நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூலை 2025

கூடும் ஓடும்



     சுமார் பதினான்கு வருடங்களுக்குமுன், இவர்தான், என்னை ஒரு வலைப்பூ தொடங்க அறிவுறுத்தினார்.

     நானும் என் பெயரிலேயே ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன்.

     Karanthaijayakumar.blogspot.com

     இவ்வலைப்பூவின் மூலம், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், இணைய உலகில், வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தேன்.

03 ஜூன் 2025

ஆக்கூரார்

 


     ஆண்டு 1936-37.

     பாரதி.

     பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?

     விவாதம் எழுந்த காலம்.

     பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.

05 ஏப்ரல் 2025

இசையின் எதிரொலிகள்

 

     எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

21 மார்ச் 2025

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு புதிய பார்வை

 

தமிழ்ப் புத்தாண்டு எது?

     என்று தொடங்குகிறது?

     தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

     சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

28 பிப்ரவரி 2025

மூங்கில்

  


மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்.

மனச்சுமையை இறக்கிவைத்து

மாளாத கண்ணீரைக்

கொட்டி மனம் கழுவுவதற்கே

மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்

20 பிப்ரவரி 2025

ஈரச்சுவடு

     என்ன செய்யச் சொல்ற, ஒம் பேச்சுலயும், நீ பக்கத்துல ஒக்காந்து வர்ற சந்தோசத்துலயும், புத்திய பறிகொடுத்துட்டேன்.

     அது இந்த 61 ல எனக்கும், 58 ல ஒனக்கும் வாய்ச்சிருக்கு.

     ஊம், வாய்க்கும் வாய்க்கும், கொமட்டுல நாலு இடி இடிச்சா.

     துள்ளி விளையாடுதோ கெழம்?.

02 டிசம்பர் 2024

Swadeshi Steam

 


     ஆண்டு 1981.

     சென்னை.

     அவர் ஒரு பள்ளி மாணவர்.

     மேல் சட்டை மற்றும் முழங்கால் வரை நீளும் அரை கால் சட்டையுடன், அந்த நூலகத்திற்குள் நுழைகிறார்.

27 நவம்பர் 2024

அவனும் நானும்

 


     திருவிளையாடல்.

     திருவிளையாடல் படம் பார்த்தவர்களின் நினைவில், இன்றும் தேங்கி நிற்கும் ஒரு காட்சி இருக்கிறது என்றால் அது சிவாஜி மற்றும் நாகேஷ் இருவரும் உணர்வுப்பூர்வமாக, சிவனாகவும் தருமியாகவும் நடித்த காட்சியாகத்தான் இருக்கும்.

22 நவம்பர் 2024

மீப்யா

 


தமிழா நாம் பேசுவது தமிழா தமிழா?

தமிழா நாம் பேசுவது தமிழா?

அன்னையை நம் வாயால் அம்மே என்று அழைத்தோம்

அப்பாவை நாமும் அப்பே என்று அழைத்தோம்

09 அக்டோபர் 2024

பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன

 


இந்த சமூகத்தில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் அத்தனைப் பேரும் பிச்சைக்காரர்களா? அல்லது உழைக்காமலே வளத்துடன் வாழ்பவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் பிச்சைக்காரர்களா? எப்படி இதை சரி செய்வது? சரி செய்ய முடியுமா?

02 செப்டம்பர் 2024

ஆற்றுப்படை

 


     திருமுருகாற்றுப்படை.

     பொருநராற்றுப்படை.

     சிறுபாணாற்றுப்படை.

     பெரும்பாணாற்றுப்படை.

     கூத்தராற்றுப்படை.

     மன்னரைப் பாடி பரிசில்களைப் பெற்ற ஒரு புலவர், தன்னைப் போன்ற பிற புலவர்களிடம், அம்மன்னனின் சிறப்புகளையும், அம்மன்னனைக் காண்பதற்கான வழிகளையும் கூறி, அம்மன்னனைக் காணச் செல்லுங்கள், மன்னனைப் பாடி பரிசில்களைப் பெற்று, வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும்.

23 ஆகஸ்ட் 2024

03 ஜூலை 2024

எரிதழலும் இளங்காற்றும்

 

 

காலத்திற்கு ஒருநாள் முந்தி

முன்பணிக் காலம்

மின்னல் உறங்கும் பொழுது

இரவுப் பாடகன்

போகிற போக்கில்

சொல்ல வந்தது,

இவர்களோடும் இவற்றோடும்

அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

புன்னகை சிந்தும் பொழுது

கருவறையிலிருந்து ஒரு குரல்

என் அருமை ஈழமே

அன்னை மடியே

உன்னை மறவேன்

கதை முடியவில்லை

தோணி வருகிறது

தீவுகள் கரையேறுகின்றன

பரணி பாடலாம்.

07 ஏப்ரல் 2024

ஆற்றோரம் வாரீர்

 


நீரின்றி அமையாது உலகென்று அதனை வகைப்படுத்த

ஆறின்றி இயலாது என உணர்ந்தனர்.

ஆறு கண்டார், அதனால் சோறு கண்டார் – எத்தனை

27 அக்டோபர் 2023

ஓடத்துறைத் தெரு

    


 திருவையாறு.

     நினைத்தாலே போதும் நெஞ்சமெல்லாம் இனிக்கும்.

     என் தந்தை பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த ஊர்.

     கரந்தையில் பிறந்தாலும், சின்னஞ்சிறு வயதில், என்னைத் தாலாட்டி வளர்த்த ஊர்.

06 அக்டோபர் 2023

அரந்தரங்க சுத்தி

 


சாவது எளிது, அரிது சான்றாண்மை நல்லது

மேவல் எளிது, அரிது மெய்போற்றல் – ஆவதன்கண்

சேறல் எளிது, நிலை அரிது தெள்ளியராய்

வேறல் எளிது, அரிது சொல்.

21 செப்டம்பர் 2023

தஞ்சாவூர், தஞ்சாவூர், தஞ்சாவூர்



     பித்தளை உலோகத் தட்டில், புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த செம்பு, வெள்ளி உலோகத் தகடுகளைப் பதிப்பார்கள்.

     இப்பொருளின் தனித்தன்மையே, ஓர் உலோகத்தின் மீது இருவேறு உலோகங்களைப் பதிப்பதே ஆகும்.

05 ஆகஸ்ட் 2023

சுள்ளிகள்

 


யாரேனும் ஒருவர்

விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.

அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள்

அப்பாவைப் போலில்லை …

அப்பாவிடம் அவர்கள் உதவிபெற்று

உயிர்வாழ்ந்த தருணங்களை ஒருபோதும்

அப்பா அனுபவித்ததேயில்லை ….