15 ஜூலை 2015

பச்சைத் தமிழன்


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-          பாவேந்தர் பாரதி

     நடுநிலைப் பள்ளிகளை எல்லாம், உயர் நிலைப் பள்ளிகளாக உயர்த்த, கல்வி அதிகாரிகளுடன், திருச்சிக்கு சென்றார் அம் மாமனிதர்.

     ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில், ஐந்து ஆசிரியர்கள், மாலையோடு, வரவேற்கக் காத்திருந்தனர்.

     பள்ளியினுள் நுழைந்த அம் மாமனிதர், மாலைகளோடு நிற்கும் ஆசிரியர்களைப் பார்த்தார்.


பையன்களுக்குப் படிப்பு சொல்லிக் குடுங்கண்ணா, படிக்காதவனுக்கு மாலை போட நின்னுக்கிட்டு இருக்கீங்களே, போய் வேலையைப் பாருங்கண்ணே.

     இம்மனது யாருக்கு வரும்.

      ஒரு முறை அலுவலக அறையில் அம்மாமனிதரை அணுகிய, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்கள், தயங்கித் தயங்கி, மெல்ல கூறினார்.

மூன்று இலட்சம் ரூபாய் இருந்தால், நமது சாதனைகளை எல்லாம் எடுத்துரைக்கும் வகையில், ஒரு விளம்பரப் படம் எடுக்கலாம். அத்திரைப்படம், அடுத்தத் தேர்தலின்போது, நாம் வாக்கு சேகரிக்க மிகவும் உதவும்.

     அடுத்த நொடி, அம்மனிதர் சீறி எழுந்தார்.

அடப்பாவி, படமெடுக்கும் மூன்று இலட்சத்தில் இன்னும் 10 ஊர்களில் நான் பள்ளிக் கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல், நியூஸ் ரீல் எடுக்க வழி சொல்லுகிறாயே. முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு.

இம்மாமனிதர்தான்
கல்விக் கண் திறந்த
கர்மவீரர் காமராசர்
என்று கூறத் தேவையில்லை.

தங்கமே... தண்பொதிகைச் சாரலே..... தண்ணிலவே....
சிங்கமே.... என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே
என்று காமராசரைப் பாடுவார் கவியரசு கண்ணதாசன்.

நாமும் காமராசரைப் போற்றுவோம்
வாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.

-----

நண்பர்களே, கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழாவானது, எம் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
       
பள்ளி மாணவ,மாணவியரிடையே சிறப்புரை வழங்கும்
பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன்





என் வகுப்பிலும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தினேன்.அனைத்து மாணவ, மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

        போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழாவானது, என் வகுப்பறையில் மாலை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியரும் நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்குப் பரிசில்களை வழங்கி மகிழ்ந்தார்.

      

கரும்பலகையில் கர்மவீரரின் படத்தினை வரைந்த மாணவர்

வரவேற்புரை ஆற்றும் மாணவர்


சிறப்புரையாற்றும் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள்















பள்ளி ஓவிய ஆசிரியரும் நண்பருமான திரு எஸ்.கோவிந்தராசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.







29 கருத்துகள்:

  1. கல்வி மட்டும் இல்லை,
    அவர் ஆட்சி காலத்தில் வந்தது தானே
    தமிழ்நாட்டின் அணைக்கட்டுகள்/

    பதிலளிநீக்கு

  2. மிகச் சிறப்பான நிகழ்வு
    படங்களுடன் பதிவு நேரடியாகப் பார்ப்பது
    போலிருக்கிறது.
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கல்விக்கு வழி காட்டிய படிக்காத மேதை...

    விழாவின் சிறப்புகளை அருமையான படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. துரை செல்வராஜூ ஐயாவின் பதிவைக் கண்டு நெகிழ்ந்தேன்...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோ,
    அடப்பாவி, படமெடுக்கும் மூன்று இலட்சத்தில் இன்னும் 10 ஊர்களில் நான் பள்ளிக் கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல், நியூஸ் ரீல் எடுக்க வழி சொல்லுகிறாயே. முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு.//-

    இதனைப் படிக்கும் போது இன்றைய நிலையை நினைத்துப்பார்க்காமல் இருக்க இயலவில்லை, தனக்கு விளம்பரம் செய்யும் மனிதர்கள்,

    நம் பள்ளியில் நடந்த விழாவினை புகைப்படத்துடன் அழகாக பதிவிட்டுள்ளீர்கள்,
    மாணவ, மாணவிகளின் திறமைகள் அபாரம்,

    வாழ்த்துக்கள்,
    அவரின் நினைவினைப் போற்றுவோம்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளின் போது மறக்காமல் அவரது பிறந்த நாளைக் கொண்டாடிய உங்கள் பள்ளிக்கும், அதனைப் பற்றிய பதிவு. தந்த உங்களுக்கும் நன்றி!
    த.ம.4

    பதிலளிநீக்கு
  7. தங்கள் பள்ளிக்கு முதலில் வாழ்த்துகள்! கர்மவீரரைப் பற்றி அழகாய் சொல்லிச் சென்றதற்கும் வாழ்த்துகள். இவரைப் போன்ற ஒருவர் இனி ந நாட்டிற்கு கிடைப்பாரா நிச்சயமக இல்லை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. கல்விக் கண் திறந்த காமராஜருக்கு சிறப்பான புகழஞ்சலி!..

    இளந்தலைமுறையினர் அவரைப் பற்றி அறிந்து கொள்வது மிக மிக அவசியம்!..

    நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. எங்கிருந்து கிடைக்கிறது இத்துணைத் தகவல்கள்
    அசத்துறீங்க..
    வாழ்த்துக்கள் அண்ணா
    தம +

    பதிலளிநீக்கு
  10. நல்ல புகழஞ்சலி. பள்ளியில் இருப்பதால் தாங்கள் மாணவர்களுடன் இந்த நன்னாளை உணர்ந்து முழுமையாகக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஓர் அரிய வாய்ப்பே. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அவரது ஆட்சிக்காலம்,தமிழ்நாட்டின் பொற்காலம்

    பதிலளிநீக்கு
  12. அருமை ஜெயகுமார்
    நீங்கள் இப்படி சிறகு கட்டிப் பறப்பதற்குத் துணை நிற்கும் தலைமையாசிரியரைப் பாராட்டுகிறேன்.

    வகுப்பறை விழா அருமையிலும் அருமை

    காமராசர் புண்ணியத்தில்தானே நாமெல்லாம் குப்பைக் கொட்டுகிறோம்!

    பதிலளிநீக்கு
  13. சிறந்த மனிதர் பற்றி சிறந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  14. படமும் பதிவும் அருமை! தனக்கென இச்சையற்ற தமிழன்!

    பதிலளிநீக்கு
  15. கல்விக் கண்ணைத் திறந்த காமராஜரை என்ன ரோமப் மகிழ்ச்சியாக உள்ளது.பதிவுக்கு நன்றி! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  16. பச்சைத் தமிழன் செய்த செம்மையான பணிகளை கண்டு அசந்து விட்டேன் :)

    பதிலளிநீக்கு
  17. காமராஜரைப் போல இன்னொரு தலைவர் கிடைப்பாரா!!!
    கர்மவீரரைப் பற்றிய அறியாத தகவல்கள் பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா.
    த.ம. 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்மவீரரின் படத்தை அழகாக வரைந்த மாணவருக்கும், பேசிய மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
      இப்படித் தளம் அமைத்துக் கொடுக்கும் உங்களுக்கும் உங்கள் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

      நீக்கு
  18. படங்களும் பகிர்வும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான நிகழ்வு. வாழ்த்துகள்!!

    -ஆரூர் பாஸ்கர்

    பதிலளிநீக்கு
  20. மிக அருமை .கர்மவீர் காமராசர் இன்றும் நம்முடன் வாழ்கிறார் ஏழை மாணவனின் கல்வியாக.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நிஜமான ஹீரோ காமராஜர்!

    பதிலளிநீக்கு
  22. நிஜமான ஹீரோ காமராஜர்!

    பதிலளிநீக்கு
  23. என் நெஞ்சில் நீங்காது நிற்கும் பெருந்தலைவரைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது. தன்னலமின்றி நாட்டுக்காக சிந்திக்க அவரைப் போல் எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள்! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  24. மிக சிறப்பான பதிவு. காமராசர் விழாவில் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசு பெற்ற மாணவ கண்மனிகளுக்கும் வாழ்த்துக்கள் !

    அய்யா,

    உங்களை போன்ற ஆசிரியர்களால் வருங்காலத்தில் இன்னும் பல காமராசர்கள் நிச்சயம் உருவாகுவார்கள்.

    வாழ்த்துக்களுடன்
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  25. தங்களின் பணிகளுக்குப் பாராட்டு.

    சொல்லும செயலும் ஒன்றாவது அரிது.

    உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. கல்வி பற்றிய சிறந்த
    கண்ணோட்டம் - அதனை
    ஊக்கவிக்கும் சிறப்பு விழாக்கள்
    தொடரட்டும் தங்கள் பணி!

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    பதிலளிநீக்கு
  27. கிராமராஜரைப் பற்றிய பதிவு அருமை........உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு