வெறும் பைகள்
கணத்த இதயம்
முதுமை.
நீ
…
எங்கள்
வியப்புகளின்
குறியீடு.
மாதச்
சம்பளம் எல்லாம்
வட்டியில்
வடிந்தபோது
அம்மா
மட்டும்
பரவாயில்லை
முதல்
இருக்கிறதே
என்றது
யாரை?
வாணியம்பாடி முத்தமிழ் மன்ற விழா.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு
விருதும், பரிசாய் ஒரு தொகையும் வழங்கப் பெற்றது.
விருதைப் பெற்றுக்
கொண்டவர், தொகையை முத்தமிழ் மன்றத்திற்கே மீண்டும் வழங்கினார்.
இதை காணிக்கை என்று சொல்ல மாட்டேன்.
ஏனென்றால், எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் இப்பகுதியில்,
இக்கவிஞர் அவர்களால், ஒரு அரசாட்சியே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
எனவே, அதற்கு நான் கப்பம் கட்டிவிட்டுப் போகிறேன்
என்றார்.
செயின்
கழன்றுவிடும்.
பெடலுடைந்த
சைக்கிளில்
என்னைப்
பள்ளியில் இறக்கிவிட்டு
தேநீர்
கடைக்கு வேலைக்குப் போவார்
என்
அண்ணன்.
இவர்
கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தின்
முன்னாள் மாணவர்.
கரந்தைப் புலவர் கல்லூரியின்
முன்னாள் மாணவர்
கரந்தையை
தன் வாழ்வில்
என்றென்றும் மறவாதவர்.
நாலும் இரண்டும் நனிநன்று,
நம்மதுரை
பொற்றா மரைக்குளம்
நன்று, பொறுப்புடன்
நற்றமிழ் கற்றிடல் நன்று
இவர் தனது கவிநூலை இப்படித்தான் தொடங்குகிறார். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்.
இவரோ, இரண்டை, நான்காக்கி ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்.
![]() |
திடீரென்று நம்மைவிட்டுப் பிரிந்த மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிப்போம் நெருதா |