29 நவம்பர் 2015

எல்லைப் புறத்தில்




எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாளெனுக்குத் திருநாளாகும்.
                               பாவேந்தர் பாரதிதாசன்

இராணுவ மருத்துவமனை,
பெங்களூர்,
23.8.1963
தேவரீர் அப்பா அவர்களுக்கு,

     தங்களது மகன் கணேசன் தாழ்மையுடன் எழுதிக் கொண்டது. சீனாக்காரனின் அநியாய ஆக்கிரமிப்பிலிருந்து, அன்னை பாரத பூமியைக் காப்பாற்ற வீட்டுக்கொரு ஆள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள் என்ற நம் ஜனாதிபதியின் அபயக் குரலை நீங்கள் ரேடியோ மூலம் கேட்டிருப்பீர்கள்.

     ஐந்து ஆண் மக்களைப் பெற்ற நாம், ஒருவரையும் அனுப்ப முடியவில்லையே, என்று வருந்தவும் செய்திருப்பீர்கள்.

     தங்கள் வருத்தத்தைப் போக்க, நம் குடும்பத்தின், என் அருமை சகோதரர்கள் சார்பில், என்னுயிரை, இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டி நான் புறப்பட்டு விட்டேன்.

25 நவம்பர் 2015

புத்தகத்தைக் காதலித்தவன்


ஆண்டு 1823, ஒடிசலான தேகம். உட்புறம் சுருங்கி ஒட்டிய கண்ணங்கள். குழி விழுந்த கண்கள். அழுக்கடைந்த உடை.

     அச்சிறுவனின் வயது பதினான்குதான். ஓடி ஆடி விளையாடுகின்ற வயது. ஆனாலும் ஆர்வம் என்னவோ படிப்பதில்தான்.

     அச்சிறுவனுக்கு ஓர் ஆசை. தணியாத தாகம். விம்ஸ் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றினை, எப்படியாவது படித்துவிட வேண்டும் என்னும் தாகம்.

20 நவம்பர் 2015

நம்ப முடியாத உண்மைகள்



   அது ஒரு அடர்ந்த காடு. காட்டின் மரங்களுக்கிடையே நுழைந்து மெல்ல, மெல்ல முன்னேறுகிறது அப்படை. குதிரைப் படை, காலாட் படை. மெல்ல மெல்ல புதர்களையும், சிறு சிறு செடி கொடிகளையும் மிதித்து நசுக்கிய வண்ணம், அந்தப் படை முன்னேறிக் கொண்டிருக்கிறது.

   நீண்ட தூரம் நடந்த களைப்பு போர் வீரர்களின் முகங்களில் தெரிகிறது. அவர்களுடைய ஆயுதங்கள், உடைகளில் சொருகப் பட்டிருக்கின்றன.

    படைத் தலைவன் எச்சரிக்கையோடு, விழிகளால், காட்டினை சல்லடை போட்டுச் சளித்த வண்ணம், முன்னே செல்கின்றான்.

   திடீரென்று குறுக்கே ஓடுகிறது, ஒரு பூனை.

15 நவம்பர் 2015

கடவுளைக் காண்பேனோ


       அபுதாபியில் இருந்து ஓர் அன்புக் கட்டளை. பாசக்கார, மீசைக்கார நண்பரிடமிருந்து ஓர் உத்தரவு.

    முன்பு ஒரு முறை கனவில் காந்தியைக் கண்டவர். இப்பொழுது கடவுளையேக் கண்டிருக்கிறார்.

கடவுளைக் கண்டேன்
தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

10 நவம்பர் 2015

தாகூரில் தோய்ந்தவர்




     கடவுள் எங்கே? என நான் கேட்ட பொழுது, எங்கும் என பதிலுரைத்தது அறிவு. ஆனால் அன்போ இங்கே எனத் தன்னையே சுட்டிக் காட்டிக் கொண்டது.

     அன்பென்னும் நேரான பரந்த, செழிப்பான பாதை தன் முன்னே விரிந்திருக்க, மதங்களென்னும் குறுகிய, ஒற்றடிப் பாதைகள் வழியே சென்றவாறு, உன்னைக் காண, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மதங்கள் வழிகளாயினும், அவைகள் மட்டுமே வழிகளென்பதல்ல.

05 நவம்பர் 2015

என்றாவது ஒரு நாள்




     1902 ஆம் ஆண்டு. ஆஸ்திரேலியா. சிட்னி. தன் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த திருமதி இஸபெல், அம் மனிதரைத் தற்செயலாகத்தான் பார்த்தார்.

     அழுக்கேறிய கிழிந்த உடைகளுடன், முகத்தில் நீண்டு வளர்ந்திருந்த தாடி, மீசையுடன், மதுவின் வாடையுடன் அவர் மெதுவாகத் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.

      மன நிலை பிறழ்ந்தவராய், மது அருந்துவதையே, தன் வாழ் நாள் கடமையாக கடைப்பிடிப்பவர் போல், மெதுவாக ஆடி, ஆடி வந்து கொண்டிருந்தார்.

     எதிரிலே தள்ளாடியபடி வந்த அந்த மனிதர், தன்மீது மோதிவிடுவாரோ என்று எண்ணி, விலகியபோதுதான், அம்மனிதரது முகத்தைப் பார்த்தார்.