24 செப்டம்பர் 2014

கரந்தை தர்மாம்பாள்

   ஆண்டு 1938. நவம்பர் மாதம் 13 ஆம் நாள். சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. மக்கள் ஆங்காங்கே, கூட்டம் கூட்டமாய்க் கூடிப் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களின் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சியை அவர்களால் நம்ப முடியவில்லை.

    சென்னையை அன்று வந்தடைந்த தொடர் வண்டிகள் அனைத்தில் இருந்தும், பேரூந்துகள் அனைத்தில் இருந்தும், பெண்கள் கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கினர். சென்னையே பெண்களால் நிரம்பத் தொடங்கியது.

18 செப்டம்பர் 2014

நண்பா, விரைந்து முன்னேறு சங்கங்களால் – நல்ல
சங்கங்களால் – மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

சிங்கங்கள் போல் – இளஞ்
சிங்கங்கள் போல் – பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே

எங்கும் சொல்க – கொள்கை
எங்கும் சொல்க – இதில்
எது தடைவந்த போதிலும் அஞ்சற்க
                         - பாரதிதாசன்

     நண்பர்களே, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நாடு நம் நாடு, நம் தமிழ் நாடு. முதல், இடை, கடை என்னும் முச்சங்கம் வைத்து, தாயினும் மேலாகத் தமிழை வளர்த்ததனால்தான், கடற் கோள்களால் மூழ்காது, காலத்தால் கரையாது, இன்றும் நிலைத்து நிற்கிறது நம் மொழி.

     சங்கம் வைத்துச் சமூகப் பணியாற்றுவதானால், எண்ணற்ற நல் உள்ளங்களின் ஒத்துழைப்பு வேண்டும், ஊக்குவிப்பு வேண்டும், உடல் உழைப்பு வேண்டும்.

14 செப்டம்பர் 2014

விருதா? எனக்கா?

     

நண்பர்களே, வலைப் பூ ஒன்று தொடங்கி, எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவினை எழுதியவன், இப்பொழுது வாரம் ஒரு பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     எழுதுவதில் ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதி கிடைக்கிறது. இம் மூன்று வருடங்களில், நான் சாதித்ததாக நினைப்பது, ஒன்றுண்டு.

11 செப்டம்பர் 2014

பாரதி போற்றுவோம்


தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
என்னென்று சொல்வேன்.
                     பாரதிதாசன்

     ஆண்டு 1921. சென்னை திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி கோயில். கடந்த இரண்டு நாட்களாகவே, அக்கோயில் யானையின் குணம் மாறியிருந்தது. அமைதியின்றித் தவித்துக் கொண்டேயிருந்தது. யானையின் பாகன் கூட அருகில் செல்ல அச்சப்ட்டார்.

      கருப்பு கோட், இடையிலோ வெள்ளை வேட்டி, தலையிலோ முண்டாசு அணிந்த அவர், நெஞ்சம் நிமிர்த்தி, கம்பீரமாக, கையில் தேங்காய்ப் பழத்துடன் யானையினை நெருங்கினார். இக்கோயிலுக்கு வரும் பொழுதெல்லாம், யானைக்குத் தேங்காய் பழம் கொடுத்து மகிழ்ச்சி கண்டவர் இவர். இதோ இன்றும் தேங்காய் பழத்துடன் யானையை நெருங்குகிறார்.

05 செப்டம்பர் 2014

கல்வி, தியாகத் திருநாள்    1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.