11 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 4
குருதியின் நதி வெளிபரக்கவே
    குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணி படும் உடல் அடுக்கியே
   கரை எனஇரு புடை கிடக்கவே
                           கலிங்கத்துப் பரணி

இந்திய எல்லைப் புறங்கள்,
5 செப்டம்பர் 1965

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,

    பதான்கோட் இராணுவ மருத்துவ மனையில் இருந்துதான், இக்கடிதத்தை எழுதுகிறேன். போரின் தீவிரத்தால் மருத்துவ மனையே அதிர்ந்து கொண்டிருக்கிறது.

    இந்திய விமானப் படையின் விமானத் தளம், மருத்துவ மனைக்கு அருகில்தான் உள்ளது. இதனால் இந்திய வான் படை விமானங்களைத் தாக்கவரும், பாகிஸ்தானிய விமானங்களின் குண்டு ஓரிரு முறை மருத்துவ மனைக்குள்ளேயே விழுந்து வெடித்தது.


       இராணுவ வாழ்வில் ஒரு வருடம் மட்டுமே பணி அனுபவம் பெற்ற நான், ஒரு போர்க்களத்தைப் பார்த்து விட்டேன்.

      இந்தப் போர் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை.

     என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை. எனது அடுத்த கடிதத்தை, எந்த இடத்தில் இருந்து, எந்த சூழ்நிலையில் உங்களுக்கு எழுதுவேனோ தெரியாது.

     வீட்டில் யாருக்கும் நான் அடிபட்டது பற்றிச் சொல்ல வேண்டாம். அனாவசியமாகக் கவலைப் படுவார்கள்.

     சூழ்நிலை சற்று தெளிவாகட்டும்.

      மீண்டும் எழுதுவேன், எழுதுவேன் என நினைக்கிறேன்.

அன்புடன்,
பா.கணேசன்
இராணுவ மருத்துவமனை,
13.9.1965
அன்புடன் அண்ணன் அவர்களுக்கு,

      நேரடியாகப் போரில் பங்குகொள்ள முடியா விட்டாலும், மிகக் கொடுமையான முதல் நாலைந்து நாட்கள், நான் போர் முனைப் பயங்கரத்தைக் கண்டு விட்டேன்.

  உண்மையில் பேர்க்களத்தின் ஆரம்ப நாட்கள்தான் கொடுமையானவை. அதன்பின் போர் என்பது எதிரிகளைக் கொல்லும், ஒரு பழகிய வேலை போலாகிவிடும்.

     செப்டம்பர் 9, ஒரு தனி தொடர் வண்டியை ஏற்பாடு செய்து, அதில் பயணத்தைத் தாங்கக் கூடிய நிலையில் இருப்பவர்களை எல்லாம் அனுப்பி வைத்தார்கள்.

      தில்லி வந்து சேர்ந்துவிட்டேன். கடந்த 10 நாட்களாக மருத்துவ மனையில் அனாதைபோல் கிடக்கிறேன். எனது படைப் பிரிவினர் போர்க் களத்தில் இருக்கிறார்கள். இனி எப்பொழுது அவர்களைக் காண்பேன் என தெரியவில்லை.

       சென்னைக்குச் செல்ல உத்தரவு கொடுத்திருக்கிறார்கள். நான்கு வாரம் கழித்து, சென்னை இராணுவ மருத்துவ மனையில் ஆஜராக வேண்டும்.

       போர்க் களத்தில் காயம் பட்டதற்காக நான் பெருமைப் படுகின்றேன். நான்கு வாரம் சென்று, மீண்டும், என் படைப் பிரிவு செல்வேன். அதற்குள் போர் முடிந்து விடுமோ என்னவோ?

அன்புடன்
பா.கணேசன்

      நான்கு வாரங்கள் கடந்த நிலையில் சென்னை இராணுவ மருத்துவ மனையில், உடல் தகுதித் தேர்வில், தகுதியானவ்ர் எனச் சான்றளிக்கப்பெற்று, மீண்டும் தனது படைப் பிரிவினருடன் இணைந்தார் திரு கணேசன்.


இந்திய எல்லைப் புறங்கள்,
சார்வா – பாகிஸ்தான்
31.10.1965
அன்பு அண்ணன் அவர்களுக்கு,

     எனது படைப் பிரிவினர், இந்திய இராணுவத்தின் சேமப் படையாகச் செயல்பட்டு வருகின்றனர்.

     போரில் இரு படைப் பிரிவுகள், பல இடங்களில் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, சில இடங்களில் பின்னடைவும், சில இடங்களில் வெற்றியும் பெறலாம்.

      எந்த இடம் நமது இராணுவத்திற்கு முக்கியம் என்று கருதப்படுகிறதோ, அந்த இடத்தில், தாக்குதலை மேலும் விரிவு படுத்த, சேமப் படை உடனடியாகப் போரில் ஈடுபடும்.

      அதன்படி பதான் கோட்டிற்கும், ஜம்முவிற்கும் நடுவில் ஒரு இடத்தில், மேற்கு நோக்கிய எல்லைப் புறத்தில், நமது படை பெரும் வெற்றி அடைந்தது.

     அந்த வெற்றியை மேலும் பலப்படுத்த எனது படைப் பிரிவினர் இங்கு நுழைந்தார்கள்.

     மகராஜ்கே, சார்வா, பில்லோரா, சோவின்டா என்ற பாகிஸ்தானிய நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன.

      எனது படைப் பிரிவில் பாகிஸ்தானிய வான் படைத் தாக்குதலில் 7 பேர் இறந்து விட்டார்கள்.

     இவர்களது தியாகம் தன்னிகரற்ற்து. உண்மையில் எங்களது படைப் பிரிவில் வீராவேசமான போர் முறைகளைப் பார்க்க முடியாது. ஏனெனில் போரிடுவது எங்களது முக்கிய பணி அல்ல.

      படைப் பிரிவினருக்கு உதவ வேண்டியதுதான் எங்களது வேலை.

      உதாரணமாக, எதிரி ஆற்றின் ஒரு கரையில் இருந்து கொண்டு, நம் மீது குண்டுமழை பொழிகின்றான் என்றால், அந்த குண்டு மழையினைப் பொருட்படுத்தாமல் நாங்கள் பாலம் அமைப்போம்.

      அல்லது மிதவைகளை இயக்கி நமது வீரர்களை அக்கரை சேர்ப்போம்.

       பாகிஸ்தானிய கிராமங்களில் உள்ள கிணறுகளைப் பரிசோதித்து, தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றவைதானா என்று பார்த்து, அதை மோட்டார் வைத்து வெளியில் தொட்டிகளில் நிரப்புகிறோம்.

      படைப் பிரிவினர் அவர்களுக்கு ஒதுக்கிய நேரப்படி, வந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள்.

      மேலதிகாரிகளின் போர் அலுவலகம், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குகின்றோம்.

     இதுபோன்ற பலவிதமான பொறியியல் சம்பந்தப்பட்ட வேலைகள்தான் எங்களுடையது.

      இன்னும் பல நாட்களுக்குப் போர் முடியும்வரை பகைவர்கள் நாட்டில்தான் எங்களது பாசறைப் பயணம்.

      மீண்டும் எழுதுவேன்.
அன்புடன்,
பா.கணேசன்

     பல மாதங்கள் கடந்த நிலையில், ஓர் கடிதம், கடிதமல்ல ஆணை, திரு கணேசன் அவர்களைத் தேடி வந்தது.

1966ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் நாள் முதல் உத்திரப் பிரதேசம், ரூர்க்கியில் அமைந்துள்ள பொறியியல் பல்கலைக் கழகத்தில் மூன்று மாதப் பயிற்சி.

   திரு கணேசன் ரூர்க்கி சென்றார்.

    இரண்டு மாதங்கள் பயிற்சியில் கடந்த நிலையில், அடுத்த உத்தரவு வந்தது.

பயிற்சி முடிந்தவுடன் அஸ்ஸாம் மாநிலம் செல்லவும்

     1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 12, அஸ்ஸாம் மண்ணில் காலடி எடுத்து வைத்தார் திரு கணேசன்.

      அஸ்ஸாமில் மூன்றாண்டுகள் கடந்த நிலையில், திரு கணேசன் அவர்களை மேகாலயாவின் ஷில்லாங் அழைத்தது.

1969 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள்,
திரு கணேசன் இராணுவத்தின்
நிரந்தர அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

   இதன் காரணமாக, Emergency Commission 56749 என்றிருந்த, இவரது இராணுவப் பதிவு எண்   Indian Commission 21773 என மாற்றப் பட்டது.

    1969 நவம்பர் 12 அன்று அடுத்த மகிழ்வான செய்தி வந்தது.

இராணுவப் பொறியியல் கல்லூரியில், அடுத்த ஆண்டு மே மாதம் முதல் மூன்றாண்டு பி.டெக்., பட்டப் படிப்புப் பயில திரு கணேசன் தேர்வு செய்யப் பெற்றுள்ளார்.

      இது மட்டுமல்ல பதவி உயர்வும் தேடி வந்தது.


2/LT கணேசன்,  கேப்டன் கணேசன் ஆனார்.

      1970 பிப்ரவரி 23. சன்னா நல்லூரில் இருந்து கொடுக்கப் பெற்ற தந்தி, மேகாலயாவில், திரு கணேசன் அவர்களின் அலுவலகக் கதவைத் தட்டியது.

அம்மாவின் உடல் நிலை கவலைக்கிடம். உடனே புறப்பட்டு வரவும்

கடிதங்கள் தொடரும்


56 கருத்துகள்:

 1. ஒவ்வொரு வரிகளும் படிக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கின்றது நண்பரே...முடிவில் வந்த செய்தி வருத்தமாகியது தொடர்கிறேன்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா.
  கடிதத்தை படித்த போது மனம் உருகியது. இந்தவீரனின் திறமை வியக்கவைக்கிறது.
  தொடருங்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. போர் முனை என்பது எவ்வளவு திகிலாக இருக்கின்றது. வீரர்கள் எவ்வளவு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து நம் நாட்டிற்காகத் தியாகம் செய்கின்றார்கள். அடுத்த நொடி கூட உயிர் இருக்குமா என்பது கூடத் தெரியாத ஒரு நிலையில். பெருமைப்பட வைக்கின்றது. கடிதங்கல் பல சொல்லுகின்றன. தொடர்கின்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீரர்களின் பணி போற்றுதலுக்கு உரியது நண்பரே
   நன்றி

   நீக்கு
  2. some additional informations.
   The casuality train from pathankot reached Delhi but we were not allowed to get down.There were casuality trains from Amritsar,Ferospore already in Delhi and all military hospitals were full.we were directed to go to Lucknow and we reached there.Even there casulity trains were coming and AQ decided to send on sick leave all walking wounded casualities.Accordingly I was given 28 days sick leave and directed to report to Mil Hoospital chennai.On 16 sep1965 ceasefire was declared.but my Division was already deep inside Pakistan.On medically fit and discharge from MH I reported to my unit.

   நீக்கு
 4. ஒவ்வொரு கடிதமும் சரித்திரம்.... தொடரட்டும் கடிதங்கள். நானும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமின்றி நாடுகாக்கும் அரும்படையாளர் வீரம் அளப்பற்கரியது. தொடரட்டும் சாதனைகள்.

  பதிலளிநீக்கு
 6. நேரடியாகப் போர் செய்வதில்லை என்று சொல்லி , //உதாரணமாக, எதிரி ஆற்றின் ஒரு கரையில் இருந்து கொண்டு, நம் மீது குண்டுமழை பொழிகின்றான் என்றால், அந்த குண்டு மழையினைப் பொருட்படுத்தாமல் நாங்கள் பாலம் அமைப்போம்.

  அல்லது மிதவைகளை இயக்கி நமது வீரர்களை அக்கரை சேர்ப்போம்....// இதையெல்லாம் குறிப்பிட்டு அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறாரே!! எவ்வளவு ஆபத்தும் முக்கியத்துவமும் வாய்ந்தது இவரின் பணி!இதையெல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுத்தால் என்ன? நீங்கள் பகிர்வதால் தான் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது, மிக்க நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவைப் பார்க்கச் சென்றாரா கேப்டன்? அம்மா நலமடைந்தார்களா? அறியக் காத்திருக்கிறேன்
   த.ம.+1

   நீக்கு
  2. Mr.Jayakumar has siply written that I moved to shillong.It is not a simple transfer.From the command of troops,I was posted as Assistant garrison engineer(like AEE in PWD).I refused to accept as I already threw a PWD job to join the Army,But Army HQ insisted that based on my performance at Roorkee university I have been posted to shillong and I must move.so I joined at shillong.It was a multy crore project for HQ Eastern Air Command.One of my project was one crore contract and in that work had been done for 32 lakhs as per record.On my joining I found so many irregularities.AEE.GE.SE.ASST CE and finally Chief engr were all in the same station.On my joining I called for joined stocking of the work by myself ant the contractor.The value of work done came to 28 lakhs.there appears to be 4 lakhs over payment.but in a one crore running contract this over payment is not a big issue.In order to get credibility of each other I insisted that this over payment will not be continued and that contractor will get 2 lakh payment if he complets 6 lakh work.Readers can understand that it was not a healthy start.I had spent one year and ten months and no payment could be made to the contractor.T he superiors felt that I am a pain on their neck but I could not be moved out as my arguments were strong and based on facts.Under such circumstances I got the telegramme and I thought I can go on 2 months annual leave which every Army officer is entitled.Mr jk please continue.

   நீக்கு
  3. நன்றி சகோதரியாரே
   நன்றி ஐயா

   நீக்கு
 7. அருமையான பதிவு சகோ. படித்து பிரமித்தேன். அவருக்கு நமது சல்யூட்டும் கூட.

  பதிலளிநீக்கு
 8. ஒரு வீரனின் கடிதம் மெய்சிலிர்க்க வைக்கிறது பழகிப்போன கடிதங்கள் பல்லாயிரம் இருந்தும் இது தனித்துவமானது !

  தொடரட்டும் தொடர்கிறேன் வாழ்க வளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
 9. போர் முனைத் தகவல்கள் ஒரு புறம்.... திகிலூட்டும் பயங்கரங்களுக்கிடையில் வீரர்களின் தியாகம் மறு புறம்..இப்படியாக வித்தியாசம் வித்தியாசமாக வாசிப்புக்கு தீனி கிடைக்கிறது..நன்றி....உடுவை

  பதிலளிநீக்கு
 10. அவரது வாழ்வு நமக்கு ஒரு பாடம். அதைப் பகிர்ந்துகொள்ளும் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. தன்னம்பிக்கையும் மன உறுதியையும் மேம்படுத்துகின்றன உங்களது எழுத்துக்களும், கர்னலின் மனத் திண்மையும்.

  பதிலளிநீக்கு
 11. மிகவும் நெகிழ்வூட்டும் கடிதங்கள்,
  வீரஞ்செறிந்ததும் கூட/

  பதிலளிநீக்கு
 12. ஒரு சாகசப்படம் பார்க்கும் மகிழ்வு..உங்கள் தொகுப்பு மிகவும் அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. தகவல்கள் புதிது
  நன்றி சகோதரா.
  வேதாவின் வலை

  பதிலளிநீக்கு
 14. ஒரு ராணுவ வீரரின் போர்முனை அனுபவங்கள் வியப்பாக இருக்கிறது.
  த ம +1

  பதிலளிநீக்கு
 15. படித்தேன். பிரமித்தேன். திரு கணேசன் அவர்களின் பின்னூட்டத்தையும் படித்தேன். தொடர்கிறேன்.
  தம +1

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள கரந்தையாரே!

  இந்திய இராணுவ வீரர் பற்றி உயர்வான எண்ணம் இருந்தாலும், பெரும்பாலும் வீரர்கள் சண்டையா போடுகிறார்கள்? உடற்பயிற்சி செய்து கொண்டு ஓய்வில்தானே இருக்கிறார்கள் என்று நினைப்பதும் உண்டு.

  அய்யா அவர்களின் கடிதத்தை, தியாகத்தை, போரில் உயிரைத் துச்சமாக கருதி முன்னேறிய வீரத்தை நினைக்கையில் மெய் சிலிர்க்கிறது.

  நாட்டுக்காக உழைத்திட்ட வீரரின் தியாகம் நாளை சரித்திரமாக்க தங்களின் தொடர் தொடரட்டும்.

  மாவீரரின் மனம் குளிரட்டும்... தங்களின் சேவை தொடரட்டும்!

  நன்றி.
  த.ம.6

  பதிலளிநீக்கு
 17. வீரர்களின் பணி பற்றிய பகிர்வு அருமை

  பதிலளிநீக்கு
 18. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  கர்னல் கணேசன் அவர்களுடைய நேர்மையான தீர்க்கமான செயல்களை (ஷில்லாங்கில்)அவருடைய பின்னூட்டுப் பதிவில் அறிய முடிகிறது. மேலும் கிரேஸ் அவர்களின் கூற்றுப் படி நமது மாணவர்கள் அறியக்கூடிய செய்திகள் நிறைய உள்ளன.தெரியப் படுத்தக்கூடிய கடமை நம்மைப் போன்ற ஆசிரியர்களுக்கு உள்ளது.

  பதிலளிநீக்கு

 19. அருமையான தொடர்
  கடிதங்களா - இவை
  வரலாற்றுப் பதிவுகள் அல்லவா!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 20. கடிதங்களின் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் பல தியாகங்களின் -சொல்லொன்னா துயரங்களின் தழும்புகளாக தென்படுகின்றன.

  நாட்டை காக்கும் வீரனுக்கும் தொகுத்து வழங்கும் உங்களுக்கும் என் வீர வணக்கம்.

  கோ

  பதிலளிநீக்கு
 21. some additional informations.
  The mil hospital(MH)Pathankot was over crowded with war casualities and hence a casuality train only for war casulities was sent to DELHI in which I was also there.But in Delhi we were not allowed to get down as war casuality trains from Amritsar and Ferospore were already there and there was co space in Delhi MH.so our train was diverted to Lucknow.Even there war casualities were pouring in and it was decided to send walking wounded casualities on sick leave.Accordingly I was given 28 days sick leave and asked to report to MH Madras.A fter medical fitness I was sent to my unit.Ceasefire was declred on 16 sep1965,but my Division was already deep inside Pakistan as Jayakumar already reported.

  பதிலளிநீக்கு
 22. என்ன நடக்கும் எப்போது நடக்கும் என்று அறிய முடியாத போர் முறைகள். போர் முனையின் முன்னணியில் இருப்பதே ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிகிறது. மேலும் போர்காலங்களில் செய்யும் வேலைகளில் ஊழல் ஒன்றறக் கலந்திருக்கும் போல் தெரிகிறது. பலருக்கும் பணம் பார்க்கும் நேரம் அது. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 23. முந்தைய பகுதிகளையும் இப்போதுதான் படித்தேன் இராணுவத்தினரின் பணிகள் மே சிலிர்க்க வைக்கிறது. தங்கள் உயரை பணயம் வைத்து நாட்டைக் காக்கும் அவர்களுக்கு நாம் எப்போதும் கடமைப் பட்டவர்கள்கடிதங்களை வைத்து அருமையான விவரிப்பு

  பதிலளிநீக்கு
 24. இவரின் பணி பாராடடுதலுக்கு உரியது!!

  பதிலளிநீக்கு
 25. எல்லைப் புறத்தில் நாட்டுக்காக ஆற்றும் பணி போற்றுதலுக்குரியது. தொடருகிறேன்.

  பதிலளிநீக்கு
 26. அருமையான தொடர். உங்களின் நிறைய பதிவுகளை படிக்காமல் விட்டுவிட்டேன்.
  நேரம் கிடைக்கும்பொழுது ஒவ்வொன்றாக படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. கலிங்கத்துப் பரணி வரிகள் கணேசர் பரணிக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன.

  பதிலளிநீக்கு
 28. நாட்டுக்காக உன்மையிலேயே உழைப்பவர்கள் இவர்கள்தான்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு