29 நவம்பர் 2015

எல்லைப் புறத்தில்




எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாளெனுக்குத் திருநாளாகும்.
                               பாவேந்தர் பாரதிதாசன்

இராணுவ மருத்துவமனை,
பெங்களூர்,
23.8.1963
தேவரீர் அப்பா அவர்களுக்கு,

     தங்களது மகன் கணேசன் தாழ்மையுடன் எழுதிக் கொண்டது. சீனாக்காரனின் அநியாய ஆக்கிரமிப்பிலிருந்து, அன்னை பாரத பூமியைக் காப்பாற்ற வீட்டுக்கொரு ஆள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள் என்ற நம் ஜனாதிபதியின் அபயக் குரலை நீங்கள் ரேடியோ மூலம் கேட்டிருப்பீர்கள்.

     ஐந்து ஆண் மக்களைப் பெற்ற நாம், ஒருவரையும் அனுப்ப முடியவில்லையே, என்று வருந்தவும் செய்திருப்பீர்கள்.

     தங்கள் வருத்தத்தைப் போக்க, நம் குடும்பத்தின், என் அருமை சகோதரர்கள் சார்பில், என்னுயிரை, இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டி நான் புறப்பட்டு விட்டேன்.


     இதற்கான ஆயத்தங்கள் தொடங்கி, சுமார் மூன்று மாதங்களாகியும், தங்களிடமோ, அண்ணனிடமோ, நான் இதைப் பற்றி சொல்லாததற்கு மன்னியுங்கள்.

     பட்டாளம் என்றதும், ஐயோ, துப்பாக்கிக் குண்டுக்கு முன் என் மகன் விழுந்து மடிவானே என்று கலங்காதீர்கள். அந்த பாக்கியம் எல்லாம் எனக்குக் கிடைக்காது.

    கூடிய சீக்கிரம் வீட்டிற்கு வருகிறேன். என்னை வாழ்த்தி அனுப்பத் தயாராகுங்கள்.

தங்கள் மகன்,
பா.கணேசன்

          நண்பர்களே, படிக்கப் படிக்க உடலெல்லாம் சிலிர்க்கிறது அல்லவா, நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறுகிறது அல்லவா. உள்ளமெங்கும் ஓர் உணர்ச்சி அலை, வீரமெனும் ஓர் உணர்வு அலை மெல்ல மெல்லப் பரவுகிறது அல்லவா.

     கடித இலக்கியம் ஓர் அற்புதமான இலக்கியம். தொலை பேசி, மற்றும் அலைபேசியின் வரவால், நாம் முற்றாய் மறந்து போன ஓர் உன்னத இலக்கியம்.

     ஒவ்வொரு எழுத்தையும் அன்பில் தோய்த்து எடுத்து, பாசமென்னும் வார்த்தைகளால் கோர்த்து, உறவுகளுக்குக் கடிதம்  எழுதி எழுதி, உறவினை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்று, நேசம் போற்றியவர்கள் நம் முன்னோர்.

     பண்டித ஜவகர்லால் நேரு, சிறையில் வாடிய போதும், அயராமல் தளராமல், குறிப்புகள் கூட ஏதுமில்லாமல், தன் அன்பு மகளுக்கு, உலக வரலாற்றையே கடிதங்கள் வழி வாரி வழங்கி, ஓர் மாபெரும் இலக்கியத்தைப் படைத்தவர் அல்லவா.

    பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி, புத்துணர்ச்சியை, புத்தம் புது எழுச்சியை உருவாக்க வில்லையா.

     எத்துனை எத்துனை அறிஞர்கள் கடிதங்கள் மூலம் விழிப்புணர்வை, நாட்டுப் பற்றை, கடமை உணர்வை நமக்கு ஊட்டியிருப்பார்கள்.

    இவர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் ஒரு இராணுவ வீரர்.


கர்னல் பா.கணேசன்
அவர்களின்


எல்லைப் புறத்தில் ஓர் இதயத்தின் குரல்

கடிதங்களால் மட்டுமே கட்டமைக்கப் பெற்ற அற்புத நூல்.

  அன்புத் தந்தைக்கும், பாசமிகு அண்ணனுக்கும், நேசமிகு நண்பனுக்கும் எழுதியக் கடிதங்கள், நூலின் பக்கத்துக்குப் பக்கம் பரவி இருக்கின்றன.

     கடிதங்களைப் படிக்கப் படிக்க ஓர் சந்தேகம், மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இவர் இராணுவ வீரரா அல்லது சங்க இலக்கியங்களைக் கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டத் தமிழ்ப் பேராசிரியரா என்னும் ஓர் ஐயம். இரண்டும்தான் என நிரூபிக்கிறது இவரது செயலும், எழுத்தும்.

     வாருங்கள் நண்பர்களே, இவர் எழுதிய கடிதங்களில் நுழைந்து, எழுத்துக்களின் அருகாமையில் அமர்ந்து, சொற்கள் என்னும் வாகனத்தில் ஏறி, இந்திய எல்லைப் புறங்களைக் கண்டு வருவோம்.

     இராணுவம் என்னும் மகத்தான கட்டமைப்பை உளமார உணர்ந்து வருவோம். வாருஙகள்.

கர்னல் பா.கணேசன்

     படிப்பு மூளையில் ஏறாமல், உடலை மட்டும் வளர்த்துக் கொண்டு இராணுவத்தில் சேர்ந்தவரல்ல.

      பொறியாளர் பட்டம் பயின்றவர்.

       பொதுப் பணித் துறையில், பொறியாளராய் நிரந்தரப் பணியிடத்தில், பணியாற்றியவர்.

      அரசின் பொறியாளர் பணியினை துச்சமாய் மதித்து, தூக்கி தூர எறிந்துவிட்டு, நாட்டைக் காக்க இராணுவத்தில் இணைந்தவர்.

      இவர் இராணுவத்தில் சேர்ந்தது, இவரது வீட்டில் யாருக்கும் தெரியாது.

      இராணுவத்திற்குத் தேர்வான பிறகு, இறுதி கட்ட, மருத்துவ சோதனைகளுக்காக, பெங்களூர் இராணுவ மருத்துவ மனைக்குச் சென்ற பொழுது, கிடைத்த ஓய்வு நேரத்தில்தான், தன் தந்தைக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார்.

      தந்தைக்கு மட்டுமல்ல, தனது அன்புத் தோழன், ஆரூயிர் நண்பன் அருணாசலத்திற்கும் ஓர் கடிதம் எழுதினார்.

அருமை நண்ப,

     நான் உன்னைப் பிரிகிறேன். என்னைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தப் பெற்றோரைப் பிரிகிறேன். உற்றார் உறவினரைப் பிரிகிறேன். இந்தப் பொன்னானத் தமிழ் நாட்டைப் பிரிகிறேன்.

     ஆனால் இவை எல்லாம் இந்தியாவின் மானம் காக்க, தமிழகம் ஈன்றெடுத்த தங்க மகன் என்று ஒரு காலத்தில் என் பெயர் அறியப்படலாம்.

      அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் சேர வேண்டும் என்பது உத்தரவு. பொதுப் பணித் துறையைப் பிரியப் போகிறேன்.

       மீண்டும் தமிழகம் வரும் பொழுது, உன்னைச் சந்திப்பேன்.

நட்புடன்,
பா.கணேசன்



கடிதங்கள் தொடரும்






76 கருத்துகள்:

  1. கர்னல் பா.கணேசன் அவர்களின் போற்றதலுக்குறியவர் நண்பரே இவரைப்பற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தாலும் இன்னும் விடயங்கள் இருந்தால் தாருங்கள் காத்திருக்கிறேன் படிப்பதற்க்கு...
    தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

    பதிலளிநீக்கு
  2. கடித இலக்கியம் தனி இலக்கியம். முவ, கல்கி, நேரு, அண்ணா ஆகியோர் வளர்த்த இலக்கியம். தொடருங்கள்.
    தம +1

    பதிலளிநீக்கு
  3. பொதுநலம் கருதும் மனிதர்கள் குறைவே, இவர் பற்றிய தங்கள் பகிர்வு அருமை சகோ,
    தொடருங்கள் காத்திருக்கிறோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நண்பரே!

    இப் பெருந்தகையார் குறித்துத் தங்களின் தளம் வாயிலாகவே அறிந்தேன்.
    தங்களின் இப்பதிவு அவர்தம் நூலையும் படிக்கத் தூண்டுகிறது.

    த ம +
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமையான கடிதங்கள்...... மேலும் தொடரட்டும்.....

    சீன எல்லையில் நடந்த போர் - சமீபத்தில் அங்கே சென்று சில வீரர்களைச் சந்தித்த அனுபவம் இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது......

    பதிலளிநீக்கு
  6. அருமையான கடிதப் பகிர்வுக்கு நன்றி. தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  7. மீண்டும் கர்னல் கணேசன் அவர்களது பெருமை சொல்லும், அவரது இதயக் குரல் பேசும் கடிதங்கள். தொடர் பதிவிற்கு நன்றி. தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் !

    ஒவொரு போராட்ட வீரனும் ஒவ்வொரு சரித்திரம் பட்டம் பதவி எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பாரதநாட்டுக்காய்ப் படையில் சேர்ந்த வீரனின் கடிதங்களைப் பார்க்க ஆசையுடன் உள்ளோம் தொடருங்கள் தொடர்கிறோம் நன்றி !
    தம +1

    பதிலளிநீக்கு
  9. கர்னல் கணேசன்அவர்களிடம் இருந்து நாம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கே !

    பதிலளிநீக்கு
  10. >>> கடித இலக்கியம் ஓர் அற்புதமான இலக்கியம். தொலை பேசி, மற்றும் அலைபேசியின் வரவால், நாம் முற்றாய் மறந்து போன ஓர் உன்னத இலக்கியம்..<<<

    நிதர்சனமான உண்மையுடன் கர்னல் கணேசன் அவர்களின் கடிதப்பதிவு அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  11. எழுத்து ஒரு அற்புதமான மொழி என்பார்கள். தவிர ராணுவத்திலும், எல்லையிலும் இருப்பவர்கள் கிட்டத்தட்ட நமக்கு கடவுள் மாதிரி என நினைப்பவன் நான்,உயிரை கொடுத்து பணிபுரிபவர்கள் உண்மையிலேயே அவர்கள்தான்,அவர்களை நெஞ்சார பாராட்டுவோம்/

    பதிலளிநீக்கு
  12. மனம் தொட்ட கடிதம் . நன்றி கரந்தையாரே!

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள கரந்தையாரே,

    ‘எல்லைப் புறத்தில் ஓர் இதயத்தின் குரல்’ கர்னல் பா.கணேசன்
    அவர்கள் நாட்டைக் காக்க இராணுவத்தில் சேரப் புறப்பட்டதைப் பெற்றோருக்கு மற்றும் நண்பருக்குக் கடிதம்மூலம் தெரிவித்தது உண்மையிலே மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டுப்பற்றுள்ள வீரருக்கு வணக்கம். எல்லா நலமும் பெற்று வாழ்க! வளர்க அவரது புகழ்!

    நன்றி.
    த.ம.10

    பதிலளிநீக்கு
  14. ஒரு அற்புதமான புத்தகத்தை அறிமுகப்படுத்தி, அதில் உள்ள மிகச் சிறந்த கடிதங்களையும் அறிமுகப்படுத்தும் தொடர் பதிவுக்கு வாழ்த்துகள். கர்னல் கணேசன் அவர்களின் தீரச் செயல்களும் கடிதங்கள் மூலம் அவர் தொட்ட இலக்கிய பணிகளும் மனதை கொள்ளை கொள்கின்றன.
    த ம 11

    பதிலளிநீக்கு
  15. அட்டகாசமான ஆரம்பம். தொடருங்கள். காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. ஒருவரை அறிமுகம் செய்யும் பொழுது உங்கள் பாங்கு மிகவும் அருமை..ரசிக்கிறேன்..வாழ்த்துக்கள் சகோதரர்

    பதிலளிநீக்கு
  17. anbulla jayakumar

    vanakkam. kernel ganesan avarkal parri ethanai ezuthinaalum theerathu. avar oru thannalamarra naattukkaakat thannai arppanithaa maamanithar. avarin kadithangkal unmaiyil intha ulagam ariyavendiap pokkizhangal. thodarungal. en vaazhtukkal.

