27 நவம்பர் 2021

அரசு கவிதைகள்

 


நீ …

எங்கள் வியப்புகளின்

குறியீடு.

மாதச் சம்பளம் எல்லாம்

வட்டியில் வடிந்தபோது

அம்மா மட்டும்

பரவாயில்லை

முதல் இருக்கிறதே

என்றது யாரை?

  

தந்தையைப் பற்றி இவர் எழுத்தில் வடித்திருப்பதைப் படிக்கும் பொழுது, நம் புருவமும், நம்மை அறியாமல், தானே உயர்கிறது.

     மனதில் தந்தையின் நினைவு, சுயமாய் எழுந்து உள்ளத்தை அழுத்துகிறது.

நான் …

இரண்டு கால்களால்

அர்த்தமற்று அலைகிறேன்.

நீயோ …

ஒற்றைக் காலில் நின்று

தவமிருக்கும்

ஓங்கி உயர்ந்த ஞானி.

நீ பூப்பதும் காய்ப்பதும் பின்

பக்குவமாய் கனியச் செய்து

பூமிக்கு வழங்குவதும்.

 

என்னை மன்னித்துவிடு

நான் அவசரப்பட்டு

கல்லெறிந்து விட்டேன்.

 

யார் சொன்னது?

நீ அஃறினை என்றும்

நான் உயர்திணை என்றும்

யார் சொன்னது?

     மழலையாய் பிறந்து, இலக்கின்றி வளர்ந்து, வாழ்ந்த சுவடு தெரியாமல் அழியும் மனிதர்களை, எப்படி உயர்திணை என்று அழைப்பது என்னும் கவிஞரின் கேள்வியில் தெறிக்கும் உண்மை, நம்மைச் சுடுகிறது அல்லவா?

நாளைக்குள்

ஒரு குற்றத்தை சுமத்த

வினாடிகளில்

விபரம் சேகரிக்கிறது.

 

ஒரே ஒரு சொல்

கிடைத்தபோது

ஒத்த சொற்களையும்

ஒட்ட வைத்து

அர்த்தம் புகுத்துகிறது.

 

விடிவதற்குள்

ஒன்று நீ

இல்லை நான் என்று

வெங்குருதி கொதிக்கிறது.

     இயல்பான பேச்சில் வெளிப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும், புதுப் புது அர்த்தம் கொடுத்து, பிரிவினைக்கு வழி வகுக்கும், சிற்றறிவு மனிதர்களின், காழ்ப்புணர்வு எண்ணங்களால், குடும்ப உறவுகள் சிதைந்துபோவதை, வேதனையோடு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

     கணவன் மனைவி இருவருமே சம்பாதிக்கப் பறக்கும், இக்காலத்தில், அவர்களுக்குள் எழும் பிரிவு வேதனையை எழுத்தில் வடித்து கலங்க வைக்கிறார்.

என் வேலைநாட்கள் போல்

எனக்கு நீ

கடிதம் எழுதிக்கொண்டிரு.

என் விடுமுறைகள் போல்

என்னை மடியில் தூங்கவிடு.

 

நீயும் வேலையில்

நானும் வேலையில்

நம் காதல் நிலையும்

இப்படியொரு

வலையில்.

     இவரும் தன் குடும்பத்திற்குப் பொருளீட்டுவதற்காகத், தன் குடும்பத்தைப் பிரிந்து, அயலகம் பறந்தவர்தான்.

     பிரிவின் வலியை உணர்ந்தவர்தான்.

     அயலகத்தில் செல்வத்தோடு, கெழுதகை நட்புகளையும் சேர்த்தே சம்பாதித்தவர் இவர்.

நாம்

ஏமாறவில்லை.

இலாபமும் அடையவில்லை.

கையைக் கடிக்கும்படி

நமக்குள் வைபவங்கள்

நிகழவில்லை.

 

நம் என்ன உறவினர்களா என்ன?

புறம்பேசி கெடுத்துக் கொள்ள.

     இவர் பதினாறு ஆண்டுகள், சிங்கப்பூரில் பேராசிரியராய் பணியாற்றியவர்.

     பேராசிரியராய் பணியாற்றிய காலத்தில், திங்கள்தோறும், சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழில், கவிதைகளை எழுதிக் குவித்தவர்.

     ஒவ்வொரு கவிதையிலும், இவர் தன் உள்ளத்து உணர்வுகளை இறக்கி வைத்திருக்கிறார்.

     எனக்கு ஓர் ஆசை.

     இவரது கவிதைகள் எல்லாம் தொகுக்கப்பெற்று, தனியொரு நூலாய் அச்சு வாகனம் ஏறவேண்டும் என்பது என் ஆசை.

இவர்தான்,


கவிஞர் ப.திருநாவுக்கரசு.

28 கருத்துகள்:

  1. அருமை. நூலாக வெளியிடலாம். வாழ்வின் இடரும் இயக்கமும்தானே கவிதை.

    பதிலளிநீக்கு
  2. அரசு செய்கிறாரோ இல்லையோ தங்களைப் போன்றவர்தான் முன்னெடுக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் செயலினை முன்னெடுத்து நூலாக்குவோம் ஐயா
      நன்றி

      நீக்கு
  3. அன்பு நண்பரே, தங்கள் அத்தானின் அருங்கவிதைகளை அழகுற தொகுத்து நூலாக வெளியிடும் வல்லமை தங்களுக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவோம். எனவே அதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. கவி வரிகள் அருமை... விரைவில் நூலாக மலரட்டும்...

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நூலாக வெளி வர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான சிந்தனைகளில் கவிதைகள் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  7. அருமை. விரைவில் நூலாக வெளிவர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமை. விரைவில் நூலாக வெளிவர வாழ்த்துகள்- ஶ்ரீதரன்

    பதிலளிநீக்கு
  9. வார்த்தைகள் அழகாக சேர்கிறது இவரது கவிதையில்...

    பதிலளிநீக்கு
  10. உங்களது எண்ணம் ஈடேறும் என நம்புகிறேன். உங்கள் வேண்டுகோளை என் வேண்டுகோளாகவும் அவரிடம் வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதைகள். நன்றி

    பதிலளிநீக்கு
  12. அருமை நண்பரே. விரைவில் நூல் வெளியிடப்பாட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. கவிதைகள் மிக வித்தியாசமாக ரசிக்க வைக்கின்றன.

    //நாளைக்குள்

    ஒரு குற்றத்தை சுமத்த

    வினாடிகளில்

    விபரம் சேகரிக்கிறது.



    ஒரே ஒரு சொல்

    கிடைத்தபோது

    ஒத்த சொற்களையும்

    ஒட்ட வைத்து

    அர்த்தம் புகுத்துகிறது.//

    மிகவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கவிதைகள் ரசிக்க வைக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு