03 ஜூலை 2024

எரிதழலும் இளங்காற்றும்

 

 

காலத்திற்கு ஒருநாள் முந்தி

முன்பணிக் காலம்

மின்னல் உறங்கும் பொழுது

இரவுப் பாடகன்

போகிற போக்கில்

சொல்ல வந்தது,

இவர்களோடும் இவற்றோடும்

அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

புன்னகை சிந்தும் பொழுது

கருவறையிலிருந்து ஒரு குரல்

என் அருமை ஈழமே

அன்னை மடியே

உன்னை மறவேன்

கதை முடியவில்லை

தோணி வருகிறது

தீவுகள் கரையேறுகின்றன

பரணி பாடலாம்.

அகவையோ 90. இதுநாள் வரை எழுதிய கவி நூல்களின் எண்ணிக்கையோ 87.

     இன்றும், ஓர் இளைஞரைப் போல், தொடர்ந்து தொய்வின்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்.

     ஒவ்வொரு நாளும் கவிதையாய் நகர்கிறது.

     இவரது 87 நூல்களுள், ஒரு சில நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, மேலும், கீழுமாய் மாற்றி எழுதிப் பார்த்தேன்.

     ஒரு புத்தம் புது, புதுக்  கவிதை முகம் காட்டியது.

     மகாகவியின் முகமும் தெரிந்தது.

     மகாகவியின், கவி உள்ளமும் தெள்ளத் தெளிவாய் புரிந்தது.

தாகத்தால்

தளைப்பட்ட மனிதனைத்

தண்ணீரால் விடுதலை செய்யும்.

பசியால்

அடிமைப்படுத்தப் பட்டவனைக்

கஞ்சிக் கலயத்தால் விடுதலை செய்யும்

உலைக்கு அரிசி கொண்டுபோகும்

உள்ளத்திற்கு உறுதிகொண்டுபோகும்.

 

இந்த ஆன்மிகமே

எங்கள் இராமலிங்க அடிகள்

கண்டெடுத்த ஆன்மிகம்.

காந்தியடிகள் கடைப்பிடித்த ஆன்மிகம்.

     இவரது ஆன்மிகமும் இதுதான்.

     கனவு காண்பதில் இவருக்குப் பெருவிருப்பம்.

கனவுகள் இல்லாமல்

வாழ்வதைவிடக்

கனவுகளோடு மடிவது

மதிப்பிற்கு உரியது

என்னும் கொள்கை உடையவர். இவர் கனவு காண உறங்கும் பொழுதுகூட, வள்ளுவர் போல், உறங்க வேண்டும் என்னும் எண்ணமுடையவர்.

நானும் உறங்க வேண்டும்

வள்ளுவர் போல்.

வள்ளுவர் தூக்கத்திற்குள்

ஒரு கனவாக நுழைந்துவிட

நானும் உறங்க வேண்டும்.

     எட்டு வயதில், இவரது தாய் மறைந்த பொழுது, இவர், தன் தாயின் பெருமைகளை, வரிசை வரிசையாய் எடுத்துரைக்கும் பாங்கு, நம் கண்களைக் குளமாக்கும் வல்லமை வாய்ந்தது.

அம்மா மடியில் கிடந்தபோதும்

அவள் கருணைக் கண்களின் ஒளியில் மிதந்தேன்.

அவள் கண்களில் இருந்துதான் வடலூரார்

வாடிய பயிரைக் கண்டிருக்க வேண்டும்.

பட்டினத்தடிகளார் தாய்க்கு என் தாய் நெருக்க உறவு.

குணங்குடியார் பாடலில் உருகும் நேரங்களில்

இன்னதென்று அறியாமலே

அம்மாவின் கண்களிலிருந்து

வழிகிறேன் கண்ணீராக.

 

ஒரு நாள்

என் தாயிடம் எல்லா எழுத்துகளும்

கோரிக்கை வைத்தன.

எங்களிடம்

குழந்தையைக் கொடுங்கள்,

கவிஞனாக நாங்கள் வளர்த்துத் தருகிறோம் என்று.

 

எனக்கு எட்டு வயது இருக்கும்போது

எழுத்துகளை அழைத்து என்னைக் கொடுத்துவிட்டுப்

போய்விட்டாள் என்னைப் பெற்றெடுத்தவள்.

 

இப்போதும்

தாயிடமிருந்து பெற்ற எழுத்துகள் எப்போதும்

என்னைக் காக்கின்றன.

     அகவை 90ஐக் கடந்த பிறகும், எழுத்துக்களோடுதான் உறவாடி வருகிறார். எழுத்துகளைக் கோர்த்துக் கோர்த்து, உள்ளங்களைக் களவாடி வருகிறார்.


மகாகவி ஈரோடு தமிழன்பன்.

     இம்மகா கவியை, பெருங் கவியை, தன் தந்தையாகவே போற்றி, அப்பா, அப்பா என மூச்சுக்கு மூச்சு உருகி வருகிறார் ஒருவர்.

மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதைகளின்

உலகப் புரப்புரையாளர்

     மகாகவியின் படைப்புகளை, சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, ஒன்பது மொழிகளில், பன்மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்.

ஒரு துளிக் கவிதை

உலகப் பெண் கவிஞர் பேரவை

மற்றும்

பன்னாட்டு எழுத்தாளர் பேரவை

நிறுவுநர்


கலைமாமணி தி.அமிர்தகணேசன்

அவர்களின் பெருமுயற்சியால்

மகாகவி ஈரோடு தமிழன்பன்

அவர்களின்

எழுபதாண்டுகால எழுத்துகள்,

87 நூல்கள்

ஒரே நூலாய்

பெருந் தொகுப்பாய்

மகா தொகுப்பாய்

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின்

90வது பிறந்த நாள் பரிசாக

28.9.2023

அன்று வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

அ4 தாள் அளவில், 1780 பக்கங்களில்

ஒரு பெரு நூல்.

     இந்நூலினை வெளியிட்டதற்கானக் காரணத்தையும், அவரே கூறுகிறார் கேளுங்கள்.

     ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ள 87 கவிதை நூல்கள் அனைத்தையும், ஒரே தொகுப்பில் அளித்துள்ளதன் காரணம், ஒரு வாசகன், ஈரோடு தமிழன்பனின் கவிதைகளில் உண்மை, உழைப்பு, நேர்மைக்கான ஆரத்திகள் உண்டு என்பதையும், அரசியல் பித்தலாட்டங்கள், பயனற்ற கல்வி முறைகளுக்கான சாட்டையடிகள் உண்டு என்பதையும், கயமை, பொய்ம்மை, ஊழலுக்கான எரிதழல் உண்டு என்பதையும், மானுட அன்பிற்கும், இயற்கை மீதான காதலுக்கும் இளந்தென்றல் வீச்சுகள் உண்டு என்பதையும், ஒரே நூலாக வாசித்து உணரவே …., உணர்ந்து உள்வாங்கிடவே …., நாம் வாழும் காலத்தில், ஒரு மகாகவியோடு, நாமும் வாழ்ந்துள்ளோம் என்ற மகிழ்ச்சியைப் பெற்றிடவே …. ,

ஆம், ஒரே கவிஞன்,

தன் கவிதைகளுக்குள்

எரிதழலையும், இளங்காற்றையும்

ஒளித்து வைத்துள்ளதை உணர்த்தவே

இப்பெருந்தொகுப்பு.

 எரிதழலும், இளங்காற்றும்

மகாகவியே, என் வீட்டிற்கு வந்த ஓர் உணர்வு.

 

 

எரிதழலும் இளங்காற்றும்

வெளியீடு

ஒரு துளிக் கவிதை,

7, மூன்றாம் தளம், பொன் அன்பாலயா அடுக்ககம்,

கொட்டுப் பாளையம், இலாசுப்பேட்டை,

புதுச்சேரி – 605 008.

விலை

ரூ.4000

மின்னஞ்சல்

agan123@ymail.com

பேச

78100 98433

94433 60007

 

 

27 கருத்துகள்:

 1. ஐயாவைப்பற்றிய விளக்கம் அருமை நண்பரே...

  கவிதையின் சிறப்பான வரிகளின் தொகுப்பு நன்று.

  நூலோடு தாங்களும் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. சிறப்பானதொரு அறிமுகம். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமை. நான் ஒரு பத்து தொகுப்பு வாசித்துள்ளார். வாங்கி வாசிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. நன்றி ஐயா. முழு தொகுப்பும் மலைக்க வைக்கிறது ஐயா

   நீக்கு
 5. மகாகவியின் நூல்[கள்] தொகுப்பை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. கலைமாமணி தி.அமிர்தகணேசன் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் பணி மகத்தானது.
  மகாகவி அவர்களின் நூல் அறிமுகம் அருமை.
  கவிதை தொகுப்பிலிருந்து சில துளி கவிதைகள் பகிர்வு அருமை.

  மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 7. அறிந்து மகிழ்கிறேன் அன்பு குமார்

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா04 ஜூலை, 2024

  நல்லதொரு அறிமுகம்

  கீஹா

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா04 ஜூலை, 2024

  கீஹா - கீதா தட்டச்சுப் பிழை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களை இணையத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி சகோதரி

   நீக்கு
 10. பெயரில்லா04 ஜூலை, 2024

  ஈரோடு என்றாலே மெய் சிலிர்க்கும், மகாகவி ஈரோடு தமிழன்பன் நூல்கள் தொகுப்பு வெளியீடு மற்றும் அவரது தமிழ் பண்பாட்டு தாகம், அதனால் ஏற்பட்ட தாக்கம்,தங்களுக்கே உரிய வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 11. மகாகவி என்பதைப் பார்த்ததும் பாரதி என்று நினைத்தேன். கவிதையைப் பார்த்ததும் பாரதி இல்லை, ஈரோடு தமிழன்பன் அவர்கள் என்று தெரிந்தது. நல்லதொரு புத்தக அறிமுகம். நன்றி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 12. மூத்த தமிழறிஞர் ஐயா தமிழன்பன் அவர்கட்கு வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா13 ஜூலை, 2024

  மகிழ்ச்சி அண்ணா, மகாகவியின் கவிதைப் பெட்டகம் உங்கள் இல்லத்தில் கண்டு மகிழ்கிறேன். - கிரேஸ் பிரதிபா

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு