08 அக்டோபர் 2015

புதுமைகள் படைக்கும் புதுகை



நண்பர்களே, இன்னும் இரண்டே, இரண்டு நாட்கள்தான் இருக்கின்றன.

புதுகை வலைப் பதிவர் சந்திப்பிற்கு.

இவ்வாண்டு சந்திப்பில்தான் எத்தனை எத்தனை புதுமைகள்.



வலைப் பதிவர் கையேடு தயாராகிவிட்டது.

   ஐவகைப் போட்டிகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பெற இருக்கின்றன. தமிழ் கூறு நல்லுலகே காத்துக் கொண்டிருக்கிறது.

     ஐவகைப் போட்டிகளில் யார், யார் வெற்றி பெறுவார் என்று முன்னரே, கணித்து அறிவிக்கும் போட்டிக்கு நாளை, இறுதி நாள்.

     நாளை மறுநாள், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் யார், போட்டா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார், யார் என்பது தெரிந்து விடும்.

     வெற்றி பெற இருப்பவர்களுக்கு, இப்பொழுதே நமது வாழ்த்தைச் சொல்லி வைப்போம்.

வாழ்த்துக்கள்,  வாழ்த்துக்கள்,  வாழ்த்துக்கள்

     நண்பர்களே, இன்று வலையில் நுழைந்து, பதிவர்களின் எழுத்து மழையில் நனைந்து, மகிழ்ந்த போது, இரு காட்சிகளைக் கண்ணாரக் கண்டேன். கண்டு மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்.

      முதல் காட்சி, பதிவர்களுக்கான இலச்சினை (Logo). ஆங்கில வலைப் பூக்களைக் குறிக்க பல வகையான இலட்சினைகள், இணையத்தில் வலம் வருவதைக் கண்டிருப்போம்.

      ஆனால் உலகினையே வலம் வரும் வல்லமை வாய்ந்த, தமிழ் மொழியின் வலைப் பூவோ, தனித்த அடையாளம் இன்றியே இதுநாள் வரை தவித்து வந்தது.


கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், தனது இடையறாத பணிகளுக்கு இடையிலும், தமிழ் வலைப் பூவிற்கு என்று ஓர் இலட்சினையினை உருவாக்கி இணையத்தில் இணைத்திருக்கிறார்.


இனி
இதுவே நமது தமிழ் வலைப் பூவின்
தனித்த அடையாளம்,
இந்த இலட்சினை உலகை வலம் வரட்டும்.

கவிஞர் ஐயா அவர்களின்
அயரா, தளரா முயற்சியைப் போற்றுவோம்.

     வலைப் பூவிற்கு இலட்சினை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள், அடுத்து ஓர் இன்ப அதிர்ச்சி.
                                                  
வலைப் பூவிற்குப்
புதிதாய்
ஓர் தேசிய கீதம்.

உண்மை நண்பர்களே, உண்மை.
இதோ
வலையின் கீதம்
படித்துப் பாருங்களேன்
பரவசப்பட்டுப் போவீர்கள்.

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது...
"
என்ன இந்த வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக் கூடாது...

எந்த வலைப்பூ பதிவில்
கருத்தில்லை சொல்லுங்கள்...
காலப்போக்கில் கருத்தெல்லாம்
மாறி போகும் மாயங்கள்...!

கருத்து தாங்கும் பதிவுகள் தானே
முன்னணி பதிவில் நிலையாகும்...
எதையும் தாங்கும் உள்ளம் தானே
நிலையான நட்பு காணும்...

யாருக்கில்லை போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!

மனமே ஓ மனமே நீ மாறிவிடு...
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

வலைப்பூ பகிர்வை வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு சிறப்பிப்போம்...

லட்சம் பதிவுகள் கண்ணோடு...
லட்சியங்கள் நெஞ்சோடு...
நம்மை வெல்ல யாருமில்லை...
உறுதியோடு போராடு...!

பதிவரே... உன் மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை மறுமொழி
எல்லாமே நட்பாகும்...

பதிவுகள் இன்றி வலைப்பூவா...?
நேரம் ஏனில்லை என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்... அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில் சிறகடிக்கும்...

மனமே ஒ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே...

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
அனுபவமோ அது சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு

நண்பர்களே,
படிக்கப் படிக்க நெஞ்சம் இனிக்கிறதல்லவா.

வலை கீதத்தை எழுதியவர் யார் தெரியுமா?

நமது
வலைச் சித்தர்
திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள்தான்.

வலையுலக உறவுகளின் சார்பில்
திண்டுக்கல்லாருக்கு
வாழ்த்துக்களைப், பாராட்டுக்களைச்
சமர்ப்பிப்போம்.

வலைச் சித்தருக்கு
மேலும்
புதிதாய், புத்தம் புதிதாய்
ஓர் பட்டம்
வழங்கி மகிழ்வோமா.
வலைக் கவி,   வலைக் கவி,   வலைக் கவி

நண்பர்களே,
எனக்கு ஓர் ஆசை
வலைக் கவியின்
வலை கீதத்தை
நமது
பெருமை மிகு சுப்பு தாத்தா அவர்கள்
பாடினால் எப்படி இருக்கும்.
 வலை உறவுகளின் சார்பில்
திரு சுப்பு தாத்தாவை வேண்டுவோம்

ஐயா,
தங்களின் தெய்வீகக் குரலால்
வலை கீதத்தைப் பாடுங்கள்
பாடலினை இணையத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்
உலகெலாம் ஒலிக்கட்டும்
நமது கீதம்.

என்ன நண்பர்களே,
புதுகைக்குப் புறப்படத் தயார்தானே,
வாருங்கள், புதுகையில் சந்திப்போம்.


48 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் சந்திப்பு விழா இனிதே நிகழ்வுற நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அருமை நண்பரே கலக்குங்கள்...
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. விழாக்கால பரபரப்பு தெரிகிறது. விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! உங்கள் பதிவினுக்கு நன்றி. புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. வணங்குகிறேன் ஐயா... நன்றி... மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைக் கவி அவர்களுக்கு என் வணக்கங்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
  6. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் DD

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோ,
    ஆம் உண்மைதான்,,,
    வலைச்சித்தர் பாடல் அருமை,
    தங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வலைக்கொரு லோகோ, வலைக்கவி ஆஹா! ஆஹா!
    சுப்புத்தாத்தா, எங்கள் கோரிக்கை ஏற்பீர் :)

    பகிர்விற்கு நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  9. தமிழ் வலைப்பூக்களுக்கு என தனி லோகோவா? சூப்பர்.
    தனபாலன் அண்ணாவின் பாடல் அருமை... நானும் அது குறித்து பகிர்ந்திருக்கிறேன் ஐயா...
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அழகான, பிரமிக்கவைக்கும் அளவிலான அழைப்பு. சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  11. என்னய்யா இது! ஒவ்வொரு பதிவரும் ஏதோ தன்னுடைய மூத்த பெண்ணுக்குத் திருமணம் மாதிரியல்லவா ஓடி ஓடிக் காரியம் ஆற்றுகிறார்கள்! எங்கிருந்து வந்தது இப்படிப்பட்ட தோழமையும் ஒற்றுமையும் தீவிரமும்? எண்ணிப்பார்த்தால்தான் தெரிகிறது - இரண்டே கை உடைய ஒவ்வொரு பதிவருக்கும் இப்போது மூன்றாவதாக ஒரு கை முளைத்துவிட்டது- அந்தப் புது(க்)கை தான் இவ்வளவு எழுச்சிக்கும் காரணம்! இன்னும் என்னென்ன புதுமைகள் நமக்காகக் காத்திருக்கின்றதோ, சென்றுதான் பார்த்துவிடுவோமே! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வலைக்கீதம் மிக அருமையாக உள்ளது நிகழ்வு சிறக்க எனது வாழ்த்துக்கள்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    2. உண்மைதான் ஐயா
      புதியதாக ஒரு கை
      புதுகை
      சந்திப்போம் ஐயா

      நீக்கு
  12. அற்புதமான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அத்தனையும் மிக அற்புதம் ஐயா!
    தங்களின் அழைப்பும் மிக அருமை!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. அருமையான பகிர்வு! விழா சிறப்பாக அமையட்டும்!

    பதிலளிநீக்கு
  15. wonderfull presentation Mr.Jayakumar.we will meet and share our views.congratulations to Dindugal Dhanabalan sir.

    பதிலளிநீக்கு
  16. அருமையான நடையில் அழகான அழைப்பும், பாராட்டும்!

    வலைச்சித்தருக்கு இன்னுமொரு பெயர் உண்டு தெரியுமா நண்பரே! திருவள்ளுவ தாசன்!! இப்போது வலை கவி!! ஆஹா ! டிடிக்கு வாழ்த்துகள்!! பரிசு மழை! பாராட்டு மழைதான்!!

    விழாவில் சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  17. அருமை. பதிவர்கள் அனைவருடைய எண்ணங்களும் புதுகையிலேயே இருக்கிறது. வலைச்சித்தரின் பாடலை சுப்பு தாத்தா அவர்கள் பாடி அவரது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

    http://vazhvuneri.blogspot.com/2015/10/blog-post_9.html

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான தொகுப்பு.
    விழாவில் சந்திப்போம் நண்பரே!
    த ம 13

    பதிலளிநீக்கு
  19. கவிதை அருமை டிடி. பகிர்வுக்குப் பாராட்டுகள் ஐயா! இலச்சினையும் வடிவமைத்த கவிஞருக்குப் பாராட்டுகள். இருஅவரின் செயலையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்த உங்கள் நல்லுள்ளத்துக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. கவிஞர் முத்து நிலவன் அவர்களுக்கும்
    வலைக் கவி திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  21. தங்களது பயணம் இனிதாகட்டும்
    வலைப் பதிவர் திருநாள் சிறப்புறட்டும்!
    நன்றி!
    த ம+
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  22. வலைப்பதிவாளார்களுக்கு வாழ்த்துக்கள்..தகவல்கள் நன்றாக தெளிவாக உள்ளன

    பதிலளிநீக்கு
  23. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    புதுகைக்காரர்களின் உழைப்பினை வார்த்தைகளால் மட்டுமே சொல்ல இயலாது. அதற்கு ஒரு தொகுதி நூல் வேண்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு