25 அக்டோபர் 2015

இளைஞர் ஆத்திசூடி




அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்

      சிறு வயதில், தொடக்கப் பள்ளியில், அனைத்து மாணவர்களுடனும் இணைந்து, ஒரே குரலாய் ஓங்கி ஒலித்திட்ட தமிழ் மூதாட்டி ஒளவையின் ஆத்திசூடி.

      இளைஞர்களும் ஏன் முதியவர்களும் கூட எந்நாளும் நினைவில் கொண்டு, பின்பற்ற வேண்டிய ஆத்திசூடி, ஏனோ, கீழ்நிலை வகுப்புகளோடு நின்று விடுகிறது.

     மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே, பள்ளிக்குச் செல்லும் இக்கால மாணவர்கள், ஔவையை அறிவார்களா என்பதே சந்தேகம்தான்.

      இதனைக் கருத்தில் கொண்டு, இக்கால இளைஞர்களுக்காவே, ஓர் புதிய ஆத்திசூடியை உருவாக்கி இருக்கிறார் ஒரு ஆசிரியர், தேசிய நல்லாசிரியர்.

     இவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, எழுத்தாளர், கவிஞர், இயற்கை ஆர்வலர். இவற்றோடு உளவியளாளரும் ஆவார்.

     மன நல ஆலோசனைகள் வழங்குவதை ஒரு சேவையாகவே செய்து வருபவர்.

      இன்றைய கால கட்டத்தில், சிறியவர் முதல், முதியவர் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி, சாதி, மதம், மொழி, இனம் என்னும் எல்லைகளைக் கடந்து, அனைவரையும் ஆட்சி செய்வது மன அழுத்தம் அல்லவா.

     எனவே இவரது சேவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

     உளவியலில் இவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு.

     கல்லூரிப் படிப்பை இளங்கலை இயற்பியலில் தொடங்கியவர், திசைமாறி முதுகலையில் தமிழ் படித்து, தமிழிலேயே டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

     பிறகு காந்தியச் சிந்தனைகளைப் பயின்று, அதிலேயே ஊறியவர், மீண்டும் ஒரு முதுகலைப் படிப்பைப் பயின்றுள்ளார். இம்முறை முதுகலைப் பயின்றது உளவியலில்.

     இவர் தனது டாக்டர் பட்டத்திற்காக, மேற்கொண்ட ஆய்வின் தலைப்பு என்ன தெரியுமா?

தீபம் நா.பார்த்தசாரதியின் நாவல்களில் குடும்பச் சிக்கல்கள்

      நாவல்களில் குடும்பச் சிக்கல்களை ஆராய்ந்தவர், இன்று நிஜக் குடும்பங்களில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பவராக, ஓர் சிறந்த உலவியலாளராக, மன நல ஆலோசகராக விளங்கி வருகிறார்.

     தற்செயலாகத்தான் இவரை வலையில் சந்தித்தேன். நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணி, ஏங்கிக் காத்திருந்த வேளையில், புதுகை வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில், நேரிலேயே சந்திக்கும் ஓர் அற்புத வாய்ப்பு.

     என் எண்ணம் ஈடேறியது.

நண்பர்களே, இவர் யார் தெரியுமா?




தமிழ்ப் பூ
இவரது வலையின் பெயர்.

பழகுதற்கு இனியவர்,
இவரது
 புனைப் பெயர்
கவிஞர் இனியன்.
இயற் பெயர்
முனைவர் அ.கோவிந்தராசு.

      ஆசிரியர், பள்ளித் தலைமையாசிரியர், முதல்வர் என நீண்ட கால தொடர் கல்விப் பணி இவருடையது.


இராமேசுவரம் ஈன்றெடுத்த தவப் புதல்வர்,
நமது முன்னாள் குடியரசுத் தலைவர்,
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின்
திருக்கரங்களால்,
தேசிய நல்லாசிரியர்
விருதினைப் பெற்றவர்.

மாணவர் நலனுக்காகத் தன்னை முழுமையாய் ஈந்தவர்.

     தனது மணிவிழாவின் போது கூட, இவருக்கு, இன்றைய மாணவர்களின் நினைவுதான், இக்கால இளைஞர்களின் நினைவுதான்.

அதனால்,
தன் காரியம் யாவினும் கைகொடுத்து
காலமெல்லாம் துணை நிற்கும்
தன் இனிய வாழ்க்கைத் துணைவிக்கு
அன்புறையாய்
ஒரு சிறு நூல்
ஒன்றினைப் படைத்திட்டார்.

நூல்
இவர்தம் துணைவியார்க்கு அன்புறை
ஆனால்,
நூலின்
ஒவ்வொரு சொல்லும்,
ஒவ்வொரு எழுத்தும்
இன்றைய இளைஞர்களுக்குக் காப்புறை.


இளைஞர் ஆத்திசூடி.

நூலின் உருவும், அளவும் சிறியது. மூர்த்தி சிறியதுதான், ஆனால் கீர்த்தி பெரியது.

அலைபேசியை அடக்கு.

முதல் வாசகமே திருவாசகமாய் ஒளிர்கிறது.

ஈன்றாளைத் தொழு

ஏன் எனக் கேள்

ஓம்புக உடலை

கீழோரை நினை

குறிக்கோள் மறவேல்

கொடுத்து மகிழ்

சாதிக்க ஆசைப்படு

       நண்பர்களே, படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது. இன்றைய இளைஞர்கள், எதையெல்லாம் புறந் தள்ளுகிறார்களோ, அதையெல்லாம் உணர்ந்து, ஒவ்வொரு சொல்லாய் உரைத்திருக்கிறார்.


இளைஞர்கள் மட்டுமல்ல,
ஏனையோரும்
படிக்க வேண்டிய நூல் – படித்துப்
பின்பற்ற வேண்டிய நூல்.

இளைஞர்களுக்கு அற்புதமாய் ஓர்
இளைஞர் ஆத்திசூடி
தந்த – இந்த
ஆண் ஔவையை
வாழ்த்துவோம், போற்றுவோம்.




96 கருத்துகள்:

  1. முனைவர் அ.கோவிந்தராசு ஐயாவை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி...

    ஆத்திச்சூடி ஒவ்வொரு வரியும் சாட்டையடி...!

    பதிலளிநீக்கு
  2. அகத்திலே ( உள்ளத்தின் உள்ளே) சூடவேண்டும் ,

    என்றே தான் ஆத்திச் சூடி என்னும் பெயர் இட்டார்களோ !!


    சமூக சிந்தனைகளுக்கு ஏற்றவாறு சமூக வழக்கங்களை ஒட்டி, ஆத்தி சூடியும்

    மாறி வருகிறது.



    ஏற்ற ஒரு காட்சி.


    நான் எனது வலையில் 2008 ல் எழுதிய ஆத்தி சூடி இதோ:



    ஆத்திசூடி 2008.


    அறியாமை உணர். 2. அகந்தை விலக்கு.

    ஆணவம் தவிர்.

    இன்பமெலாம் இன்னலே. 2. இருளை அகற்றும் குருவடி சேர்.

    ஈகையில்லையேல் ஈண்டு இசை இல்லை. 2. ஈகையிலா ஈட்டம் இசை தரா.

    உட்பகை உறவு கொல்லும். 2. உள்ளத்தே சினம் அறு.

    ஊரை எளியாதே. 2. ஊணை இகழாதே

    எவ்வுயிரும் கொல்லாதே.

    ஏமாறாதே. ஏமாற்றாதே. 2. ஏணிதனைத் தள்ளாதே.

    ஐயம் தொலை.

    ஒடிய நடை போடாதே. 2. ஒவ்வாப் பொருள் தவிர்.

    ஓடுவதை விரட்டாதே. 2. ஓங்கியதை இகழாதே.

    ஓளடதமாம் பசித்து உண்ணல்


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் பின்பற்றத் தகுந்த ஆத்திச்சூடி ஐயா தங்களுடையது
      நன்றி

      நீக்கு
    2. சுப்பு தாத்தாவின் ஆத்தி சூடி அட்டகாசம்

      நீக்கு
    3. அட! இதுவும் நல்லாருக்கே! சுப்புத்தாத்தா...

      நீக்கு
    4. உண்மைதான் நண்பரே
      சுப்புத்தாத்தாவின் ஆத்திசூடி அருமை

      நீக்கு
  3. இப்பதிவு நம் தளத்தில் இணைத்துள்ளேன்... நன்றி ஐயா...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  4. இன்றைய நவநாகரீக
    இளைஞர்களுக்காக புதிய
    இனிய ஆத்திசூடி வழங்கிய
    இளைஞரை வணங்கிடுவோம்..
    வாழ்த்திடுவோம்.
    நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே! இளைஞர்களுக்கு தேவையான அருமையான ஆத்திச்சூடி! முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றிகள்! கூப்பிடும் தூரத்தில் இருந்தும் இவரை சந்திக்கவில்லை! கூடியவிரைவில் சந்திக்கவேண்டும் நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ஐயாவைப் புதுக்கோட்டையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரையும் நூலையும் அறிமுகப்படுத்தி பெரும்பணியாற்றியுள்ளீர்கள். தாங்கள் கூறுவதுபோல் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்ற நூல். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நான் புதுவைக்கு வர இயலாமைக்கு வருத்தம் தான். தங்களின் நூல் வெளியீட்டில் ஹரணி அவர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி தான். அய்யா கோவிந்தராசு அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் . வாய்ப்பிருந்தால் விரைவில் சந்திக்கலாம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  8. • அலைபேசியை அடக்கு.

    முதல் வாசகமே திருவாசகமாய் ஒளிர்கிறது.

    அனைத்திந்திய நடுவரசு ஊழியர்கள் பொதுச் செயலராகத் திகழ்ந்து காலத்துடன் ஐக்கியமானவர் தோழர் பிரம்மநாதன். அவர் தொலைபேசியே வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தவர். எல்லாமே எழுத்து மூலம்தான். அல்லது கோடம்பாக்கத்தில் இருக்கும் அவ வீட்டிற்குச் சென்றும் கலந்துரையாடலாம். அவரது வீட்டிற்குக் கதவே கிடையாது. கதவே இல்லை என்றால் பூட்டு எதற்கு. 80 வயதுக்குமேல் வாழ்ந்து மறைந்தபோது வந்த கூட்டம் எழுதிமாளாது. 30 நாட்கள் கைப்பேசியைப் பயன்படுத்தாமல் இருந்து பழகினால், நாம் தேவையற்ற உடையாடல்களுக்கு அதனைப் பயன்படுத்தியமை தெரியவரும்.மார்றுச் சிந்தனைகள் நனிநன்று. தங்களது ஆத்திசூடியை மின்னஞ்சல் மூலம் அனுப்புவித்தால் பெரிதும் மகிழ்வேன். rssairam99@gmail.com. தங்களை அறிமுகப்படுத்திய கரந்தை ஜெயகுமாருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரையாடல்கள், மாற்றுச்சிந்தனைகள் -பிழைக்குப் பொறுத்தருள்க.
      -சங்கர இராமசாமி

      நீக்கு
    2. ஆத்திச்சூடியை மின்னஞ்சல் மூலம் அனுப்பு ஏற்பாடு செய்கின்றேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  9. முதல் வரியே அதிரடியாக உள்ளது . அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. இளைஞர் ஆத்திச்சூடி
    சிறந்த அறிமுகம்
    பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  11. சில நேரங்களில்
    கட்டுரைகளைவிட முன்னுரை பயனுளதாய் மாறிவிடும்....
    ஆனால் இங்கு மகுடத்தில் ஒரு மாணிக்கம் பதித்திருக்கிறீர்கள்......

    பதிலளிநீக்கு
  12. ஆசிரிரைக் கரூர் காகித ஆலை பள்ளியில் சந்தித்திருக்கிறேன்.
    அறிவார்ந்த ஆளுமை.
    ஆத்திசூடி தான்.
    ஆத்திச்சூடி அன்று.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியரைக் கரூர்க் காகித
      எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. நன்றி நண்பரே
      பிழையினைத் திருத்தி விட்டேன்
      சுட்டியமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  13. ஔவையாரின் ஆத்திசூடியில் ஆழ்ந்து போகாததே -
    இத்தனை அவலங்களுக்கும் காரணம்!..

    எத்தனை பள்ளிகளில் - முன்னுதாரணமாக ஆத்திசூடியினை எழுதி வைத்திருக்கின்றார்கள்?..

    தன் விருப்பமாக - ஆத்திசூடியினைப் பயில்பவர் எத்தனை பேர்!..
    பயிற்றுவிப்போர் எத்தனை பேர்!..

    நிறை குடத்தைக் கவிழ்த்த நிலை தமிழர்களுடையது..

    நல்லதொரு பதிவு..

    பதிலளிநீக்கு
  14. கவிஞர் இனியன் அவர்களின் ஆத்திசூடி காலத்திற்கேற்ற வகையில் உள்ளது. அறிஞர் பெருமக்களை அறிந்து கொள்ள உதவிய பதிவர் சந்திப்புக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  15. நவீன ஆத்திச் சூடி ரசிக்க வைத்தது :)

    பதிலளிநீக்கு
  16. அலைபேசியை அடக்கு என்னும் முதல் வரியே அதிரடியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. நிகழ்கால நவீன கருத்துகளை உள்ளடக்கியதாய் இருக்கினறது புதிய ஆத்திச்சூடி!

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள கரந்தையாருக்கு,

    முனைவர் அ.கோவிந்தராசு அய்யா அவர்களை அறியத் தந்ததற்கும் அவரின் ஆத்திசூடியைப் பற்றி விளக்கத்திற்கும் மிக்க நன்றி.

    த.ம.9

    பதிலளிநீக்கு
  19. அன்பார்ந்த இளவல் ஜெயக்குமார்,
    எனது சிறு நூலான இளைஞர் ஆத்திசூடி குறித்த உங்கள் பதிவு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. அதை விட உங்கள் பதிவின் பின்னூட்டங்களைக் கண்டு அசந்து போனேன். இணையக் குடிமக்கள்(netizens) எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! இப் பதிவை நான் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அளவில் சிறிதானாலும்
      பொருளில் பெரியது ஐயா
      தங்களைச் சந்தித்ததையும், தங்களின் மேலான அன்பினையும்
      பெருமையோடு என்றும் போற்றுவேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  20. நவீன ஆத்திச்சூடி பொருத்தம்.

    முனைவர் கோவிந்தராசு ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி ஜெயக்குமார் சகோ

    பதிலளிநீக்கு
  21. இளைஞர் ஆத்திச்சூடி
    சிறந்த அறிமுகம்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்
    ஐயா
    அறியாத கவிஞரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி ஐயா ஆத்தி சூடி.. அருமை இரசித்தேன் த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  23. இக்காலத்துக்கும் இனி வருங்காலத்துக்கும் பயன் தரக்கூடிய ஆத்திசூடி..வாழ்த்துக்கள்...உடுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  24. முனைவர் அ.கோவிந்தராசு (கவிஞர் இனியன்) அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் விடயத்தை அறியத்த தந்தமைக்கு நன்றி நண்பரே.
    தமிழ் மணம் 11

    பதிலளிநீக்கு
  25. நவீன ஆத்திசூடிக்கு நன்றிகள். அவருக்கு என் பாராட்டுக்கள்.! அவர் பற்றிய விபரங்களை அறியத் தந்தமைக்கும் நன்றிகள் சகோ ..!

    பதிலளிநீக்கு
  26. அய்யாவை நானும் விழாவில் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் இப்படி ஒரு சாதனை செய்தவர் என்று தெரியாமல் போய்விட்டது. அவரின் சிறப்புகளை பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே!
    த ம 14

    பதிலளிநீக்கு
  27. iyyavin mugavari / alaipesi, tholaipesi ennil thevai. vazthalame! kaasu koduthu pusthagam vangalame! guru sivakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. lordsparkprincipal@gmail.com
      இதுவே ஐயாவின் மின்னஞ்சல் முகவரியாகும்
      தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  28. சிறப்பான நூல் அறிமுகம்! ஆத்திச்சூடியின் வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளன! நன்றி!

    பதிலளிநீக்கு
  29. பெருமைக்குரிய அறிமுகம்.ஆத்திச்சூடி அருமை

    பதிலளிநீக்கு
  30. பல வல்லுனர்களையும் பதிவர்களையும் சந்தித்து அளவளாக முடியாதது வருத்தமே. இருந்தால் என்ன நீங்கள் அக்குறையைப் போக்கிவிடுகிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா
      இனி வரும் பதிவர் சந்திப்புகளில், கலந்துரையாடலுக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும் ஐயா
      நன்றி

      நீக்கு
  31. இளைஞர்களுக்கான ஆத்திசூடி அருமை...தொடக்கமே அசத்தல்! ஒரு சிறந்த நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  32. வணங்கி வாழ்த்துகிறேன் கணித ஆசிரியரான தங்களை!.
    மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம். எனக்கு 1978களில் தமிழமுது ஊட்டிய ஆசானை தாங்கள் பெருமிதத்துடன் போற்றியதைக்கண்டு வியப்படைகிறேன்.முனைவர் இனியன்.அ.கோவிந்தராஜூ ஐயா அவர்கள் தமிழ் ஆசிரியராக கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேனிலைப்பள்ளியில் பணியாற்ற துவங்கியபோது காந்தியம் பயில்வோர் வட்டம் , நாட்டு நலப்பணித்திட்டம் என சமூகப்பணி இயக்கங்களை ஆரம்பித்து அருகிலுள்ள கிராமங்களிலும் முகாமிட்டு சாலை பராமரித்தல்,பள்ளி வளாகம் துப்புறவு செய்தல், கோவில்களில் காவலர்களுக்குத்துணையாக பக்தர்களுக்கு வழிகாட்டுதல், என சமூகப்பணியில் பங்கேற்க மாணவர்களுக்கு தூண்டுதலாக செயல்பட்டவர்.அப்போது ஐயா இனியன் அவர்களுக்கும் திருமணம் இல்லாத இளைய வயதுடையவராதலால் எங்களுடனேயே தங்கி முகாமில் பல வடிக்கை விநோதங்களை செய்தவர்.ஆசிரியப்பணி அறப்பணி என்னும் வரிகளுக்கு பொருத்தமானவர் எம் தமிழாசான் அவர்கள்.நன்றிங்க..
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com,
    http://consumerandroad.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணங்குதற்குரிய ஆசானுடன்
      போற்றுதலுக்கு உரிய மாணவரையும்
      சந்தித்ததில் மிகுந்த மகிழ்வடைந்தேன் ஐயா
      தங்களின் வலைத் தல முகவரிகளைக் குறித்துக் கொண்டேன்
      இனி தொடர்ந்து தங்களின் வலைக்கு வருவேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  33. ஐயஹோ நான் இப்பொழுது அலைபேசியில்தான் டைப் செய்துகொண்டிருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  34. நவீன ஆத்திச்சூடி.... அருமையான ஒரு விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா. முழுதுமாக புத்தகத்தினை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  35. அருமையான ஆத்திச்சூடிப் பகிர்வுக்கு நன்றி. சு.தா என்னும் சுப்புத்தாத்தா வின் ஆத்திச்சூடியும் அருமை.

    //அலைபேசியை அடக்கு.//
    இதை இன்றைய இளைஞர்கள் கேட்கணுமே! :) தாமதமான வருகைக்கு மன்னிக்கவும், கணினி பிரச்னை, ஊரில் இல்லை போன்ற பல இடையூறுகள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமானால் என்ன சகோதரியாரே
      வருகைக்கு மனமார்ந்த நன்றி சகோதரியாரே

      நீக்கு
  36. அவ்வையை மறந்தவர்களுக்கு இந்த புதிய ஆத்திச்சூடி ஒரு ஞாபக சொட்டு மருந்து.

    பகிர்விற்கு நன்றி நண்பரே.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  37. இளைஞர்களுக்கான ஆத்திசூடி மிக அருமை!
    கவிஞரைபற்றிய அறிமுகமும் சிறப்பு ஐயா!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  38. நல்ல பதிவு....அருமை அய்யா....

    பதிலளிநீக்கு
  39. பதில்கள்
    1. புதிய ஆத்திச்சூடி அருமை! அறிமுகமும் முன்னுரையும் அதையும் விட அருமை!

      நீக்கு
    2. "ஓம்புக உடலை" ஒன்றே போதும்
      ஒப்புயர்வுள்ள ஔடதம்
      நன்றி நண்பரே!
      த ம +

      நட்புடன்,
      புதுவை வேலு

      நீக்கு
  40. இளைஞர் ஆத்திசூடி அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  41. முனைவர் ஐயா பற்றிய விவரங்கள் வியப்பளிப்பனவாக உள்ளன. தமிழின் மீதும் உளவியலின் மீதும் அவர் கொண்ட ஆர்வம் ஆத்திச்சூடியாய் உருவானமை அற்புதம். முனைவர் ஐயா பற்றிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  42. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    இனியவையும் நல்லவையும் எங்கிருந்தாலும் தேடிச் சென்று கண்டறிந்து தங்களுக்கே உரிய பாணியில் அழகுற பாராட்டும் தங்கள் செயலை மனமார்ந்து பாராட்டுகிறேன். முனைவர் அ.கோவிந்தராசு (கவிஞர்.இனியன்) அய்யா அவர்களின் தொண்டினை தலைவணங்கி பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு