சாதனையாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதனையாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மார்ச் 2026

கனவில் வந்தவர்

 

 

      மருத்துவர்.

     அவர் ஒரு மருத்துவர்.

     ஆங்கில மருத்துவர்.

     அறுவை சிகிச்சை மருத்துவர்.

02 மார்ச் 2026

நெற்றிக்கண் திறப்பினும்

 

இலஞ்சம்.

ஊழல்.

இவற்றிற்கு எதிராக, கடுமையானச் சட்டங்கள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன.

இருப்பினும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பிரச்சினை.

24 பிப்ரவரி 2026

வாத்து முட்டை


      வகுப்பறை.

     ஆசிரியை ராஜாமணி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

     அப்பொழுது கோபத்துடன் வந்தார் ஒரு தாய்.

     என் பையனை வெளியில் அனுப்புங்க

29 ஜூலை 2025

தன்னைத்தானே எழுதிக்கொண்ட கதை

 

     ஆண்டு 1852.

     அமெரிக்கா.

     அது ஒரு பதிப்பகம்.

     அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.

     அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.

     பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.

20 ஜூன் 2025

சாம்பலில் இருந்து எழுந்தவர்


     திருப்பதி சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா.

     திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான், நண்பர்கள் பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து, தஞ்சைக் கரந்தையில் இருந்து, ஒரு வேனில் திருப்பதி புறப்பட்டனர்.

     வழியில் ஒரு திருப்பம் வந்தது.

     வெகுவேகமாய் ஒரு பேருந்தும் வந்தது.

23 ஜனவரி 2021

பட்டத்து யானை


அன்புநிறை சிவா,

     அளவு கடந்த மகிழ்ச்சி.

     எண்ணிலடங்காத் துறைகளில் தேர்ச்சி, திறமை உடையவர் நீங்கள்.

     கண்டு மகிழ்வார் இல்லாக் கலைப் படைப்பைப் போலவே இருந்து கொண்டிருந்தீர்கள்.

     ஒரு பரிசு, எப்படியோ, திடுக்கிட்டு விழித்து, உங்களை கட்டி அணைத்திருக்கிறது.

     ஓர் ஆறுதல், அவ்வளவே.

     பட்டத்து யானைக்கு, ஒரு பொட்டலம் கடலை கிடைத்திருக்கிறது.

     எனினும் இது உங்களோடு உள்ளவர்களுக்கு, உவப்பைக் கொடுத்து, உங்களை உணர சிறு வாய்ப்பு.

     ஆயினும், பெரு மகிழ்ச்சி.

     வாழ்க சிவா.

    

27 ஜனவரி 2018

முதுகுன்றனார்



     ஆண்டு 1957,

     தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி

     ஒரு கிராமத்துச் சிறுவன், தன் தந்தையுடன் அலுவலகத்தில் காத்திருக்கிறான்.

      திருவையாறு, சீனிவாசராகவா உயர்நிலைப் பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை முடித்தவன். பூண்டி கல்லூரியில், புதுமுக வகுப்பில் சேருவதற்காகக் காத்திருக்கிறான்.

       அலுவலர் ஒருவர், இம்மாணவனது, மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்த்துவிட்டு, முகம் சுழித்து, இந்த மார்க்குக்கு இங்கே இடம் கிடையாது என்கிறார்.

        தந்தையோ, அலுவலரிடம் கெஞ்சுகிறார், என் மகனைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என மன்றாடுகிறார்.

        முடியாது  உறுதியாய் மறுத்துவிடுகிறார் அலுவலர்.

        சிறிது நேரம் யோசித்த தந்தை, தன் மகனைப் பார்த்தார்.

வாடா, இந்த காலேஜ் இப்ப வந்ததுதாண்டா. இது வராததற்கு முன்பிருந்தவன் எல்லாம், செத்தா போயிட்டான். ஏர் இருக்கு, கலப்பை இருக்கு. நீ நல்ல மனுசனா பிழைச்சுக்கலாம்டா. கவலைப் படாதே வா.

11 நவம்பர் 2017

யாரது, யாரது, தங்கமா?




     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

     தாராசுரம் புகை வண்டி நிலையம்.

     சிறுவர்கள்

     பதினைந்து வயதுள்ள சிறுவர்கள் பலர், புகை வண்டி நிலையத்தின், அகன்று விரிந்த, மரங்களின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள்.

09 ஜூன் 2017

கலிலுல்லா




     டவுன் சிண்ட்ரோம்

     Down Syndrome

     தாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம் துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.

      அணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது, ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந் துயரங்களைச் சுமந்த பிள்ளைகளை உலகிற்கு வழங்கி விடுகின்றன.

05 ஜூலை 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
என்று பாடுவார் ஔவையார். அந்த அரிதினும் அரிதான மானிடப் பிறவியில், பிறவிக் குறைபாடுடன் பிறந்தவன் நான்.

     விழியிருந்தும் பயனில்லாக் குழந்தையாய் பிறந்தேன். பெற்றோர் இருவரும், என் விழிகளாய் இருந்து என்னைக் காத்தனர்.

     தமிழ் வழியில் படித்தேன். பார்வை அற்றோருக்கானப் பள்ளியில் படித்தேன். வளர்ந்தேன், தன்னம்பிக்கையோடு வளர்ந்தேன்.

    விழி இல்லா விட்டால் என்ன, வழி இல்லாமலா போய்விடும்.

06 ஜூன் 2016

அசல் மனிதர்



சட்டசபை உறுப்பினர்கள் சொல்கிற சிபாரிசுகளைப் புறக்கணித்து விடுங்கள். மக்கள் குறைகளைக் கேட்டு, அந்தக் குறைகளை நிவர்த்திக்க வேண்டும். மனசாட்சிக்கு எது சரியோ அதை மட்டும் செய்யுங்கள். தூய்மையான நிர்வாகத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள்.

எம்.எல்ஏ., தலையிட்டார், மந்திரி சொன்னார், அதற்காகத்தான் இப்படி உத்தரவு பிறப்பித்தேன் என்று சொல்லக் கூடாது.

31 மே 2016

திரை வள்ளல்


    

ஆண்டு 1957,

     சென்னை.

     அது ஒரு மருத்துவமனை.

     மஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கத்தால் பாதிக்கப் பட்ட, அம் மனிதர், இம் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டுள்ளார்.

       இம்மனிதர் மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்தே, மருத்துவமனை வளாகம் எங்கும், எப்பொழுதும் ஓரே கூட்டம்.

27 ஏப்ரல் 2016

தியாகத்தின் திருஉரு



    ஆண்டு 1919. அன்னியர் ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த தேசம் அது. சீர்திருத்தச் சட்டம் ஒன்றினை இயற்றிய அன்னியர்கள், அச் சட்டத்தின்படி, மாகாண, மத்திய சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.

     1920 இல் தேர்தலும் நடைபெற்றது. தேசிய அளவிலான கட்சியும், மாகாண அளவிலான கட்சியும் தேர்தலை எதிர் கொண்டன.

      கல்வியில், வேலை வாய்ப்பில், சமூகத்தில் உரிமை வேண்டும், சமமாய் உரிமை வேண்டும், சம உரிமை வேண்டும் என்று உரத்துக் கூறி, மனித தர்மமே இன்றைய தேவை என முழங்கியது மாகாணக் கட்சி.

25 மார்ச் 2016

மது விலக்கு நாயகர்




     ஆண்டு 1947, மார்ச் 23.

      தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் மகத்தான ஆதரவுடன், அம்மனிதர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்ற நாள். நாட்டின் வரலாற்றில் ஒரு பொன்னாள்.

     பதவி ஏற்றவுடன் கட்சிக்காரர்களை அழைத்தார். உத்தரவு போட்டார்.

    பாராட்டு விழாக்கள் கூடாது, கூடவே கூடாது.

06 ஜனவரி 2016

இப்படிக்கு... கண்ணம்மா




ஆண்டு 2003. இரவு 11.00 மணி. தஞ்சாவூர், கரந்தையில் இருந்து அந்த வேன் புறப்படுகிறது.

    கரந்தைக் கடைத் தெருவில் வீற்றிருக்கும், மீனாட்சி அம்மனை வழிபட்டு, வேனின் நான்கு சக்கரங்களுக்குக் கீழேயும், எழும்பிச்சைப் பழங்களை வைத்து, வேனுக்குச் சூடம் ஏற்றி, தீப ஆராதனை செய்து, ஒரு சிதற் தேங்காயினையும் உடைத்து விட்டு, அனைவரும் வேனில் ஏறிப் புறப்பட்டனர்.

     மொத்தம் 12 பேர். அனைவருமே இருபது அல்லது இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞர்கள்.

28 டிசம்பர் 2015

விக்ரமம்



     நண்பர்களே, கடந்த 4.1.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில், என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

     இருபதாண்டுகால நண்பர். உழைப்பின் உறைவிடம். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தட்டச்சராய் நுழைந்து, பணியோடு கல்வியிலும் உயர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, இன்று கண்காணிப்பாளராய் பணியாற்றி வருபவர்.

24 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 7





ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதேபரிந்துஎடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
                         பட்டினத்தார்

வாரணாசி,
4.4.1970
அண்ணன் அவர்களுக்கு,

        விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, எதுவுமே பேசாமல் இருக்கிறாயே என்று எல்லோரும் கேட்டீர்கள். என்ன பேசுவது என்று தோன்றாததால்தான் மௌனம் சாதித்தேன்.

      ஆனாலும் நானும் மனிதன்தானே, மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிக் குமுறல்களை முறையாக வெளிப் படுத்தாவிட்டால், ஒரு பூகம்பம் போல் வெடித்துச் சிதறிப் போய் விடுவேனோ என்று பயப்படுகிறேன்.

19 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 6





பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
                                       பட்டினத்தார்

       அறையின் கதவு மெதுவாய், மிக மெதுவாய் திறக்கப்படும் ஓசை மெல்ல மெல்ல காதுகளை வந்தடைய, மெதுவாய் கண்களைத் திறந்தார்.

எதிரில் அம்மா.

       மெதுவாக, மிக மெதுவாக அடிமேல் அடி வைத்து, கட்டிலை நெருங்குகிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதே, எப்படியம்மா இங்கு வந்தாய்?