல்லும் உங்கள் தொண்டு பாராட்டிற்கு உரியது.
    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் தர்மாம்பாள் மறைமலை அடிகளின் மகள் அல்ல ஐயா.
      பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை ஏற்ற திருவரங்க நீலாம்பிகை அம்மையார் அவர்கள்தான் மறைமலை அடிகளாரின் மகள் ஆவார்
      நன்றி ஐயா

      நீக்கு
    2. எனது கருத்துரையில் ஏற்பட்ட் குழப்பத்திற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். எனது தவறினைச் சுட்டி காட்டியமைக்கு நன்றி!
      ( அன்றைய தினம் இரவு வலைப் பதிவுகளை நீண்ட நேரம் கண்விழித்து படித்து 11 மணிக்கு மேல் டைப் செய்ததால் வந்த குழப்பம்)

      நீக்கு
    3. இதற்காக வருந்தத் தேவையில்லை ஐயா.
      இரவு வெகுநேரம் கண் விழித்து என் போன்றோரின் எழுத்துக்களைப் படிக்கும் தங்களுக்கு எப்படிநன்றி சொல்வதென்றே தெரியவில்லை ஐயா
      நன்றி
      ஓர்அன்பு வேண்டுகோள், இரவு வெகு நேரம்கண் விழிப்பதைத் தவிர்க்கலாமே ஐயா. உடல் நலம் முக்கியம் அல்லவா

      நீக்கு
  33. அன்னை தர்மாம்பாள் அவரகளை
    நெஞ்சில் வைத்து போற்றும் அளவுக்கு
    தகவல்களை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள்..
    நன்றிகள் பல ஐயா...

    பதிலளிநீக்கு
  34. சிறப்பான பதிவு!
    தமிழின் மேன்மையானவர்களை அடையாளப்படுத்தும் இத்தகைய முயற்சிக்கு எனது வாழ்த்துகள்!.
    இத்தகைய பதிவுகளே பதிவுலகின் உயர்வை பிறருக்கு உணரச்செய்யும்.
    வாழ்த்துகள் அய்யா!.

    பதிலளிநீக்கு
  35. மிகவும் சிறப்பான கட்டுரை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. தங்களின் பதிவைக் கண்டேன். ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு வகையிலான முத்திரையைப் பதிக்கின்றீர்கள். அன்னாரைப் பற்றி முன்னரே நான் படித்துள்ள போதிலும் தங்களின் மூலமாக பல புதிய செய்திகளை அறிந்தேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  37. சிறப்பான கட்டுரை. தாங்கள் மூலம் ஒரு சிறப்பான பெண்மணியை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. ‘

    பதிலளிநீக்கு
  38. உம் பதிவு ஒரு தகவல் பெட்டகம். ஒரு வேண்டுகோள்
    எனது வலைப்பூ iniangovindaraju.blogspot.in பாருங்களேன்

    பதிலளிநீக்கு
  39. பெயரில்லா24 செப்டம்பர், 2015

    துருப்பிடித்த இரும்பு துண்டுகள்....

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா24 செப்டம்பர், 2015

    "பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன் பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. .... புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும். - (ஈ.வே.ரா. பெரியார், குடிஅரசு கட்டுரை, 1.3.1931 )
    இதற்கு பெயர்தான் பெண் அடிமையை களையும் கருத்துகளா?
    இன்று பெண்கள் சீரழிவுக்கு தன்னை கன்னடியன் என பெருமையுாக கூறிக்கொண்டே தழிழனை தலை குணிய வைத்த பெரியாரே காரணம்...

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் ஐயா,
    தங்களிடம் படித்த மாணவர்களில் நானும் ஒருவன்.டாக்டர் தர்மாம்பாள் கல்லூரியில் எனது நண்பரும் தற்போது விரிவுரையாளராக உள்ளார்.எனது விடுமுறை தினங்களில் நான் எனது நண்பரை கல்லூரியில் சென்று சந்திப்பது வழக்கம்.எனது நண்பர் தான் தர்மாம்பாள் நமது கரந்தையை சேர்ந்தவர் என்பதனை என்னிடம் கூறினார்.அவர் எவ்வாறு அறிந்திருந்தார் என்றால்,அவருக்கும் தர்மாம்பாள் அவர்களை அறிந்திருக்கவில்லை.ஒரு மாணவர் கலந்துரையாடலில் கல்லூரி முதல்வர் டாக்டர் தர்மாம்பாள் பற்றி மாணவர்களிடம் விணவி உள்ளார்.யாரும் எந்த மாணவியும் அவரை பற்றி அறிந்திருக்கவில்லை.கலந்துரையாடல் முடிந்து வகுப்பறையில் மாணவிகள் எனது நண்பரிடம் விணவும் போது அவருக்கும் தெரியவில்லை.பிறகு கூகுல் செயலியில் தேடும் போது அவர் கரந்தையை சேர்ந்தவர் என்றதும் மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடம் எங்கள் பகுதியை சேர்ந்த வீர மங்கை என பெருமிதத்துடன் மாணவிகளிடம் வரலாற்றை கூறியுள்ளார்.அதனை என்னிடம் சொல்ல நானும் அவர்களை பற்றி அறிய முற்பட்டபோது.தங்களின் பதிவினை கண்டறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு