தொடு திரையை வருடியபோது, வயலின்
இசை மௌனமானது, அமைதியாய் வெளிப்பட்டது ஒரு குரல்.
300 ஆண்டுகளுக்கு முன்னரே
பிறந்து, தவழ்ந்து, மறைந்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர் இவர்.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
உங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான். உங்கள் நண்பர்தான். நமது நண்பர்தான்.
முகத்தில் மீசை வைத்திருப்பவரைப்
பார்த்திருப்போம். இவரோ மீசைக்குள் முகத்தை வைத்திருப்பவர்.
ஆம், அவரேதான்
தேவகோட்டை கில்லர்ஜி
விருப்பமே இல்லை
இந்த
சமூக மானிடனைக் காண
...
அந்தக் கோபத்தில்
என்னுள் எழுந்தவை
நான்
மண்ணுள் புதையுமுன்
இந்த விண்ணில்
விதைக்க
முயற்சிக்கிறேன்
என்று பறைசாற்றும் வலைப் பக்கம், இவரது வாழ்வியல் வேதனைகளை, இவர் சந்தித்த
சோதனைகளை, இவர் தகர்த்தெறிந்த தடைகளை, நமக்குச் சொல்லாமல் சொல்லும்.
இவர் சந்தித்த வேதனைகளும்,
சோதனைகளும் இவரை நன்கு பக்குவப் படுத்தியுள்ளன. பேசும் பொழுது ஒவ்வொரு சொல்லும்,
நின்று நிதானித்து, அமைதியாய் தெளிவாய் வெளி வருகின்றது.
தற்பொழுது தேவகோட்டைக்கு வந்திருக்கிறேன். புதுக்கோட்டைப் பதிவர்களையும்,
தஞ்சைப் பதிவர்களையும் சந்திக்க விரும்புகிறேன்.
நண்பர்களைச் சந்திப்பதையும், இனிமையாய் உரையாடி
மகிழ்வதையும் விட, மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல், வேறு என்ன இருக்கிறது.
சந்திப்பிற்கு நாளும், இடமும் குறித்தோம்.
இடம் எது தெரியுமா?
ஒரு கவியின் இல்லம்.
நம் வலை பொழுது போக்க அல்ல
வாழ்வைப் பழுது பார்க்க
என்னும் உயர்ந்த, உன்னத குறிக்கோளுடன்
விண்ணிடை இரதம் ஊர்ந்து
மேதினி கலக்கு தற்கும்
பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
பாரினை மயக்கு தற்கும்
மண்ணிடை வாளை யேந்திப்
பகைப்புலம் மாய்ப்ப தற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்ப தென்றோ?
என்று ஏங்குவாரே பாவேந்தர் பாரதிதாசன், அப்பாவேந்தரின் ஏக்கத்தைப் போக்கும்
வகையில், விண்ணிடை இரதம் ஏறி, நாடுகள் பல சென்று, பண்ணிடைத் தமிழைச் சேர்த்து, தன்
பேச்சால், தன் பாட்டால், தன் எழுத்தால் பாரினை மயக்கி வருபவர் இவர்.
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர்
கவிஞர் நா.முத்து நிலவன்
கடந்த 8.7.2015 புதன் கிழமை மாலை
4.00 மணியளவில், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும், தஞ்சையில் இருந்து
பேருந்தில் புறப்பட்டோம்.
புதுக்கோட்டை மச்சுவாடியில்
இறங்கினோம். கவிஞர் ஐயாவின் இல்லம் நோக்கி நடந்த பொழுது, எங்களைத் தாண்டி, சீறிக்
கொண்டு சென்றது ஒரு ஆட்டோ.
சிறிது தூரம் சென்று நின்ற,
ஆட்டோவில் இருந்து இறங்கிய மனிதரைக் கண்டவுடன், மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்.
திருவிளையாடல் திரைப்படத்தில்
வரும் தருமியின் பேச்சினை அனைவரும் ரசித்து மகிழ்ந்திருப்போம்.
சேர்ந்தே இருப்பது
புலமையும், வறுமையும்
புகைப்படக் கருவி இவரின் மற்றொரு
கை போல், எப்பொழுதும் இவருடன் சேர்ந்தே வரும்.
வங்கிப் பணியினின்றும்
ஓய்வு பெற்ற பிறகும், எழுத்திலும், காணும் காட்சிகளைப் படம் பிடித்துக் கவிதைபோல்,
காண்பவர் கண்களுக்கு விருந்தளிப்பதிலும் வல்லவர் இவர்.
கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,
திரு திண்டுக்கல் தனபாலன் – வலைச் சித்தர்
இவர் – படச் சித்தர்
படச் சித்தர்
திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள்தான்,
ஆட்டோவில் இருந்து இறங்கினார்.
தனது உடல் நிலையினைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது,
நண்பர்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு, திருச்சியில் இருந்து
வந்திருக்கும் தமிழ் இளங்கோ அவர்களைப் பாராட்டியே ஆக
வேண்டும்.
மூவருமாய் கவிஞர் ஐயா அவர்களின்
இல்லத்திற்குப் படியேறினோம். அங்கே எங்களுக்கு முன்னரே வந்து, காத்திருந்தார்
மீசைக்கார நண்பர்
தேவகோட்டை கில்லர்ஜி
கவிஞர் ஐயா அவர்களின் வீட்டினைப்
பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள், புத்தகங்கள்.
புத்தகங்களுடன் போட்டி போடும் வகையில், கவிஞருக்கு வழங்கப் பெற்ற பரிசுப்
பொருட்கள், நினைவுப் பரிசுகள், விருதுச் சான்றிதழ்கள் அனத்தும் வரிசை வரிசையாய்
அணிவகுத்து நின்றன
சகோதரிகள் கவிஞர் மு.கீதா, உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் திருமதி ஜெயலட்சுமி, திருமதி மாலதி, திருமதி மீனா என்கிற மீனாட்சி சுந்தரம், கவிஞர் ஆர்.நீலா, நண்பர்கள் திரு மது, கவிஞர் மகா.சுந்தர், கவிஞர் செல்வா, கவிஞர் வைகறை, கவிஞர் சோலச்சி ஆகியோரின் மகிழ்ச்சி மிகு பேச்சுக்கள், சந்திப்பிற்கு இனிமை சேர்த்தன.
சகோதரி கவிஞர் மு.கீதா, உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர் சகோதரி திருமதி ஜெயலட்சுமி மற்றும் நண்பர் மது மூவரும்,
அருமையான நூல்களை வழங்கி எங்களை வரவேற்றது, என்றென்றும் நெஞ்சினில் நிலைத்து நிற்கும்.
கவிஞர் வைகறை அவர்களை முதன்
முதலாய் சந்தித்தேன் இனிமையான பேச்சுக்கும், இளகிய மனதிற்கும் சொந்தக்காரர் இவர்.
கவிஞர் சோலச்சி அவர்கள்,
எதிர்வரும் 19.7.2015 அன்று நடைபெற இருக்கும், தனது சிறுகதை நூல் வெளியீட்டு
விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
கவிஞர் சோலச்சி அவர்களுக்கு
வலையுலகின் சார்ப்பில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்.
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களைப்
பாராட்டும் வகையில்,
கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள்
நூல் ஒன்றினை வழங்கி மகிழ்ந்தார்.
தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கும்
கவிஞர் அவர்கள்
தனது நூல்களை
வழங்கி மகிழ்ந்தார்.
திருச்சி தமிழ் இளங்கோ அவர்களோ, கவிஞர் அவர்களுக்கு ஓர்
நூலினை வழங்கி மகிழ்ந்தார்.
சற்றேரக்குறைய மூன்று மணி நேரம்
சென்றரே தெரியவில்லை. மூன்று மணி நேரமும், கவிஞர் இல்லத்தின், சமையல் அறையில்
இருந்து, வகை வகையாய் இனிப்புகள், பழங்கள் என வரிசையாய் வந்து கொண்டே இருந்தன.
தொலைத் தொடர்புத் துறையில்
மேலாளராகப் பணியாற்றும், கவிஞரின் துணைவியார் அவர்கள், அன்றைய கடும் பணியின்
களைப்பினைப் புறம் தள்ளி, இன் முகத்துடன், சமையல் அறையிலும் தன் பணியினைத்
தொடர்ந்தார்.
கவிஞரின் இளைய மகள், பொறியாளர் படிப்பு முடித்திருக்கும், செல்வி இலட்சியா, ஒளிப்பதிவாளராகவே மாறி, அங்கும் இங்கும் ஓடி, படமெடுத்துக் கொண்டே இருந்தார்.
கவிஞரின் மூத்த மகள்
அன்றுதான், தன் கணவருடனும், பிள்ளைகளுடனும், துபாயில் இருந்து வந்திருந்தார்.
அவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
நான் துபாயில், யாரிடம் என்
பெயரைக் கூறினாலும் அவர்கள் அனைவரும், தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, உங்கள்
தகப்பனார் யார்? என்பதே, என்று கூறியபோது, அவரின் முகத்தில் மகிழ்வும்,
பெருமையும் பொங்கி வழிந்ததைக் காண முடிந்தது.
கவிஞரின் மூத்த மகளின் பெயர் என்ன தெரியுமா?
வால்கா.
சந்திப்பு என்று
ஒன்றிருந்தால், பிரிவு என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா. மீண்டும் சந்திப்பதற்காக,
பிரிய வேண்டிய நேரம் வந்தது.
கவிஞர் முத்து நிலவன் ஐயா,
நண்பர் மது, நண்பர் மகா.சுந்தர் மற்றும் ஆசிரியர் ஜலீல் நால்வரும், சாலை வரை
எங்களுடன் வந்து, பேருந்தில் எங்களை வழியனுப்பி வைத்த, அந்த அன்பிற்கு இணையேது,
ஈடு ஏது.
இனியதொரு சந்திப்பினை அருமையாகப் பதிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குகவிஞருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
நன்றி நண்பரே
நீக்குஇனியதொரு சந்திப்பினை அருமையாகப் பதிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குகவிஞருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
நன்றி நண்பரே
நீக்குதி தமிழ் இளங்கோ பதிவிடுவதில் உங்களை முந்திக் கொண்டார் என்றே தோன்றுகிறது. பதிவர்கள் சந்திப்பு என்று ஒரு இனிமையான நிகழ்வுதானே. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆம் ஐயா
நீக்குதிரு தி தமிழ் இளங்கோ அவர்கள் முந்திக் கொண்டுவிட்டார்
நன்றிஐயா
T H A N K S ..... to All........
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஎழுத்தாளுமைகளின் இனிய சந்திப்பைத் தங்கள் எழுத்தில் பார்த்ததும் படித்ததும் மகிழ்வின் தருணங்கள்.
பதிலளிநீக்குநன்றி
நன்றி நண்பரே
நீக்குஎன்றென்றும் நினைவு வைக்கத் தக்கதொரு சந்திப்பைப் பதிவாக்கிப் பகிர்ந்தமைக்கு நன்றி. கவிஞரின் திருமணநாளுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குநல்ல சந்திப்பு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபரஸ்பரம் மனித முகம் பார்த்துக்கொள்ளுதலும்,
மனம் பாராட்டுப்பேசுதலும்,மன மகிழ்ந்து கொள்ளுதலும் நல்ல முயற்சி,வாழ்த்துக்கள் இதுபோல் மதுரை அல்லது வேரு எங்காவது நிகழுமாயின் நாங்களும் கலந்து கொள்ள வசதியாய் இருக்கும் வாழ்த்துக்கள்.
எதிர்வரும் அக்டோபர் மாதம்
நீக்குபுதுக்கோட்டையில் பதிவர் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன நண்பரே
விடுமுறை நாளில்தான் நிச்சயம் நடக்கும்
வாருங்கள் சந்திப்போம்
நன்றி நண்பரே
கடந்த ஆண்டு முத்துநிலவன் ஐயா வீட்டில் ஒரு சில மணிநேரங்கள் இருந்த அனுபவம் மறக்க முடியாதது. ஈமையான சந்திப்பிற்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குVery nice.happy marriage day to ayya.thanks.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇனியதோர் சந்திப்பு. உங்கள் பதிவு மூலம் நாங்களும் அங்கே இருந்த உணர்வு....
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நன்றி ஐயா
நீக்குநல்லதொரு சந்திப்பினை பதிவினில் கண்டு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்!..
நன்றி ஐயா
நீக்குஇனிய சந்திப்பு அருமையாகப் பதிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குகவிஞருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
வாசிக்க நான் சந்தித்தது போல மகிழ்ந்தேன்.
நன்றி சகோதரியாரே
நீக்குஇனியதோர் சந்திப்பு....வலைத்தள ஜாம்பவான்கள்....அருமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள் உங்களது நடையில்...
பதிலளிநீக்குகவிஞர் அவர்களுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துகள்!
good meeting; good sharing
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமுத்துநிலவன் ஐயாவுக்கு இனிய திருமணநாள் நள்வாழ்த்துக்கள். பதிவை வாசிக்கும் போதே ஆனந்த சிலிர்ப்பு! எல்லோரையும் நானும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கு ! அருமையான தொகுப்பு கரந்தை ஐயா!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇப்படி வாரநாட்களில் சந்தித்துகொண்டால் என்னால் வரமுடியாமல் போய்விடுகிறது:(( குட்டீஸ்க்கு வீட்டுப்பாடம் முடிக்கணுமே:( ஆனாலும் நீங்க அண்ணா வீட்டில் நடத்திய சந்திப்பு மிகவும் இனிமையானது இல்லையா அண்ணா!
பதிலளிநீக்குசந்திப்பு இனிமையானது சகோதரியாரே
நீக்குநன்றி
அன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குவணக்கம். இனிய நிகழ்வு. வாழ்த்துக்கள்.
என் நெஞ்சம் நிறை திருமணநாள் வாழ்த்துக்கள் திரு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு உங்களின் வலைப்பக்கம் வழியாக. எக்கர் மணலினும் பலவே என்று சங்க இலக்கியம் வாழ்த்தும். நானும் அப்படியே ஐயாவை வாழ்த்துகிறேன். அவரின் இருப்பு தமிழின் சிறப்பு. வாழ்த்துக்கள்.
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா
நீக்குஅவரின் இருப்பு தமிழின் சிறப்பு
நன்றி ஐயா
அன்று புதுக்கோட்டையில், கவிஞர் ஆசிரியர் முத்துநிலவன் அய்யா வீட்டில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பினை வாழ்வில் ஒரு இனிய நாள் என்று நினைக்கின்றேன். உங்கள் பதிவு அந்த இனிய நாளின் நினைவுகளை அசை போட வைத்து விட்டது.
பதிலளிநீக்குஎன்னைப் பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி. போட்டோக் கலையில் வல்லவர்களான வெங்கட் நாகராஜ், ராமலட்சுமி, துளசி கோபால் – என்று பல பதிவர்கள் நம்மிடையே உண்டு. அவர்களோடு ஒப்பிட்டால் நான் ஒரு சிறு துளி.
இது போன்ற கூட்டங்களை காலையில் நடத்தினால், வெளியூரிலிருந்து வந்து செல்லும் என் போன்றவர்களுக்கு சிரமம் இருக்காது. ( இது ஒரு ஆலோசனை மட்டுமே)
அய்யா முத்துநிலவன் அவர்களுக்கு எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
த.ம.7
தாங்கள், தங்களின் உடல் நிலையினையும் பொருட்படுத்தாது, இச்சந்திப்பில் கலந்து கொண்டது மட்டில்லா மகிழ்வினை அளித்தது ஐயா
நீக்கு///இது போன்ற கூட்டங்களை காலையில் நடத்தினால், வெளியூரிலிருந்து வந்து செல்லும் என் போன்றவர்களுக்கு சிரமம் இருக்காது.///
உண்மைதான் ஐயா இனி வரும் காலங்களில் இக் கருத்தைஅனைவருமே மனதில் ஏந்துவோம் ஐயா
நன்றி
வழக்கம் போல தங்களின் அருமையான நடையில் பகிர்ந்தமை சந்திப்பை இனிக்கச் செய்தது! நன்றி! கவிஞருக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்! இன்று அவர் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவழக்கம் போல தங்களின் அருமையான நடையில் பகிர்ந்தமை சந்திப்பை இனிக்கச் செய்தது! நன்றி! கவிஞருக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்! இன்று அவர் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.
பதிலளிநீக்குந்ன்றி நண்பரே
நீக்குதங்களுக்கும் திரு முத்துநிலவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குநமது புதுக்கோட்டை சந்திப்பினை மிக நேர்த்தியாக, விறுவிறுப்பாக, அழகான புகைப்படங்களுடன் பகிர்ந்தமையறிந்து மகிழ்கின்றேன். நண்பர்களுடன் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்த அந்த பொழுது என்றும் நினைவை விட்டு அகலாது. திரு முத்துநிலவன் தம்பதியருக்கு மண நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநினைவினை விட்டு நீங்காத சந்திப்புதான்
நீக்குநன்றி ஐயா
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
தங்களின் சந்திப்பு இனிதாக நடை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
த.ம.8
-நன்றி-
-அனபுடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குகவிஞரின் இல்லத்துக்கு எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றி. முகத்தில் மீசை வைத்திருப்பது எமக்குத் தெரியும். மீசைக்குள் முகத்தை வைத்திருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது. பாராட்டுக்கள்...உடுவை
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குகில்லர்ஜி தமிழக விஜயம் ,பழனி டாக்டரைப் போல் ...ஒவ்வொரு ஊராய் சென்று கலக்கிக் கொண்டிருக்கிறாரே :)
பதிலளிநீக்குஆமாம் நண்பரே
நீக்குநன்றி
காட்சிகளைக் காணும் போது அகம் மகிழ்கிறது அய்யா. நான் தான் கலந்து கொள்ள முடியாத சூழல். திருமண நாளைக் கொண்டாட ஊருக்கு வந்து விட்டேன். வலைப்பக்கம் தந்த நட்பெல்லாம் குடும்ப உறவுகளாக மாறி வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி
பதிலளிநீக்குஆகா தங்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்
நீக்குஇனிமையான சந்திப்பாக இருக்கிறதே, படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா .
பதிலளிநீக்குநிலவன் அண்ணாவிற்கும் அண்ணிக்கும் திருமண நாள் வாழ்த்துகள்
நன்றி சகோதரியாரே
நீக்குThanks a lot for introducing great tamil writers.I am strugling to gear up 'Sarithiram padaikka thayarahum Sannanallur"I hope to meet all of you when the function finally takes shape.
பதிலளிநீக்குThanks Mr.Jayakumar
நன்றி ஐயா
நீக்குமறக்க முடியாத சந்திப்பு அண்ணா
பதிலளிநீக்குஉண்மை சகோதரியாரே உண்மை
நீக்குஇவ்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த
மீசைக்கார நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு த்தான்
நன்றி சொல்ல வேண்டும்
குறைந்த நேரமே உங்களுடன் இருக்க முடிந்தது ...
பதிலளிநீக்குஅந்த வருத்தம் இன்னும் இருக்கிறது
சந்திப்பில் கலக்குவோம்
அடுத்த சந்திப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே
நீக்குநன்றி
தம +
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇனிமையான நிகழ்வு ஐயா... அதை தொகுத்த விதம் மிகவும் அருமை...
பதிலளிநீக்குபடச் சித்தருக்கு பாராட்டுகள்... நம்ம கவிஞருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்...
நன்றி ஐயா
நீக்குகவிஞர் அவர்களின் இல்லத்தில் கவிஞற்கள் கல்வி வல்லுனர்கள் நிறைந்த இந்த இனிய சந்திப்பை படங்களுடன் அழகாக அருமையாக தொகுத்து பகிர்ந்ததற்கு நன்றி .
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குஅழகிய புகைப்படங்களில் அருமையான தருனத்தை அடக்கி பதிவாக்கிய உமக்கு நன்றிகள்,
கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
நன்றி சகோதரியாரே
நீக்குஇனியதொரு சந்திப்பு பற்றி அறியத்தந்தீர்கள் .நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஇனியதொரு சந்திப்பு என்பதை உங்களின் எழுத்துக்களும் புகைப்படங்களும் சொல்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவலையுலகம் இவ்வளவு பெரியதா! இவ்வளவு வலியதா!
பதிலளிநீக்குகவிஞர் முத்து நிலவன் அவர்களை உங்களோடு வந்து நானும் சந்தித்ததாகவே உணர்கிறேன். படங்கள் அருமை.
இணையருக்கு இனியனின் இனிய மண நாள் வாழ்த்துகள்.
உலகெங்கினும் உன்னத உறவுகளை ஏற்படுத்தித் தரும்
நீக்குஉயர்ந்த பூ அல்லவா வலைப் பூ
நன்றி ஐயா