28 செப்டம்பர் 2018

மீண்டும் பெரியக் கோவிலுக்கு வந்த இராஜராஜன்      ஆண்டு 1932.

      தஞ்சாவூர்

      மெல்ல, மெல்ல அந்தச் செய்தி, ஊர் முழுவதும் பரவுகிறது.

      செய்தியினைக் கேட்ட யாவரும் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

      நம்ப முடியாமல், திகைத்துத்தான் போனார்கள்

21 செப்டம்பர் 2018

உய்யகொண்டான்
    
       ஓராண்டு, ஈராண்டு அல்ல

       ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்

       மக்கள்

      கைகளில் ஆயுதங்களை ஏந்தி, மக்கள் பெருங்கூட்டமாய் புறப்படுகிறார்கள்,

14 செப்டம்பர் 2018

யான் வாழும் நாளும் ….     இன்று, நேற்றல்ல

     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்

     அரசன் ஒருவரும், அமைச்சர் ஒருவரும் குதிரையேறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

     காவிரிக் கரை வழி பயணம் தொடர்கிறது.

07 செப்டம்பர் 2018

மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை     ஆண்டு 1989

     தஞ்சாவூர்

     சீனிவாசபுரம்

     இராஜராஜன் நகர்

     தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டியுள்ளப் பகுதி சீனிவாசபுரம் ஆகும்.

     இந்த சீனிவாசபுரத்திற்கு அருகில், புத்தம் புதிதாய் தோன்றிய நகர் இராஜராஜன் நகர்.

     வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்துக் கொண்டிருந்த காலம்.

     இந்நகரில், புதிதாய் ஒரு வீடு கட்ட, அஸ்திவாரம் தோண்டுவதற்கானப் பணிகள் தொடங்கியிருந்தன.

     அஸ்திவாரத்தின் ஆழம் பத்து அடியை நெருங்கியபோது, பெரும் கருங்கல் ஒன்று இடைமறித்துத் தடுத்தது.

     நீண்ட கல்லாகத் தெரியவே, கல்லின் திசையில் மண்ணை அகற்றியபோது, பணியாளர்கள் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

01 செப்டம்பர் 2018

மண் வாசனை     சொந்த ஊருக்குப் போவது என்பதே ஒரு அலாதியான விசயம்தான். முடிவெடுத்துவிட்ட நேரத்திலிருந்தே, எதிர்வரும் எந்த விசயமும் பெரிதாகத் தெரியாது.

     போட்டி உலகத்தில் இருந்து, விடுப்பு எடுத்துக் கொண்டு, அங்கிருந்து விலகும், ஒரு தற்காலிகப் பயணம் என்பது, விடுதலை சாசனம் எழுதிக் கொள்வது போலத்தான்.

     அது ஒரு பரோல்