19 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 6





பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
                                       பட்டினத்தார்

       அறையின் கதவு மெதுவாய், மிக மெதுவாய் திறக்கப்படும் ஓசை மெல்ல மெல்ல காதுகளை வந்தடைய, மெதுவாய் கண்களைத் திறந்தார்.

எதிரில் அம்மா.

       மெதுவாக, மிக மெதுவாக அடிமேல் அடி வைத்து, கட்டிலை நெருங்குகிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதே, எப்படியம்மா இங்கு வந்தாய்?

என்னவோ போவதற்கு முன் உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதுதான் வந்தேன். நீ நன்றாக இருப்பாய். எதற்கும் கவலைப் படாதே.

      கேப்டன் கணேசன் மெல்லத் தன் கரம் உயர்த்தி, தாயின் அன்புக் கரங்களைப் பற்றிக் கொள்ள முயல்கிறார். முடியவில்லை. தாயின் கரங்கள் நீண்டிருந்தாலும் தொட முடியவில்லை.

      சற்றே எக்கி கைகளைத் தொட முயன்ற போதுதான், திடுக்கிட்டு விழித்தார்.

      கண்டது கனவா?

      மெய் சிலிர்க்க எழுந்து அமர்ந்தார். நெஞ்சினில் படபடப்பு, உடலெடங்கும் வியர்வை வெள்ளம்.

தாயே, நான், உன்னைக் காண வராததால்,
என்னைத் தேடி வந்தாயோ?
தாங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் தாயே,
நூறாண்டு வாழ்வீர்கள்
தங்களைக் காண விரைவில் வருவேன் தாயே,
விரைவில் வருவேன்

     மீதமிருந்த அன்றைய இரவு, உறங்கா இரவாகவே கழிந்தது.

     பகல் பொழுது புலர்ந்ததும், வழக்கம் போல் அலுவலகம் சென்றார்.

     பிற்பகல் 3.30 மணி. இரண்டாவது தந்தி வந்தது.

அம்மா இறந்துவிட்டார்

     25 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு, சன்னா நல்லூரில் கொடுக்கப் பெற்ற தந்தி, ஆமை போல் ஊர்ந்து வந்து, பிற்பகல் 3.30 மணிக்குத்தான் மேகாலயாவை வந்தடைந்திருக்கிறது.

      இதை விடப் பெரிய கொடுமை ஒன்றும், கேப்டன் அறியாமலேயே அன்று அரங்கேறிக் கொண்டிருந்தது.

அம்மா கவலைக்கிடம்

என்று தந்தி வந்ததும், விடுமுறை மறுக்கப் பட்ட நிலையில்,
என்னால் விடுமுறையில் வர இயலாது, இறைவன் அருள் நமக்கு இருக்கும்
என்று 24ஆம் தேதி ஒரு தந்தி அனுப்பினார் அல்லவா.

     அந்தத் தந்தி ஆமையினும் மெதுவாய், மிக மெதுவாய் ஊர்ந்து சென்று, அடுத்த நாள் 25 ஆம் தேதி பிற்பகல்தான் சன்னா நல்லூரைச் சென்றடைந்தது.

அம்மா இறந்துவிட்டார்

என 25 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு அனுப்பிய தந்திக்கு, பதில் தந்திதான் இது என்று எண்ணிய கேப்டனின் சகோதரர்கள், கணேசன் வரமாட்டார் என நினைத்து, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.


கடிதங்கள் தொடரும்






57 கருத்துகள்:

  1. என்ன கொடுமை! கண்கள் கலங்குவதைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. இவ்வாறான இக்கட்டான நிலை எவர் ஒருவருக்கும் நிகழக்கூடாது. இருந்தாலும் இவ்வாறான பணி நிலையில் பணியாற்றுபவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமையும்.

    பதிலளிநீக்கு
  3. வேதனையான வரிகள் இந்த வகையான துன்பங்களை பல ராணுவவீரர்கள் அனுபவித்து இருக்கின்றார்கள் நாட்டுக்காக....
    ஆனால் துளியளவும் கஷ்டமின்றி இன்றைய அரசியல்வாதிகள் கொழுத்து வாழ்க்கின்றார்கள்
    வீரனின் வரலாறை அறிய தொடர்கிறேன் நண்பரே..
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  4. மன்னிக்க முடியாத கொடுமை! அந்த அதிகாரியை கடவுள மன்னிப்பாரா?

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம் கொடுமையிலும் கொடுமை. வேதனை...மனம் கலங்கிவிட்டது நண்பரே! கண்கள் பனித்துவிட்டன வாசிக்கும் போது...

    பதிலளிநீக்கு
  6. மனம் ஒன்றிய நிலையில் நாம் விரும்பும் ஒருவர் நம்மைக் காண வந்தது போன்ற செய்திகளைக் கேட்டிருக்கிறேன் அதீத அன்பு அல்லது அபிமானம் என்றுதான் சொல்ல வேண்டும் விடுமுறையை மறுத்த மேலதிகாரி வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார் வாய்ப்பில்லை. நான் பணியில் இருந்தபோது ஒருவரின் விடுமுறை வேண்டுகோளை நிராகரித்தேன் அப்போது அவரும் அதற்கு உடன் பட்டார் . ஆனால் அவரால் அந்திமத்தில் இருந்த ஒரு உறவினரைக் காண் முடியாமல் அதற்குப் பிற்காலத்தில் என்னைக் குறை கூறினார்

    பதிலளிநீக்கு
  7. மனம் பாரமாக இருந்தது..

    பதிலளிநீக்கு
  8. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    உலகில் யாருக்கும் வரக்கூடாத சூழல் இது. நமது கர்னல் அவர்களுக்கு வந்திருக்கிறது. வாசிக்கும் நமக்கே மனம் பதட்டமடைகிறது எனில் கர்னலுக்கு எப்படி இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    உலகில் யாருக்கும் வரக்கூடாத சூழல் இது. நமது கர்னல் அவர்களுக்கு வந்திருக்கிறது. வாசிக்கும் நமக்கே மனம் பதட்டமடைகிறது எனில் கர்னலுக்கு எப்படி இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. பட்டினத்தார் பாடல் சூழலுக்கு மிகப் பொருத்தம்

    பதிலளிநீக்கு
  11. பட்டினத்தார் பாடல் சூழலுக்கு மிகப் பொருத்தம்

    பதிலளிநீக்கு
  12. காலக்கொடுமை என்பது இதுதான். இன்றுபோல் அன்று, செல்போன் வசதி போன்ற, தகவல் தொழில்நுட்பம் இல்லாத நேரம் அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத காலம் அது
      நன்றி ஐயா

      நீக்கு
  13. இப்படியெல்லாம் இருந்தவர்களை கடவுளாகக்கூடப்பார்க்க வேண்டாம்.மனிதனாகப்பார்ப்பதே மிகப்பெரிய காரியம்/

    பதிலளிநீக்கு
  14. கண்கள் கலங்குகின்றன. உருக்கமான விவரிப்பு

    பதிலளிநீக்கு
  15. எழுத வார்த்தைகள் இல்லா பாரம் இது. மனதை கணக்கா வைத்த பதிவு! அடுத்ததை அறிய தொடர்கிறேன்.
    த ம 9

    பதிலளிநீக்கு
  16. பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
    என்ற பட்டினத்தார் வரிகளுடன்
    ஈற்றில் துயரம் தந்தாலும்
    அருமையான தொடர்!

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  17. எல்லை காத்து நிற்பவர்களுக்கும் எத்தனை எத்தனை துயரங்கள்..

    பதிலளிநீக்கு
  18. #கணேசன் வரமாட்டார் என நினைத்து, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.#இறுதிச் சடங்கில் வந்து கலந்து கொண்டாரா அறிய ஆவலோடு இருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  19. தொலை தொடர்பென்பது சிரமமாக இருந்த காலக் கட்டம். கலங்க வைக்கும் துயரமான நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  20. மனது கனமாகிறது! பட்டின‌த்தாரின் பாடல் அதை மேலும் அதிகமாக்குகிறது!
    என் மாமனார் இறந்த போது அவர்களின் இரண்டாவது மகன் இப்படித்தான் அஸ்ஸாமிலிருந்து வர இயலாமல் போனது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலச் சூழல்கள் சில சமயம் அவ்வாறு அமைந்து விடுகின்றன
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  21. எல்லை காக்கும் வீரர்களுக்குத்தான் எத்தனை எல்லையில்லா துன்பம்! கலங்க வைக்கிறது! முந்தைய பகுதிகளை பிறகு வாசிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. I expected and guessed it what it was.Because it was inevitable to those who serve for others.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்
    ஐயா

    பதிவை படித்த போது கண் கலகி விட்டது.. மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. மனது கனமாகிறது. இதைதான் விதி என்பதா?

    பதிலளிநீக்கு
  25. மாவீரனுக்கா இந்த சோதனை அவர் தாய் இறந்ததும் மகனை அல்லவா தேடி வந்து இருக்கிறார் .........நெஞ்சை உருக்கிய கட்டமிது தொடருங்கள் தொடர்கிறேன்
    தம +1

    பதிலளிநீக்கு
  26. விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது ?...உடுவை

    பதிலளிநீக்கு
  27. ராணுவப் பணியில் இருப்பவர்களின் தியாகங்கள் அளப்பரியவை! மிக அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  28. அருமை நண்பரே, பல வேலைகளால் தாமதம்.... மீண்டு வந்ததும் உங்கள் பதிவை பார்த்தேன்...மனசு மிகவும் உருக்கமானது..

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு