25 ஏப்ரல் 2014

பாவேந்தம் போற்றுவோம்


தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள், இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

     நண்பர்களே, தமிழ் மொழியின் அருமையை, இனிமையை இவ்வளவு எளிமையாக, அதே சமயம் வலிமையாக பாவேந்தரைத் தவிர, வேறு யாரால் சொல்ல முடியும்.

17 ஏப்ரல் 2014

இமயத்தை அளந்தவர்ஆண்டு 1865. திபெத் நாட்டின் எல்லை. வியாபாரிகள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு, திபெத்தின் எல்லையைக் கடக்கிறார்கள். வியாபாரிகளுக்கு நடுவில் ஒரு யாத்ரிகரும் செல்கிறார். யாத்ரிகர் என்றால் அவர் ஒரு லாமா (Lama). திபெத்தியத் துறவி.

       அன்று இரவு, வியாபாரிகளுடனேயே தங்குகிறார். விடிந்து கண் விழித்துப் பார்த்தபொழுது, வியாபாரிகளையும் காணவில்லை. வழிச் செலவிற்காகக் கொண்டு வந்த பணத்தையும் காணவில்லை. சுமந்து வந்த பெட்டி மட்டும் மூலையில் பத்திரமாய் இருந்தது.

10 ஏப்ரல் 2014

வகுப்பறை நினைவுகள்


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே.....

     நண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 7.3.2014 வெள்ளிக் கிழமை, வருவாய் துறையினைச் சார்ந்த பணியாளர் ஒருவர், எங்கள் பள்ளிக்கு வருகை தந்து, நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிச் சென்றார்.

     நான் வாக்குச் சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப் பெற்றிருந்தேன். அடுத்த நாள் 8.3.2014 சனிக் கிழமை பயிற்சி வகுப்பு. இடம் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி.

03 ஏப்ரல் 2014

விடுதலை, பயத்தில் இருந்து விடுதலை

     

இலண்டன். 1997 ஆம் ஆண்டு. புற்றுநோய் தனது உடலையும், உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாய் சுவைத்துக், கரைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார் மைக்கேல் ஆரிஸ். இன்னும் எத்தனை நாட்களுக்கு உடலில் உயிரிருக்கும் என்பது தெரியவில்லை. சில நாட்கள்தான் என்பது மட்டும் புரிந்தது.

     மைக்கேல் ஆரிஸ் உள்ளத்தில் ஓர் ஆசை, கடைசி ஆசை. அந்த ஆசைதான் உயிரை இன்னும் உடலில் ஒட்ட வைத்திருக்கிறது. தன் காதல் மனைவியை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்,  ஒரு சில வார்த்தைகளேனும் பேச வேண்டும்.