![]() |
திடீரென்று நம்மைவிட்டுப் பிரிந்த மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிப்போம் நெருதா |
ஆண்டு 1972.
சிலி நாடு. தெருவே அதிரும் வகையில் வேகமாய் வந்த, இராணுவ லாரியானது, அந்த வீட்டின்
முன், தரைதேய கிறீச்சிட்டு நின்றது.
லாரியில் இருந்து குதித்த ராணுவ வீரர்கள்,
வீட்டின் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்கிறார்கள். வீட்டில் யாருமில்லை.
வீட்டினை சல்லடை போட்டுத் தேடிய வீரர்களின்
கண்களில், அந்த அறையின் கதவு தென்பட்டது. பாதாள அறையின் கதவு.
ஒரு இராணுவ வீரன், தன் துப்பாக்கியின்
பயனட்டால் கதவை உடைக்க, கீழ் நோக்கிச் செல்லும் படிகள் தெரிந்தன.
இராணுவ வீரர்கள் துப்பாக்கியை முன்புறமாக
நீட்டியபடி, திபு திபுவென்று படிகளில் இறங்குகிறார்கள். இறங்கிய வீரர்கள் அங்கு
கண்ட காட்சியைக் கண்டு, ஒரு கணம் திகைத்துத்தான் போனார்கள்.
இராணுவ வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்ததையோ,
கதவினை உடைத்துக் கொண்டு, பாதாள அறைக்குள் வந்ததையோ அறியாமல், அம் மனிதர் எழுதிக்
கொண்டிருக்கிறார்.
இராணுவ வீரர்களுக்கு என்ன செய்வது என்று
தெரியவில்லை. உலகையே மறந்து இப்படிம் ஒரு மனிதரால் எழுத முடியுமா?
சிறிது நேரம் கழித்து, தலை நிமிர்ந்த அம்
மனிதர், அறை முழுவதும், இராணுவ வீரர்களால் நிரம்பி வழிவதைப் பார்க்கிறார்.
ஒரு நொடிதான், ஒரே ஒரு நொடிதான். நிலைமையை
உணர்ந்து கொள்கிறார். முகத்தில் கவலையின் அறிகுறி கொஞ்சம் கூட இல்லை. மாறாக
புன்னகை புரிகிறார்.
நீங்கள் தேடி
வந்த அணுகுண்டு, அதோ அங்கே இருக்கிறது.
நிதானமாக அமைதியாகக் கூறினார்.
அம்மனிதர் சுட்டிக் காட்டிய திசையைப்
பார்க்கின்றனர். பின் அச்சத்தோடு, அந்த மேசையினை நெருங்குகிறார்கள். வெடித்து
விடுமோ என்று அஞ்சுவதைப் போல், தயங்கித் தயங்கித்தான், அந்த மேசையின் அருகில்
சென்றார்கள்.
மேசையில் வெள்ளைத் தாட்கள் அடுக்கி வைக்கப்
பட்டிருந்தன. ஒவ்வொரு தாளிலும், அம் மனிதரின் கையெழுத்துக்கள் தெளிவாய்
தெரிகின்றன.
அணுகுண்டினைக் காட்டிலும் சக்தி வாய்ந்த
கவிதைகள், ஒவ்வொரு பக்கத்திலும். மக்களின் பார்வையில் பட்டு, கண்கள் வழி,
உள்ளத்தில் புகுந்து, கிளர்ச்சி செய்து, புரட்சி எனும் பேராயுதத்தை வெடிக்கச்
செய்யும் வார்த்தைகள், ஒவ்வொரு பக்கத்திலும் ததும்பிக் கொண்டிருக்கின்றன.
இரு இராணுவ வீரர்கள், அந்த தாட்களை எல்லாம்,
மெல்ல மெல்ல எடுத்து, ஒரு பையில் போடுகிறார்கள். அப்பொழுதுதான் அவர்களின் கண்ணில்
படுகிறது அந்த பரிசுப் பொருள்.
நோபல்
பரிசு
கடந்த ஆண்டு, இம்மனிதருக்கு,
இலக்கியத்திற்காக வழங்கப் பெற்ற நோபல் பரிசு, இராணுவ வீரர்களைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருக்கிறது.
நோபல் பரிசினையும் எடுத்து, அதே பையில்
போட்டுக் கட்டுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற
அக்கவிஞரையும் கைது செய்கிறார்கள்.
இராணுவ லாரி கவிஞரோடும், அவர்தம்
கவிதையோடும், நோபல் பரிசோடும், வந்த வழியே திரும்பிச் செல்கிறது.
நண்பர்களே,
இக்கவி, இம் மகாகவி யார் தெரியுமா?
கனவுகள்,
பசுமைமிகு இலைகள், பெரும் எரிமலைகள் பற்றி அவர் கவிதைகள்
ஏன்
பேசுவதில்லை என நீங்கள் கேட்கலாம்
தெருக்களில்
ஓடும் குருதியைக் காண வாருங்கள்
தெருக்களில்
படிந்துள்ள குருதியைக் காண வாருங்கள்
என அழைத்தவர்.
இவருடைய சொல், போராளிகளின் ஆயுதமாயிற்று. அடக்கி ஒடுக்க நினைப்போருக்கு எதிரான,
சக்தி வாய்ந்த, அழிக்க இயலாத போர்க் கருவி இவரது கவிதைகள்.
இவர்தான்
பாப்லோ
நெருதா.
இம் மகாகவி பாப்லோ நெருதாவை தமிழுக்கு, கரம்
பற்றி அழைத்து வந்திருக்கிறார், மற்றொரு மகாகவி.
வாழ்வின் மென்மை வினாடிகளை, இனிமைகளை,
அவற்றின் சிலிர்ப்புகளை, உள்ளவாறு உணர்ந்து, அவற்றின் மீது அன்பு பாராட்டுபவர்.
பாசாங்கு அற்ற ஓட்டம், ஒவ்வொரு எழுத்திலும்,
ஒவ்வொரு சொல்லிலும், நிரம்பி வழியும் கவிதைகள் இவரது கவிதைகள்.
இவர் புகழ் பெற்ற கவிஞர் மட்டுமல்ல, சிறந்த
பேராசிரியர், உன்னத உரைநடை வல்லுநர், சீரிய பேச்சாளர், உயரிய மொழி பெயர்ப்பாளர்.
இச்சிறப்புகள் எல்லாம், தற்செயலாய், இவரிடம்
குடிபுகுந்தவை அல்ல, கடுமையான உழைப்பினால் வந்தவை.
தான் பிறந்த மண்ணை மறவாது, தன் பெயருடன்
இணைத்து, தன் மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருபவர் இவர்.
கவிஞர்
ஈரோடு தமிழன்பன்.
இவரால் தமிழுக்கு வந்திருக்கும், தமிழ்த் தாய்க்க்குக்
கிடைத்திருக்கும், ஓர் புதிய அணிகலன்தான்,
பாப்லோ நெருதா
கவிதைகள்.
பொன்னான
பகுதிகள் கொண்ட
வண்ணமிகு
பூமியிலிருந்து
என்
அன்பு அன்னையே
உனக்குக்
கொடுக்க
எளிய
இந்த அஞ்சல் அட்டையைத்
தேர்ந்தெடுத்தேன்
நான்.
தனது பதினோராவது பிறந்த நாளுக்கு, இரு
வாரங்களுக்கு முன், உணர்வும் தவிப்புமாய் பொங்கி வழிந்த மன நிலையில், நெருதா
எழுதிய அவர்தம், முதல் கவிதையோடு தொடங்குகிறது இந்நூல்.
அந்த வயதில்
கவிதை வந்தது
என்னைத்தேடி
நான் அறியேன்
நான் அறியேன்
எங்கிருந்து
அது வந்ததென்று.
ஆனால்
ஒரு
தெருவிலிருந்து
இரவின் கிளைகளிலிருந்து
எதிர்பாராதபடி
திடீரென்று
மற்றவர்களிடமிருந்து
அது
கூப்பிட்டது என்னை.
சீறும்
நெருப்பிற்கிடையே
அல்லது
தனியாய்
திரும்புகையில்
முகமற்று
இருந்தது
என்னைத்
தொட்டது.
தான் கவிஞனான
கதையை இப்படித்தான் கூறுகிறார் நெருதா.
கவிதை வந்த வழியை மட்டுமல்ல, தன் கடமையே
கவிதைதான் என்கிறார் நெருதா.
என்
கடமை
என்
கவிதையோடு இயங்குவது
நான்
நானாக இல்லை
அது
என் விதி.
துயறுற்றவர்கள்
வலிகளை
நான் கவனிக்கவில்லை எனில்
நான்
இருப்பதாக எப்படிச் சொல்வது?
அவை
என்னுடைய
வலிகள்.
எல்லோருக்காவும்
ஊமையர்கள்
ஒடுக்கப்
பட்டவர்கள்
எல்லோருக்காகவும்
நான்
இருக்கவில்லை
எனில் ......
இருக்க
முடியாது என்னால்
மக்களிடமிருந்து
வருகிறேன் நான்
மக்களுக்காகப்
பாடுகிறேன் நான்.
என்
கவிதை
பாடலும்தான்
தண்டனையும்தான்
எனக்குச்
சொல்லப்பட்டது நீ இருளுக்குச்
சொந்தமானவன்
என்று
இருக்கலாம்,
இருக்கலாம்
ஆனால்
ஒளியை
நோக்கி
நான்
நடக்கிறேன்.
சிறு வயது முதலே, கவிதையின் கரம் பற்றிய
நெருதா, வயதை ஒரு போதும் நம்பியதில்லை.
வயதை நான்
நம்புவதில்லை.
எல்லா
முதியவர்களும்
கண்களில் ஒரு
குழந்தையோடு
இருக்கிறார்கள்.
பிறந்ததிலிருந்து
எவ்வளவு தூரம்
வந்திருக்கிறீர்கள்?
எல்லா
மனிதர்களையும் போல்
பூமியின் மேலே
நடப்பதற்குப் பதிலாக
பூமியின் கீழே
ஓய்வெடுக்கப்
போகும் வரை
எவ்வளவு காலம்
அலைவீர்கள்?
தனது நாட்டினையும், நாட்டு மக்களையும் தன்
உயிரினும் மேலாய் நேசித்தவர்தான் நெருதா.
எனது
நாட்டில்
ஒரு
மலை உண்டு.
எனது
நாட்டில்
ஒரு
நதி உண்டு
என்னோடு
வா.
துயறுரும்
அவர்கள் யார்?
எனக்குத்
தெரியாது.
எனினும்
என் மக்கள் அவர்கள்
என்னோடு
வா.
எனக்குத்
தெரியாது
எனினும்
என்னைக்
கூப்பிட்டுச்
சொல்கிறார்கள்
நாங்கள்
துயர்படுகிறோம் என்று
என்னோடு
வா.
அவர்கள்
என்னிடம்
சொல்கின்றனர்,
உன் மக்கள்
உன்
நல்விதியில்லா மக்கள்
மலைக்கும்
நதிக்கும் இடையில்
பசியோடும்
வேதனையோடும்
தன்னந்தனியாய்
போராட
விரும்பவில்லை அவர்கள்
உனக்காகக்
காத்திருக்கிறார்கள்
நண்பனே.
போராட்டம்
கடுமையானதாயிருக்கும்
வாழ்க்கை
கடுமையானதாயிருக்கும்
ஆனால்
நீ
என்னோடு வருகிறாய்.
சிலே நாட்டுக் கொடுங்கோலர்களின் பிடியில்
இருந்து தப்பி, தலைமறைவாய் இருந்த காலத்தில், ஓர் புத்தாண்டு தினத்தன்று, தன்
நாட்டிற்கே வாழ்த்துச் சொன்ன கவிஞர்தான் நெருதா.
அன்புநிறை
அரோக்கானியா
இனிய
புத்தாண்டு உனக்கு. வாழ்த்துகிறேன்.
இவ்வாண்டு
மானுடம்
அனைத்திற்கும் மண்ணுலகம் முழுவதற்கும்
இனிய ஆண்டாகுக.
உனக்கும், எனது
இருப்புக்கும் இடையே நம்மைப்
பிரிக்கிறது
ஒரு புதிய இரவு, அப்படியே காடுகளும்
நதிகளும்,
பாதைகளும்
என்
சின்னஞ்சிறிய நாடே
கறுத்த குதிரையாக
என்மனம் தாவுகிறது
உன்னே நோக்கி.
இயற்கையான
தண்ணீரைப் போலப்
பூமியிலிருந்து
புறப்பட்டுவரும் என உச்சரிப்பு
உங்களைச்
சூழ்கிறதே, உணர முடிகிறதா உங்களால்
தாய் மண்ணின்
தித்திப்பு
தேகம் முழுவதையும், மலர் மருங்குலையும்
தழுவிக்
கொண்டிருப்பது நான்தான்.
இருளுள்
இருக்கும் நாட்டுக்கு
எனது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சொந்த நாட்டில் வாழ வழியின்றி, நடந்து நடந்து, நாடு கடந்த மனிதர்களைப்
பாடும் பாட்டைக் கேளுங்கள், நம் நெஞ்சம் வெடிக்கும்.
புலம்
பெயர்ந்தவர்களின்
நூற்றாண்டு
வீடு
இழந்தமையின் புத்தகம்
நரைபடிந்த
நூற்றாண்டு
கறுப்புப்
புத்தகம்.
திறந்த
தினத்தில்
இதைத்தான்
எழுதிவிட்டுப் போகவேண்டும்
நான்,
அதுவும்
இந்த
நூற்றாண்டிலிருந்து
தோண்டி
எடுத்துப்
பக்கங்களில்
எல்லாம் சிந்திய
குருதியால்
வண்ணம் அடித்துவிட்டு
வெட்டி
வீசப்பட்ட கைகள்
எத்தனை
என்று நான் எண்ணினேன்
சாம்பல்
மேடுகளை எண்ணினேன்
துண்டு
துண்டாக்கப்பட்ட
அழுகை
அலறல்களை எண்ணினேன்
கண்களை
இழந்த கண்ணாடிகளை எண்ணினேன்
தலைகளை
இழந்த முடிகளை எண்ணினேன்
பிறகு
தங்கள்
நாடுகளைப் பறிகொடுத்தவர்களின்
உலகத்தைத்
தேடினேன்
தோற்கடிக்கப்
பட்ட
அவர்களின்
கொடிகளையும்
அவர்களின்
ஆறுமுனை நட்சத்திரங்களையும்
துயரம்
கப்பிய அவர்களின் படங்களையும்
அர்த்தமின்றி
ஏந்திக் கொண்டு
நானும்
வாழ்விடம்
இன்மையை உணர்ந்தேன்
ஆனால்
அலைந்து அனுபவப்பட்ட ஒருவனாக
வெறும்
கையோடு
என்னை
நன்கு தெரிந்த
இந்தக்
கடலுக்கத் திரும்பினேன்.
மற்றவர்களோவெனில்
தப்பிக்க
வழியின்றி இன்னும் அங்கேயே
இருக்கின்றனர்
தங்களை
உறவுகளையும் தவறுவளையும்
கைவிட்டு
விட்டவர்களாக.
தன் நாட்டு மக்களைத் தன் பாடலால்,
கிளர்ந்தெழச் செய்து போராட்டத்திற்கு ஊக்கப் படுத்திய மகாகவியை, கொடுங்கோலர்களால்
வெல்ல முடியாத மகாகவியை, அற்பப் புற்று நோய் வென்றதுதான் கொடுமையிலும் கொடுமை.
மண் என்னை மூட
மண்ணாகிவிடும்
விதிகளின்படி
வெற்றாரவாரம்
இல்லாமல் இப்போது நான்
இறக்கப்
போகிறேன்.
வானுலகைப்
பிரித்துப்
பட்டா போட்டுக் கொண்டவர்கள்
அடித்து
நொறுக்கும்போது
மரணத்தை
உற்றுக் கவனிக்க முடியாமற்போன
ஏழைகளோடு
மரணத்தில் நான்
இருக்க விரும்புகிறேன்.
மாட்டில்தி
ஆண்டுகள்
அல்லது நாள்கள்
உறக்கம்,
காய்ச்சல்
இங்கோ,
அங்கோ நிலைகொண்ட
நெடுநேரப்
பார்வை.
முதுகுத்தண்டு
முறுக்குகிறது,
இரத்தக் கசிவு
விழித்திருக்கிறேனா?
மயக்கத்தில்
கிடக்கிறேனா?
தூங்குகிறேனா?
மருத்துவமனைப்
படுக்கைகள்
அந்நியமான
சாளரங்கள்
ஓசைப்படாமல்
நடப்பவர்களின்
வெள்ளைச்
சீருடைகள்
நிம்மதி
குலைக்கம் பாதங்கள்.
அப்புறம்
இந்தப்
பயணங்கள்.
புதுப்பித்துக்
கொள்ளும் என் கடல்.
தலையணைமேல்
உன் தலை
வெளிச்சத்தில்
எனது
பூமிக்கு மேலே வெளிச்சத்தில்
மிதக்கும்
உன் கைகள்.
நீ
வாழ்ந்தபோது
நான்
வாழ்ந்தது அழகுமிக்கது.
இவ்வுலகம்
நம்பகமானது
இரவில்
நான் உறங்கும்போது
உன்
சிறு கைகளுக்குள்
இது
மிகப்பெரியது.
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் அற்புத மொழி
பெயர்ப்பில் வந்துள்ள, இந்நூலில் நுழைவது எளிது. நூலினை மூடிய பிறகும், மூடாமல்,
மனக் கண்ணில் என்றென்றும் இக்கவிதைகள் திறந்தே இருக்கும்.
கவிதை ஓர் அழகு எனில் அதனை ஆராதனை செய்பவர்
தமிழன்பன். வள்ளுவத்தில் ஊற்றெடுத்து, பாரதி, பாரதிதாசன், ரவீந்திரர் எனப் பரவி,
ஷெல்லியைத் தொட்டுத் தொடர்ந்து விரியும் நோக்கு, ஈரோடு தமிழன்பனின் கவிதை நோக்கு.
நெருதாவின் எஸ்பானிய மொழிக் கவிதைகளை, சிலே
மண்ணின் மணத்தை, தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
மகாகவியின் கவிதைகள் வேலிகளைத் தாண்டி,
வெகு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இவர் விருப்பம்.
நெருதாவின் மேல் இவர் கொண்டுள்ள, ஆழ்ந்த
பற்று, ஈடுபாடு இந்நூலின் ஒவ்வெரு எழுத்திலும், ஒவ்வொரு சொல்லிலும் முகம் காட்டி
நிற்கிறது.
நண்பர்களே, நாற்பதாண்டுகளுக்கு முன் பிறந்த,
தன் மகனுக்கு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் வைத்த பெயர் என்ன தெரியுமா?
பாப்லோ
நெருதா.
..............
நூல் வெளியீடு
Indian Universities Press
பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னைஸ் 18
தொலைபேசி 044 24332424, 24332924
கவிதை என் வலுவல்ல.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஐயா
நீக்குகவிஞர் நிலவன் வீட்டிலும் ஒரு நெருடா உண்டு...
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு அய்யா வாழ்த்துக்கள் தொடருங்கள்..
தம +
நன்றி நண்பரே
நீக்குNallatoru Takavalukku Nanri.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவெற்றாறவாரம்இல்லாத மாபெரும் கவிஞரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய பகிர்வுக்கு நன்றிங்க சகோ.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குகவிதை மக்களுக்காக என்ற நெருதா வின் வாழ்வு உங்கள் எழுத்திலும் கவிதைகள் தமிழன்பன் மொழிபெயர்ப்பிலும் மிளிர்கின்றன.
பதிலளிநீக்குநன்றி.
மக்களுக்காகவே வாழ்ந்த கவிஞன்
நீக்குநன்றி நண்பரே
நல்ல பகிர்வு. த ம +1
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையான ஓர் கவிஞரை அறிமுகம் செய்து அவரின் படைப்புக்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவயதை நான் நம்புவதில்லை - என்னே வரிகள்... அற்புதம்...
பதிலளிநீக்குகவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு நன்றிகள் பல...
நன்றி ஐயா
நீக்குஉங்களது தலைப்பைப் பார்த்த போதே திரு தமிழன்பன் தமிழாக்கம் செய்த கவிதைகள்தான் முதலில் நினைவிற்கு வந்தது. மீண்டும் ஒரு முறை அக்கவிதைகளை வாசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இன்னும் எழுச்சி அளிப்பவர் நெருதா. அது போலவே முதலாளித்துவ சக்திகளுக்கு அச்சத்தையும்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநெருதா பற்ரிய சிறப்பான பகிர்வு.நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநூல் அறிமுகம் சிறப்பு. உங்களுக்கே உரித்தான நடையில் புரட்சிக் கவிஞர் நெருடாவின் கவிதைகள் பற்றி அறிந்தோம் நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅறிந்திராத ஒரு கவிஞரை - நெருதா அவர்களைப் பற்றி அறியத்தந்தைமைக்கு மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபூக்களின் மணத்திலும் கவிதை பிறக்கும் ,மூத்திரத்தின் நாற்றத்திலும் என் கவிதைப் பிறக்கும் என்று பாப்லோ நெருதாவின் கவிதை வரிகளை என்னால் மறக்கவே முடியவில்லை :)
பதிலளிநீக்குகாணும் காட்சிகளில் எல்லாம்
நீக்குகவிதையைக் கண்டவன் அல்லவா
நன்றி நண்பரே
பகிர்வுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபகிர்வுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபாப்லோ நெருதா பற்றிய உணர்வு பூர்வமான கட்டுரை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஈரோடு தமிழன்பன் கவிதைகளைப் படிக்கின்ற வாய்ப்பு. நன்றி.
பதிலளிநீக்குத.ம. 11
நன்றி ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறிய முடியாத மனிதனைப்பற்றி அவரின் கவித்துவத்தின் தன்மை பற்றி மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு நன்றி. த.ம 11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குமனிதநேயமிக்கவராக திகழ்ந்த கவிஞர் நெருதா அவர்களின் கவிதைகளை நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒரு அங்கமான கரந்தைப் புலவர் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவரான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மொழிப் பெயர்ப்பு செய்திருந்த புத்தகத்தினைப் பற்றிய செய்திகள் அருமை.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு இன்று வரை புகழ் சேர்த்துக் கொண்டிருப்பர் அல்லவா கவிஞர்
நீக்குநன்றி நண்பரே
அனைத்தும் அழகு. மிக்க நன்றி தோழர்
பதிலளிநீக்குநன்றி தோழர்
நீக்குஅருமையாக எழுதியிருக்கீங்க ஐயா...
பதிலளிநீக்குஅவரோட கவிதைகள் வாசிக்க அற்புதமாக இருக்கிறது... அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார் கவிஞர் தமிழன்பன் அவர்கள். இவரின் மகனுக்கு அவரின் பெயர்... வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
நீக்குநெருதா பற்றி அருமையான பகிர்வு .தமிழன்பனுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குJust great.your presentation demands immediate purchase of the book.
பதிலளிநீக்குwell presented.
நன்றி ஐயா
நீக்குநெருதா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குநூல் அறிமுகம் அருமை. படிக்கவில்லை. படிக்க ஆர்வத்தைத் தூண்டிவிட்டது உங்களது ரசனையான விமர்சனம்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குமாமனிதர் கலாம் ஐயாவுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்!
அற்புதக் கலைஞர் நெருதா பற்றியும் அவர் கவிகள் சிலவற்றையும் அறியத்தந்தீர்கள்.
மிக அருமை ஐயா!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரியாரே
நீக்குநீண்ட பதிவு என்றாலும் சுவைபட சொன்னீர்கள்! நன்றி!
பதிலளிநீக்குஆம் பதிவு நீண்டுதான் போய்விட்டது ஐயா
நீக்குஎதை விடுவது என்று தெரியவில்லை
நன்றி ஐயா
எனக்கு நிலவன் அண்ணா தான் நினைவுக்கு வருகிறார்! மற்றும் ஒரு நெருடா! அருமையான பதிவு அண்ணா!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html
நன்றி
சாமானியன்
மிக்க மகிழ்ச்சிநண்பரே
நீக்குஎளியேனையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி
பாப்லோ நெருதா கேள்விப்பட்ட பெயர். அறியாத விவரங்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குதாங்கள் தந்த தகவல் புதிது, அறியாத தகவல்கள்,
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் அற்புத மொழி பெயர்ப்பில் வந்துள்ள, இந்நூலில் நுழைவது எளிது. நூலினை மூடிய பிறகும், மூடாமல், மனக் கண்ணில் என்றென்றும் இக்கவிதைகள் திறந்தே இருக்கும்
தாங்கள் சொல்வது அந்நூலினைப் படிக்க தூண்டுகிறது,
நன்றி சகோ,
நன்றி சகோதரியாரே
நீக்குஅன்பின் சகோதரா
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
மின்னஞ்சல் எழுதினால் மிக நன்று.
தர முடியுமா?
இதே போல மின்னூல் பற்றி தங்களிடம் ஒரு கேள்வி
கேட்டிருந்தேன் (கேள்வி உள்ளால் கேட்டிருந்தென்)
தாங்கள் பதில் தரவில்லையே
இப் பதிவிற்கு மிக்க நன்றி.
சகோதரியாரே
நீக்குஎனது மின்னஞ்சல் முகவரி
karanthaikj@gmail.com
எனது மின்னூல் வெளிவரக் காரணமாக இருந்தவர்
நண்பர்திரு டி.சீனிவாசன் என்பவராவார்
அவரது மின்னஞ்சல் முகவரி
tshrinivasan@gmail.com
மின்னூல் பற்றிய அனைத்துத் தகவல்களையும்
இவரிடம் இருந்து பெறலாம்
நன்றி சகோதரியாரே
வணக்கம்!
பதிலளிநீக்குபாப்போ நெருதாவின் பாக்களைத் தாம்உணர்ந்து
பூப்போட்டு வாழ்த்தும் புவி
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குபதிவு நீளம். முழுதும் படிக்கலை. பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குநீளம்தான் சகோதரியாரே
நீக்குநன்றி சகோதரியாரே
very good post I liked it very much. Good book.good Author.good translator he worked as DD news reader also. thanks for your valuable address of this book.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !
நன்றி
இதோ வருகிறேன் நன்றி நண்பரே
நீக்குஉள்ளத்தை உருக்கும் உன்னத கவிதை..அதை அறிமுகப்படுத்தியதும்..புது விதம்....உடுவை
பதிலளிநீக்கு