25 செப்டம்பர் 2021

கரந்தை நீர்த்தூம்பு
நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவண்தட் டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

     நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்லாம், நீர் நிலைகள் அமையும்படி கரை அமைக்கும் மன்னர்களே, இவ்வுலகில் என்றென்றும் அழியாதப் புகழ் பெற்று போற்றப்படுவார்கள் என்கிறார் ஒரு புறநானூற்றுப் புலவர்.

   நீரின் அருமையும், பெருமையும், உயிர்மையும் அறிந்த இனம், உணர்ந்த இனம் நம் இனம்.

    

17 செப்டம்பர் 2021

ஓப்பிலா செந்தமிழ்ச் செல்வன்

 

 

     அன்பார்ந்த ஐயா,

     நமஸ்காரம்.

     எனக்கும், என் குடும்பத்தாருக்கும், கடவுளையும், தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர, இவ்வுலகத்தில், வேறு தஞ்சம், ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.

     நான் இனிமேல், அதிக காலம், ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழியில்லை.

04 செப்டம்பர் 2021

மருந்தென வேண்டாம்     மருந்து.

     வாழ்வு முழுவதும் மருந்து, மருந்து, மருந்து.

     உணவு உண்ண மறந்தாலும் மறப்போம், ஆனால் மருந்துண்ண மறக்க மாட்டோம்.

     நமது இன்றைய வாழ்வு, மருந்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வாகி விட்டது.

     மருந்தில் இருந்து, நமக்கு விடுதலையே கிடையாதா?

     உண்டு.