30 அக்டோபர் 2015

சிகரத்தை நோக்கி


     நண்பர்களே, அரசு ஊழியர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் நிச்சயமாக இணைந்திருப்பார்கள். பலரோ ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்திருப்பார்கள்.

      அரசு ஊழியர் அல்லாதவர்களில் பெரும்பாலானர்கள், நிச்சயமாக காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்தே இருப்பார்கள்.

              குடும்பத்தினை மையமாக்க் கொண்ட வாழ்வினை வாழ்ந்து வருபவர்கள் அல்லவா நாம். எனவே காப்பீட்டுத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

25 அக்டோபர் 2015

இளைஞர் ஆத்திசூடி




அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்

      சிறு வயதில், தொடக்கப் பள்ளியில், அனைத்து மாணவர்களுடனும் இணைந்து, ஒரே குரலாய் ஓங்கி ஒலித்திட்ட தமிழ் மூதாட்டி ஒளவையின் ஆத்திசூடி.

      இளைஞர்களும் ஏன் முதியவர்களும் கூட எந்நாளும் நினைவில் கொண்டு, பின்பற்ற வேண்டிய ஆத்திசூடி, ஏனோ, கீழ்நிலை வகுப்புகளோடு நின்று விடுகிறது.

     மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே, பள்ளிக்குச் செல்லும் இக்கால மாணவர்கள், ஔவையை அறிவார்களா என்பதே சந்தேகம்தான்.

20 அக்டோபர் 2015

ஜன்னல் ஓரத்து நிலா




தாய் போற்ற தான் உயர
தரணியெங்கும் புகழ் பரவ
கல்வியே தாரக மந்திரம் என்று
கல்லூரி வாசலில் நுழைந்தேன் ...

துப்பாக்கி சப்தம் கேட்டதடா
செல் வந்து விழுந்ததடா
பாதி வழியினிலே
குத்துயிராய் குலையுயிராய்...

அங்க அவயங்கள் சிதற
வெள்ளை நிற சிறகினிலே
இரத்தக்கறை படிந்ததடா...

     நண்பர்களே, படிக்கப் படிக்க மனம் பதறுகிறது அல்லவா? நமது தொப்புள் கொடி உறவுகளான, ஈழத்து உறவுகளின் நிலைமை பற்றி, செய்தித் தாட்களிலே படித்திருப்போம், உள்ளம் வேதனையில் வாட துவண்டிருப்போம்.

15 அக்டோபர் 2015

புதுகை சங்கமம்




     கடந்த இரண்டு மாதங்களாக, என்று வரும், எனறு வரும் என்று நாள் காட்டியின் தாட்களைப் பார்த்துப் பார்த்து, ஏங்கிக் கொண்டிருந்த, அந்த நாள், அந்த இனிய நாள், வாழ்வின் மறக்க இயலா சிறந்த நாள், கடைசியில் வந்தே விட்டது.

     11.10.2015 ஞாயிற்றுக் கிழமை.

     காலை 7.00 மணி. கரந்தையில் காத்திருந்தது அந்த வேன். இராகவேந்திரா வேன்.

      முனைவர் ஹரணி, முனைவர் பா.ஜம்புலிங்கம், குடந்தையூர் சரவணன் மற்றும் அவரது அருமை மகன், கும்பகோணம் திருநீலக்குடி புலவர் திரு உலகநாதன் மற்றும் அவரது நண்பர், கரந்தை சரவணன் மற்றும் அவரது அன்பு மகன், நான் மற்றும் எனது குடும்பத்தினர், உறவினர்கள் என 15 பேர் வேனில் புறப்பட்டோம்.

10 அக்டோபர் 2015

வென்றோரை வாழ்த்துவோம்


   

  நண்பர்களே, தமிழ்கூறு நல்லுலகே ஆவலுடன் எதிர்பார்த்த, ஐவகைப் போட்டிகளுக்கான முடிவுகள் வெளிவந்து விட்டன. வெற்றியாளர்கள் அறிவிக்கப்பெற்று விட்டனர்.

     வெற்றியாளர்களோடு, நடுவர்களாய் திறம்படச் செயலாற்றிய, நமது பெருமைமிகு பதிவர்களின் பெயர்களும் வெளி வந்திருக்கின்றன.

08 அக்டோபர் 2015

புதுமைகள் படைக்கும் புதுகை



நண்பர்களே, இன்னும் இரண்டே, இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன.

புதுகை வலைப் பதிவர் சந்திப்பிற்கு.

இவ்வாண்டு சந்திப்பில்தான் எத்தனை எத்தனை புதுமைகள்.

04 அக்டோபர் 2015

புதுகையில் ஓர் அரை நாள்




தமிழனுக்கு வீழ்ச்சியில்லை, தமிழன் கீர்த்தி
தாழ்வதில்லை, தமிழ்நாடு தமிழ் மக்கள்
தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை.
                                     பாவேந்தர் பாரதிதாசன்

    நண்பர்களே, எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக் கிழமையன்று, புதுகையில், மையம் கொள்ளவிருக்கும், பதிவர் சந்திப்புத் திருவிழா என்னும் புயலானது, அண்மை நாட்களாக, உலகு முழுவதுமே மெல்ல மெல்ல, தன் அதிர்வலைகளைப் பரப்பி வருகின்றது.

     இணையம் என்னும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ஒவ்வொரு, தமிழ் வலைப் பூவுமே, புதுகை புதுகை என புதுகையினைத்தான், தன் நறுமணத்துடன் இணைத்து, தமிழ் மணமாய், வான் வெளியெங்கும் பரப்பி வருகின்றது.

02 அக்டோபர் 2015

வாருங்கள், புதுகையில் சங்கமிப்போம்



கூடுங்கள் பதிவர்களே, அனைவருமே ஒன்றாய் – நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே.
                                  புலவர் சா.இராமாநுசம்

    ஒரு திருமண விழா என்றால், இரு குடும்பத்தினரும், மணமக்களின் நண்பர்களும் உற்சாகம் பெறுவர். ஓடியாடி உழைப்பர்.

     ஓரு ஊரில் ஒரு கட்சியின் கூட்டம் என்றால், அந்த ஊரில் மட்டும், அன்று மட்டும் பரபரப்பு காணப்படும்.

     கட்சியின் மாநாடு என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், அக் கட்சியைச் சார்ந்த கட்சிக்காரர்கள் மட்டும் விறு விறுப்புடன் காணப்படுவர்.

     சட்ட மன்றத் தேர்தல் என்றால் தமிழகம் மட்டும் பரபரக்கும்.

     நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்தியா மட்டும் பரபரக்கும். மற்ற நாடுகளோ அமைதியாக உற்று நோக்கும்.