29 ஜனவரி 2021

முற்றுகை

 


 

     இதற்குத்தானா?

     இதற்குத்தானா, அந்த காலத்தில், அவ்வளவு கஷ்டப் பட்டோம்.

    

23 ஜனவரி 2021

பட்டத்து யானை


அன்புநிறை சிவா,

     அளவு கடந்த மகிழ்ச்சி.

     எண்ணிலடங்காத் துறைகளில் தேர்ச்சி, திறமை உடையவர் நீங்கள்.

     கண்டு மகிழ்வார் இல்லாக் கலைப் படைப்பைப் போலவே இருந்து கொண்டிருந்தீர்கள்.

     ஒரு பரிசு, எப்படியோ, திடுக்கிட்டு விழித்து, உங்களை கட்டி அணைத்திருக்கிறது.

     ஓர் ஆறுதல், அவ்வளவே.

     பட்டத்து யானைக்கு, ஒரு பொட்டலம் கடலை கிடைத்திருக்கிறது.

     எனினும் இது உங்களோடு உள்ளவர்களுக்கு, உவப்பைக் கொடுத்து, உங்களை உணர சிறு வாய்ப்பு.

     ஆயினும், பெரு மகிழ்ச்சி.

     வாழ்க சிவா.

    

14 ஜனவரி 2021

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

 

தமிழ் இலக்கியப் பதிப்புத் துறையின்

முன்னோடி

ஈ ழ ம்.

தமிழ் அகராதியியல் முயற்சிகளின்

முன்னோடி

ஈ ழ ம்.

மொழி பெயர்ப்பு முயற்சிகளின்

முன்னோடி

ஈ ழ ம்.

தமிழ் வழி மருத்துவக் கல்வியின்

முன்னோடி

ஈ ழ ம்.

ஈ ழ ம்,   ஈ ழ ம்,   ஈ ழ ம்.

07 ஜனவரி 2021

திருவண்ணாமலை நாடார்     12 வயதில் தந்தையை இழந்து, படிக்க வசதியின்றி, வறுமையில் இருந்து விடுபட, சமையல் வேலைக்காக, பர்மா செல்வதற்காக, சென்னை சென்று, எப்படியோ, பர்மா செல்லும் கப்பலில் டிக்கெட்டும் எடுத்துவிட்டார்.