04 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 2



 
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்
யாம் ஆர் எமது பாசம் ஆர் என்ன மாயம்
இவைபோக்க கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன் தன் குறிப்பே துணைக்கொண்டு போம் ஆறு அமைமின்
பொய் நீக்கிப் புயங்கன் ஆள் வான் பொன் அடிக்கே
                                          திருவாசகம்

    மகராஷ்டிரா மாநிலம் பூனேயில் ஆரம்ப காலப் பயிற்சி.

    இரண்டு மாதப் பயிற்சியிலேயே, கார்ப்பொரல் என்னும் அணித் தலைவர் தகுதி திரு கணேசன் அவர்களை நாடி வந்தது.

    இரண்டு வருடப் பயிற்சியானது, நாட்டின் அவசரத் தேவையினைக் கருதி ஆறு மாதங்களாகக் குறைக்கப் பட்டது.

  

1964 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள்.

             பயிற்சி முடிந்து இராணுவம் என்ற அற்புத அமைப்பில் திரு கணேசன் இணைந்த நாள், இரண்டறக் கலந்த நாள்.

      இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, திரு கணேசன் அவர்களின் குடும்பத்தினரால் இயலவில்லை. ஆயினும் குடும்ப நண்பர்களான திரு ராஜாராமன் என்பாரும், திரு சீனிவாசன் என்பாரும் வந்திருந்தனர்.

     திரு கணேசன் அவர்களின் சீருடையின் தோள்களில் 2/LT  என்ற தகுதியினைக் குறிக்கும் இரு நட்சத்திர குறியீடுகள், தனி உறையில் மூடப் பட்டிருந்தன.

      இசைக் கருவிகள் இன்னிசை முழங்க திரு சீனிவாசனும் திரு இராஜாராமனும் திரு கணேசனின் இருபுறமும் நின்று, தோள்களில் மூடியிருந்த துணியினை நீக்கினர்.

2/LT  கணேசன் முறைப் படி இராணுவத்தில் இணைந்தார்.

     இந்திய இராணுவத்தின் பொறியாளர் பிரிவில் அவசரக்கால கமிஷன் .56749 என்ற எண் திரு கணேசனுக்கு வழங்கப் பட்டது.

      நண்பர்களே, இராணுவம் என்றாலே துப்பாக்கி ஏந்திப் போரிடும் அமைப்பு என்றுதான், நம்மில் பலர் நினைத்திருப்போம்.

      போரிடுபவர்கள் மட்டுமே இராணுவத்தினர் அல்ல. அதையும் தாண்டி பரந்து விரிந்தது இராணுவம்.

       ஓரிரு நிமிடங்கள் இராணுவத்தின் அமைப்பினைப் பற்றி, ஒரு பருந்துப் பார்வைப் பார்ப்போமா? வாருங்கள் நண்பர்களே.


      இராணுவத்தின் உட்பிரிவுகள் அனைத்தையுமே, Arms மற்றும் Services என்னும் இரு பிரிவுகளில் அடக்கலாம்.

      நேரடியாகப் போரில் பங்கு பெறுபவர்கள் ஒரு பிரிவு. போரிடுபவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவுபவர்கள் மற்றொரு பிரிவு.

      இராணுவத்தின் Arms  பிரிவை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்

1.       டாங்குப் படை  (Armored Corps)
2.       பீரங்கிப் படை  (Artillery)
3.       பொறியாளர் படை   (Engineers)
4.       தொலைத் தொடர்பு  (Signals)
5.       காலாட் படை  (Infantry)

இதில் பொறியாளர் படையில் அதிகாரியானார் திரு கணேசன்.

      ஒவ்வொரு படைப் பிரிவினருக்கும் அவ்வமைப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சொல் பயன்படுத்தப்படும்.

FORWARD
பொறியாளர் பிரிவின் வார்த்தை

FORWARD

    இவ்வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பொறியாளர் பிரிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் எழுத்துக்களாகும்.

     படைகளில் முன்னனிப் படைப் பிரிவே பொறியாளர் பிரிவுதான்.

FORWARD

F – Fortification

   

போர் முனையில் பதுங்கு குழிகள் அமைப்பது என்பது ஒரு அற்புதக் கலை.

    ஒவ்வொரு படைப் பிரிவும் அவர்களுக்குத் தேவையான பதுங்கு குழிகளை, அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆனால் மலைப் பாங்கான பகுதிகளில், மலைகளை உடைத்து பதுங்கு குழிகளை அமைத்துத் தருவது பொறியாளர் பிரிவே ஆகும்.

O –Obstacle

           போர்ச் சூழலில் எதிரிகள் ஏற்படுத்தி இருக்கும் தடைகளைத் தகர்த்து, படையினருக்கு வழிகளை ஏற்படுத்தித் தருதல்.

    

நூற்றுக் கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு, எதிரிகள் நுழையாமல் கண்ணி வெடிகளைப் புதைத்து வைப்பதும், பெரிய பெரிய ஆறுகளின் குறுக்கே, குறுகிய காலத்தில் பாலம் அமைத்துக் கொடுப்பதும் பொறியாளர் பிரிவே ஆகும்.

R_ Roads and Communication

     ஒரே இரவுக்குள் 100 கிமீ தூரம் வரை சாலைகள் அமைத்து அசத்துவதும் பொறியாளர் பிரிவே ஆகும்.

W- Water Supply

    இராணுவப் பிரிவு முழுமைக்கும் குடி தண்ணீர் வசதி செய்ய வேண்டியது பொறியாளர் பணியாகும்.

     அழ் குழாய் கிணறுகள் அமைப்பது, பாலை வனப் பகுதியில் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் வரை குழாய் பதித்து தண்ணீர் வழங்குவதும் பொறியாளர் பிரிவே ஆகும்.

A-Airfield

     போர்க் காலங்களில், ஹெலிகாப்டர்களும், சிறிய ரக விமானங்களும் இறங்குவதற்கு, துரிதகதியில் சம தளங்கள் அமைப்பதும் போர் முடியும் வரை, இறங்கு தளங்களைப் பராமரிப்பதும் பொறியாளர் பிரிவே ஆகும்.

R – Railways

   போர்க் காலங்களில் உயிருக்குப் பயந்து ரயில்வே தொழிலாளர்கள், பெரும் எண்ணிக்கையில், பணிக்கு வராமலேயே இருந்து விடுவர். அதுபோன்ற சூழ்நிலைகளில் ரயில்வே துறையினைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு இயக்குவதும் பொறியாளர் பிரிவே ஆகும்.


D- Demolition

     வெடிப் பொருட்களைக் கையாலுவதில் தனிப் பயிற்சி பெற்றவர்கள் பொறியாளர்கள். குறுகிய கால அவகாசத்தில், ஓரிடத்தில் பெரும் சேதத்தை உண்டாக்குதல், ஒரு இயந்திரத்தின் முக்கிய பாகம் எது என்று கண்டுபிடித்து, வெடி வைத்து அவ்வியந்திரத்தை செயலிழக்கச் செய்தல்

     படைகள் பின் வாங்க வேண்டிய நிலை ஏற்படுமானால், எதிரிப் படைகள் தொடராத வண்ணம், பாதைகளை, பாலங்களை வெடி வைத்துத் தகர்த்தெறிவதும் பொறியாளர் பிரிவின் பணியே ஆகும்.

     இத்தகு பொறுப்பு வாய்ந்த பொறியாளர் பிரிவில், இளம் அதிகாரியாய் பொறுப்பேற்றார் திரு கணேசன்.

இவரது முதல் பணி எங்கு தெரியுமா?


இந்திய எல்லைப் புறங்கள்,
20.10.1964

அன்புடன் அண்ணன் அவர்களுக்கு,

     இமய மலையின் ஒரு பகுதியான கார்வார் மலை மற்றும் குமவோன் மலைப் பகுதியில், சுமார் 12,000 அடி உயரத்தில் எங்களது படைப் பிரிவு உள்ளது.

  07 செப்டம்பர் 1964. எனது வாழ்வின் எல்லைப் புற வாழ்க்கை ஆரம்பமான நாள். இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.

      கடிதத் தொடர்பு ஒன்றுதான், நமது எண்ணங்களின் பரிமாற்றங்களுக்கு வழி.

      மீண்டும் எழுதுவேன்.

அன்புடன்,
பா.கணேசன்


கடிதங்கள் தொடரும்

22 கருத்துகள்:

  1. போர்க்காலத்தில் பொறியாளர்களுக்கான கடமைகள் பற்றி அறிய முடிந்தது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. பொறியாளர் பிரிவின் வார்த்தையான FORWARD பற்றிய விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. தங்களுடைய பதிவின் வழியாக நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. FORWARD விளக்கம் அறிந்தேன் அருமை நண்பரே தொடர்கிறேன்..
    தமிழ் மணம் வழக்கம் போல..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா! தங்களின் எழுத்துக்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது. வாழ்த்துக்கள்! இந்திய விடுதலைக்காக களமாடிய மாவீரர்களின் தியாகத்தை படிக்கும் போது எங்கள் கண்கள் அழும்! நா பேச்சின்றித் தவிக்கும்! அவர்கள் மீதான அன்பும், பற்றும் ஊற்றெடுத்து உள்ளம் எல்லாம் நிறையும்!
    இந்தியா பாக்கிஸ்தானோடும், சீனாவோடும் போரிட்ட போது எங்கள் இதயங்கள் எல்லாம் இந்தியாவின் பக்கமே நின்றன. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களே எங்கள் வீடுகளில் எல்லாம் படங்களாகவும், முகங்களாகவும் இருந்தார்கள்! நாங்கள் அவர்களோடு கதைதோம்! மகிழ்ந்தோம்! வீரம் பெற்றோம்!
    1987இல் அமைதிப் படையாக உள்நுளைந்த
    இந்திய ராணுவம் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட எங்கள் மக்களை சுட்டுக் கொன்றது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான எங்கள் பெண்பிள்ளைகளையும், தாய்மார்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. விலைமதிப்பற்ற எங்கள் சொத்துக்களை இல்லாமல் அழித்தது. 1971இல் வங்காள தேசத்தில் இந்திய ராணுவம் எதைச் செய்ததோ, கஷ்மீரில் இந்திய ராணுவம் எதைச் செய்ததோ, அதையே ஈழத்திலும் செய்தது.
    இப்போதும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிப் புகழும் எங்கள் இதயம் எங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கும்...ஒன்று: அவர்கள் பிள்ளைகளா இவர்கள்? இரண்டு: இவர்களுக்காகவா அவர்கள் போராடி, தமது இன்னுயிரை ஈந்தார்கள்?
    எங்கள் இதயத்துக்கு பதில் சொல்ல யாரிடம் விடையுண்டு?
    யாரிடம் கேட்போம் நாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My dear Mr Jude Arulappu,as a military officer and author of this book "Ellaippuranthil....." I am duty bound to give you a reply.Army is a great organisation created by a country to protect its safety,honour and integrity of that country.Indian Army is a unique force as it is a volunteer force.young men and women join this for various reasons like employment,adventure,physical and mental toughness and of course last but not least out of shear PATRIOTISM.The indian armys loyalty and integrity is time tested as great world war giants had poured in great appreciations in honour of indian army.Please remember it is not a mercenary force.As you may be knowing army is subjected to Indian penal code and also Army act and regulations.The Army carrys out the orders of their superiors.The entire freedom struggle was controlled by our own people with Britishers as officers
      and many of our own kith and kin were killed.According to then indian PM the army went there to establish peace.Many army officers have appreciated the role Tamil in srilanka but they are helpless.Many officers knows it.
      The whole world is full of appracitions for the indian army for their role in 1971.J&K is integral part of India and it is the moral duty of any force to defend their country.
      Incidently I was in 1965 war in Sialkot sector and in Dacca in 1971.At the same time I was a tough mil officer.I was best sports person in atheletics,swimming and Basketball.If you get an oppurtunity please gothrough all my writings.
      I hope I have answered your quesion.
      with regards and love.

      நீக்கு
  6. வணக்கம் ஐயா! தங்களின் எழுத்துக்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது. வாழ்த்துக்கள்! இந்திய விடுதலைக்காக களமாடிய மாவீரர்களின் தியாகத்தை படிக்கும் போது எங்கள் கண்கள் அழும்! நா பேச்சின்றித் தவிக்கும்! அவர்கள் மீதான அன்பும், பற்றும் ஊற்றெடுத்து உள்ளம் எல்லாம் நிறையும்!
    இந்தியா பாக்கிஸ்தானோடும், சீனாவோடும் போரிட்ட போது எங்கள் இதயங்கள் எல்லாம் இந்தியாவின் பக்கமே நின்றன. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களே எங்கள் வீடுகளில் எல்லாம் படங்களாகவும், முகங்களாகவும் இருந்தார்கள்! நாங்கள் அவர்களோடு கதைதோம்! மகிழ்ந்தோம்! வீரம் பெற்றோம்!
    1987இல் அமைதிப் படையாக உள்நுளைந்த
    இந்திய ராணுவம் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட எங்கள் மக்களை சுட்டுக் கொன்றது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான எங்கள் பெண்பிள்ளைகளையும், தாய்மார்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. விலைமதிப்பற்ற எங்கள் சொத்துக்களை இல்லாமல் அழித்தது. 1971இல் வங்காள தேசத்தில் இந்திய ராணுவம் எதைச் செய்ததோ, கஷ்மீரில் இந்திய ராணுவம் எதைச் செய்ததோ, அதையே ஈழத்திலும் செய்தது.
    இப்போதும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிப் புகழும் எங்கள் இதயம் எங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கும்...ஒன்று: அவர்கள் பிள்ளைகளா இவர்கள்? இரண்டு: இவர்களுக்காகவா அவர்கள் போராடி, தமது இன்னுயிரை ஈந்தார்கள்?
    எங்கள் இதயத்துக்கு பதில் சொல்ல யாரிடம் விடையுண்டு?
    யாரிடம் கேட்போம் நாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. If you are interested to know the mind set of indian army in srilanka please read "For the sake of honour" by Lt Gen Sardeshpande,the over all commander of IPKF.You will come back to your original thoughts.Many officers refused the command and undertook punishment and supercession for promotion.

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்..தங்களின் கருத்தில் எழுதியது படிக்க மிக அருமையாக உள்ளது... தொடருங்டகள் ஐயா..காத்திருக்கேன்... த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் !

    ஒரு படைபிரிவு எப்படி இருக்கும் என்று அறிவேன் ஆனால் இந்திய படைப்பிரிவின் பொறியியலாளர் பிரிவுக்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டேன் நன்றி....ஒரு ராணுவ வீரனின் கடிதங்கள் தொடரட்டும் தொடர்கிறேன் நன்றி !
    தம +1

    பதிலளிநீக்கு
  9. விளக்கமான பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  10. ஒரு சொல்லுக்கான விளக்கம் சொல் விளக்கம் என்பதோடு மட்டுமன்றி உணர்வுபூர்வமாக இருப்பதைக் காணமுடிகிறது. தங்களின் இத்தொடர் பதிவு இளைஞர்களை ஊக்குவிக்கும்.

    பதிலளிநீக்கு
  11. கர்னல் கணேசன் அவர்கள் சேவை செய்த இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவின் FORWARD என்ற கடமைக்கு தந்த விளக்கத்தினை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  12. கர்னலின் உரையை விழாவில் கேட்கும் போதே..பரவசமாய் இருந்தது...
    இப்போது உங்கள் வரிகளில் வாசிக்கும் போது இன்னும் ருசிக்கிறது

    பதிலளிநீக்கு
  13. எவ்வளவு தகவல்கள், புதிய செய்திகள், எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது,

    பகிர்வுக்கு நன்றி சகோ, தொடருங்கள்,,,,,

    பதிலளிநீக்கு
  14. இராணுவப் பொறியியல் துறைச்செயலை
    நன்றே அலசி உள்ளீர்கள்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. கர்னல் கணேசன் அவர்கள் சேவை . இராணுவ பொறியியல்பிரிவின் பணிகள் கணேசன் அவர்களின் கடிதம் எல்லாம் மிக அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. எல்லைப்புறசேவையில் இருந்த கணேசனுடன் பேசி அளவளாவ நினைத்தேன் ஆனால் சந்தர்ப்பம் சரியாக அமைய வில்லை. இலங்கையில் அமைதிப்படையில் பணியாற்றிய அதிகாரி மேஜர் ரவி. அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்க நினைத்ததுண்டு.திரு கணேசன் திரு ரவி ஆகியோரிடம் ஒரு பேட்டி காண வேண்டுமென்பது என் அவா. பார்ப்போம் சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும் அமைதிப்படை பற்றி எழுத நிறைய இருக்கிறது. ஈழத் தமிழர்கள் அவர்களை யூஸ் செய்ய நினைத்ததும் கேள்விப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    கர்னல் கணேசன் அய்யா அவர்களின் இராணுவ அறிமுகம் பற்றிய தங்களின் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  18. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    கர்னல் கணேசன் அய்யா அவர்களின் இராணுவ அறிமுகம் பற்றிய தங்களின் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  19. அருமையான தகவல் ஃபார்வேர்ட் பற்றி அறியத்தந்தமைக்கும், கர்னல் கணேசன் ஐயா அவர்களைப் பற்றியும் அறியத் தந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்கின்றோம். பல அரிய தகவல்கள் இராணுவத்தைப் பற்றி தெரிந்திருந்தாலும் தங்கள் மூலம் நிறைய அறிய முடிகின்றது நன்றி...

    பதிலளிநீக்கு
  20. FORWARD பற்றி அறிந்துகொண்டேன் அண்ணா..எத்துனை எத்துனை செய்ய வேண்டியிருக்கிறது பொறியாளர் படையினர். அதற்குத் தலைவராய் இருந்த கணேசன் அவர்கள் பற்றி அவருடைய நூல் மூலம் பகிர்வதற்கு நன்றி. அவருடைய நூலை வாங்க வேண்டும். வாங்குவேன்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு