30 ஜனவரி 2014

இளமை எழுதும் கவிதை நீ


    

நண்பர்களே, நாம் தினமும், நமது வாழ்க்கையில், பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துதான் வருகிறோம். நாம் வசிக்கும் தெருவில், பேரூந்தில், உணவகங்களில், தேநீர் கடைகளில், திரையரங்குகளில் என தினமும் புத்தம் புது முகங்களைப் பார்த்து வருகிறோம்.

     சிலரைப் பார்த்தவுடன், நாமே வலிய சென்று பேசி, நட்பை உருவாக்கிக் கொள்வோம். ஆனால் சிலரைப் பார்த்தவுடன், காரணமின்றி விலகிச் செல்வோம். பேசுவதற்கு மனம் இடம் தராது.

22 ஜனவரி 2014

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்



     நண்பர்களே, தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய். நூலின் பெயர் மட்டுமல்ல, நூலின் முகப்பு அட்டையும் கூட, நம்மை, நமது கடந்த கால நினைவலைகளுக்கு, கைப்பிடித்து இழுத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தவை.  மீண்டும் ஒரு முறை அந்த வசந்தம் திரும்பி வாராதா, என ஒவ்வொருவரையும், எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் தன்மை வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

16 ஜனவரி 2014

பாரதிதாசனைச் சந்தித்தோம்


செந்தமிழ் நாட்டினிற் பற்றும் – அதன்
சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ – எந்த
நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை – கையிற்
காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய வாழி – நல்ல
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்
-          பாரதிதாசன்

10 ஜனவரி 2014

புதியதோர் உலகில் ஓர் நாள்

   

  நண்பர்களே, கடந்த 5.1.2014 ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை நாள் என்றாலே ஒரு வித சோம்பலும் சேர்ந்தே வந்துவிடுகிறது. காலையில் சற்று தாமதமாகத்தான் கண் விழித்தேன்.

03 ஜனவரி 2014

சே குவேரா - நீ வாழ்கிறாய்



 1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர்.