20 அக்டோபர் 2015

ஜன்னல் ஓரத்து நிலா
தாய் போற்ற தான் உயர
தரணியெங்கும் புகழ் பரவ
கல்வியே தாரக மந்திரம் என்று
கல்லூரி வாசலில் நுழைந்தேன் ...

துப்பாக்கி சப்தம் கேட்டதடா
செல் வந்து விழுந்ததடா
பாதி வழியினிலே
குத்துயிராய் குலையுயிராய்...

அங்க அவயங்கள் சிதற
வெள்ளை நிற சிறகினிலே
இரத்தக்கறை படிந்ததடா...

     நண்பர்களே, படிக்கப் படிக்க மனம் பதறுகிறது அல்லவா? நமது தொப்புள் கொடி உறவுகளான, ஈழத்து உறவுகளின் நிலைமை பற்றி, செய்தித் தாட்களிலே படித்திருப்போம், உள்ளம் வேதனையில் வாட துவண்டிருப்போம்.


     ஆனால் அதன் வலியும், உண்மைத் துயரும், அங்கு வாழ்ந்து பார்த்தால் அல்லவா, அந்த வாழ்வை அனுபவித்துப் பார்த்தால் அல்லவா தெரியும், புரியும்.

      இலங்கை மண்ணில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, புலம் பெயர்ந்து, மலேசிய மண்ணில் வாழ்வு தொடர்கிறது. உடலோ மலேசிய மண்ணில், மனமோ இலங்கை மண்ணில், தாய் மண்ணில்.
கவிஞர் தவ.ரூபன் அவர்களின்
ஜன்னல்  ஓரத்து  நிலா


தொலைந்து போனவர்களைக் காண்பதா......?
தொலைத்து விட்டவர்களைத் தேடுவதா....?
விடை தெரியாமல்
கடல் அலை போல்
மனம் ரணமாக சுழல்கிறது.

     படிக்கப் படிக்க, நமது மனமும் காயப் பட்டுத்தான் போகிறது. ரூபனின் எழுத்தின் தன்மை அப்படிப் பட்டது.

கோயிலுக்குப் போனால் கோபுரங்கள்
சாய்ந்து விழும் – வீதிக்குப் போனால்
நடந்த தடம் கூட இல்லை
எங்கள் விதியினை யாரிடமும் சொல்லி
யாரும் கரிசனை காட்டியதில்லை.

கல்லாய் இருக்கும் தெய்வம் கூட
கண்ணை மூடிக்கொண்டு வாழ்கிறார்
தெய்வமே இப்படி என்றால்
எங்கள் கதிதான் என்ன ...?

     நியாயமான கேள்விதானே. தெய்வம் கூட கண்ணைத்தானே மூடிக் கொண்டு விட்டது. தெய்வம் கண் திறந்து பார்த்திருக்க வேண்டாமா? கயவர்களை நெற்றிக் கண் திறந்து பொசுக்கி இருக்க வேண்டாமா?

இரவென்றும் பகலென்றும் பாராமல் – நீ
பட்ட துன்பத்தை நான் அறிவேன் தாயே
நானறிவேன் – என்னை
இளமை வரை வளர்த்து விட்டாய் – ஆனால்
உன்னை முதுமை வரை பார்க்க
நீ இருக்கவில்லையே தாயே

     தாயை இழந்த மகனின் ஏக்கம், ஒவ்வொரு சொல்லிலும், அதன் ஒவ்வொரு எழுத்திலும் நம் நெஞ்சைப் பிழிகிறது.

ஈரக்காற்றை இதமாக சுவாசித்த மலையக தேசம்
இன்று உதிரக் காற்றை சுவாசிக்கிறது ....

லயன அறைகளில் லயித்த வாழ்க்கை
இன்று மண்ணில் சங்கமித்ததுஎம் உறவுகளின் உயிர்
பச்சிளம் பாலகன்
வயது முதிர்ந்த தாத்தாக்கள்

பழங்கால வரலாற்றை
சொல்லிப் புகட்டிய பாட்டிமார்கள்


ஆராரோ ஆரிராரோ
தாலாட்டுப் பாடிய தாய்மார்கள்

வாழ்வில் திருமணம் என்னும் வசந்தத்தை
தழுவ இருந்த இளைஞர்கள் யுவதிகள்


மெல்ல மெல்ல வழி திறந்து
ஆதவன் சிகப்பாகி வருகையில்

புதைகுழியில் விதைத்தாள் நிலமகள்
மலையக தேசம் எங்கும் சோக கீதங்கள்


காலமெனும் நீரோடையில்
காவியம் தழுவிய உறவுகளே
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

     வேதனை வரிகளில் நெஞ்சம் கரைந்துதான் போகிறது. என்று விடிவு கிட்டும், என்று வெளிச்சம் தெரியும் என்று மனது ஏங்கத்தான் செய்கிறது.

கவிஞர் தவ.ரூபனின்
ஜன்னல் ஓரத்து நிலா

    படித்துப் பாருங்கள். படிக்கப் படிக்க, நிலா மெல்ல மெல்ல நெருங்கி, ஜன்னல் கம்பிகளின் இடையே நுழைந்து, உங்கள் அறைக்குள், மெல்ல வரும். பிறகு மெல்ல மெல்ல, உங்கள் மனக் கதவைத் திறந்து, உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாய் தங்கும்.

கவிஞர் தவ.ரூபன் அவர்களுக்கு
நமது
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

தொடர்ந்து கவி புனையுங்கள் நண்பரே, தங்களின் எண்ணங்களை எழுத்தாக்கி, வெள்ளைத் தாளில் இறக்கி வையுங்கள். சிகரம் இதோ, இதோ தொட்டுவிடும் தூரத்தில் தஙகளுக்காகக் காத்திருக்கிறது.சன்னல் நிலவைக் கன்னல் தமிழில்
காட்டும் ரூபனார், பாட்டுப் புலவோர்
போற்றிப் புகழ்வோர், ஆற்றின் வளத்தால்
செழிக்கும் ஊராய்க் கொழித்த புகழில்
செம்மைப் புலவன் கம்பன் போன்றே
வாழ்க வளர்க சூழ்க அருளே.
                      கவிஞர் கி.பாரதிதாசன்,
                    தலைவர், கம்பன் கழகம், பிரான்சுவெளியீடு
இனிய நந்தவனம் பதிப்பகம்,
17, பாய்க்கார தெரு,
உறையூர், திருச்சி- 620 003
அலைபேசி 94432 84823
மின்னஞ்சல் nandavanam10@gmail.com

விலை ரூ.80

----------------------
நண்பர்களே,
இன்றைய 20.10.2015 
தின மணி இதழில்
இளைஞர் மணியில்
எனது வலைப் பூ
63 கருத்துகள்:

 1. நெஞ்சத்தை கனக்கச் செய்யும் கவிதைகள். மனதை தைக்கின்றன. நண்பர் தவரூபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வழங்கிய தங்களுக்கும் நன்றிகள்!
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. ஆமாம் நண்பரே நானும் படித்தேன்! ஒவ்வொரு வரியிலும் மனதை கனக்கச் செய்கிறது! பாதிக்கப்பட்டவர்களால்தான் இது போல பாதிக்கும் வரிகளை எழுதமுடியும்! தவரூபன் அவர்களுக்கு நன்றிகள் வழங்கிய தங்களுக்கும்! நன்றி

  பதிலளிநீக்கு
 3. மிக மிக அற்புதமாக நூல் விமர்சனம் செய்துள்ளீர்கள்
  படங்களுடன் பதிவிட்டு பெருமை சேர்த்தமைக்கு
  என் சார்பாகவும் கவிஞர் ரூபன் சார்பாகவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தலைப்பின் வசீகரமும் தங்கள் விமர்சனமும் வெகு சிறப்புங்க சகோ. தம்பிக்கு எனது வாழ்த்துக்களும். தங்கள் வலை அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 5. ரூபனுக்கு எங்கள் வாழ்த்துகள். துயரங்கள் தீரும் காலம் சீக்கிரம் வரவேண்டும்.

  தினமணியில் உங்கள் வலை அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

  மொபைலில் சில தளங்களுக்கு தம வாக்களிக்க முடியாது. அதில் உங்கள் தளமும் ஒன்று. வீட்டுக்கு வந்து கணினியில் அமரும்போது தம வாக்களிப்பேன்!

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. மொபைல் வழி கருத்துரை இடும்போது இது ஒரு கஷ்டம். முப்பது தரம் பிரசுரமாகும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்துனை முறை முயன்றமை தங்களின் மாறா
   அன்பினைக் காட்டுகின்றது
   நன்றி நண்பரே
   என்றும் வேண்டும் இந்த அன்பு

   நீக்கு
 11. எழுத்தில் வலியும் வலிமையும் தெரிகிறது. போர் என்றாலேயே அனுபவித்துத்தான் தெரிய வேண்டும் என்று இல்லை இவற்றுக்கேல்லாம் காரண காரியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தால் வேதனைப் படுபவரது வலி தெரியாது போகும் ரூபன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். விமரிசனம் செய்த உங்களுக்கும்

  பதிலளிநீக்கு
 12. நண்பர்களுக்கு வணக்கம்!.

  இந்த வாரத்திலிருந்து தினமணி இளைஞர் மணியில் வலைத்தளங்கள் பற்றி ரக்ஷிதா என்ற பெயரில் எழுதத் தொடங்கி இருக்கிறேன்.

  நண்பர்கள் தங்களது தளத்தைப் பற்றிய விபரங்களை எனது மெயில் ஐடிக்கு (greatmaba@gmail.com) அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  அன்புடன்
  -தோழன் மபா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினமணி இதழில் இந்த எளியேனின் வலைப் பூவினையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 13. ஆஹா வாழ்த்துக்கள் சகோ,
  நூல் விமர்சனம் அருமை,
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. ரூபன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். விரைவில் நிலைமை சீரடையவும் பிரார்த்தனைகள். உங்கள் அறிமுகத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அருமை நண்பரே தங்களின் விமர்சனம் கவிதைகளின் மேண்மையை மேலும் உயர்த்தி விட்டது கவிஞர் நண்பரே ரூபனுக்கு எமது வாழ்த்துகள்.
  தங்களது வலைப்பூ தினமணி இளைஞர் மணியில் வந்தது அறிந்து மகிழ்கின்றேன் மென் மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே...
  தமிழ் மணம் 7

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. எத்துனை முறை முயன்று இருக்கிறீர்கள்
   நன்றி நண்பரே

   நீக்கு
 17. ரூபனுக்கு எங்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. தம்பி ரூபனுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! அவரது கவிதைகள் மனம் கனக்கச் செய்யும்...காதலும் சரி, தாய் மண்ணைப் பற்றியதும் சரி....

  நண்பரே!தங்கள் வலைத்தளம் தினமணியில் வந்தமைக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 19. சிறப்பான விமர்சனம்
  தினமணி அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
  தொடரட்டும் சிறப்புகள்

  பதிலளிநீக்கு
 20. எங்கள் ஊரவன், உறவினன் ரூபனின் உள்ளக்குமுறல்
  கவிதைகளாய்க் கனக்கும் புத்தக விமர்சனம் மிக அருமை ஐயா!

  விடியலை நோக்கிய வெண்ணிலவாக்களாக நாங்கள்
  உலகெங்கும் வியாபித்துத் திரிகிறோம்!...
  உறங்கிக்கிடக்கும் ஊரும் ஊறவுகளும்
  எழுந்திடும் நாள் கிட்டாதோ?

  தம்பி ரூபனுக்கும் உங்களுக்கும் நன்றியுடன் அன்பு வாழ்த்துக்கள்!

  தங்களின் வலைத்தளம் திணமணியில் பிரசுரமானது கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. நல்ல வாசிப்பனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ரூபன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 22. விமர்சனம் அருமை ஐயா !
  ரூபனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  ஈழத்தின் இன்னல்கள் ஏங்கும் எண்ணங்களாய் எதிரொலிக்க, காதலும் கானலோ என்று கதறும். கண்ணீர்த் துளிகள் சிதற வைக்கும் அருமையான உணர்வு பூர்வமான ஒவ்வொரு வரிகளும் உன்னதமானவை.
  அவர் முயற்சிகள் தொடரட்டும் உச்சம் தொட ! நன்றி ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 23. எத்தனை காலமானாலும் இதயத்து வலிகள் மறையப் போவதுமில்லை..மாறப்போவதுமில்லை...ரூபனுக்கு பாராட்டுகள்...உங்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 24. வணக்கம்
  ஐயா
  எனது கவிதை புத்தகத்துக்கு தங்களின் பார்வையில் வைத்த விமர்சனம் மிக அருமையாக உள்ளது. மிக்க நன்றி ஐயா...

  அத்தோடு தங்களின் வலைப்பூ அறிமுகம் தினமணி பத்திரிகையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.தொடரட்டும் வெற்றிப்படிகள் த.ம 14

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   தங்களின் கவிதை நூல் மனதைக் கணக்கச் செய்தது

   நீக்கு
 25. ரூபனின் மன வலிகளை உணர முடிகிறது!

  பதிலளிநீக்கு
 26. சகோதரர் ரூபனின் கவிதை நூலிற்கு சிறப்பான விமர்சனம்...
  தினமணிச் செய்திக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 27. கவிஞர் திரு. ரூபன் அவர்களின் கவிதைகள் மனதைக் குடைகின்றன..

  பதிலளிநீக்கு
 28. தினமணியில் தங்களுடைய அறிமுகம் கண்டு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 29. Uprooting from the birth place,forcefull seperation from kith and kin.sleepless nights in a war zone are all painfull experiences.Only those who suffered will understand.But I am of strong belief that man is the creater and a day will come that you will join the main land with great pleasure.Till then we have no option but to shed tears with you,Ruban.Well done Jayakumar.

  பதிலளிநீக்கு
 30. ஜன்னல் ஓரத்து நிலா மூலமாக ரூபனை எங்களிடம் நெருக்கமாகக் கொணர்ந்தமைக்கு நன்றி. நூலாசிரியரான அவருக்குப் பாராட்டுகள். விமர்சனம் செய்த உங்களுக்கு நன்றி. நமது பிற நண்பர்களுடன், தினமணியில் தங்களது வலைப்பூ அறிமுகம் மகிழ்வைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 31. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  திரு.ரூபன் அவர்களின் ஜன்னல் ஓரத்து நிலா நூல் விமர்சனத்தை படித்தவுடன் மனம் கனத்து போனது. தங்களின் வலைப்பூ தினமணி நாளிதழில் தோழன் மபா, தமிழன் வீதி அவர்களால் அறிமுகம் பெற்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

  பதிலளிநீக்கு
 32. நூல் விமர்சனம் அருமை படிக்க வேண்டும் நூலினை! நாளிதழில் உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி ஐயா! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 33. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 34. தம்பி ரூபனுடைய நூல் வெளியானது மகிழ்ச்சி தரும் செய்தி. இங்கே குறிப்பிடப்பட்ட சிலவரிகளிலும் அந்த கவியுள்ளத்தின் பாங்கு தெள்ளெனத் தெரிகிறது. அந்த வலியும் ரணமும் நமக்கும் புரிந்தவை. தம்பி கலங்கும்போது நம் கண்களும் கலங்கித்தான் வழிகின்றன...
  அன்புடன்
  மோகன்ஜி
  வானவில்மனிதன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 35. சகோதரர் ரூபனுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 36. அருமையான நூல் அறிமுகம்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு