தமிழனுக்கு வீழ்ச்சியில்லை, தமிழன்
கீர்த்தி
தாழ்வதில்லை, தமிழ்நாடு தமிழ் மக்கள்
தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை.
பாவேந்தர்
பாரதிதாசன்
நண்பர்களே, எதிர்வரும் 11.10.2015
ஞாயிற்றுக் கிழமையன்று, புதுகையில், மையம் கொள்ளவிருக்கும், பதிவர் சந்திப்புத்
திருவிழா என்னும் புயலானது, அண்மை நாட்களாக, உலகு முழுவதுமே மெல்ல மெல்ல, தன்
அதிர்வலைகளைப் பரப்பி வருகின்றது.
இணையம் என்னும் தோட்டத்தில்
மலர்ந்திருக்கும் ஒவ்வொரு, தமிழ் வலைப் பூவுமே, புதுகை புதுகை என
புதுகையினைத்தான், தன் நறுமணத்துடன் இணைத்து, தமிழ் மணமாய், வான் வெளியெங்கும்
பரப்பி வருகின்றது.
வலைப் பதிவர் சந்திப்பு என்னும் வலைப் பூவானது, தினம், தினம், புத்தம்
புதுச் செய்திகளை வாரி இறைத்து, படிப்போரை, திக்கு முக்காடச் செய்து வருகின்றது.
கவிதை
- ஓவியக் கண்காட்சி
பதிவர்
புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை
தமிழிசைப்
பாடல்கள்
நூல்
வெளியீடுகள்
உண்டென்று
உரைத்தார்கள்.
அப்படியா,
என்று கேட்டு முடிப்பதற்குள்
சிறந்த
பதிவர்க்கு விருது
என்றார்கள்.
வியப்பால்
விழிகள், விரிவதற்குள்
வலைப்
பதிவர் கையேடு
வெளியிடப்
போகிறோம் என்றார்கள்.
சற்றுப்
பொறுங்கள்,
திகட்டத்
திகட்ட
இனிப்புச்
செய்திகளைக் குவித்த வண்ணம் இருக்கிறீர்களே,
பலரது
உடலில் உள்ள சர்க்கரை
மனதிலும்
ஏறிவிடப் போகிறது
சற்றுப்
பொறுங்கள் என்றோம்.
ஒரு
நிமிடம் அமைதி காத்தவர்கள்,
அடுத்த
நிமிடம்,
ஐவகைப்
போட்டிகள் உண்டு
பங்கு
பெறுங்கள்
ரூ50,000
பரிசினை அள்ளிச் செல்லுங்கள் என்றார்கள்.
ஒன்றல்ல,
இரண்டல்ல
முழுதாய்
260 கட்டுரைகள் குவிந்து விட்டன.
என்னைப்
பொறுத்தவரை இந்த எண்ணிக்கை அதிகம்தான்.
புதுகையில்
இரண்டும்,
சென்னையில்
இரண்டுமாய்
புதிதாய்
மலந்து மணம் வீசும்
நான்கு
இளம் தளிர்
வலைப்
பூக்களைத் தவிர
மற்ற
வலைப் பூக்கள் எல்லாம் மாணவர்களுடையது அல்ல.
மாறாக,
குடும்ப
பாரம் சுமந்து,
வாழ்வியல்
சோதனைகள், நடைமுறைச் சிக்கல்கள்
பொருளாதார
நெருக்கடிகள்
உடன்
இருந்தே குழி பறிக்கும் பகைமை உறவுகள்
என
அனைத்தையும்
நித்தம்
நித்தம்
எதிர்
கொண்டு
போராடிப்
போராடி
வாழ்க்கையையே
பெரும் போராட்டமாய்
நாளும்
ஒரு போர்க்களமாய்
போரிட்டுப்
போரிட்டுக்
களைத்து,
சற்று
ஓய்வெடுக்கலாமே
என்று
வலைப்
பூ என்னும் தமிழ்த் தோட்டத்தில் நுழைந்து
நட்பு
என்னும் நிழலில்,
சற்றே
இளைப்பாற அமர்ந்தவர்களின்
கட்டுரைகளே
மீதமிருப்பவை.
ஒவ்வொரு
கட்டுரையும்
ஒவ்வொரு
வலை நண்பரின்
வாழ்வியல்
அனுபங்களைப் பறைசாற்றும்.
260
கட்டுரைகள் களத்தில்.
கட்டுரைப்
போட்டிக்கான இறுதி நாள் முடிந்து விட்டதே என்று எண்ணினால், அடுத்த போட்டி
அறிவிப்பு, அன்றே வருகிறது.
சிறந்த
கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்
நடுவர்களின்
தீர்ப்புடன்,
உங்களது
கருத்தும் ஒத்திருந்தால்
ரூ.10,000
பரிசு.
போட்டி
நடத்துவார்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்.
போட்டிக்குப்
போட்டி அறிவிக்கிறார்கள்.
போட்டா
போட்டி என்பார்களே, அது இதுதான் போலிருக்கிறது.
நண்பர்களே, தஞ்சைப் பதிவர் முனைவர்
பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும் எனக்கும் ஓர் எண்ணம்.
இன்று 4.10.2015 ஞாயிற்றுக் கிழமை, காலை
8.00 மணிக்கு முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும் தஞ்சையில் இருந்து
புறப்பட்டோம்.
புதுகை சென்றோம்.
நண்பர் செல்வா அவர்களின்
அலுவலகத்திற்குச் சென்றோம். சகோதரிகள் திருமதி கீதா அவர்களும், திருமதி
மாலதி அவர்களும் வந்திருந்தனர். சிறிது நேரத்திலேயே, கவிஞர் முத்து நிலவன்
ஐயா அவர்களும் வந்து விட்டார். கவிஞர் சோலச்சி அவர்களும் வந்து
சேர்ந்தார்.
மற்ற பதிவர்களைக் காண இயலவில்லை. ஆளுக்கொரு
பணி. ஆளுக்கொரு திசையில், அசராமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களைக் காணச் சென்றோம். அங்கே நண்பர்
மகா.சுந்தர் அவர்களும் இணைந்து கொண்டார்.
ஞானாலயா ஆய்வு நூலகத்தைக் காண, தினமணி
இதழின் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் வருகிறார். கவிஞரோ நாமும்
செல்வோமே என்றார்.
சிறிது நேரத்தில் ஒரு மகிழ்வுந்து வந்தது.
தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்.
அனைவருக்கும் வணக்கம் கூறி, விடைபெற்று,
தஞ்சைப் பேருந்தில் ஏறினோம்.
புதுகை சென்று நாங்கள் ஒன்றும் பணியாற்றவில்லை.
ஆனாலும்,
தன்பெண்டு
தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு
என்று
இருந்துவிடாமல், தங்களது சொந்தப் பணிகளை எல்லாம், புறந் தள்ளி வைத்துவிட்டு,
சொந்தப் பணியினும் மேலாய், வலைப் பதிவர் சந்திப்பிற்காகப் பாடுபடுகிறார்களே,
அவர்களை எல்லாம் சந்தித்ததில் ஓர் மகிழ்ச்சி, ஒர் நிறைவு.
நண்பர்களே, நாள் நெருங்கிவிட்டது.
புதுகைக்கு வர முன் ஏற்பாடுகளைச் செய்து விட்டீர்கள் அல்லவா? இல்லையேல், உடனே
ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
பு
து கை யி ல் ச ந் திப் போ ம்.
விழா சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஆகா....! மிகவும் மகிழ்ச்சி ஐயா...
பதிலளிநீக்குஅன்புடன் திண்டுக்கல் தனபாலன்
நன்றி ஐயா
நீக்குஆசிரியர் அவர்களே! சொன்னால் நம்ப மாட்டீர்கள். நானும் இன்று காலை புதுக்கோட்டைக்கு வருவதாக இருந்தது. ஒரு ஆளாக எங்கு போவது என்ன செய்வது என்று இருந்து விட்டேன். மழை மூட்டங்கள் வேறு. அய்யா முத்துநிலவன் அவர்கள் இன்று என்னிடம், எனது விலாசம் கேட்டபோது கூட கேட்காமல் இருந்து விட்டேன். நல்ல காரியம் செய்தீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஆகா
நீக்குதங்களின் எண்ணம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது ஐயா
இல்லையேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்திருப்பேன்
நன்றிஐயா
வில்லினின்று புறப்பட்ட அம்பாக புதுகை சென்று வந்தமை குறித்து மகிழ்ச்சி நான் 50.கி.மீ தள்ளியல்லவா இருக்கிறேன்!
பதிலளிநீக்குஐயா!
நீக்குநலந்தானே?
இங்கு பதிவராக, தங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி!
.
.
நன்றி ஐயா
நீக்குநன்றி நண்பரே
நீக்குநம் தளத்தில் இணைத்தாகி விட்டது... நன்றி ஐயா...
பதிலளிநீக்குஇணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
→இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!←
நன்றி ஐயா
நீக்குஉழைப்பில் கையையும்,மனதையும்
பதிலளிநீக்குகலக்க விடுகிற சந்தோஷம்/
வாழ்த்துக்கள் சார்.பரஸ்பரம் இது போலான தோள்தட்டல்களும் பாராட்டுதல்களும் தட்டிக்கொடுத்தல்களும் ஆயிரம் விருதுகளுக்குச்சம்மானது,
உண்மைதான்
நீக்குநன்றி நண்பரே
விழாவில் சந்திப்போம் நண்பரே! இன்னும் ஒரு வாரமே உள்ளது.....
பதிலளிநீக்குவிழாவில் சந்திப்போம் நண்பரே
நீக்குநன்றி
விழா இனிதே சிறப்புடன் நடந்தேற இனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஎங்கள் சார்பாக சென்று வந்ததாகவே எண்ணி
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்
மிக்க நன்றியையும் வாழ்த்துக்களையும் தங்கள்
இருவருக்கும் காணிக்கையாக்குகிறோம்
நன்றி ஐயா
நீக்குதங்களின் குணமே இது தானே சகோ
பதிலளிநீக்குஅவகள் பணியை பங்குபோட்டு செய்ய முடியலேயே என்று....
வாழ்த்துக்கள் சகோ
நன்றி சகோதரியாரே
நீக்குதங்களின் பயணம் வெகு சிறப்பானது..
பதிலளிநீக்குவிழா இனிதே நிகழ்வுற நல்வாழ்த்துகள்!..
நன்றி ஐயா
நீக்குசென்று வந்த தங்களுக்கும், முனைவர் அவர்களுக்கும் எமது நன்றி விழா சிறப்புற வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
நன்றி நண்பரே
நீக்குஆஹா மகிழ்ச்சி....
பதிலளிநீக்குவிழா சிறக்கட்டும்.....
எனது வாழ்த்துகளும். நானும் மானசீகமாக இங்கிருந்தே விழாவில் கலந்து கொள்கிறேன்.
நன்றி ஐயா
நீக்குபயண விவரங்களை சுறுக்கமாக, சுவாரஸ்யமாக தந்தீர்களே, நன்றி ஐயா!
பதிலளிநீக்கு.
.
நன்றி நண்பரே
நீக்குதாங்கள் புது-கை வரும்பொழுது, கை-யோடு சில 'தமிழ்ப்பொழில்' இதழ்களும் கொண்டுவருதல் கூடுமோ என்று கேட்கத் தோன்றுகிறது....
பதிலளிநீக்குஅவசியம் கொண்டு வருகின்றேன் ஐயா
நீக்குநன்றி
நமது அரை நாள் பயணத்தை முழுப்பதிவாக்கியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் போற்றத்தக்க பாணியே இதுதான். திரு முத்துநிலவன் அவர்களின் தலைமையிலான விழாக்குழுவினரின் அபாரமான உழைப்பு ஈடு இணையற்றது. அவர்களுடைய பயணத்தில் சிறிது தூரம் கலந்துகொண்டதில் நமக்கு மகிழ்ச்சியே. நம் அனைவரின் ஈடுபாட்டுடன் விழாவைச் சிறப்புற நடத்துவோம். சந்திப்போம், வரும் ஞாயிறு.
பதிலளிநீக்குஅரை நாள் ஆயினும் மனதில் ஓர் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஐயா
ஒரு முன்னோட்டப் பயணத்தின் பகிர்வு அருமை
பதிலளிநீக்குசந்திப்போம்
சந்திப்போம் ஐயா
நீக்குநன்றி
அரை நாள் பயணம் தான் எனினும் காகம்
பதிலளிநீக்குகரைவது போல் கூவி அனைவரையும் அழைத்திட்டீர்.
வரைந்தது தமிழ்ப் பதிவர் சித்திரம் சரித்திரம்
வரம்பிலா விண்ணிலே ஊர்வலமாய் பொன் விமானம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
நன்றி ஐயா
நீக்குபுதுகை வலைப் பதிவர் சங்கமத்தில் கலந்து கொள்ளும் ஆர்வம் கொப்புளிக்கிறது. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஉங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குgood live relay
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவலைப்பதிவர் மகாநாட்டுச் சிறப்பு நேரடி ஒளி/ஒலி பரப்புக் கட்டுரைக்கு நன்றி. சந்திப்பு இனிமையாகச் சென்றதிலும் மகிழ்ச்சி. வலைப்பதிவர் விழா பெரியதொரு பிரம்மோற்சவமாக நடைபெறப்போவது குறித்து ஆனந்தம். பங்கு பெறப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குந்ன்றி சகோதரியாரே
நீக்கு
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
நேரடி நிகழ்வு போல இருந்தது
இனிதே விழா இடம்பெற எனது வாழ்த்துகள்!
நன்றி ஐயா
நீக்குசிறப்பான பயணம்;சிறப்பான பகிர்வு
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஉண்மைதான் நண்பரே! விழாவுக்கு வந்து தங்களை எல்லாம் காண கொடுத்துவைக்கவில்லை என்கிற போது வருத்தம் மேலிடுகிறது! அருகில் இருந்தால் பணிச்சுமைகளை குறைத்து எப்படியும் வந்திருப்பேன்!
பதிலளிநீக்குவிரைவில் சந்திப்போம் நண்பரே
நீக்குநன்றி
கட்டுரை ஒரு ராக்கெட் வேகத்தில் இருந்தது. வாழ்த்துகள் நண்பரே.
பதிலளிநீக்குந்ன்றி நண்பரே
நீக்குவிழா சிறப்பாக அமையட்டும்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவிழா சிறப்பாக அமையட்டும் அய்யா! எனக்கு இதுதான் முதல் சந்திப்பு! அதுவும் 3 மாதத்தில்! கொஞ்சம் திக் திக் தான்!
பதிலளிநீக்குகொடுத்து வைத்தவர் நண்பரே தாங்கள்
நீக்குநன்றி
வெகு சிறப்பு நண்பரே!
பதிலளிநீக்குசிறப்புறட்டும் நமது வலைப் பதிவர் திருவிழா!
தங்களது நூல் வெளியீடுக்கும் வாழ்த்துகள்!
நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே
நீக்குவிழாவுக்கு ஒரு முன்னோட்டம் உங்கள் பதிவு :)
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅன்பின் கரந்தை ஜெயக்குமார் அவர்களே !
பதிலளிநீக்குஅருமையான பதிவு அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் - பாராட்டுக்குரிய பதிவு.
11.01.2015 ஞாயிறனறு காலை 8 மணி அளவில் புதுக்கோட்டைக்கு நானும் எனது துணைவியும் வந்து சேர்வோம். அனைத்துப் பதிவர்களையும் நேரில் சந்தித்து மகிழ்வோம்.
தங்களையும் துணவி மற்றும் மக்களையும் பெற்றோரையும் கண்டு மகிழ விரும்புகிறோம். நல்லதொரு சந்தர்ப்பம் விரைவில் வாய்க்கட்டும். மதுரை வரும் போது அனைவரையும் எங்கள் இல்லத்திற்கு அழைத்து வரவும்.
மதுரையில் எங்கள் இல்லத்திற்கும் புதுவை சந்திப்பிற்குப் பின்னர் குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து செல்ல வேண்டுகிறோம். எப்பொழுது வர இயலும் எனத் தகவல் தெரிவித்தால் இங்கும் ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்.
புதுகையில் சந்தித்து - நமது சந்திப்பினைப் பற்றிப் பேசி - ஆவன செய்வோம்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்களின் வருகைக்கும் அன்பான வரவேற்பிற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குஅவசியம் குடும்பத்தோடு தங்களின் இல்லம் வருவேன்
இதைவிட மகிழ்வு வேறு என்ன இருக்கப் போகிறது
புதுகையில் தங்களைச் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்
நன்றி ஐயா
அன்பின் ஜெயக்குமார்
நீக்குதங்களைப் புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பில் 11.10.2015 அன்று காலை 8 மணி அளவில் சந்திக்கிறோம்.
மதுரைக்கு வருவதற்கு இச்சந்திப்பில் திட்டம் தீட்டுவோம்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்களின் மீள் வருகைக்கு நன்றி ஐயா
நீக்குஅவசியம் மதுரை வருகிறோம்
அன்பின் ஜெயக்குமார்
பதிலளிநீக்குதங்களைப் புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பில் 11.10.2015 அன்று காலை 8 மணி அளவில் சந்திக்கிறோம்.
மதுரைக்கு வருவதற்கு இச்சந்திப்பில் திட்டம் தீட்டுவோம்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்களின் மீள் வருகைக்கு நன்றி ஐயா
நீக்குஅவசியம் மதுரை வருகிறோம்
வணக்கம்...
பதிலளிநீக்குதாங்களும் விமர்சனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
நன்றி ஐயா
நீக்குபுதுக்கோட்டைக்கே வந்ததுபோல உள்ளது உங்கள் பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபுதுக்கோட்டைக்கே வந்ததுபோல உள்ளது உங்கள் பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு
மிகவும் மகிழ்ச்சி
வேலைப்பளு காரணமாக தகவலைப் பார்க்க தாமதம்..தாமதம் ஆனாலும் பார்த்த போது சந்தோசம்..அந்த சந்தோசம் நன்றியாக மலர்கிறது
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅணில் போன்ற சேவை எனினும் அதுவும் அருமை.