30 ஜனவரி 2014

இளமை எழுதும் கவிதை நீ


    

நண்பர்களே, நாம் தினமும், நமது வாழ்க்கையில், பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துதான் வருகிறோம். நாம் வசிக்கும் தெருவில், பேரூந்தில், உணவகங்களில், தேநீர் கடைகளில், திரையரங்குகளில் என தினமும் புத்தம் புது முகங்களைப் பார்த்து வருகிறோம்.

     சிலரைப் பார்த்தவுடன், நாமே வலிய சென்று பேசி, நட்பை உருவாக்கிக் கொள்வோம். ஆனால் சிலரைப் பார்த்தவுடன், காரணமின்றி விலகிச் செல்வோம். பேசுவதற்கு மனம் இடம் தராது.


     இதில் முதலாம் பிரிவைச் சார்ந்தவர்தான் இவர். தான் பிறந்த மண்ணை மறக்காதவர். தனது பெயருக்கு முன்னால், குடந்தையையும் இணைத்துக் கொண்டவர்.

     இவர் இணையத்தில் விரித்து வைத்திருக்கும் வலைக்குள் சென்றோமானால், இவரது முகம் மட்டுமல்ல, இவரது மனமும் தெரியும்.
வாழும் மட்டும், நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்

     ஆம் நண்பர்களே, நீங்கள் நினைப்பது சரிதான். குடந்தை ஆர்.வி.சரவணன் அவர்களைப் பற்றித்தான் சொல்லுகின்றேன்.


திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கு வந்தார். சந்தித்தோம். நண்பர்களானோம்.

     கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவரது பொழுது போக்கு இரண்டே இரண்டுதான். ஒன்று புத்தகம். இரண்டாவது சினிமா.

     நாம் சினிமா பார்ப்பதற்கும், இவர் சினிமா பார்ப்பதற்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. நாம் நடிகர், நடிகைகளை ரசிப்போம். நடிப்பை ரசிப்போம். இவரோ சினிமாவையே ரசிப்பவர். இவருக்கு கட்டுக்கு அடங்காத ஆசை ஒன்று, கல்லூரி காலத்தில் இருந்தே, இவரது மனதை கொள்ளை கொண்டு வருகிறது. திரைப்படம் இயக்க வேண்டும் என்ற தணியாத ஆசை.

     நண்பர்களே, இவர் கல்லூரிக் காலத்தில் எந்தப் பெண்ணையும் காதலித்ததாகத் தெரியவில்லை. ஆனால் காதலித்தால் எப்படியிருக்கும், எப்படியிருக்க வேண்டும், என்பதை  திரைப்படம் போலவே, மனதிற்குள்ளாகவே ஓட்டிப் பார்த்தே, பல வருடங்களைச் செலவிட்டிருக்கிறார். மெல்ல, மெல்ல காதலுக்கு உரு கொடுத்து, அதில் லயித்து, கண்மூடி, காதல் காட்சிகளை மனதிற்குள்ளாகவே இயக்கியும் பார்த்திருக்கிறார்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, பதினைந்து ஆண்டுகளாய், உள்ளுக்குள் சேமித்து வைத்திருந்த, காதல் கதையை, ஒரு நாள், தொடர் கதையாக, தனது குடந்தையூர்  தளத்தில், மெல்ல, மெல்ல, ஒவ்வொரு அத்தியாயமாக, பூப் போல் இறக்கி வைத்தார்.

     வலையுலக உறவுகள் தந்த உற்சாகத்தால், ஊக்கத்தால், இணையத்தில் இருந்த எழுத்துக்களை, இடம் மாற்றி, அழகியதொரு நூலாய் உருவாக்கியிருக்கிறார்.

இளமை எழுதும் கவிதை நீ...

     நூலைப் படிக்கப் படிக்க, புத்தகத்தைப் படிக்கின்றோம் என்ற நினைப்பே வரவில்லை. திரையரங்கிற்குள் நுழைந்த உணர்வே மேலோங்கி நின்றது.    

திரைப்படம் என்றால் பாடல் காட்சி வேண்டுமல்லவா? ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், அருமையாய் கவிதையாய், சில வரிகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

பார்க்கும் வரை ....
பொழுதே போகவில்லை.
பார்த்த பின்
பொழுதே போதவில்லை.
    ---

தென்றலாய்தான்
கடந்து சென்றாய்
இருந்தும்
புயல் கடந்த
பூமியாகிறேன்.

   ---

நீ பேசாத
பொழுதுகளில்
உன் கொலுசுடன்
உரையாடிக்
கொண்டிருக்கிறேன்

   இந்த இயக்குநருக்குள், ஒரு கவிஞனும் ஒளிந்து இருக்கிறார்.

     நண்பர்களே, நான் எனது கல்லூரிக் காலங்களில், ஒரு புறம் சுஜாதாவையும், மறுபுறம் பட்டுக்கோட்டை பிரபாகரையும் தேடி அலைந்திருக்கிறேன். ஒரு முறை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை, பட்டுக்கோட்டையில், ஒரு மருந்து கடையில் சந்தித்தது, இன்றும் பசுமையாய் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

     குடந்தை சரவணன் அவர்களின் நூலைப் பற்றி, நான் சொல்வதைவிட, பட்டுக்கோட்டை பிரபாகர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்போமா?

     என்னால் இந்தக் கதையை முழுமையாகப் படிக்க முடிந்தது என்பதையே முதல் பாராட்டாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     ஒரு சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ ... முதலில் வாசகரைப் படிக்க வைக்க வேண்டும். அந்தத் தன்மைக்கு ரீடபிளிட்டி என்று பெயர். அது உங்கள் எழுத்தில் இருக்கிறது.

     அடுத்து ...... ஒரு படைப்பு ஒரு எளிமையான வாசகனுக்கும் புரிய வேண்டும்.

     உங்கள் படைப்பில் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கின்றன. ஒன்று ... உங்கள் படைப்பை வாசித்து முடிக்கலாம். இரண்டு .... உங்கள் படைப்பு புரிகிறது. பாராட்டுக்கள்.

    என்ன நண்பர்களே, புரிகிறதா? பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்களே, படித்துப் பாராட்டி விட்டார்.

நாமும் படிப்போமா,

நாமும் பாராட்டுவோமா.


38 கருத்துகள்:

 1. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் மத்தியில் இவரை எளிதாக கண்டுபிடித்து விடலாம்... பழகுவதற்கு இனியவர்... எனது (நமது) இனிய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை...

  அவரது படைப்பு மட்டுமா எளிமை...? அனைவரிடமும் பழகுவதில் கூட எளிமை தான்...

  குடந்தை சரவணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அருமையான கதை. நான் படித்திருக்கிறேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. மனம் நிறைந்த வாழ்த்துக்கள், ஊர் வரும் பொது வாங்கி வாசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் படிக்கவில்லை ...
  எங்கு கிடைக்கும்..

  பதிலளிநீக்கு
 5. குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள் தொடர்ந்து எழுத நல்வாழ்த்துகள். அவரது எழுத்துகளை நட்புடன் அறிமுகப்படுத்திய உங்கள் நல்ல மனசுக்கு வணக்கமும், நன்றியும்.

  பதிலளிநீக்கு
 6. அறிமுகத்திற்க்கு நன்றி. படிக்க வேண்டிய பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆர். வி. சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. குடந்தை ஆர். வி. சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!அறிமுகத்திற்கு நன்றி.
  ஒருவரை அறிமுகப் படுத்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும் ,
  அது உங்களுக்கு இருக்கு.
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 10. // சிலரைப் பார்த்தவுடன், நாமே வலிய சென்று பேசி, நட்பை உருவாக்கிக் கொள்வோம். ஆனால் சிலரைப் பார்த்தவுடன், காரணமின்றி விலகிச் செல்வோம். பேசுவதற்கு மனம் இடம் தராது.//

  நானும் இதற்கான காரணத்தை பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இருந்தே யோசித்து வருகிறேன். விடை தெரியவில்லை.

  சகோதரர் குடந்தை ஆர் வி சரவணன் நூலைப் பற்றிய விமர்சனம் நன்றாக இருந்தது. திருச்சி – தஞ்சை புத்தகக் கடைகளில் கிடைக்குமா? என்பதனைத் தெரியப்படுத்தவும்.

  பதிலளிநீக்கு
 11. அன்பின் ஜெயக்குமார் - குடந்தை சரவணனைப் பற்றியும் அவரது நூலினைப் பற்றியும் விளக்கமான பதிவிட்டமை நன்று - நூலினை வாங்கிப் படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் ஜெயக்குமார் மற்றும் சரவணன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 12. R.V.சரவணன் அவர்களுக்கு உள்ளே ,டைரக்டர் R.V.உதயகுமார் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு பாராட்டுக்கள் !
  R.V.சரவணன் அவர்கள் லட்சியத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள் !
  த ம 3

  பதிலளிநீக்கு
 13. வாய்ப்பு கிடைப்பின் கண்டிப்பாய் வாங்கி வாசிக்குறேன். சகப் பதிவரின் திறமையை பாராட்டவும் மனசு வேணும். உங்க நல்ல மனதுக்கு வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 14. தங்களது அன்பும் வாழ்த்தும் என் எழுத்தார்வத்தை இன்னும் செழுமையாக்கும். மனம் கனிந்த நன்றி சார்

  பதிலளிநீக்கு
 15. I shall be read the book comming very soon. Thanks sir.

  பதிலளிநீக்கு
 16. மிக அருமையான படிக்கும் அனைவருக்கும் புத்தகம் வாங்கி படிக்கும் ஆவலை ஏற்படுத்ததும் விமர்சனம் வாழ்த்துக்கள் நண்பர் சரவணனுக்கு. தங்களுக்கு நன்றிங்க ஐயா.

  பதிலளிநீக்கு
 17. பெயரில்லா30 ஜனவரி, 2014

  நல்ல விமரிசனம் சகோதரரே
  மிக்க நன்றி அறிமுகத்திற்கு.
  இவர் மேலும் நிறைய முன்னேறவும்,
  தங்களிற்கும் சேர்த்து இனிய வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 18. அவரது வலைப்பூ முகவரி கிடைத்தால் படிக்க ஆவல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா இதுதான் அவரது வலைப்பூ முகவரி

   http://kudanthaiyur.blogspot.com/

   நீக்கு
 19. குடந்தையூரார் இப்படித்தான் நாங்கள் அவரை அழைப்பது வழக்கம்! நல்ல நண்பர்! அவரது இந்தப் புத்தக வெள்யீட்டு விழாவுக்கு என்னால் வர இயாலாததால். சென்னையில் இருக்கும் என் தோழி என்னுடன் எழுதுபவர் சென்றிருந்தார்!

  நாங்கள் படித்து விமர்சனம் எழுத நினைத்து வாசித்து முடிக்கும் வேளையில் உங்களிடமிருந்து விமர்சனம்!

  நல்ல பகிர்வு! மிக்க நன்றி நம் நண்பரை ஊக்கப் படுத்தியதற்கு!


  த.ம.

  பதிலளிநீக்கு
 20. குடந்தை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அவர் வலைத்தள அறிமுகத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. குட‌ந்தை சரவணன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 22. புத்தக சந்தையில் தேடி நூலை வாங்கிவிட்டேன்! படித்து முடித்துவிடுகிறேன்! அருமையான விமர்சனம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 23. படிக்க வேண்டும்,பாராட்ட வேண்டும் அவசியம்/நூல் கிடக்குமிடம் தெரிவிக்கலாமா?

  பதிலளிநீக்கு
 24. சின்ன சின்ன கசல் போன்ற கவிதைகள்
  குடந்தையாரின் கவிதைகள் அருமை அண்ணா !!

  பதிலளிநீக்கு
 25. நூல் அறிமுகம், நண்பர் அறிமுகம் என சிறப்பாக இணைத்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நானும் விழாவுக்கு சென்றிருந்தேன் மிகவும் மகிழ்ச்சியுற்றேன் காரணம் வாழ்த்த வந்த உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என குடும்ப விழாவாக காண முடிந்தது.நெஞ்சம் நெகிழ வாழ்த்தினேன்

  பதிலளிநீக்கு
 27. என் இனிய ஜெயக்குமார் அவர்களுக்கு, நண்பர் திரு.ஆர்.வி.சரவணன் அவர்களை நமது பள்ளியில் சந்தித்த நிகழ்வினை இப்பொழுது நினைத்து பார்க்கின்றேன். தாங்கள் குறிப்பிட்டதைப் போல அவர் மிகவும் இனிமையாகவும் இணக்கமாகவும் பேசி என்னை கவர்ந்தார். ஒரு நாள் பழக்கத்திலேயே பல நாள் பழக்க நட்பு விதையினை பதித்து சென்றார் என்றால் அது மிகையாகாது. வாழ்க அவரது எழுத்துப்பணி, வளர்க தங்களின் அறிமுகப்பணி.

  பதிலளிநீக்கு
 28. ஆகா... எனது நண்பர் குடந்தை சரவணன் அவர்களது புதினத்தை, அவர் கதையை உருவாக்கிய கதையை அழகுபட சொன்னீர்கள். அக்கதையின் சிறப்புக்களையும் விளக்கினீர்கள். ப.கோ.பிரபாகர் அவர்கள் சொன்னதுபோல் இந்தக் கதையைப் படிக்கலாம்; அதோடு இரசிக்கலாம்.

  எனவேதான், தொடராக வந்தபோதே, படித்து மகிழ்ந்து இரசித்த நான், தற்போது பேங்காக்கில் இருந்தாலும் நண்பர் மூலம் வரவழைத்தும் விட்டேன். மீண்டும் படிக்கப் போகிறேன்; ரசிக்கப் போகிறேன்.

  தங்கள் பதிவு, மிக்க சிறப்பு.

  பதிலளிநீக்கு
 29. அன்புள்ள ஜெயக்குமார்.


  வணக்கம். எனக்கு கவிஞர் சரவணனிடம் சொல்லி அவர் தொகுதியை பணம் செலுத்தி பெறும் அஞ்சலில் எனக்கு அனுப்பச் சொல்லுங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. கருத்துரையிட்ட வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி

  எனது இளமை எழுதும் கவிதை நீ.... நூல் கிடைக்கும் இடம்

  டிஸ்கவரி புக் பேலஸ்,
  எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
  முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
  சென்னை - 600078. தமிழ்நாடு. இந்தியா
  (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

  PH.NO. 99404 46650, 44 6515 7525

  மேலும் தகவல்களுக்கு என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்
  kmrvsaravanan@gmail.com

  பதிலளிநீக்கு
 31. மீண்டும் வாழ்த்துக்கள்
  http://www.malartharu.org/2014/02/captain-philips.html

  பதிலளிநீக்கு
 32. ஒரு நூலை வாசிப்பதற்கு அதற்குக் கிடைக்கும் விமர்சனம் முக்கிய காரணமாகின்றது . அந்த வகையில் உங்கள் விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது . ஆசிரியர்க்கு வாழ்த்து க்கள்

  பதிலளிநீக்கு
 33. ஒரு நூலை வாசிப்பதற்கு அதற்குக் கிடைக்கும் விமர்சனம் முக்கிய காரணமாகின்றது . அந்த வகையில் உங்கள் விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது . ஆசிரியர்க்கு வாழ்த்து க்கள்

  பதிலளிநீக்கு
 34. சிறப்பான விமர்சனம். விரைவில் வாங்கி படிக்கிறேன்.

  புத்தகம் எழுதிய குடந்தையூரார் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 35. திறமைகள் எங்கெங்கு இருக்கிறதோ அதைத் தேனீ போல சிரமம்
  பார்க்காமல் தேடிக் கண்டு பிடித்துப் பெருமைப் படுத்துவதில் இந்த வலைத் தளத்தைப் பொறுத்தவரைத் தாங்களே பாராட்டிற்குரியவர் சகோதரா !வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு