15 அக்டோபர் 2015

புதுகை சங்கமம்




     கடந்த இரண்டு மாதங்களாக, என்று வரும், எனறு வரும் என்று நாள் காட்டியின் தாட்களைப் பார்த்துப் பார்த்து, ஏங்கிக் கொண்டிருந்த, அந்த நாள், அந்த இனிய நாள், வாழ்வின் மறக்க இயலா சிறந்த நாள், கடைசியில் வந்தே விட்டது.

     11.10.2015 ஞாயிற்றுக் கிழமை.

     காலை 7.00 மணி. கரந்தையில் காத்திருந்தது அந்த வேன். இராகவேந்திரா வேன்.

      முனைவர் ஹரணி, முனைவர் பா.ஜம்புலிங்கம், குடந்தையூர் சரவணன் மற்றும் அவரது அருமை மகன், கும்பகோணம் திருநீலக்குடி புலவர் திரு உலகநாதன் மற்றும் அவரது நண்பர், கரந்தை சரவணன் மற்றும் அவரது அன்பு மகன், நான் மற்றும் எனது குடும்பத்தினர், உறவினர்கள் என 15 பேர் வேனில் புறப்பட்டோம்.


     ஒரு திருவிழாவிற்குச் செல்லும் உணர்வு அனைவரிடமும்.

     காலை 9.00 மணி. புதுகை, ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்.

     தெருவெங்கும் பதாகைகள், வாருங்கள், வாருங்கள் என வரவேற்கும் பதாகைகள்.

     மக்கள் மன்றத்தில் காலடி வைத்த, அடுத்த நொடியே, மனதில் மகிழ்ச்சி, அலைமோதி ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.


வலைத் தமிழ் உறவுகளே
வருக வருக

     வலைப் பதிவர்களின் மாவட்டங்கள் ஒவ்வொன்றாய் வரவேற்புப் பதாகையில் அச்சேறி வரவேற்கும் காட்சி.




பதிவர்களின் பெயர் பதிவு, நூல்கள் விற்பனைப் பிரிவு, அலங்கார மேடை, நீண்ட நெடிய விழா அரங்கு என எங்கு நோக்கிலும் பளபளக்கும் சீருடையில் புதுகை ஆண் பதிவர்கள். உள்ளத்தின் வண்ணத்தினை வெளிச்சமிட்டுக் காட்டும் வெண் உடையில் புதுகையின் பெண் பதிவர்கள்.

     ஆலங்குடியைச் சார்ந்த ஓவியர்களின் கைவண்ணத்தில் உருவான, வலைப் பதிவர்களின் கவிதை ஓவியங்கள் அரங்கு முழுதும் நிரம்பி, விழா அரங்கிற்குப் புதுப் பொலிவை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தன.

      கண் கொள்ளா காட்சி. முதற் பார்வையிலேயே, விழாவின் வெற்றி, முகம் காட்டிச் சிரித்தது.

     நண்பர் திரு கஸ்தூரி ரங்கன் அவர்களும், சகோதரி திருமதி கீதா அவர்களும் முகம் மலர வரவேற்றனர்.

      வாருங்கள், வாருங்கள், முதல் தளத்தில், காலை விருந்து காத்திருக்கிறது, சென்று உண்டு வாருங்கள், வாருங்கள் என வரவேற்றனர்.

சார் வாருங்கள், எப்படி இருக்கிறீர்கள், என்னைத் தெரிகிறதா?

     குரலில்தான் எத்தனை மகிழ்ச்சி. முதன் முதலாய் பார்க்கிறேன். ஆனாலும் பெயர் மனதில் மின்னலாய் வெட்டியது.

       தில்லையகத்துப் பதிவர் சகோதரி கீதா அவர்கள்தானே?

       அவரேதான்.

     அரங்கினைக் காணக் காண, அரங்கினில் பதிவர்களைக் காணக் காண, மனதில மகிழ்ச்சி வெள்ளம்.
     

தில்லையகத்து நண்பர் துளசிதரன் அவர்களைக் கண்டேன். குறும் படங்களில் மட்டுமே பார்த்த உருவம், கண் முன்னே வந்தபோது, கரம் பற்றி மகிழ்ந்தேன்.

     தினத் தந்தியில் தினம் ஒரு தகவல். 2003 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தினம், தினம் ஒரு புதுத் தகவலை வாரி வழங்கி வருபவர். அலைபேசியில் குரலைக் கேட்டிருக்கிறேன், பேசியிருக்கிறேன். முதன் முதலாய் நேரில் பார்க்கிறேன்.

       4500 நாட்கள், 4500 தகவல்கள். எளிமையாய், பழகுதற்கு இனியவராய் திரு எஸ்.பி.செந்தில் குமார்.
     

மூங்கில் காற்று திரு டி.என். முரளிதரன் ஐயா, சகோதரி எழில், கோவை ஆவி ஒவ்வொருவராய் பார்க்கிறேன்.

      கேலியும் கிண்டலுமான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர், அமைதியாய் அமர்ந்திருந்தார் திரு பழனி. கந்தசாமி ஐயா.

       அருகிலேயே மூத்த பதிவர் புலவர் இராமாநுசன். மதுரைக் கவிஞர் ரமணி. நண்பர் தமிழ் வாசி பிரகாஷ்

             தமிழின் இனிமையைத் தன் கவினுரு சொற்களால் கவிதையாக்கிக் காட்சிக்கு வைக்கும் பாவலர் தென்றல் சசிகலா.

      நாள்தோறும், கிழமைகள் தோறும், பொங்கல் ஆனால் என்ன, தீபாவளி ஆனால் என்ன, எந்த பண்டிகை வந்தால் என்ன, எந்நாளும், என் பதிவே முதற் பொங்கல், என் பதிவே முதல் வெடி, என நாளும் ஒரு பதிவினை சிந்திக்க, வாய்விட்டுச் சிரிக்க பதிவேற்றி வரும் திரு பகவான் ஜி.
     

வலைப் பதிவர் கையேடு என்னும் மகத்தான ஆவணத்திற்கு, தன் உணவு மறந்து, உறக்கம் துறந்து, உடலும் உயிரும் கொடுத்த, நண்பர் ஸ்ரீ மலையப்பன் அவர்களை முதன் முதலாய் கண்டேன்.

ஜன்னல் ஓரத்தில் பெங்களூரின் மூத்த பதிவர் திரு  ஜி.எம்.பி ஐயா அவர்கள். ஐயா அவர்களுக்கு வணக்கம் கூறி மகிழ்த போது, மேடையில் இருந்த ஒலி பெருக்கியின் வழி, மிதந்து வந்தது அந்தக் குரல்.

      கரந்தை ஜெயக்குமார் அவர்களே, பிறகு போட்டோ எடுத்துக் கொள்ளலாமே

      திரும்பிப் பார்த்தால், கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ஒலிப் பெருக்கியின் முன் நின்றிருந்தார்.

       கவிஞருக்கு இங்கிருந்தே ஒரு வணக்கம் கூறி இருக்கையில் அமர்ந்தேன்.

      விழா தொடங்கியது.
     


வலைப் பதிவர் கையேடு வெளியீட்டு விழா, ஐவகைப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள், பதிவர் அறிமுகங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள், இடையிடையே, நண்பர் மகா.சுந்தர் அவர்களின் புதல்வி செல்வி சுபாஷினி அவர்களின் தேனிசைக் குரலில் செவிக்கு உணவளிக்கும், மனதிற்கு இதமளிக்கும் பாடல்கள்.


தமிழ் விக்கிப் பீடியாவில்
250 பதிவுகளை அசராமல், தளராமல் பதிவற்றம் செய்தமைக்காக,
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவரகளுக்குப்
பாராட்டு,
திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கு
வலைச் சித்தர்
என்னும் சீர்மிகு பட்டம்.

கணினி தமிழில் பிழை திருத்தம் செய்யும்
நாவி மற்றும் வாணி
என்னும் மென் பொருட்களைக் கண்டு பிடித்த
மதுரையினைச் சேர்ந்த இளைஞர்
ராஜாராமன் என்னும் நீச்சல்காரன் அவர்களும்,


புதுக்கோட்டை, ஞானாலயா நூலக நிறுவனர்
திருமிகு பா கிருட்டினமூர்த்தி அவர்களும்

சர்வஜித் அமைப்பினைச் சார்ந்த
டாக்டர் ராமதாஸ் அவர்களும்

திரைப்படக் கவிஞர்
தனிக்கொடி அவர்களும்,


சென்னை மூத்த பதிவர்
புலவர் இராமாநுசம் அவர்களும்


மதுரையின் மூத்த பதிவர்
அன்பின் சீனா அவர்களும்

சிறப்பிக்கப் பெற்றனர்

       நேரம் சென்றதே தெரியவில்லை. மதிய விருந்து காத்திருக்கிறது என்றார்கள்.
      



உணவுக் கூடத்தில்தான், உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும், பதிவருமான சகோதரி திருமதி ஜெயலட்சுமி அவர்களைக் கண்டேன்.

     உணவுக் குழுவின் பொறுப்பாளர். பார்த்துப் பார்த்து, சுவைத்து சுவைத்து, ரசித்து ரசித்து, ஒவ்வொரு உணவு வகையினையும், விருந்தினில் சேர்த்திருந்தார்.

      உணவு அருமை. சுவையோ இனிமை.

      நளபாகச் சக்கரவர்த்தினி என்னும் விருதினையேச் சகோதரிக்கு வழங்கி மகிழலாம்.

       புதுகைப் பதிவர்கள் அனைவருமே, ஆளுக்கொரு உணவுப் பொருளுடன், வாளியினை கையில் எடுத்துக் கொண்டு, என்ன வேண்டும், என்ன வேண்டும், போதுமா அல்லது இன்னும் கொஞ்சம் வைக்கட்டுமே, இன்னும் கொஞ்சம்தான் சாப்பிடுங்களேன், என உபசரித்து, உபசரித்து, விருந்திற்கு மேலும் சுவை கூட்டினர்.

      சுவைமிகு உணவினை வயிரார உண்டு, களைத்துப் போய் அமர்ந்திருந்தபோது, அலைபேசி அழைத்தது.

      தொடுதிரையை வருடியபோது, ஓர் இன்ப அதிர்ச்சி.

       அபுதாபியில் இருந்து, மீசைக்கார, பாசக்கார நண்பர் கில்லர்ஜி.

      நேரலையில் விழாவினைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விழா அருமை. என்னால் வர இயலா விட்டாலும், என் தங்கை மகன் என் சார்பில், வந்திருக்கிறார், நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் என்றார்.

     பதிவுலகின் இன்பமே இதுதானே. பதிவுலக உறவென்பது இதுதானே.

     மீசைக்கார நண்பரின் குரல் கேட்டு நெகிழ்ந்துதான் போனேன்.

     மீசைக்கார நண்பரின் அன்புக் குரல், காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.  அப்பொழுது கண் எதிரே ஓர் காட்சி அரங்கேறியது. ஓர் சந்திப்பு. முன்னாள் மாணவரும், ஆசிரியரும் சந்திக்கும் அற்புதக் காட்சி.
     

ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மாணவரும், அம்மாணவரின் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் சந்தித்த பரவசக் காட்சி.

       இருவருமே பதிவர்கள்.

        முன்னாள் மாணவருக்கு வயது ஐம்பதிற்கும் மேல் இருக்கும். ஓட்டுநராகப் பணியாற்றுபவர். ஆனாலும் வலையில் வித்தகர். தமிழ் தட்டச்சு முறைகளில் புதுமைகள் பலவற்றை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர்.

      முன்னாள் மாணவரின் பெயர் திரு பரமேசுவரன்.

      முனைவர் அ.கோவிந்தராசு அவர்கள்தான் இவரது ஆசிரியர். தமிழ்ப் பூ என்னும் வலைப் பூவின் ஆசிரியர்.

      வலைப் பூ என்னும் வலை, இன்று இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது. இனி இவர்களின் உறவும், நட்பும் என்றென்றும் தொடரும்.



இளைஞர் ஆத்திச்சூடி
      
       முனைவர் அ.கோவிந்தராசு அவர்களின் சிறு நூல். படித்துப் பாருங்களேன் என்று எனக்கு வழங்கினார். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டேன்.

        

சிகரத்தை நோக்கிய பயணத்திலிருந்து சில துளிகள்....

         வேலூர் கோட்ட, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 25 ஆண்டு கால வரலாற்றினைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார், ஒரு ஊழியனின் குரல் வலைப் பூவின் பதிவர் திருமிகு எஸ்.ராமன் அவர்கள். நூலினைப் பார்த்த முதல் பார்வையிலேயே, திருமிகு ராமன் அவர்களின் அயரா உழைப்பு கண் முன்னே தெரிந்தது.

           வலைப் பூ வழியே பார்த்துப் பழகிய நான், இன்றுதான் முதல் முதலில் நேரில் சந்திக்கிறேன். முதல் சந்திப்பிலேயே அவர்தம் நூலினை அன்புப் பரிசாகப் பெற்றேன்.


என்றாவது ஒரு நாள்

           ஆஸ்திரேலியாவில் வாழும் சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் மொழி பெயர்ப்பு நூல். இந்நூலின் பல பகுதிகளை வலைப் பூவில் படித்துப் படித்து வியந்திருக்கிறேன். படிக்கும் பொழுதெல்லாம், என் உள்ளத்திலே, ஓர் ஆசை, பேராசை தோன்றும். என்றாவது ஒரு நாள் நாமும் இது போல் எழுத வேண்டும் என்று.

            புதுகையில் இவர்தம் உறவினர் ஊஞ்சல் வலைப் பூவின் பதிவர் சகோதரி திருமதி கலையரசி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

            கீதா மதிவாணன் தங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று கூறி, என்றாவது ஒரு நாள் நூலினை வழங்கி மகிழ்ந்தார்.

             ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த எளியேனுக்குச் சகோதரியின் அன்புப் பரிசு.

             என்றும் வேண்டும் இந்த அன்பு.
     




பிற்பகல் நிகழ்வில் எனது நூலின் வெளியீட்டு விழா.

       உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில், அரங்கேறியது.

        அண்ணாமலைப் பல்கலைக் கழக, தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் ஹரணி அவர்கள், வித்தகர்கள் என்னும் எனது நூலினை வெளியிட, உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள், நூலின் முதற் படியினைப் பெற்றுக் கொண்டார்.

        பூமிப் பந்தின் தென் துருவமாம், அண்டார்ட்டிகாவில், ஒன்றல்ல இரண்டல்ல, முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டவரும், வித்தகர்களில் ஒருவருமான, குடியரசுத் தலைவர் விருது பெற்ற, கர்னல் கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
      

தொடர்ந்து நண்பர் ரூபன் அவர்களின் ஜன்னல் ஓரத்து நிலா நூல் வெளியீட்டு விழா அரங்கேறியது.
    

அடுத்து எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் உரையும், பதிவர்களின் கேள்விகளுக்கு எஸ்.ரா அவரகளின் சளைக்காத பதிலும், கேட்டோரின் செவிகளையும், உள்ளங்களையும் குளிரவைத்தன.

மொத்தத்தில
புதுகை சங்கமம்
ஒரு
வெற்றிச் சங்கமம்.





கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களும்,
வலைச் சித்தர், வலைக் கவி திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும்
கண் துஞ்சா புதுகைப் பதிவர்களும்
பாராட்டுதலுக்கு உரியவர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள்.
பாராட்டுவோம், போற்றுவோம்


அகம்கண்டு  முகம்காணா  பலரைக்  கண்டேன்-மேலும்
        அவரோடு  உரையாடி மகிழ்வே  கொண்டேன்!
இகம்தன்னில்  பிறந்ததிட்ட  பயனைப்  பெற்றேன்-நாளும்
         இணையத்தால்  இத்தைய  உறவை உற்றேன்!
நகத்தோடு இணைந்திட்ட  சதைபோல்  இன்றே-புதுகை
     நடத்திட்ட பதிவர்விழா  குறையில்  ஒன்றே!
சுகத்தோடு   அனைவருமே  இல்லம்  சென்றார்-பன்முறை
     சொல்கின்றேன்   வணக்கமென  நன்றி !  நன்றி!

                                               புலவர்  சா  இராமாநுசம்




    



93 கருத்துகள்:

  1. ஒரு ஆக்சன் ரீப்ளே போல மகிழ்வான தருணங்களை நினைவில் கொணர்ந்தது ...
    நன்றிகள் அய்யா
    தம +

    பதிலளிநீக்கு
  2. நேரடியாய் மீண்டும் நிகழ்வுகளைக்
    கண்டு களிப்பதுபோல் அற்புதமான பதிவு
    நிகழ்வு தொடங்கியபின் பதிவர்களிடம் பேசுவது
    அவர்களுக்குத் தொந்தரவாக இருக்குமோ என
    நான் பலரிடம் தொடர்பு கொள்ளவில்லை
    முதல் நாள் இரவு வந்த பலரிடமும் தொடர்பு
    கொண்டதுபோல் மறு நாள் வந்தவர்களிடம்
    பேச இயலாதது எனக்கு மிகவும் வருத்தமே

    தாங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகத்தைப்
    படித்துக் கொண்டிருக்கிறேன்.மிக்க நன்றி

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிடம் மனம் விட்டுப்பேச இயலாமற் போனதில் எனக்கும் வருத்தம்தான் ஐயா
      நன்றி

      நீக்கு
  3. நேரில் கலந்து மகிழவில்லை எனும் குறை
    தீர்ந்தது உங்கள் பதிவினால் ஐயா!
    படங்களும் அருமை!

    அனைத்தையும் பதிந்து பகிர்ந்துகொண்டமைக்கு
    உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    த ம +1

    பதிலளிநீக்கு
  4. அனைத்து நிகழ்வுகளையும் அருமையாக, இனிமையாகவும் சொல்லியமைக்கு நன்றிகள் நண்பரே

    நானும் தங்களை சந்தித்தேன்! மிக்க மகிழ்ச்சு நண்பரே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நண்பர்களின் பெயர்களை
      தவறுதலாக பதியாமல் விட்டுவிட்டேன் நண்பரே
      நன்றி

      நீக்கு
  5. அன்பின் அருமை நண்பர் ஜெயக்குமார் அவர்களே !
    - ஒவ்வொரு நிகழ்வும் அழகாக பிரசுரிக்கப் பட்டுள்ளது.

    பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்து அனைத்துப் பதிவர்களும் மிகுந்த மன நிறைவுடன் இல்லம் திரும்பினர்.

    இப்பதிவினை பொறுமையாக படித்து மகிழ்ந்தோம்.

    பாராட்டுகள்
    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் அருமை நண்பர் ஜெயக்குமார் அவர்களே !
    - ஒவ்வொரு நிகழ்வும் அழகாக பிரசுரிக்கப் பட்டுள்ளது.

    பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்து அனைத்துப் பதிவர்களும் மிகுந்த மன நிறைவுடன் இல்லம் திரும்பினர்.

    இப்பதிவினை பொறுமையாக படித்து மகிழ்ந்தோம்.

    பாராட்டுகள்
    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    15 அக்டோபர், 2015

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போல் மீண்டும் ஒரு அருமையான பதிவு. நீங்காத நினைவுகளை அழியாத ஓவியமாக்கி விட்டீர்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக
      தமிழ்ப் பொழில் இதழ்களைக் கொண்டு வந்தேன் ஐயா
      கொடுக்க இயலாமற் போய்விட்டது
      விழாவில் தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா
      நன்றி

      நீக்கு
  8. பயணம் தொடங்கி, விழாவில் கலந்துகொண்டது வரை அனைத்து நிகழ்வுகளையும் விடாமல் பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது. ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய முறையும், அழகான மொழியில் எழுதிய பாங்கும் மனதில் என்றென்றும் நிற்கும். புதுவைச் சங்கமம் பற்றிய உங்களது எழுத்துச்சங்கமம் சக பதிவர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி என்று மாற்றி விடுங்க. மர்த்தி என்று வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. எழுத்துப் பிழையினை சரி செய்து விட்டேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  10. வணக்கம் நண்பரே...
    தங்களது பதிவு தாமதமாகும் பொழுதே நினைத்தேன் புதுகை விழா போன்றே தங்களது பதிவு வரும் என்று,,,, எண்ணம் வீண் போகவில்லை
    அருமை மீண்டும் நேரலை போலவே நண்பரே அழகாக விளக்கிய விதம் அழகு... தங்களது நூல் வெளியீடு சிறப்புற்றமைக்கு வாழ்த்துகள்.
    பதிவில் எம்மையும் குறிப்பிட்டமை கண்டு அகம் மகிழ்ந்தேன் நன்றி
    தமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ

    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  11. பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட மகிழ்ச்சி..... உங்கள் பதிவின் மூலம் எனக்கும்....

    படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  12. அண்ணா உங்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து வரணும்னு ஆசைப்பட்டேன் ...ஆனா...விழாப்பணி என் ஆசையை நிறைவேற்ற விடவில்லை.....மீண்டும் விழா நிகழ்வுகள் கண்முன் வருகின்றன அண்ணா ..மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழாவில் தங்களின் கனிவான உபசரிப்பு கண்டு மகிழ்ந்தோம் சகோதரியாரே
      விரைவில் தங்கள் இல்லம் வருவோம்
      நன்றி

      நீக்கு
  13. மிக மிக அழகான ஒரு பதிவு! தங்களைச் சந்தித்ததில் எங்கள் இருவருக்குமே மிக்க மகிழ்ச்சி நண்பரே! அதிகம் பேசி அளவளாவ முடியவில்லையே என்ற ஒரு குறை மட்டும்தான்...

