மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும்
நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின்
அருகே அமைந்திருக்கிறது.
மூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ,
அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக
அனுபவங்கள் ஏற்படுகின்றன.
இவையன்றி பட்டினிக் கிடத்தல், இரத்த சர்க்கரையின்
அளவு அலை பாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை
உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவுகளைக் கொண்ட நடனம் ஆகியவையும்,
அமானுஷ்யமானவை என்று சொல்லப்படும் அனுபத்தைத் தர வல்லவை.
சாதாரணமாக இளம் வயதில் மதத்தை
விட்டு விலகியிருந்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்று, வயதடைய வயதடைய, கடவுளைத் தேடி
சரணடைபவர்கள் ஏராளம்..
ஆனால் இவர் சற்று வித்தியாசமானர்.
40 – 43 வயது வரை, இவர் சார்ந்த கிறித்துவ மதத்தின்
மேல் மட்டற்ற நம்பிக்கையும், இம்மதக் கடவுளின் மேல் மாறா பற்றும் உடையவராய விளங்கியவர்.
இளம் வயதில் பூட்டிக் கிடந்த கோவிலின் முன்னால்,
இரவு நேரத்திலே போய், தனியாக உட்கார்ந்து அழுதவர்தான் இவர்.
ஆனாலும், பின்னர் மெல்ல மாறினார்.
ஒரு நாளிலோ, ஒரு சில மாதங்களிலோ ஏற்படட மாற்றமில்லை.
தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து மெல்ல மெல்ல
மாறினார்
யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ,
கோபதாபங்களாலோ இவர் மாறவில்லை.
கேள்வியும் நானே, பதிலும் நானே என இவர், இவரையேக்
கேள்விகள் கேட்டு, அதற்கானப் பதில்களையும் இவரே கூறி, பலமுறை பதிலுக்காக அலையாய் அலைந்து,
பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, மெல்ல மெல்ல மாறியவர்.
தன் மதம், பிறர் மதம் என்று பாராமல், உலகின்
அத்துனை மதங்களையும் அலசி, நெக்குருகப் படித்து, தீவிராமாய் ஆராய்ந்து, சில விவாதங்களை
முன் வைக்கிறார்.
தேவதூதர்,
யேசுவின் பிறப்பைப் பற்றி மேரியிடம் கூறியதாகவும், அதே தேவதூதர் முகமதுவிற்கு அல்லாவின்
வார்த்தைகளைக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதோ கடவுள் உன்னிடம் குழந்தையாய் பிறக்கப் போகிறார்
என்று மேரியிடம் சொன்ன தேவதூதனா அல்லது பயப்படாதே, நான் அல்லாவினால் அனுப்பப் பட்டவன்
என்று முகமதுவிடம் சொன்ன தேவதூதனா.
எது சரி?
இரண்டில் ஒன்றுதானே சரியாக இருக்க வேண்டும்.
விவாதத்தை முன் வைக்கிறார்.
நம் இந்தியக்
கடவுளர்கள் எங்கெல்லாம் சஞ்சரித்தார்கள்.
வடக்கே கைலாயம் என்ற இமயம்.
தெற்கே குமரி முனை
இந்த இந்தியக் கண்டத்தைத் விட்டு வெளியே செல்லாத
கடவுளர்கள், கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால், அடுத்த நாடு, இலங்கையைக் கூறலாம்.
கிரேக்க நாட்டுக் கடவுளர்கள், நமது முருகனைப்
போல், மலைகளில் மட்டுமே வசிப்பதான கதை.
ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல,
பழைய ஏற்பாட்டில் வரும், அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும், அரேபிய நாட்டு
எல்லைகளுக்குள்ளேயே முடங்கி விடுவது ஏன்?
விவாதத்தை முன் வைக்கிறார்.
ஏன்
கடவுளர்கள், ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறார்கள்.
யோசித்துப் பாருங்கள் என சிந்திக்க நம்மைத்
தூண்டுகிறார்.
ஆற்ற
முடியாத சோகங்களைக், காலம் மெல்ல மெல்ல ஆற்றும்.
ஆனால் அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை, உடனடியாய்
போக்கும்.
இதனைப் புரிந்து வாழ்ந்து, பட்டுணர்ந்து தெளிவு
பட்ட, நம் முன்னோர், நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த, சுமை தாங்கித் தூண்கள்தான் நமது
கடவுளர்கள்.
அவைகள் வெறும் தூண்கள்தான், வெறும் கற்கள்தான்,
வெறும் கதைகள்தான். ஆனால் மனதிற்கு இதம் அளிக்க, மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட
கற்பனைப் பாத்திரங்கள்.
சிறு வயதில், மனதை நல்வழிப்படுத்த கடவுள் பயம்
தேவை.
வயதும், மனமும் வளர வளர, கடவுள் நமக்குத் தேவையில்லை.
செத்தபிறகு மோட்சமாவது, நரகமாவது.
இருக்கும்போது, உன்னையும், என்னையும், மனிதம்
உள்ள மனிதனாக வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும்.
இந்த வெளிச்சத்தை உணர்ந்தபின், அறிந்தபின்,
கடவுள் எதற்கு.
மனிதம்
போதுமே.
மதங்களும்
சில விவாதங்களும்
பேசுவதே இவர் தொழில்.
ஆம். இவர், 37 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்.
ஒரு நைஜீரியப் புதினத்தை மொழி பெயர்த்தமைக்காக,
இரு மாநில விருதுகளைப் பெற்றவர்.
இவரது இரண்டாவது மொழி பெயர்ப்பு நூல் பேரரசன்
அசோகன்.
மதங்களும்
சில விவாதங்களும்
இவரது இயற்பெயர் சாம் ஜார்ஜ்.
என்னைப்
பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல் …… தொடர்ந்த தேடல் ……
முடிவைத் தொட்டுவிட்டேன் என்று கூறவில்லை. நான்
சென்ற எல்லை வரை, உங்களையும் அழைத்துச் செல்ல ஆசை.
ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.
கடினமானதுதான்.
உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்
….
240 பக்கங்களுக்குத் தொடரும் விவாதங்கள், விளக்கங்கள்,
வெளிச்சங்கள்.
பெரு வள்ளலாய், பெரு வெள்ளமாய், விவாதங்களை
முன் வைத்து, அலசி ஆராயும் இவரின் புனைப் பெயர்
த ரு
மி.
மதங்களும்,சில விவாதங்களும்
எதிர்வெளியீடு,
96,நியூ
ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி
-642 002
தொலைபேசி
04259 . 226012, 9942511302
மின்னஞ்சல்
dharumibook@gmail.com
அற்புதமான விடயங்களைக் குறித்த நூலாகத்தான் இருக்க முடியும்
பதிலளிநீக்குகண்டிப்பாக வாங்குவேன் நண்பரே முடிவில் இவர் ஐயா தருமி அவர்கள் என்பதறிந்து சந்தோஷமான அதிர்ச்சி.
ஐயாவை மதுரையில் சந்தித்து இருக்கிறேன் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞரும்கூட...
வாழ்த்துகள் திரு. தருமி ஐயா.
- கில்லர்ஜி
பெரும் மகிழ்ச்சியும் மிக்க நன்றியும்.
நீக்குமனதை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்...
பதிலளிநீக்குஉண்மை தான்..
சிந்தனையைத் தூண்டக்கூடிய தரமான பதிவு.
பதிலளிநீக்குநல்லதொரு அறிமுகம். நன்றி ஐயா.
பதிலளிநீக்குarumaiyana puththakam patriya arumaiyana noolvimarsanam. ! paratukal iruvarukkum :)
பதிலளிநீக்குதருமி ஐயாவுடன் நானும் விவாதித்துள்ளேன். வாதம் விதண்டாவாதம் ஆகும் படசத்தில் இருவரும் அப்படியே நிருத்திக்கொள்வோம். அவர் தன் நிலையில் உறுதிபடவும் நான் என் நிலையில் உறுதியாகவும் இருப்பதால் யாருக்கும் நஷ்டமில்லை!
பதிலளிநீக்குமிகவும் விஷய ஞானம் கொண்டவர். அருமையாக விவாதங்களை முன்வைப்பவர். நிச்சயமாக அறிவுக்கண்களை திறக்க உதவும் புத்தகமாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பலப்பல!!!
அஜீஸ் சொன்னது மிகவும் சரியானது. அய்யாவுக்கு என் வாழ்த்துகள்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குசைதை அஜீஸ்,
நீக்குஉங்களிடமிருந்து வந்த அழகான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. பெருமையாகவும் உள்ளது. மகிழ்ச்சி
எழுத ஆரம்பித்த காலத்தில் 2005-2006 ஆம் ஆண்டுகளில் தருமி அவர்களின் பதிவை விடாமல் படித்திருக்கிறேன். சில சமயங்களில் விவாதங்களும் செய்தது உண்டு! பின்னர் தொடரவில்லை! என்றாலும் அவ்வப்போது குறிப்பிட்ட பதிவுகளைப் படிப்பது உண்டு! நல்லதொரு நண்பர். நேரில் சந்திக்க முடியவில்லை!
பதிலளிநீக்குஅன்றும் இன்றும் நண்பர்களே, அம்மா.
நீக்குஓவியமும்,முதல் பத்தியுமே யாரைக் குறித்து என்பதைக் காட்டி விட்டது! :)
பதிலளிநீக்குசிந்தனையைத் தூண்டும், அதே சமயம் இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டும் பதிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.21 ம் நூற்ராண்டின் அறிவு ஜீவியாக கருதப்படும் வேதாத்திரி மகரிழி அவர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஏன் கடவுளர்கள், ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறார்கள்.
யோசித்துப் பாருங்கள் என சிந்திக்க நம்மைத் தூண்டுகிறார்.// எனது நூலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதியும், கேள்வியும் இதுவே. உங்கள் பதிவில் இது சிறப்பிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உங்களது மேலான புரிதலையும் புரிய வைக்கிறது.
மிகுந்த அன்பும் நன்றியும் உங்களுக்கு.
வாழ்க .... வளர்க.
https://www.facebook.com/sam.george.946/posts/10212133246959675
பதிலளிநீக்குதருமி சாரை அறிவோம்...முதலில் வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது...
பதிலளிநீக்குநல்லதோர் அறிமுகத்திற்கு மிக்க நன்றி..
கீதா: திருப்பதி மகேஷ் மதங்களும் விவாதங்களும் புத்தகத்தை வாசித்து என்னிடம் பேசினார்.
இந்த நூல் அறிமுகம் பற்றி தருமியின் தளத்திலும் வெளியாகி இருக்கிறது அதை முன்பே பார்த்ததால் அவரதுபதிவுக்கு நான் எழுதியபின்னூட்டம் ரிடண்டண்ட் ஆகிறது வெகு சுவாரசியமான மனிதர் எங்கள் இருவரது எண்ண அலைகளும் ஒத்திருப்பது போல் இருக்கும்
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குதருமி சாரை மதுரையில் சந்தித்து பேசி இருக்கிறோம்.
என் கணவரை ஓவியத்திற்கு தனி வலைத்தளம் அமைக்க சொன்னார்.
வாழ்த்துக்கள் தருமி சாருக்கு.
//சிறு வயதில், மனதை நல்வழிப்படுத்த கடவுள் பயம் தேவை.
மனிதம் போதுமே.//
உண்மைதான் மனிதம் போற்றுவோம்.
பகிர்வுக்கு நன்றி.
ஆண்டுகள் பலவாகி விட்டன. உங்கள் பதிவுகளையும் பேராசிரியரின் படங்களையும் பார்த்து நெடுநாட்களாகி விட்டன. //என் கணவரை ஓவியத்திற்கு தனி வலைத்தளம் அமைக்க சொன்னார்.// சொன்னபடி கேட்பதேயில்லையே!
நீக்குநல்லதொரு புத்தகப் பகிர்வு. தருமி ஸார் தனது தளத்திலும் நிறைய விஷயங்கள் மனம் விட்டு அலசி இருக்கிறார். முன்பு படித்திருக்கிறேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.
பதிலளிநீக்குபுத்தகம் வாங்கவேண்டும்.
தம முதலாம் வாக்கை அளித்து விட்டேன்.
நீக்குhttp://mathysblog.blogspot.com/2017/08/blog-post_9.html
பதிலளிநீக்குஇந்த சுட்டியில் பார்க்கலாம்
வலைத்தளம் அமைக்கவில்லை. நான் கேட்டால் என் பதிவுகளுக்கு படம் வரைந்து தருவார்கள்.
சமய சொற்பொழிவுகள், கட்டுரைகள் என்று எழுதிக் கொண்டு அவர்கள் பொழுது போகிறது.
ஒத்த கருத்துடையவன் என்ற முறையில் ,தருமி அய்யா அவர்களின் சிந்தனையைத் தூண்டும் பதிவுகள் ,புத்தக வடிவம் பெற்று இருப்பதை அறிந்து மகிழ்ச்சி :)
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறிமுகத்தை கண்டு வியப்புற்றேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
good criticism
பதிலளிநீக்குThought provoking ideas. I can't comment on his thoughts because I am his student.But my heart overwhelmed to see his writing after a long period.(D.D.Jeya chandran.)
பதிலளிநீக்குவணக்கம் கரந்தை மைந்தரே !
பதிலளிநீக்குஐயா தருமியின் அனுபவங்கள் நூல்களாக ம்ம் கண்டிப்பாக வாங்கிப் படிக்கத்தான் வேண்டும்
பகிர்வுக்கு நன்றி வாழ்க நலம்
துணிச்சலாக விவாதிப்பதில் முன் நிற்பவர். ஐயாவை அறிவேன். அருமையான நூல் பகிர்வுக்கு நன்றி. நூலாசிரியருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதருமியின் “காணாமல் போன நண்பர்கள்” கதையை மின்நூலில் படித்தேன்.அதையும் பலநாள் தொடர்ந்து படித்தேன்....படிப்பதற்கு ஆசை இருக்கு....ஆனால்............
பதிலளிநீக்குநல்ல செய்திகள்!
பதிலளிநீக்குத ம 6
பதிலளிநீக்கு"முடிவைத் தொட்டுவிட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை, உங்களையும் அழைத்துச் செல்ல ஆசை".
பதிலளிநீக்குஇப்படி கூறும் பேராசிரியர், முடிவை தொட்டபிறகு நம்மை முழுமையாக வழி நடத்தி இருக்கலாம். இப்படி அரை கிணறுவரை அழைத்து சென்று அம்போ என விட்டதுபோல் இருக்கின்றது அவரது மேற்கூறிய வாக்குமூலம்.
ஒருவேளை முடிவை தொட்டிருந்தால் அவரது முடிவு வேறாக இருந்திருக்குமோ?
"ஏன் கடவுளர்கள், ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறார்கள்".
விதையும் விருட்சமும் ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டுதான் முளைக்கும் வளரும் ஆனால் அதன் வேர்களும் கிளைகளும் பூக்களின் நறுமணங்களும் மகரந்த துகள்களும் விதைகளும் எல்லை கடந்து பரவி வியாபிக்கும் என்பது உலகோர் அறிந்த உண்மை.
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.
புத்தக வடிவில் வரப்பெற்ற அனைத்துமே பொக்கிஷ உண்மைகள் புதைக்கப்பட்ட கருவூலங்கள் என்று போற்றத்தக்கவை அல்ல.
"சிறு வயதில், மனதை நல்வழிப்படுத்த கடவுள் பயம் தேவை".
இது பெரியவரானபிறகு ஞானப்பழமானவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், எத்தனை வயதானாலும் தடுமாறி தவறிவிழுந்து , தவறுகளுக்கு மத்தியில் திடமனதுடன் வாழ நினைப்பவர்களுக்கு இறுதிவரை கடவுள் பயம் தேவை ஓரளவிற்கு வாழ்க்கையில் நம்பிக்கையெனும் பிடிமானத்துடன் நடைபோட.
மதங்களை விவாதப்பொருளாக்கவேண்டாம் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பே போதும் மேலும் எண்ணெய் வார்ப்பது எதற்கு? என்பது என் கருத்து.
கருத்திக்களை கூற எல்லோருக்கும் உள்ள உரிமையுடன் படைக்கப்பட்டிருக்கும் பேராசிரியரின் கருத்துக்களடங்கிய புத்தக அறிமுகத்திற்கு நன்றிகள். ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
கோ.
எப்பவும் போல் தங்கள் பாணியில் தருமி ஐயாவின் புத்தக அறிமுகம்.
பதிலளிநீக்குவழக்கம்போல் மீண்டும் ஒரு நூல் அறிமுகம். உங்களுக்கும் பேராசிரியருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎப்படியெல்லாம் மனிதர் வாழ்கிறாா்கின்றாா்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்..அருமையானதொரு பதிவு..
பதிலளிநீக்கு