பஞ்சமும்
நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில்
மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்தபின்
கை விடலாமோ?
தாயுந்தன்
குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென்றருள்
செயுங் கடமையிலாயோ?
பாரதி
கேப்டன் கணேசன் அவர்களின் தலைமைப் பொறியாளர்
அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மேஜர் ஒருவருக்கு, திண்டுக்கல்லில் திருமணம்
நடைபெற இருந்தது. எனவே அவர் விடுமுறையில் சென்று விட்டார்.
இந்நிலையில்தான் கேப்டன் கணேசன்
அவர்களுக்கு, சன்னா நல்லூரில் இருந்து தந்தி வந்தது.
அம்மா
கவலைக்கிடம்.
கேப்டன் கணேசன் பதறித்தான் போனார்.
தனது தாயாரின் உடல் நிலை மெல்ல, மெல்ல
உருக்குலைந்து வருவதாக, இதுவரைப் பல கடிதங்கள் வந்துவிட்டன. ஆனாலும் பணி, பணி
என்றே கதியாய் கிடந்த கேப்டன், விடுப்பு கேட்க மனமின்றி, உழைப்பில் ஒன்றிப்
போனார்.
அம்மா
கவலைக்கிடம்
தன் இரு கைகளையும், கன்னத்தில் ஒரு சேர வைத்து,
அன்பாக, கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய வழிய, பாசத்தோடு வருடி விடுவாரே, அந்த
பாசமிகு அன்னையை, நேசமிகு தாயை உடனே பார்த்தே ஆக வேண்டும்.
உள்ளம் துடியாய் துடித்தது.
சற்றும் தாமதியாமல், விடுப்புக் கடிதம்
ஒன்றினை எழுதிக் கொண்டு, தனது மேலதிகாரியைப் பார்க்கச் சென்றார்.
மேலதிகாரியோ எரிந்து விழுந்தார்.
பொறுப்பற்ற வார்த்தைகளை உதிர்த்தார்.
திண்டுக்கல்லில்
நடைபெற இருக்கும், மேஜரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, பொய்யான தகவல்களுடன்
வந்திருக்கிறீர்கள். விடுப்பு மறுக்கப் படுகிறது.
கேப்டன் நொறுங்கித்தான் போனார்.
என்னால்
விடுமுறையில் வர இயலாது. இறைவன் அருள் நமக்கு இருக்கும்.
சன்னா நல்லூருக்கு தந்தி கொடுத்து விட்டு,
தன் அறைக்குத் திரும்பினார்.
தலை எங்கும் ஒரு விநோதமான வலி வந்து
குடியேறியது. காதுகளின் பக்கமெல்லாம் மெல்ல மெல்ல ஒரு
சூடு ஏறியது. மூளையே கலங்கியது போன்ற ஓர் உணர்வு. படுக்கையில் விழுந்தார்.
விடியற் காலை நேரம்.
அறையின் கதவு மெதுவாய், மிக மெதுவாய்
திறக்கப்படும் ஓசை மெல்ல மெல்ல காதுகளை வந்தடைய, மெதுவாய் கண்களைத் திறந்தார்.
எதிரில்
அம்மா.
கடிதங்கள்
தொடரும்
நெஞ்சம் எப்படிப் பதைபதைத்திருக்கும் விடுப்பு மறுத்த போது. "எதிரில் அம்மா"
பதிலளிநீக்குஒரு இராணுவ வீரரின் வாழ்வு எப்படிப் பயணிக்கின்றது என்பதை கர்னலின் மூலம் நீங்கள் அறியத்தருவது அருமை. தொடர்கின்றோம் எதிரில் வந்த அம்மா என்ன சொல்லுகின்றர் என்பதை அறிய.
நன்றி நண்பரே
நீக்குஇவரது மனக் கலக்கத்தை தாய் உணர்ந்திருக்கிறார். தொடருங்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஉண்மை நிகழ்வை ஒரு தொடர்கதை போல் முடித்திருக்கிறீர்கள். அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
பதிலளிநீக்குத ம 2
நன்றி நண்பரே
நீக்குஎல்லைப்புற பதட்டத்தை அப்படியே சொல்கிறது உங்கள் எழுத்து...அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉண்மையில் அம்மாதானா,என்னாலேயே நம்ப முடியலியே :)
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு//எதிரில் அம்மா// பதைக்கிறதே மனம்!!
பதிலளிநீக்குகர்னலின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்
நன்றி சகோதரியாரே
நீக்குஇராணுவ வீரர்களின் துயர் மிகு பக்கத்தை விரிவாக விளக்கியது நெஞ்சம் துணுக்குறச் செய்தது சகோ
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குநாமெல்லாம் பொய்யுறைத்து, எத்தனை விடுமுறைகளை எடுத்திருப்போம். ஆனால் இராணுவத்தில் உண்மையை கூறியும் விடுமுறை கிடைக்கவில்லை என்று தெரியும்பொழுது, மனது வேதனைப்படுகிறது.
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களைச் சந்திக்கின்றேன்
நீக்குமகிழ்ச்சி நண்பரே
அம்மாவின் நினைப்பிலேயே இருந்ததால் கதவு திறந்ததும் அம்மாவே வந்திருப்பது போல் உணர்ந்திருப்பார்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஎதிரில் அம்மா,,,,, அது கனவாய் இருக்க கூடாதே என்று மனம் ஏங்குகிறது,
பதிலளிநீக்குதொடருங்கள்.
நன்றி சகோதரியாரே
நீக்குgood suspense. It might be her spiritual body
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநன்று சகோதரா.
பதிலளிநீக்குவேதாவின் வலை
நன்றி சகோதரியாரே
நீக்குமகன் தாய் இருவரின் மன உணர்சிகளையும் அழகாச் சொல்லும் பதிவு .
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஎதிரில் அம்மா இது கனவாக போய் விடக்கூடாது உண்மையாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குகேப்டன் கணேசன் அவர்களின் வரலாறு அதிசயிக்க வைக்கின்றது தொடர்கின்றேன் நண்பரே...
தமிழ் மணம் 4
நன்றி சகோதரியாரே
நீக்குதாயன்பால் பரிதவிக்கும் தமையனின் உள்ளத்தை எழுத்தில் உணரமுடிகிறது. யாருக்கும் நேரக்கூடாது இதுபோன்ற பரிதாபநிலை..
பதிலளிநீக்குஉண்மைதான்
நீக்குநன்றி சகோதரியாரே
முந்தைய கருத்துரையில் தனயன் என்றிருக்கவேண்டும். தவறுதலாக தமையன் என்று குறிப்பிட்டமைக்காக வருந்துகிறேன்.
பதிலளிநீக்குஅதனால் என்ன
நீக்குநன்றி சகோதரியாரே
Dear KJ It is very nervous to read.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவெளியூரில் காலமாகும் அன்புக்குரியவர்கள் அதே நேரம் தங்கள் அன்புக்குரியவர்களை பார்த்துச் செல்வதாகப் படித்திருக்கிறேன். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதம +1
நன்றி நண்பரே
நீக்குபுரிகிறது அண்ணா...அம்மா நிழலாய்..
பதிலளிநீக்குஆமாம் சகோதரியாரே
நீக்குநன்றி சகோதரியாரே
பலர் தம் வாழ்வில் நடக்கக்கூடாதா என ஏங்குவதைப் போலுள்ளது உங்களது இப்பதிவும், முடிவும்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபத்தாம் வகுப்பு ஆங்கிலப்புத்தகத்தில் 'The One Minute Apology ' என்ற அபிரகாம் லிங்கனைக் குறித்தொரு பாடம் இருக்கிறது. இதே போன்ற துயரச்சூழலில் விடுப்பு மறுக்கப்படும் இராணுவ அதிகாரி குறித்து...
பதிலளிநீக்குதங்கள் பதிவு நினைவூட்டுகிறது.
த ம 6
நன்றி ஐயா
நன்றி நண்பரே
நீக்குராணுவத்தில் சேவை ஆற்றுபவர்கள் எத்தகைய மனக் கலக்கத்தில் இருந்தாலும் தங்களை பணிக்கு முக்கியத்துவம் தருகின்றனர். தியாக உணர்வு மிக்க அவர்க்ளைபோற்ற வார்த்தைகள் இல்லை
பதிலளிநீக்குஉண்மை
நீக்குநன்றி ஐயா
ஒவ்வொரு சமயம் மனம் துடிக்கின்றது..
பதிலளிநீக்குதியாகச் சுடர்களுடன் பயணிக்கின்றோம்..
நன்றி ஐயா
நீக்குமனது துடிக்கிறது. பல சமயங்களில் விடுமுறை மறுக்கப்பட எவ்வளவு கஷ்டம்....
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி ஐயா
நீக்குMother is not a word... it is not a sentence....it is not a relation....it is more.... more than that. nothing can equalize or replace the word. It is a placenta relationship ever pleasant
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஆவலுடன் தொடர்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசிறு வயதில் மர்ம நாவல்கள் படிக்கும்போது சில அத்தியாயங்களின் இறுதியில் திகிலூட்டி மறு அத்தியாயத்தை எப்போது படிப்போம் என்ற ஆவலைத் தூண்டி விடுவார்கள். நீங்களும் அடுத்து வருவதைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள்...உடுவை
பதிலளிநீக்குமனம் மகிழ்கிறது
நீக்குமிக்க நன்றி ஐயா
உணர்வுப்பூர்வமான தொடர்! தொடர்வேன்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஒரு வீரனின் வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கும் நாடா வீடா ?? என்னும் போராட்டத்தில் மனம் மட்டுமே அமைதி இழக்கும் ...மிக நல்ல கதை ஓட்டம் தொடருங்கள் தொடர்கிறேன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
தம +1
நன்றி நண்பரே
நீக்குஅய்யா...
பதிலளிநீக்குஅனைத்து பாகங்களையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்... !
அனைத்துமே மின்னஞ்சலாக மாறிய மேலைநாடுகளில் இன்றும் கடிதக்லை ஒரு பட்ட படிப்பாக உள்ளது ! ...
ராணுவம் என்றாலெ கொல்லமட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட கூட்டம் என்ற " பயம் " நம் சமூகத்தில் உள்ளது ! பிரான்சின் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட கால நினைவுகளை மீட்டுதந்தது தாங்கள் ராணுவத்தின் பல நிலைகளை பற்றி விளக்கிய பகுதி.
சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்து தளர் நடை தொடங்கிய கட்டத்திலேயே சீனாவுடன் போரில் ஈடுபட்ட அனுபவம் இந்திய அரசாங்கத்துக்கு கற்றுத்தந்த பாடங்கள் ஏராளம் !
உங்களின் விளக்கங்களாலும், கடிதத்தின் வர்ணனைகளாலும் ஓர் ஆவணப்பட்ம் பார்க்கும் அனுபவம் கிட்டுகிறது... தன்னலம் பாரா வீர மனிதரின் வரலாற்றை தொடருவோம்
நன்றி
சாமானியன்
நன்றி நண்பரே
நீக்குஉயரதிகாரிகள் மற்றவர்கள் கஷ்டத்தை உணர்வதில்லை. அதற்குச் சிலர் செய்கின்ற துஷ்பிரயோகங்களும் காரணமாகலாம். அம்மா உண்மையாகவே உயிரோடு வந்தாரா?
பதிலளிநீக்குYes! I wanted to make it clear to the viewere/readers It was not a dream.I was in different world where I clearly saw and talked to my mother.When wanted to hold her hand she smiled and dis appeared and I came back to present world.
நீக்குபடபடக்க வைக்கிறது தொடர்
பதிலளிநீக்குஅடுத்து என்ன? அடுத்த பதிவுக்குள் நுழைகின்றேன்.
பதிலளிநீக்குவீட்டைப்பிரிந்து இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது/அனுபவித்துப்
பதிலளிநீக்குபார்த்தவர்களுக்கே அந்த வலி தெரியும்.
சரியான இடத்தில் நிறுத்தி இருக்கீங்க! தொடரக் காத்திருக்கிறேன். ஊரில் இல்லாததால் தாமதமான வருகை!
பதிலளிநீக்குதங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!அனைத்தையும் படித்து கருத்துரை இடுகிறேன்! நன்றி!
பதிலளிநீக்கு