    புகைப்படங்கள் அருமை!

    மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே
      தங்களுடன் அதிக நேரம் பேச இயலாமற் போனதில் வருத்தமே
      நன்றி நண்பரே

      நீக்கு
  14. பாசமிகுந்த விழா அன்பரே. எனக்கெல்லாம் தங்களைக் கண்டதும் தங்களைப் போன்ற பலரைக் காணும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேராக கருதுகின்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே

      நீக்கு
  15. நானே அரங்கிலிருப்பதாய் உணர்ந்தேன்.நன்றி

    பதிலளிநீக்கு
  16. விழா நிகழ்வுகளை
    நிறைய படங்களுடன்
    விரிவாக, விளக்கமாக
    பதிவு செய்திருப்பதைப்
    படித்ததில் மனமெங்கும்
    பரவசம்!!!

    பதிலளிநீக்கு
  17. பதிவர் திருவிழா மிக அக மகிழ்வளித்தது. தங்கள் பதிவு நன்று .

    பதிலளிநீக்கு
  18. அருமை அப்படியே ரீவைண்ட் செய்து பார்ப்பதுபோல் இருந்து. சாதனை புரிந்த வித்தகர் கர்னல் அவர்களை நேரில் பார்த்ததும் அவரின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தேன்.
    தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. நிகழ்ச்சியின் தொகுப்புரையாய் பதிவு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. நேர் முக வர்ணனை அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  21. நான்பார்க்கத்தவறிய செய்திகளும் தங்களின்பதிவில் கண்டு மகிழ்ந்தேன்
    சகோநன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுகையின் புதுப் பதிவரான தங்களின் அன்பு மகளையும்
      தங்களையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  22. விழாவுக்கு தங்களுடன் சென்று கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் . தொடரட்டும் தங்களின் எழுத்து பயணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே

      நீக்கு
  23. அய்யா வணக்கம். உணர்வுப்பூர்வமான தங்களின் விழா அனுபவப் பகிர்வு மிகவும் அரியதொரு பதிவாக அமைந்துள்ளது. குடும்பத்தோடு வந்து, உண்மையிலேயே இது பதிவர் குடும்ப விழா என்பதை உணர்த்திய தங்களுக்கும், த ங்கள் துணைவியார்க்கும் நண்பர்களுக்கும் எங்கள் விழாக்குழுவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அயரா உழைப்பும், புதுகைப் பதிவர்களின் தளரா உழைப்புமே, பதிவர் சந்திப்பு விழாவின் வெற்றிக்குக் காரணம் ஐயா
      நன்றி

      நீக்கு
  24. It was a great get-together of known and unknown Blog writers.I had the pleasure of meeting many faces whose writing I had enjoyed and also got the blessings of those people who wanted to meet "THE COLONEL".Thanks to Mr.jayakumar.A sabash to Mr.Muthunilavan for excellent conduct of the show.

    பதிலளிநீக்கு
  25. மீண்டும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களின் உழைப்பு போற்றுதலுக்கு உரியது

      நீக்கு
  26. அன்புள்ள அய்யா,

    மீண்டும் புதுகை வலைப்பதிவு விழாவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.

    நன்றி.
    த.ம.14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வலைப்பதிவர் திருவிழாவில் நடைபெற்ற நிகழ்வை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் அத்தோடு நன்றி கூறிய விதம் சிறப்பு ஐயா த.ம 15
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  27. தங்களின் பதிவு மீண்டும் ஒருமுறை விழாவை நேரில் பார்ப்பதுபோல் உணரச் செய்தது. ஏற்கனவே பதிவுகள் மூலமும் கைப்பேசியில் மூலமும் உரையாடியிருந்தாலும் நேரில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி தந்தது. தமதமாக் தங்கள் பதிவை படித்ததற்கு நேரமின்மையே காரணம். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
    த ம 16

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமானால் என்ன நண்பரே
      தங்களைச் சந்தித்ததிலும் சில நிமிடங்களேனும் தங்களுடன்பேச முடிந்ததிலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே
      நன்றி

      நீக்கு
  28. நேர்முக வர்ணனை பிரமாதம். விழாவை நேரில் பார்ப்பது போல் இருந்தது. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  29. பதிவு அருமை! புதுக்கோட்டை வந்து திரும்பிய பின் உடல் நலம் (முதுகுவலி)சற்று பாதிக்கப் பட்டதால் வலைவழி அதிகம் வர இயலவில்லை!எனவேதான் இக்கால தாமதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுகையில் இருந்து சென்னை திரும்பியபின்
      இந்த எளியேனையும் அலைபேசியில் அழைத்துப் பேசியது
      மிகுந்த மகிழ்வினை அளித்தது ஐயா
      உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
    2. புதுகையில் இருந்து சென்னை திரும்பியபின்
      இந்த எளியேனையும் அலைபேசியில் அழைத்துப் பேசியது
      மிகுந்த மகிழ்வினை அளித்தது ஐயா
      உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
  30. அனைத்தையும் பகிர்ந்து எம் ஆதங்கத்தை போக்கிவிட்டீர்கள் சகோ ! எனக்கும் அவற்றில் கலந்து கொண்டாற் போன்று மகிழ்வாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  31. அசத்தலான பகிர்வு...
    தங்களிடம் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை...

    அடுத்த சந்திப்பில் சிந்திப்போம்...

    பதிலளிநீக்கு
  32. புதுக்கோட்டை விழாவைப் பற்றி, கரந்தையாரிடமிருந்து பதிவே இன்னும் வரவில்லையே என்று நினைத்தேன். வழக்கம்போல உங்கள் நடையில், படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டும் பதிவு ஒன்றினைத் தந்து விட்டீர்கள்.

    உங்களோடும் நண்பர்களோடும் நான் இருந்த புகைப்படத்தை தரவிறக்கம் செய்து கொண்டேன். நன்றி!

    விழாவில் பார்த்த அனைவரைப் பற்றியும் ஒருவரி அறிமுகம் புதுமையாக இருந்தது (நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் – சும்மா ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே)

    // உணவுக் குழுவின் பொறுப்பாளர். பார்த்துப் பார்த்து, சுவைத்து சுவைத்து, ரசித்து ரசித்து, ஒவ்வொரு உணவு வகையினையும், விருந்தினில் சேர்த்திருந்தார். உணவு அருமை. சுவையோ இனிமை.//

    உண்மைதான் அய்யா. வந்த விருந்தினர்களுக்கு நல்ல உணவைப் படைக்க வேண்டும் என்பதற்காகவே, சகோதரி ஜெயலஷ்மி அவர்கள் , விருந்து மண்டபத்திலேயே மேற்பார்வைக்காக இருந்து விட்டார் போலிருக்கிறது; அரங்கத்தில் அவ்வளவாக வரவில்லை. நானும் உங்களோடு சேர்ந்து மீண்டும் பாராட்டுகிறேன்.

    உங்களது நூல் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி ஐயா
      உண்மையிலேயே அந்நாள் ஒரு பொன்னாள்தான் ஐயா
      நன்றி

      நீக்கு
  33. வலைப்பதிவர் திருவிழா-2015ன் நிகழ்வுகளனைத்தையும் நிரல்படத் தொகுத்து வெளியிட்டு அசத்திவிட்டீர்கள் கரந்தையாரே.. காணாதவர்களும் காண ஏங்குவர்.

    ஒரே ஒரு நிகழ்வு விடுபட்டுள்ளது. விழாவின் முதல் நிகழ்வாக “விதைக்கலாம்“ குழுவினரோடு விழா அரங்கினையடுத்துள்ள கிறித்தவ ஆலய வளாகத்துள் மரக்கன்றுகள் நமது சிறப்பு விருந்தினர்களால் நடப்பட்டது.
    விழாவில் வெளியிடப்பட்ட தங்களின் “வித்தகர்கள்“ நூல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. போற்றற்குரிய பெருமக்கள் ஐவரைப் பற்றிய அரிய கருத்துகளை அறியத் தக்கவகையில் அமைத்துள்ளதமை பாராட்டத்தக்கது. மேலும் பல படைக்க வாழ்த்தகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா. “விதை-கலாம்” இளைஞர் குழுவின் ஒப்பற்ற பணிக்கு அன்று ஒருநாள் கூடநிற்க முடிந்ததே பெரிய வாய்ப்பு! அதையும், அதேகுழுவினரின் நேரலை ஒளிபரப்பின் நேர்த்தியை நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே அய்யா?

      நீக்கு
    2. பாவலர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
      நன்றி ஐயா

      நீக்கு
    3. மதிப்பிற்குரிய கவிஞர் ஐயா அவர்களுக்கு,
      வணக்கம். நாங்கள் அரங்கிற்கு வரும்பொழுதே காலை மணி 9.00 ஆகிவிட்டது அதனால் அதற்கு முன்னர் நடைபெற்ற விதைக்கலாம் நிகழ்வினைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன். மன்னித்து அருள்வீர்களாக.
      நேரலையின் ஒளி பரப்பு பற்றி அன்றே மீசைக்கார நண்பர் கில்லர்ஜி அப்பொழுதே பேசி விட்டார். நேரலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நிகழ்விற்கு வரவியலாத வருத்தத்தை நேரலைப் போக்கிக்கொண்டிருக்கிறது என்றார்.
      அனைத்திற்கும் காரணகர்த்தா தாங்கள்தான் ஐயா
      தங்களின் முயற்சி, புதுகைப் பதிவர்களின் ஒன்றுபட்ட உழைப்பு ஒரு மாபெரும் வெற்றி
      நன்றி ஐயா

      நீக்கு
  34. உங்கள் நூல் வெளியீட்டு விழாவைக் காண நான் கொடுத்து வைக்கவில்லை. சுமார் மூன்று மணிக்கே திரும்பிவிட்டோம் நான் அறிந்த பதிவர்கள் பலரையும் சந்தித்தேன் ஆனால் விழாக்குழுவினரில் எம். கீதா வைகறைத் தவிர மற்ற யாரையும் அடையாளம் தெரியவில்லை. அவர்களும் அறிமுகப் படுத்திக் கொள்ள வில்லை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. விழாவினை நேரில் கண்டதைப் போல் இருக்கின்றது..
    சிறப்பான பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  36. அருமை சகோ, புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். அலைபேசியில் அழைத்தால் தொந்தரவாக இருக்கும் என்று தான் குறுந்தகவல் அனுப்பினேன்.
    வாழ்த்துக்கள் சகோ,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  37. விழாவிற்கு வர முடியாத குறையை உங்கள் பதிவு போக்கியது! அழகிய அருமையான விவரிப்பு! படங்கள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  38. ஒன்றைக் கூட விடாமல் திறம்பட பதிவு செய்து இருக்கீறீங்க ,உங்க எழுத்து வன்மைக்கு என் வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
  39. அன்பார்ந்த ஜெயக்குமார்
    உங்கள் வண்ணப் படங்களும் எண்ணப் படங்களும் அருமை.
    நானும் எனது மாணவரும் சந்தித்ததை ஆவணப்படுத்திவிட்டீர்கள்.
    நன்றி நன்றி. உங்கள் நூல்களை நிதானமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா
      நன்றி

      நீக்கு
  40. வலைப்பதிவர் விழா தங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியதை அழகாய்ப் பகிர்ந்து எங்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. நேரில் பார்த்தது போல பதிவு. காட்சியாகவும் பார்த்தேன்
    எல்லோருக்கும் மிக நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  42. படித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்>

    பதிலளிநீக்கு
  43. தூர தேசத்தில் இருப்போருக்கு வாசிப்பு விருந்து போல அழகான பகிர்வு ஐயா!

    பதிலளிநீக்கு
  44. .அன்புள்ள ஜெயக்குமார் அருமை. உங்களின் உணர்வுப்புதையலாய் அமைந்த பதிவு, வாழ்ததுக்கள்.

    பதிலளிநீக்கு
  45. .அன்புள்ள ஜெயக்குமார் அருமை. உங்களின் உணர்வுப்புதையலாய் அமைந்த பதிவு, வாழ்ததுக்கள்.

    பதிலளிநீக்கு
  46. மிக நன்றாக உள்ளது. படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  47. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  48. இப்பெருமை பெற என்ன தவம் செய்தேனோ?
    மரியாதைக்குரிய கணித ஆசான் கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களே,
    வணக்கம்.
    ஓட்டுநராகிய என் மீதுகூட முன்னறிமுகமில்லாத தாங்கள் இந்தளவு நம்பிக்கை வைத்திருப்பீர் என எள்ளளவும் எதிர்பார்க்கவில்லைங்க.. சமூகம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள் பல கூறி பேருவகை அடைகிறேன்.
    என அன்பன்,
    C. பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    முகநூல் முகவரி parameswaran driver
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு