14 ஜனவரி 2015

காக்காச் சோறு

     

நண்பர்களே, கிராமத்தில் பிறந்து, நகரத்திற்குச் சென்று வாழ்பவர்கள் அதிகம். ஆனால் நகரத்தில் பிறந்து, கிராமத்தில் தஞ்சம் புகுந்தவர் இவர்.

     ஒரு கிராமத்தில் மனிதன் இருப்பதற்கும், ஒரு மனிதனை கிராமம் வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, உணர்ந்து வளர்ந்தவர் இவர்.

     தோட்டம், காடு, வயல் வெளிகள் என பசுமை நிறைந்த மண் வாசனையினையும், மண்ணின் ஈரத்தினையும், மண் சார்ந்து வாழ்வு நடத்தும் மனிதர்களின் ஈர மனதினையும் ஒரு சேர அறிந்தவர் இவர்.

     இடுப்பில் அழுக்கேறிய சிவப்பு டவுசரும், தோளில் துண்டுமாய், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என இருபத்து நான்கு மணி நேரமும உழைப்பிற்கே, தன் வாழ்வினை உரிமையாக்கி, கிராமம் தாண்டாமல் வாழ்ந்தவர் இவர்.


     கொஞ்சம் படித்து, நிறைய உழைத்து, பாண்டியன் கிராம வங்கியில் ஊழியராய், இவர் இணைந்தது தனிக் கதை.

    வங்கியில் எண்களோடு மட்டுமே உறவாட வேண்டிய வாழ்க்கையில் நுழைந்த இவர், எழுத்துக்களின் வழியாக வெளிப்பட்டது வியப்பிற்குரிய நிகழ்வுதான்.

     எழுத்து என்றால் கிராமிய மணம் கமழும் எழுத்து. கிராமத்து மண்ணைக் கிளறிவிட்டால், எழுமே ஒரு மண் வாசனை, ஈர மண் வாசனை, அந்த ஈர மண் வாசனையினையும், ஈர மனிதர்களின் வெள்ளந்திப் பேச்சுக்களையும், ஒவ்வொரு எழுத்திலும், ஒவ்வொரு சொல்லிலும் சுமந்து வரும் எழுத்து இவரது எழுத்து.


நண்பர்களே, இந்த எழுத்திற்குச் சொந்தக்காரர் நண்பர் விமலன் அவர்கள்தான், என்று நான் சொல்லி, நீங்கள் அறிய வேண்டிய நிலை இல்லை, என்பதனையும் நான் அறிவேன்.

      வலையுலக உறவுகள் அனைவருமே இவரை நன்கறிவார்கள்.


காக்காச் சோறு
2008 ஆம் ஆண்டு முதற் பதிப்பு கண்ட இவரது நூல்,
ஆறு ஆண்டுகள் கடந்து,
மீண்டும் ஒரு பதிப்பு கண்டு,
தமிழ் உலகை வலம் வரத் தொடங்கியிருக்கிறது.

    பல நூல்கள் அச்சக அறைகளிலேயே, கட்டாய ஒய்வு எடுக்கும், இக்கால கட்டத்தில், ஒரு நூல் மீண்டும் அச்சேறி, அரியணை ஏறுவது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி அல்லவா?. இதற்காகவே விமலன் அவர்களை ஒரு முறை பாராட்ட வேண்டும்.

     அங்குட்டிங்குட்டு தூரந் தொலவுல இருக்குற கூடப் பொறந்தவுங்க ரெண்டு பேருமே, இங்க வந்துருங்க, இங்க வந்துருங்கன்றாங்க.

     மதுரையில இருக்குற தம்பி வீட்லதான் கக்கூசு பாத்ரூம் சகிதம் இருக்கு.

     ஆனா பாட்டிக்கு அங்கன போக மனசு ஒப்பல.

     தனியாளா இருந்தாலும், இங்கன இருக்குற சௌகரியம் அங்க வருமாங்குறா. என்ன இருந்தாலும், இன்னோர்த்தங்க வீட்ல போய், பெட்டிப் பாம்பா எப்படி இருக்க? அப்பிடீங்குறா, என்ன செய்ய சொல்லு?

     பேச்சற்று கடந்த சிறிது நேர இடைவெளிக்குப் பின் அவரேதான் தொடர்ந்தார்.

     சீக்கிரமா கொண்டு போ, வீட்ல புள்ளைங்க ஆசையா காத்து கெடக்கும்.

     எங்களுக்குத்தான் இப்படி ஒரு குடுப்பின இல்லாமப் போச்சு.....

     சொல்லும் போதே குரல் தழுதழுத்தது. அழுதவாறே உட்கார்ந்து விட்டார் தாத்தா. பக்கத்திலேயே அவரது கண்ணீரைத் துடைத்தவளாய் பாட்டியும்.

     நண்பர்களே, இன்று எத்தனை வீடுகளில் தாத்தா, பாட்டி இருக்கிறார்கள். நண்பர் விமலனின் ஒத்தப்பனை இது.

     வணக்கம் நண்பனே, இறந்துபோன உனக்கு கடிதம் எழுதுவதென்பது, அவ்வளவு பெரிய தேச விரோத செயலா என்ன? பலர் சொல்கிறார்கள். பரவாயில்லை, சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே. அந்த தேச விரோதச் செயலை செய்து விட்டுப் போகிறேன். என்ன லாஜிக்காய் கொஞ்சம் இடிக்கும். விடு நண்பா, இங்கே லாஜிக்காய் எதுதான் ......?

    
      உயிருடன் உள்ள உறவுகளுக்குக் கூட, கடிதம் எழுத, எழுதுகோலை திறக்க மறுக்கும் மனிதர்கள் நிரம்பி வழியும் இவ்வுலகில், இறந்து பேன, தன் நண்பனுக்கு ஓர் கடிதம் எழுதுகிறார் இவர். சுடரினுள்ளே .. எனத் தலைப்பிட்டு. கடிதம் இருளில் விளக்கொளியாய் மின்னுகிறது.

     ஆம்பள இல்லாத வீடுன்னு தெருவுல திரியுர கண்ட கழுதைகளெல்லாம், மோப்பம் புடிக்குது, மூஞ்சக் காட்டுது. அந்நேரம் ஈரக்கொலையே ஆடிப் போகுது.

     இருக்குறப்ப நல்லவுங்களா தெரிஞ்சோம். இப்பம் இல்லாதப்ப, பொல்லாதவுங்களா தெரியுறம்.

     கழுத எங்கிட்டாவது தூர தேசமா போயிரலாம்னா, அதுக்கும் வழியில்லை. எங்கயாவது ஆத்துல கொளத்துல விழுந்து உசுர மாச்சுக்கிறலாம்னு பாத்தா, புள்ளைங்க மொகம் வந்து கண் முன்னாடி நிக்குது.

      இன்றைய சமூகத்தில் மனிதாபிமானம் கிழிந்து போய் கிடப்பதை, வெளிச்சம் போட்டுக் காட்டும், இச்சிறுகதையின் பெயர் கிழிசல்.

     இப்படியான பேச்சுக்களையும், பார்வைகளின் அனர்த்தங்களையும், தூது விடல்களையும், விடலைகளின் சீண்டல்களையும், சொந்தங்களிடமும், உடல் முடியாத தாய் தந்தையிடமும் சொன்னபோது,..

      எல்லாம் எங்களுக்குத் தெரியத்தாம்மா செய்யுது, தாலி அறுத்தவ தலவிதி அதுதான் என்றார்கள்.

       நீர்க்குமிழி நெஞ்சை விட்டு அகல வெகு நேரமாகும்.

மறு பதிப்பு கண்ட
காக்காச் சோறுக்கு
வாழ்த்துக்கள் நண்பரே.


வெளியீடு
வம்சி புக்ஸ்,
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை 606 601
தொலைபேசி 04175 251468
அலைபேசி 94448 6702379 கருத்துகள்:

 1. விமர்சனம் அருமை வாசிக்கத் தூண்டுகிறது சகோ.
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும். உரித்தாகட்டும்!

  பதிலளிநீக்கு
 2. கிராமத்து வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது. நம் மரபு, கிராமத்தைவிட்டு வந்தபின்பு அழிந்ததுதான் மிச்சம். நல்ல நூல்களை அறிமுகம் செய்யும் எண்ணம் வளர்க. இவைகளை மின்னூல்களாக அனுப்ப முடிந்தால் (through online payment) நிறைய பேரை அது சென்றடைய ஏதுவாகும்.

  பதிலளிநீக்கு
 3. நானும் ஒரு புத்தகத்திற்கு இப்படி ஒரு விமரிசனம் எழுத வேண்டும். எப்பொழுது முடியுமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் தங்களிடமிருந்து புத்தக விமர்சனத்தை எதிரபார்க்கின்றேன்ஐயா
   நன்றி

   நீக்கு
 4. மிக அருமையான படைப்பு மிக அருமையான விமர்சனம். வாங்க வேண்டிய புத்தக வரிசையில் விமலன் அவர்களையும் இணைக்கிறேன். இனிய பொங்கல் வாழ்த்துகள். நலமே வாழ்க.

  பதிலளிநீக்கு
 5. மறுபதிப்பு என்பது ஒரு எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி அளிப்பதுதான்...

  நண்பரின் இந்நூல் இன்னும் பலபதிப்புகள் வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...!

  படிக்க ஆவலைத்தூண்டுகிறது தங்களது பதிவு..
  தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. பதிப்பு என்பதே சாதனை. மறுபதிப்பு என்பது அந்நூலில் வாசகர்கள் கொண்ட ஈடுபாடு. ஒரு நல்ல நூல் விமர்சனத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. மைக்ரோ பெஃமிலியை நோக்கி பயணித்துவிட்டோம். அதில் இழந்துப்போனவை தான் அதிகம். மிக அறுபுதமான் கச்சிதமான அறிமுகம் கதைகளுக்கு. இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்.

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நட்புறவுகளும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 10. தங்கள் நூல் விமர்சனம் நன்று. வம்சி புக்ஸ் – விமலனின் “காக்காச்சோறு” – வாங்கிப் பார்க்கிறேன்.
  எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
  த.ம.3

  பதிலளிநீக்கு
 11. விமரிசனம் இந்த புத்தகத்தைப் படிக்க ஆர்வம் வரவழைக்கிறது...

  பதிலளிநீக்கு
 12. அருமையான விமரிசனம். விமலன் அவர்களின் எழுத்து உங்கள் மூலமாகவே அறிமுகம். வாய்ப்புக் கிடைக்கையில் கட்டாயம் படிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. விமலன் சார் அவர்களை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்பது உண்மையே... தங்களின் விமர்சனம் நூலை வாங்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டது நண்பரே...
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 15. விமர்சனம் அருமை ஐயா...
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. நன்றி சார்,காக்காச்சோறின் விமர்சனத்திற்கு/

  பதிலளிநீக்கு
 17. படிக்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது
  இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. நல்ல நூல் அறிமுகம். நன்றி நண்பரே.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. எளிய மனிதர்களின் மன உணர்வுகளை சித்தரிப்பதில் வல்லவர் விமலன் அவரது நூல் மேலும் பல பதிப்புகள் காண வாழ்த்துக்கள். நான் வலைப்பதிவில் எழுதத் துவங்கிய நாள் முதல் அவரது எழுத்துக்களை படித்து வருகிறேன். வலைச்சரம் தொகுத்தபோது அவரது பதிவுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எளிய மனிதர்களின் மன உணர்வுகளை சித்தரிப்பதில் வல்லவர்தான் ஐயா
   நன்றி ஐயா

   நீக்கு
 20. நல்ல நூல் அறிமுகம். மிக்கநன்றி அய்யா.

  தங்களுக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 22. இனிய நண்பரின் அருமையான நூலின் விமர்சனம் சிறப்பு...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்!

  அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
  இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
  நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
  பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

  எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
  சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
  தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
  பொங்குகவே பொங்கல் பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 24. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. தங்களுக்கும் தங்கள்குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
  எவ்ளோபெரிய விடயங்களை பாமரனுக்கும்
  புரியும் வகையில் கூறியுள்ளர் நான் இதுவரை
  அவர்தளம் சென்றதில்லை இனித்தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
 26. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 27. அருமையான விமர்சனம்.
  தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 28. அருமையான விமர்சனம். நண்பர் விமலனின் எழுத்துக்களை வாசித்து வருகின்றோம்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். திரு.விமலன் அவர்களின் காக்கா சோறு புத்தகத்தைப் பற்றிய தங்களின் விமர்சனம் மிகவும் இயல்பாக இருக்கிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 30. திரு விமலன் அவர்களுக்கு எங்களது நல்வாழ்த்துக்கள்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 31. இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 32. எழுத்தின் ஈர்ப்பு வாசிப்பின் நேர்த்தி இரண்டும். புலப்படும். அழகிய விமர்சனம்

  பதிலளிநீக்கு
 33. மறு பதிப்பா ,சாதனை படைத்த காக்காச் சோறு ..விமலன் ஜீக்கு வாழ்த்துக்கள் !
  த ம 9

  பதிலளிநீக்கு
 34. மறுபதிப்பேறும் சிறப்புடை நூலாசிரியர் விமலன் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். அழகான விமர்சன அறிமுகத்துக்கு மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 35. நூலாசியருக்கு வாழ்த்துக்கள். நல்லதொரு விமர்சன அறிமுகம்.
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. பெயரில்லா16 ஜனவரி, 2015

  திரு விமலன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
  Vetha.Lanagthilakam.

  பதிலளிநீக்கு
 37. என்னதான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமத்து வாழ்கையே தனி ....வாழ்த்துக்கள்
  ...........................................................................உடுவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
   மிக்க ந்ன்றி

   நீக்கு
 38. வணக்கம்
  ஐயா.
  புத்தக விமர்சனத்தை படித்த போது.. கை வசம் இல்லை என்ற கவலைதான்... சிறப்பாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.த.ம11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 39. விமலன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
  நூல் வாங்கமுடிகிறதா என்று பார்க்கிறேன்..பகிர்விற்கு நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 40. விமலன் அவர்களைப் பற்றி உங்களின் மூலமே அறிகிறேன். உங்கள் விமர்சனம் வாசிக்கத்தூண்டுகிறது.

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 41. விமலனின் எழுத்துக்கள் எப்போதும் சகமனிதனின் வாழ்வை மையமாக வைத்து எழுதப்படும். அது வாசிக்கவும் சுவராஸ்யமாக இருக்கும். தங்கள் விமர்சனம் அழகு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 42. விமலன் அவர்களைப் பற்றி உங்களின் மூலமே அறிகிறேன். தங்களின் அறிமுகம் அருமை, நானும் படிக்க தொடங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 43. காக்காச் சோறு நூலின் மறுபதிப்பின் மூலம் மிகச்சிறந்த எழுத்தாளரான திரு. விமலன் அவர்களின் மற்ற தலைப்புக்களையும் ஆங்காங்கே தொட்டுச் சென்றுள்ளது மனதைத் தொட்டுவிட்டது.

  அவருக்கும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு