29 ஜனவரி 2015

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

     ஆண்டு 1963. சென்னை. பத்திரிக்கை அலுவலகம். தனது அறையில் அடுத்த நாள் வெளிவர வேண்டிய கட்டுரையினை அவர் எழுதிக் கொண்டிருந்தார். அவரது இயற்பெயர் மூக்காண்டி.

     பதினேழு வயதுடைய இரு பெண்கள், அவரது அறைக்குள் நுழைந்தனர். ஆழ்ந்த சிந்தனையோடு, உலகையே மறந்து, எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூக்காண்டி, பல நிமிடங்கள் கடந்த நிலையில், நிமிர்ந்து பார்க்கிறார். எதிரில் இரு பெண்கள்.

வாருங்கள், நீங்கள் யாரம்மா? என்ன வேண்டும்?

20 ஜனவரி 2015

பேருந்து


நண்பர்களே, இவரால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதற்காக எதையேனும் எழுதுவது என்ற சமரசமும் இவரிடம் இல்லை.

     கதையே இல்லாமல் ஒரு நாவல் எழுத முடியுமா? முடியும் என்று உரக்க முழங்கி, சாதித்துக் காட்டியிருக்கிறார் இவர்.

     நாம் அனைவருமே, பலநூறு முறை பேருந்தில் பயணம் செய்தவர்கள்தான். ஆனால் நண்பர்களே, நாம் எப்படிப் பயணித்திருக்கிறோம்.

14 ஜனவரி 2015

காக்காச் சோறு

     

நண்பர்களே, கிராமத்தில் பிறந்து, நகரத்திற்குச் சென்று வாழ்பவர்கள் அதிகம். ஆனால் நகரத்தில் பிறந்து, கிராமத்தில் தஞ்சம் புகுந்தவர் இவர்.

     ஒரு கிராமத்தில் மனிதன் இருப்பதற்கும், ஒரு மனிதனை கிராமம் வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, உணர்ந்து வளர்ந்தவர் இவர்.

     தோட்டம், காடு, வயல் வெளிகள் என பசுமை நிறைந்த மண் வாசனையினையும், மண்ணின் ஈரத்தினையும், மண் சார்ந்து வாழ்வு நடத்தும் மனிதர்களின் ஈர மனதினையும் ஒரு சேர அறிந்தவர் இவர்.

     இடுப்பில் அழுக்கேறிய சிவப்பு டவுசரும், தோளில் துண்டுமாய், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என இருபத்து நான்கு மணி நேரமும உழைப்பிற்கே, தன் வாழ்வினை உரிமையாக்கி, கிராமம் தாண்டாமல் வாழ்ந்தவர் இவர்.

09 ஜனவரி 2015

வேலு நாச்சியார் 8


 அத்தியாயம் 8 முப்பெரும் தேவியர்
    

வேலு நாச்சியாருக்கு ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியவில்லை. நனைந்த உடலோடு, கையில் தீ பந்தத்தோடு, குயிலி ஓடியதைப் பார்த்தார். அடுத்த நொடி, பூமியே இரண்டாகப் பிளந்தாற் போல், இடி முழக்கம் தொடர்ந்தது.

     சிவகங்கைக் சீமையே புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியது.

குயிலி

பெருங்குரலெடுத்துக் கதறினார் வேலு நாச்சியார்.

என்ன காரியம் செய்து விட்டாய் குயிலி.

04 ஜனவரி 2015

வேலு நாச்சியார் 7


அத்தியாயம் 7 குயிலி
           சிவகங்கைக்கு அருகில் உள்ள, அடர்ந்த காட்டுப் பகுதியில், வேலு நாச்சியாரின் படை முகாமிட்டது.

      வீரர்களே, சிவகங்கை நகரமும், திருப்பத்தூர் கோட்டையும் மட்டுமே, நம் எதிரிகளின் வசம் உள்ளன.

      சின்ன மருது தலைமையில், சேதுபதியம்பலம், நன்னியம்பலம், வேல் முருகு ஆகியோருடன், மூவாயிரம் படை வீரர்கள், எட்டு பீரங்கிகளுட்ன் திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றச் செல்லட்டும்.

      பெரிய மருது தலைமையில், வேங்கை உடையத் தேவர், சீமைச் சாமித் தேவர் ஆகியோருடன் மீதியுள்ள வீரர்கள், சிவகங்கைத் தெப்பக் குளத்தின் தென்கரை மாளிகையில் தங்கியிருக்கும், நவாபின் படைகளை முறியடிக்கட்டும்.

      நானே,  உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்றுச் சென்று, சிவகங்கை அரண்மனையில் இருக்கும், ஆங்கிலத் தளபதி பான் ஜோரை நேருக்கு நேர் சந்திக்கிறேன்.

     வேலு நாச்சியார் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி, தலையெல்லாம் நரைத்து, நடக்கக் கூட இயலாமல், கைத் தடியை ஊன்றியபடி, தட்டுத் தடுமாறி, வேலு நாச்சியாரின் அருகில் வந்தார்.