    பதிலளிநீக்கு
  18. தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் கர்னல் கணேசன் அவர்களைப் பற்றித்தான் ஆரம்பிக்கின்றீர்கள். அவ்வாறே இருந்தது. வாழும் காலத்தில் நம்மால் போற்றப்படுபவர்கள் மிகச்சிலரே. அவ்வாறானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய அரிய பணியை எங்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு எங்களுக்கும் பேருதவி புரிந்து வரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. கடித்அ இலக்கியம் போதுமான அளவு கண்டுகொள்ளப் படவில்லை. சுகன் செய்தார். இந்த நூல் எங்கு கிடைக்கிறது?

    பதிலளிநீக்கு
  20. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    வீரமும் தன்னலமற்ற மனமும் கொண்ட கர்னல் கணேசன் அவர்களின் கடிதங்களை படிக்க மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. "எல்லைப் புறத்தில்
    ஓர் இதயத்தின் குரலை"
    பார் எல்லாம் பரவ செய்த தங்களது
    சீர்மிகு எழுத்துக்கு பாராட்டுக்கள்.
    அருமை நண்பரே!
    த ம+

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  22. போற்றுதலுக்குரிய ஒரு மனிதரைப்பற்றிய பகிர்வு அருமை!!

    பதிலளிநீக்கு
  23. பாராட்டுக்கள் !! தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  24. இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் ,நீங்கள் எழுதிய விஷயங்களை இப்போதுதான் அறிகிறேன் . நன்றி ,உணர்வுப்பூர்வமாக எழுதுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  25. உங்கள் நூலின் மூலம் கல்னல் கணேசனைப் பற்றி அறிந்து கொண்டதும் புதுக் கோட்டையில் அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்தபோது அவருடன் தொடர்பு கொண்டேன் ஆனால் சந்தித்து அளவளாக வாய்ப்பு இல்லாமல் மழை சதி செய்து விட்டது கடிதம் எழுதுவது ஒரு கலை அதிலும் கணேசன் வித்தகர் போலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா கடிதத்தலும் வித்தகர்தான்
      நன்றி ஐயா

      நீக்கு
  26. கணேசன் அவர்களின் கடித நூலை உங்களுக்கே உரித்தான பாணியில் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள் நிச்சயம் படிக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  27. ராணுவ சேவைக்கு வீட்டுக்கொருவரை அழைத்தார்களா...? ஆச்சர்யமான புது தகவல் ஐயா, எனக்கு... தெரிந்துகொள்கிறேன்... கடித இலக்கியம் மறைந்து வரும் இந்நாட்களில் தேவையானதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
  28. தொடருங்கள்!தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  29. கர்னல் பா.கணேசன் அவர்களைப் பற்றிய அருமையான பதிவு..கடிதத்தின் அருமையைச் சொல்லும் உங்கள் வரிகள் மிக அருமை அண்ணா!
    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  30. கடிதங்கள் என்னும் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம் என்பது எவ்வளவு உண்மை.. எப்போதோ வந்த கடிதங்களை வாசித்து வாசித்தே வாழ்நாட்களைக் கடத்திய ஜீவன்கள் எத்தனை எத்தனை? இரவாணத்தில் சொருகிவைத்து, ஏக்கம்வரும்போதெல்லாம் எடுத்தெடுத்து வாசித்து மகிழ்ந்த இதயங்கள் எத்தனை எத்தனை... கம்பியில் குத்திவைக்கப்பட்டவை அந்நாளில் கடிதங்கள் மட்டுமல்ல... வாழ்வின் ஆவணப்பதிவுகள் அன்றோ... இப்பதிவில் இடம்பெறும் கடிதங்களில் தாய்நாட்டுப்பற்றும் வீரமும் கலந்த அன்போடு இன்தமிழும் கலந்திருப்பது மனத்தை நெகிழ்த்துகிறது. தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்
    ஐயா
    படிக்கும் போது புத்தகத்தை வேண்டி படிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது... அற்புதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  32. இது போன்ற கடிதங்கள் எல்லாமே ஆவணங்களே. ராயல் சல்யூட்! தலைவணங்குகின்றோம்!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு