08 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 3
சிற்றில் நாற்றூன் பற்றி, நின் மகன்
     யாண்டுள னோ?என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
     புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
     தோன்றுவன் மாதோ, போர்களத்தானே
                                புறநானூறு 86

       1965 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.

       1962 ஆம் ஆண்டு சீனாவின் ஆக்கிரமிப்பால் படு தோல்வி அடைந்த இந்திய இராணுவம், தன்னிலை உணர்ந்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது.

     ஏராளமான படைப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதிகாரிகளும், அதிகாரிகள் அல்லாதவர்களும், பெருமளவில் இராணுவத்தில் சேர்க்கப் பட்டனர்.

     இம்மாற்றங்களை அறியாத பாகிஸ்தான், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் குஜராத், கட்ச் பகுதியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.


     பின்னர் செப்டம்பர் முதல் நாள் பெரும் போரைத் தொடங்கியது.
    

பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்திய, முன்னிலை வான் தளங்களைத் தாக்கத் தொடங்கின.

      அன்று மாலையே திரு கணேசன் அவர்களுக்குப் புது உத்தரவு வந்தது.

தங்களது படை பிரிவு, பதான் கோட்டிற்கும் ஜம்முவிற்கும் இடைப் பட்டப் பகுதியில் இருந்தாக வேண்டும். உடனே புறப்படுங்கள்.

     மறு நோடியே, புல்டோசர், மோட்டார் கிரேடர் போன்ற எண்ணற்ற இயந்திரங்களோடும், வாகனங்களோடும் கணேசன் அவர்களின் படைப் பிரிவு புறப்பட்டது.

    

திரு கணேசனின் படைப் பிரிவு பதான்கோட் சென்றடைந்த போது, உக்கிரமான வான் வழித் தாக்குதல், குண்டுகள் பெரும் மழையாய் பொழிந்த வண்ணம் இருந்தன.

     வண்டிகளை நிறுத்தி விட்டு பதுங்கு குழிகளை நாடி தப்பித்தனர்.

     தொடர்ந்து மெல்ல மெல்ல, குண்டு மழைக்கு நடுவே முன்னேறிய போது, ஒரு குண்டு பாய்ந்து வந்து, திரு கணேசனின் காலை பதம் பார்த்தது. இரத்தம் பாய்தோடத் தொடங்கியது.


கடிதங்கள் தொடரும்
51 கருத்துகள்:

 1. காலில் குண்டு பாய்ந்த பிறகு என்னவாயிற்று தொடர்கிறேன் நண்பரே..
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. ஒரு வீரனின் வாழ்க்கை வரலாறு விறுவிறுப்பாக இருக்கிறது விரைவாக அடுத்த பதிவினையும் எதிர்பார்க்கிறேன் நன்றி நண்பரே
  தொடர வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 3. போர் முனையில் இருப்பதை போன்ற உணர்வை தருகிறது உங்க பதிவு ,தொடர்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 4. ஆவலுடன் அடுத்த பகிர்வை எதிர்நோக்கி...

  பதிலளிநீக்கு
 5. தொடரக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் தேர்ந்த கைவண்ணத்தில் போர்க்களம் கண்முன்னே விரிகின்றது..

  அடுத்த நிகழ்வினை பரபரப்புடன் எதிர்நோக்குகின்றது - மனம்..

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள கரந்தையாரே!

  திரு.கணேசன் அவர்களின் காலை பதம் பார்த்தது ஒரு குண்டு; இந்திய வீரரின் வாழ்க்கை போராட்டம் அறிய மிகுந்த ஆவல்...!

  நன்றி.
  த.ம.6

  பதிலளிநீக்கு
 8. நண்பரே கரந்தை ஜெயகுமார் வரலாறுகள் மிகவும் முக்கியம் .ஆவணப்படுதலில் கோட்டை விட்டவர்கள் தமிழர்கள் .தங்களின் முயற்சி ஒரு ஆவணப்படுதலே
  பாராட்டுகள் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dear Mr.Karikalan.Thanks for visiting this site.I had gone through your blog and not surprised to know the transfer of dy commissioner of chennai corporation.But one cannot eliminate truth from emerging in different way.My life is full of such things.But the person cocerned should not giveup.not only that he should keep developing himself stronger and stronger physically,mentally and psychologically.Please remember the entire life you have lead till today could be a preparation for the new role which you are destined to take over tomorrow.Pl come over on to my e mail,"pavadai.ganesan@gmail.com"

   நீக்கு
  2. வாழும் காலத்தில் வரலாறு படைத்த, படைத்துக்கொண்டிருக்கும் அரியவரான தங்களைப் பற்றி திரு கரந்தை ஜெயக்குமார் தொடர்ந்து எழுதிவருவது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இவ்வாறான ஒரு பெரும் சேவை செய்த ஒருவர் நம்முடன் இருக்கிறார், பழகுகிறார் என்பதை நினைக்கும்போது மன நிறைவாக உள்ளது. தாய்மண்ணிற்காக உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும், உங்களது பெருமையினை வெளிக்கொணரும் கரந்தை ஜெயக்குமாருக்கும் நன்றி.

   நீக்கு
 9. தொடரந்து படிக்கிறேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. அறிய வேண்டிய வரலாறு.

  போர்ப்பரணி தொடரட்டும் ! தொடர்கிறேன்.
  ““““““சிற்றில் நாற்றூன் பற்றி, நின் மகன்
  யாண்டுள னோ?என வினவுதி என் மகன்
  யாண்டு உளன் ஆயினூம் அறியேன், ஓரும்
  புலி சேர்ந்து போகிய கல் அளை போல
  ஈன்ற வயிறோ இதுவே
  தோன்றுவன் மாதோ, போர்களத்தானே“““““
  எனும் தாங்கள் குறித்த புறநானூற்றுப் பாடல், தங்கள் நினைவில் இருந்து எழுதியதாகலாம்.

  இதில் “நற்றூன், ஆயினூம் அறியேன், போர்களத்தானே“
  எனும் சீர்களைச் சரிபார்க்க வேண்டுகிறேன்.

  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. yes sir."natroon"in that bigger "na" and "aayinoom" inthat it is smaller "nu". thanks for pointing out.

   நீக்கு
  2. நன்றி நண்பரே
   எழுத்துப் பிழையினைச் சரி செய்துவிட்டேன்
   பிழை நான் செய்ததாகும்

   நீக்கு
 11. திரு கணேசனின் காலை பதம் பார்த்தது. இரத்தம் பாய்தோடத் தொடங்கியது.//

  அடுத்து என்ன என்று அறிய ஆவல், தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. அடுத்து என்ன ஆயிற்று ,,

  காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 13. பதிவில் உள்ள புற நானூற்றுப்பாடல் கரந்தையார் சேர்த்தது என்று எண்ணினேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை ஐயா இல்லை
   சங்க இலக்கியப் பாடல்களுக்கும்,எனக்கும் தூரம் அதிகம்.
   இப்பதிவினில் உள்ள பாடல் கர்னல் அவர்களின் நூலில் இருந்து
   எடுக்கப்பட்வைகளே ஆகும்
   நன்றி ஐயா

   நீக்கு
 14. இந்த நேரத்தில் உங்கள் பதிவு ஒரு உற்சாகத்தை தருகிறது தொடருங்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 15. புறநானூறும் நடப்பும் சேர்த்து எழுதியிருப்பது அருமை

  பதிலளிநீக்கு
 16. போர்ச் சூழல் ஆவணம்
  தொடர் பதிவாக
  அருமை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 17. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  பதட்டமான இடத்தில் நிறுத்தி விட்டு எப்பொழுது தங்களின் அடுத்த பதிவு என்று ஏங்க வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 18. இராணுவத்தில் எத்தனை பொறுப்புகள், அவர்களுக்கும் திகில் நிறைந்த வாழ்க்கை, நாம் சல்யூட் செய்ய வேண்டியவர்கள் அவர்கள் அனைவரும். இராணுவத்தின் பெருமையையும் கணேசன் அவர்களின் பெருமையையும் இங்கு எல்லோருக்கும் அறியத் தருவதற்குத் தங்களுக்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 19. பதைக்கும்படியான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே அண்ணா..நான் தாமதமாக வந்ததால் உடனே படித்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 20. கர்னல் கணேசன் அவர்களுக்கு என்ன ஆயிற்று? இந்த தொடரின் அடுத்த பதிவிற்கு செல்கிரேன்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு