28 மார்ச் 2021

தேரா மன்னா


 

உண்மை அறியா மன்னா

     ஒருசொல் கேட்பா யின்று

கண்ணகி என்றன்  பேரே

     காவிரி யாயும் ஊராம்

தண்வள வணிகன் மாசாத்

     துவானின் மகனாம் என்றன்

கண்ணுயர் கணவன் தன்னை

     கள்வனே என்று கொன்றீர்.

      படிக்கப் படிக்கக் காலம் பின்னோக்கிப் பறக்கிறது. நூறு நூறாய் ஆண்டுகளை நொடியில் கடந்து, நம்மை மதுரையில் இறக்கி விடுகின்றது.

   

21 மார்ச் 2021

கும்ப முனி

 


     ஆண்டு 1937.

     மார்ச் 27 ஆம் நாள்.

     சென்னை.

     பாரதீய சாகித்திய பரிஷத் மாநாடு.

     தலைமை.

     மகாத்மா காந்தி.

     மாநாடு தொடங்கியது.

   

13 மார்ச் 2021

வாழும் வள்ளுவர்



     திருவள்ளுவர் படம்.

     திருவள்ளுவர் படத்திற்கு ஒரு மாலை.

     மங்கல நாண்.

     மணமாலை இரண்டு.

     பெற்றோர்களுக்கான மாலை நான்கு.

     குத்து விளக்கு ஒன்று.

     விளக்கிற்கான எண்ணெய், திரிகள்.

     மெழுகுவர்த்தி ஒன்று.

     தீப்பெட்டி  ஒன்று.

     உதிரிப் பூக்கள்.

     பட்டியல் அவ்வளவுதான்.

    

07 மார்ச் 2021

கூடு திரும்புதல்


அடிக்கடி

செயின்

கழன்றுவிடும்.

பெடலுடைந்த

சைக்கிளில்

என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டு

தேநீர் கடைக்கு வேலைக்குப் போவார்

என் அண்ணன்.