ஆண்டு
1851.
அவருக்கு வயது 31
வயதில் இளையவர்தான் எனினும், தமிழையேத் தன் வாழ்வாய்
போற்றி வருபவர்.
இலக்கண, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்.
வாய் திறந்தால் கவிதை அருவியாய் கொட்டும்.
பேசும் பேச்சோ தென்றலாய் வருடும்.
இவருக்கு
ஒரு நூலில், இலக்கண நூலில் சில ஐயங்கள்.
குட்டி தொல்காப்பியம் என்று கற்றறிந்தவர்களால்
போற்றப்படும், இலக்கண விளக்கம் என்னும் நூலில் சில சந்தேகங்கள்.
தனக்கு இந்த இலக்கண விளக்கம் நூலினை, முழுமையாய்
போதிக்கத் தகுதி வாய்ந்த ஆசிரியரைத் தேடினார்.
பலரையும் விசாரித்தார்.
கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகர் என்னும் புலவரைத்தான்,
இதற்குச் சரியானவர் எனப் பலரும் எடுத்துரைத்தனர்.
சற்றும் தயங்காமல் கீழ்வேளூர் புறப்பட்டார்.
சுப்பிரமணிய தேசிகரின் இல்லம் சென்றார்.
மாணாக்கர்கள் சூழ அமர்ந்திருந்த தேசிகருக்கு,
மாலை அணிவித்து வணங்கினார்.
இலக்கண
விளக்கம் நூலினைத் தாங்கள், இந்த எளியேனுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்
அன்போடு வேண்டினார்.
சுப்பிரமணிய தேசிகரோ பதிலுரைக்காமல் அமைதியாகவே
அமர்ந்திருந்தார்.
சுப்பிரமணிய தேசிகரின் சீடர் ஒருவர், மெல்ல
எழுந்து வந்து,, இளைஞரின் தோளைத் தொட்டார்.
விலகி வருமாறு சாடை காட்டித் தனியே அழைத்துச்
சென்றார்.
புலவர் பெருமானிடம் இலக்கணம் படிக்க
வேண்டுமானால், ஆறு மாதத்திற்கும் குறையாமல், ஐயா அவர்களை, தங்கள் இல்லத்தில் தங்க வைத்துப்
போற்ற வேண்டும். தங்களால் முடியுமா?
இலக்கணம் படித்தாக வேண்டும். எனவே
அவசியம் புலவர் பெருமானை, என் இல்லத்தில் தங்க வைத்துப் போற்றுகிறேன்
மாதம் ஒன்றுக்கு இருபது ரூபாய்
கொடுக்க முடியுமா?
அவசியம் தருகிறேன்
பாடம் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும்
பணம் கொடுக்க வேண்டும், கொடுப்பீர்களா?
கொடுப்பேன்
மூன்று மாதத் தொகையினை, முன் பணமாகக்
கொடுக்க வேண்டும்
கொடுக்கிறேன்
பாடம் கேட்டும் பொழுது, புலவர்
பெருமானை, உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து, தாங்கள் அவர்தம் காலடியில் அமர்ந்து பாடம்
கேட்க வேண்டும்.
காலடியில் அமர்ந்து பாடம் கேட்பேன்
அத்துனை நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டார்.
இலக்கண விளக்கம் படித்தாக வேண்டும், ஐயங்களைப்
போக்கி, தெளிவு பெற்றாக வேண்டும் என்ற ஆர்வம் இளைஞருக்கு,
ஆனால் கொடுப்பதற்குத்தான் பணம் இல்லை.
என்ன செய்வது? எப்படிப் பணம் கொடுப்பது? என்று
சிந்தனை செய்த இளைஞருக்கு, காந்தியம்மைப் பிள்ளைத்
தமிழ் என்னும் கவிதை பாடியபோது, கிடைத்தப் பரிசு நினைவிற்கு வந்தது.
இளைஞரின் கைகள் அவரையும் அறியாமல், அவரது காதுகளைத்
தடவிப் பார்த்தன.
தங்கக் கடுக்கன்கள்.
பரிசாய் கிடைத்த கடுக்கன்கள்
தயங்காது கழட்டி விற்றார்.
ஆறு மாதத் தொகையினையும், முழுதாய் கொடுத்தார்.
காலடியில் அமர்ந்து இலக்கணம் கற்றார்.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
இவர்தான்,
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
படித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குதம இரண்டாம் வாக்கு.
தமிழ் வளர்த்த சான்றோர் புகழ் வாழ்க..
பதிலளிநீக்குஉ.வே.சா. அவர்கள் எழுதிப் படித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குமகாவித்துவானைப் பற்றி படித்துள்ளேன்.இன்று உங்கள் பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன்.நன்றி.
பதிலளிநீக்குதமிழுக்காக வாழ்ந்த மகான்கள் இன்று அதைச்சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
பதிலளிநீக்குஅறியாத செய்தி அறிந்தேன்.
தமிழுக்காக எதனையும் செய்தவர்கள்.... ம்ம்ம். இன்று?
பதிலளிநீக்குத.ம... +1
நல் பகிர்வு.....
பதிலளிநீக்குமிக அருமை.தமிழ் மீது காதல் கொண்டாள் தலையேனும் விற்று கற்பர்.வாழ்க தமிழ்.வளர்க உங்களது தொண்டு.நன்றி.
பதிலளிநீக்குதகவல்கள் அருமை....
பதிலளிநீக்குதகவல்கள் அருமை....
பதிலளிநீக்குmikavum arumai arumai. !! pakirvukku nandri sago
பதிலளிநீக்குகடுக்கன் விற்று தமிழ் படித்தார் ,பத்து கம்பன் என்று புகழ் பெற்றார் :)
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,நிரந்தர கல்விச் செல்வத்தினைப் பெற நிரந்தமற்ற பணச்செல்வத்தினை செலவழித்துள்ளார். அருமை சகோ.
பதிலளிநீக்கு.
கடுக்கனுக்கு அத்தனை மதிப்பா அந்தக் காலத்தில் தங்கம் மிகக் குறைந்த விலையில் இருந்திருக்குமே சுவையான தகவல் சார்
பதிலளிநீக்குபெயர் கேள்விப்பட்டதுண்டு.. அவரின் கதை இப்போதான் அறிகிறேன்.
பதிலளிநீக்குஓரளவு அறிந்த செய்தி! த ம 9
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவணக்கம் கரந்தை மைந்தரே !
பதிலளிநீக்குதமிழ் பற்றுள்ளவர்கள் இருந்தார்கள் தமிழைக் கற்றார்கள் தமிழை வளர்த்தார்கள் ஆனால் இன்று .........................????????????????
சிறந்த பதிவு தொடர வாழ்த்துகள்
தம +1
மகிழ்வைத்தரும் பகிர்வு. நன்றி.
நீக்குவரலாறு எப்படி எழுத வேண்டும் என்பதை தங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் நண்பரே. மகாவித்துவான் பற்றிய தகவல் மிகச் சிறப்பாக இருக்கிறது. அரிய தகவலை தந்த தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி
பதிலளிநீக்குநட்பின் வழியில்
சோலச்சி
மகாவித்வானின் தமிழார்வமும் கற்கும் வாஞ்சையும் மெய் சிலிர்க்கவைத்தாலும் கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகர் அவரக்ளின் கெடுபிடிகளும் ஞான செருக்கும் கொஞ்சம் சலிப்படைய செய்கிறது. தமிழ் கற்றால் அத்தனை ஆணவம் தலைக்கேறுமோ?
பதிலளிநீக்குவள்ளுவன் இளங்கோ பாரதி கற்றுத்தந்த தமிழுக்கு யாரேனும் கட்டணம் செலுத்தியிருந்தால் கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்.
தமிழ் அந்த அளவிற்கு ஒரு வியாபார பொருளாகவும் எளியோருக்கு ஒரு எட்டா கனியாகவும், பெரும் பாரமாகவுமா இருந்தது?
கடுக்கன் விற்கும் அளவிற்கு இடுக்கண் விளைவித்தவர் எத்தனை பெரிய தமிழறிஞராக இருந்தாலும் அவர் செயலில் எனக்கு உடன்பாடு இல்லை.
புதிய தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றிகள்.
கோ
புதிய செய்திகளை உங்கள் பதிவு மூலம் அறிந்தேன். இன்றைக்கு வரும் மாணவர்க்குப் பொருள் தந்து சொல்லிக்கொடுக்க ஆசிரியர் நினைத்தாலும் தமிழைப் படிக்க ஆள் இல்லை; வாழ்க தமிழ்
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
பதிலளிநீக்குத+ம=12
ஆஹா! அறியாத தகவல். சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமகாவித்துவானைப் பற்றிய அற்புதமொன்றை அழகாகத் தெரிவித்து விட்டீர்கள்..நன்றி.. அந்த நாளில் அறிவைப்பெறுவதறகாக சொத்தையும் சுகத்தையும் இழந்தாா்கள். இந்த நாட்களில் அன்பளிப்பாகச் சில நூல்களை வழங்கினால் வாங்குகின்றாா்கள்.பக்கங்களைக்கூட பிரட்டிப்பாா்ப்பதில்லை..
பதிலளிநீக்கு