30 டிசம்பர் 2017

உணர்வு விழா



     கரந்தை.

     மாலை 5.30 மணி

     24.12.2017 ஞாயிற்றுக் கிழமை

     மூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.

     வாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல் வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல இறங்குகிறார்.

23 டிசம்பர் 2017

கவி ஆயிரம்



பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீர்த்துக் கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால்

எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசு படாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்

     1983 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில், இளங்கலை பயின்ற பொழுது, எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்தது, கவிஞர் மு.மேத்தா அவர்களின் கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதை நூலாகும்.

16 டிசம்பர் 2017

காசு




    சிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.

    இன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.

    ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.

     இபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

02 டிசம்பர் 2017

பதிவர் திருவிழா





அறிவியக்கம் கண்ட தமிழ்நாடே
ஈதேகாண் யாம்கண்ட பாதைக்கு ஏறுநீ
ஏறுநீ, ஏறுநீமேலே
                  . பாவேந்தர்

அடுத்தப் பதிவர் திருவிழாவை, அடுத்த வருடம் மே இறுதியில் அல்லது ஜுன் துவக்கத்தில், புதுகையிலேயே நடத்தி விடுவோம்.

     கேட்கும்போதே வார்த்தைகள் இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.

     சொல்லியவர் யார் தெரியுமா?

25 நவம்பர் 2017

வடகால்




     வடவாறு.

     நண்பர்களே, நான் பயின்ற, பணியாற்றுகின்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை, ஒட்டி, உரசி, உறவாடிச் செல்கின்ற ஆறுதான் வடலாறு.

     சிறு வயதில், பள்ளிப் பருவத்தில், ஆற்றில் தண்ணீர் நிறைந்து ஒடும் காலங்களில், வடவாற்றில் நீந்தி மகிழ்வதுதான் எனக்கும், என் நண்பர்களுக்கும் முக்கியமான பொழுதுபோக்கு ஆகும்.

18 நவம்பர் 2017

நீர்த் தூம்பு



                            நீர்த் தூம்பு


    சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, பாசனப் புலமை வாய்ந்த இனம், நம் தமிழினம்.

     வானிலிருந்து பெய்யும் மழையானது, ஆற்றின் வழி பயணித்து, கடலில் கலந்து பயனின்றி பாழ்படுவதைத் தடுத்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு, நம் முன்னோர் செய்த ஏற்பாடுதான் ஏரிகளும், குளங்களும்.

11 நவம்பர் 2017

யாரது, யாரது, தங்கமா?




     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

     தாராசுரம் புகை வண்டி நிலையம்.

     சிறுவர்கள்

     பதினைந்து வயதுள்ள சிறுவர்கள் பலர், புகை வண்டி நிலையத்தின், அகன்று விரிந்த, மரங்களின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள்.

04 நவம்பர் 2017

நல் உள்ளம்




     வயது அதிகமாகிவிட்டது.

     முதுமை உடலின் உள் புகுந்து அடைக்கலமாகிவிட்டது.

     உடல் தளர்ந்துவிட்டது

     கைகளில் லேசான நடுக்கம், உடன் பிறப்பாய் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

28 அக்டோபர் 2017

பெருந்தன்மை



      ஆண்டு 1952.

      உயர் அதிகாரி அவர்.

      அன்று அஞ்சலில் வந்த அழைப்பைப் பார்த்ததும் திடுக்கிட்டுத்தான் போனார்.

21 அக்டோபர் 2017

ஃபீனிக்ஸ்




      அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.

      கரவொலியால் அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.

      ஆண்டு 2014, மார்ச் 4

      அமெரிக்காவின் முதல் பெண்மணி திருமதி ஒபாமா அவர்கள், விருதுடன் மேடையில் காத்திருக்க, விருது பெற இருப்பவர், மெல்லப் படியேறி மேடைக்கு வருகிறார்.

       விருது பெற மேடைக்குப் படியேறி வருபரைக் கண்டு, ஒரு நிமிடம், அரங்கே திடுக்கிடுகிறது.

18 அக்டோபர் 2017

இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு

இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு

டாக்டர் நா. கணேசன், ஹ்யூஸ்டன், அமெரிக்கா


காவேரி பாயும் கொங்குநாடும், சோழநாடும்:

காவேரி ஆறு பற்றிய சிறப்பை இளங்கோ அடிகள் விரிவாகவும் மிக அழகாகவும் பாடியவர். காவேரி கொங்குநாட்டில் தோன்றிப் பாய்ந்து  சோழநாட்டிலே வளம் பெருக்குகிறது. நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உண்டு. கொங்குநாட்டில் மலைகள் சூழ்வது அகல்விளக்கின் விளிம்பு போல உள்ளது, அந்த அகல்விளக்கில் மூன்று இழைகள் கொண்ட திரி என்பர். நொய்யல், அமராவதி, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் விளக்குத் திரியின் முகம் வழியாய் பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு காவிரி  ஆறு அளிக்கிறது.

14 அக்டோபர் 2017

லகூன்



     ஏப்ரல் 23 ஆம் நாள்

     ஞாயிற்றுக் கிழமை

     பகல் 1.30 மணி

     பசி வயிற்றைக் கிள்ள, உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, உண்ணத் தொடங்கினோம்.

     நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர் திரு கா.பால்ராஜ், திருவையாறு, அரசர் கல்லூரியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் நண்பர் திரு கே.ரமேஷ், நண்பரும் மகிழ்வுந்து ஓட்டுநருமான திரு ரகுபதி ஆகியோருடன் இணைந்து நானும், மதிய உணவினைச் சாப்பிடத் தொடங்கினேன்.

      நாள்தோறும் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம், இதிலென்ன செய்தி இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

      சாப்பிடுவது புதிதல்ல.

      சாப்பிடும் இடம் புதிது.

     நாங்கள் சாப்பிடும் இடம், மெல்ல மெல்ல இடதும் வலதுமாய் அசைந்து, அசைந்து ஆடிக்கொண்டே இருக்கிறது.

13 அக்டோபர் 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்




     யாழ்

     தமிழிசையின் அடையாளம்.

     நமது தேசிய இசைச் சின்னம்

     நான்கு நிலத்திற்கும் கருப்பொருள் கூறிய தொல்காப்பியர், நிலத்திற்கு ஒரு பண்ணிசைக் கருவியாக யாழையேக் குறிப்பிடுகிறார்.

07 அக்டோபர் 2017

கோவிந்தன்




     ஆண்டு 1942.

     சென்னை

     அது ஒரு அலுவலகம்

     வாரப் பத்திரிக்கை ஒன்றின் அலுவலகம்

     ஒரு பக்கம் அச்சுப் பணி

     ஒரு பக்கம் அச்சிடுவதற்காக எழுத்துக்களைக் கோர்க்கும் பணி

     எழுத்துக்களைக் கோர்ப்பதற்கு என்று ஒரு தனி அறை

     ஒரு நீண்ட மேசைமீது, சரிவாய் சாய்ந்த நிலையில், புறாக் கூண்டுகளைப் போல், சின்னஞ்சிறு கூண்டுகள், வரிசை வரிசையாய்.

     ஒவ்வொரு கூண்டிலும் ஈயத்தால் ஆன எழுத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன

30 செப்டம்பர் 2017

ஆஞ்சநேயர்




     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

     அந்த அகன்ற ஆற்றில், குறைவான நீரோட்டம் இருந்த பொழுது, பெரும் பெரும் பாறைகள், மணற் படுகையில் வரிசையாய் போடப்பட்டன.

      கடற்கரை ஒன்றில், கடல் அலைகளில், கால்கள் நனைய நனைய, எப்போதேனும் நின்றிருப்போமல்லவா, அந்தக் காட்சியினை, மனக் கண்ணில் மீண்டும் ஒரு முறை, திரைப்படம் போல் ஓடவிட்டுப் பாருங்கள்.

23 செப்டம்பர் 2017

ஒத்திகை





     நான் என் குடும்பத்தை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாலும், மனது சஞ்சனாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் குடும்பத்திடம், நான் எதையுமே மறைத்ததில்லை.

     முதல் முறையாக எனக்கு மனைவியாய் வரப் போகிறவளைச் சந்தித்ததை மறைத்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.

     அதைச் சொல்லத் தயக்கமாய் இருந்தது.

     சொல்லாமல் இருப்பதிலும ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.

16 செப்டம்பர் 2017

கடுக்கன்




      ஆண்டு 1851.

      அவருக்கு வயது 31

     வயதில் இளையவர்தான் எனினும், தமிழையேத் தன் வாழ்வாய் போற்றி வருபவர்.

      இலக்கண, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்.

      வாய் திறந்தால் கவிதை அருவியாய் கொட்டும்.

      பேசும் பேச்சோ தென்றலாய் வருடும்.

11 செப்டம்பர் 2017

சில விவாதங்கள்




     மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது.

     மூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன.

06 செப்டம்பர் 2017

ஆசிரியர் தினம்



     அம்மாகிட்ட ஒன்று சொல்லுவேன்
      டீச்சர்கிட்ட ஒன்று சொல்லுவேன்
ஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்

   எங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க. போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான் கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.

   அதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா சொல்றதையும் கேட்பேன்.

   நானும் உங்களைப் போலவே வருவேன்.

02 செப்டம்பர் 2017

படிக்கச் சோறிட்டவர்




    ஆண்டு 1897.

    சென்னை.

     இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.

     மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.

     நீண்ட வெண்ணிற மேலங்கி.

     எட்டு முழ வேட்டி

     ஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத் தலைப் பாகை.

      கம்பீரமான முகம்

      அடர்ந்த மீசை

      கனிவானப் பார்வை

      இளகிய மனம்

      அள்ள அள்ளக் குறையாத செல்வம்

      சில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின் கோடுகள்.

26 ஆகஸ்ட் 2017

முலாய்



      ஆண்டு 2008.

      அஸ்ஸாம்.

      ஜோஹார்ட் மாவட்டம்.

      கோஹிலா முக்.

      பிரம்மபுத்ரா நதிக்கரையோரம்.

      கடும் கோடைக் காலத்தின் ஒரு நாள் இரவு.

      சிறு குடிசையினுள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த, அம்மனிதர், திடீரென்று கண் விழித்தார்.

     ஏதோ ஒரு சலசலப்பு, ஒரு ஒலி அவரது உறக்கத்தைக் கலைத்திருந்தது.

19 ஆகஸ்ட் 2017

குண்டாறு



அது ஒரு கரடு முரடான மலைப் பாதை.

     பத்து முதல் அதிக பட்டசமாய் 15 அடி அகலமே உள்ள மலைப் பாதை.

     வளைந்து, வளைந்து மெல் நோக்கிச் செல்லும் பாதை.

     வழியெங்கும் சிறியதும், பெரியதுமான கற்கள், பாறைகள்.

     நடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான்.

12 ஆகஸ்ட் 2017

கீழடி




மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள, பெரியார் பீட பூமியில் உருவாகி, மெல்லக் கீழிறங்கி, வடகிழக்காய் பாய்ந்து, வடக்கே பழநிக் குன்றுகளாளும், தெற்கே வருசநாடு குன்றுகளாளும், அரண் போல் காக்கப்படும், கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.

     பின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்கல், மதுரை மாநகர், சிவகங்கை வழியாக, இராமநாதபுரம் மாவட்டத்துள் நுழைந்து, வங்காள விரிகுடாவின், பாக் நீரிணைப்பில் கலந்து, தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்தப் பெரு நதி.

06 ஆகஸ்ட் 2017

பண்பெனப்படுவது



     
      ஆண்டு 2008.

      செப்டம்பர் மாதம்.

      அகமதாபாத்

      இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்

      I.I.M
 
     எம்.பி.ஏ., மாணவர்களுக்குப் பாடம் நடத்த, ஒரு புதுப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர் (Visiting Professor), பெரும் பதவி வகித்தவர், பணிக் காலம் முடிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்த, வர இருக்கிறார் என்ற செய்தி அறிந்து வளாகமே பரபரப்பில் மூழ்கியது.

31 ஜூலை 2017

விட மாட்டேன்




     ஆண்டு 1974.

     சூலை மாதம்.19 ஆம் நாள்.

    பென்டோன்வில்லி சிறைச்சாலை, இலண்டன்.

    சூரியன் உதித்த நொடியில் இருந்தே, சிறைச்சாலையில் பரபரப்பு.

    24 வருடங்களுக்கு முந்தையப் பதிவேடுகள், அலசி ஆராயப் பட்டன.

    பதிவேடுகளின் அடிப்படையில் இடம் உறுதி செய்யப் பட்டது.

    இடமா, என்ன இடம்?

    புதைக்கப் பட்ட இடம்?

24 ஜூலை 2017

நல்லதொரு குடும்பம்



கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்
என்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

      தமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.

15 ஜூலை 2017

நாகையில் ஒரு உலக அதிசயம்




     ஆண்டு 2004.

     இந்தோனேசியா

     சுமத்ரா தீவுகள்

     டிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.

     ஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29

     ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.

08 ஜூலை 2017

எழுத்தை சுவாசித்தவர்


  
     ஆண்டு 1954.

     சென்னை, அரசு பொது மருத்துவமனை.

     படுத்தப் படுக்கையாய் கிடக்கிறார் அவர்.

     இனி மீண்டு எழுந்து வருவது கடினம் என மருத்துவர்களுக்குப் புரிந்து விட்டது.

30 ஜூன் 2017

கதிரேசன்



       ஆண்டு 1982.

       ஹைதராபாத்.

       மூத்த விஞ்ஞானி அவர்.

      அரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார்.

      தினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.

24 ஜூன் 2017

தலை நிமிர்ந்த தமிழ்

சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்
முன்னோட்டம்


தலை நிமிர்ந்த தமிழ்


     ஆண்டு 1872.

     ஆதீனத்தின் உணவுக் கூடம்.

     பிற்பகல் மணி 1.00

     பணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

     இன்னும் சிறிது நேரத்தில் ஆதீனம் வந்து விடுவார்.