24 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 7

ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதேபரிந்துஎடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
                         பட்டினத்தார்

வாரணாசி,
4.4.1970
அண்ணன் அவர்களுக்கு,

        விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, எதுவுமே பேசாமல் இருக்கிறாயே என்று எல்லோரும் கேட்டீர்கள். என்ன பேசுவது என்று தோன்றாததால்தான் மௌனம் சாதித்தேன்.

      ஆனாலும் நானும் மனிதன்தானே, மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிக் குமுறல்களை முறையாக வெளிப் படுத்தாவிட்டால், ஒரு பூகம்பம் போல் வெடித்துச் சிதறிப் போய் விடுவேனோ என்று பயப்படுகிறேன்.


      உண்மையிலேயே அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்றால், பெரிய அண்ணன் ஒரு தந்தி கொடுத்தால் போதும், புரிந்து கொள்வேன் என்று சொல்லி இருந்தேன்.

      அப்படித்தான் எனக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி Mother Serious என்று தந்தி வந்தது. ஆனால் என் உயர் அதிகாரி, நான் பொய் தந்தி வரவழைத்துள்ளேன் என்று விடுமுறை மறுத்து விட்டார்.

       24ஆம் தேதி நான் ஊருக்கு வர முடியாது என்று உங்களக்கு தந்தி கொடுத்திருந்தேன்.

       அந்த தந்தி உங்களுக்கு 25 ஆம் தேதி மாலைதான் கிடைத்துள்ளது.

        ஆனால் எனது தந்தி உங்களக்குக் கிடைப்பதற்கு முன்பே, 25 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு அம்மா இறந்துவிட்டதாக எனக்கு, இரண்டாவது தந்தி கொடுத்துள்ளீர்கள்.

        நான் முதலில் கொடுத்த தந்தி, தாமதமாக உங்களுக்குக் கிடைத்த பொழுது, அது உங்களது இரண்டாவது தந்திக்குப் பதில் தந்தி என முடிவு செய்துவிட்டீர்கள்.

       கணேசன் வரமுடியாது என்று தந்தி கொடுத்து விட்டான் என்று எண்ணி, உடனடியாக இறுதி  யாத்திரைக்கு ஏற்பாடு செய்து, அம்மா என்ற அந்த பொற்கோயிலை மயானம் எடுத்துச் சென்று எரியூட்டிவிட்டீர்கள்.

     

இதற்கிடையே ஷில்லாங்கில், எனது அன்னை இறந்து விட்டார் என்ற செய்தி, இராணுவத்தினரிடையே, ஒரு பெரிய அதிர்ச்சியாக உருவானது.

      அம்மா கவலைக்கிடம் என்று தந்தி வந்தும், விடுமுறை தர மறுத்த, எனது மேலதிகாரியிடம் எல்லோரும் போய் கடுமையாகத் திட்டி வாதாடி இருக்கிறார்கள்.

      அவருக்கும் மேலுள்ள அதிகாரிகளும், அவரை கண்டபடி திட்டி, ஒரு மேலதிகாரியாக இருந்தும், எந்த நேரத்தில், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளாத முட்டாள் என்று அவரை பரிகசித்திருக்கிறார்கள்.

      இதனால் கலக்கமடைந்த எனது மேலதிகாரி, உடனே எனது அலுவலகம் வந்து, எனது கைகளைப் பற்றிக் கொண்டு, வருத்தம் தெரிவித்தார்.

       மேலும் உடனடியாக நான் விடுமுறையில் போய் ஆவண செய்ய வேண்டும் என்றார்.

       நான், விடுமுறை வேண்டாம் என்றும், இனி நான் போய் ஆவது ஒன்றுமில்லை, எனது தாயின் இறுதிச் சடங்கை, எனது சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லி விடுமுறையினை மறுத்து விட்டேன்.

      ஆனால் அவர், நான் விடுமுறையில் போகாவிட்டால், அவர் குற்ற உணர்வில் வாழ்நாள் முழுதும் கஷ்டப் பட நேரிடும் என்று மிக மிக வருத்தப் பட்டார்.

      சரி, இவர் முகத்தில் விழிக்காமல் சில நாட்கள் இருக்கலாமே என்று நானும் விடுமுறையை ஏற்றுக் கொண்டேன்.

      ஆனால், நான் ஊர் வந்து சேர்வதற்குள் நீங்கள் எல்லோரும், மயானத்திலிருந்து திரும்பி இருந்தீர்கள்.

     பிறகு நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.

     இப்படியும் விதி என் வாழவில் விளையாட வேண்டுமா?

     கடைசியாக அம்மாவைப் பார்த்தோம், என்ற நிம்மதி என் வாழ்வில் என்றுமே ஏற்படாதா?

      25 ஆம் தேதி அதிகாலை, அம்மா என்னைப் பார்க்க வந்தது போல் ஏற்பட்ட, உணர்வை நினைத்துப் பார்க்கிறேன்.

      ஆம், என்னைப் பொறுத்தவரை அம்மா இறக்கவில்லை. அம்மாவின் பூதவுடல்தான் அழிந்ததே தவிர, அம்மா சூக்கும உடலில் எப்பொழுதும் நம் கூடவேதான் இருப்பார், குறைந்தது என் கூட இருப்பார்.

     மறு நாள் 27 பிப்ரவரி 1970, முந்தித் தவமிருந்து, முன்னூறு நாள் சுமந்து, பெற்று எடுத்துப் பின்னைப் பாலூட்டிச் சீராட்டி, கண்ணே மணியே, என் கட்டிக் கரும்பே எனச் சொல்லி, வளர்த்து தன் சுகமெல்லாம் தந்து வாழுங்களப்பா, நான் வருகிறேன் எனச் சொல்லிச் சென்று விட்ட, நமது அன்னைக்குப் பாலூட்டினோம்.

    எரிந்த சாம்பலை ஒவ்வொன்றாக எடுக்கையில், எலும்புக் கூடு, அப்படியே பொடியாகிக் கிடந்தது.

     என்னைப் பார்க்கவில்லையே அம்மா? எனக் கதறினேன்.

      உடல் வலிமையும், உள வலிமையும் பெற்ற நீ, வளமும் நலமும் பெற்று என்றென்றும் சீரும் சிறப்புமாய் வாழ்வாயப்பா.

      உன் வாழ்க்கை ஒளி வீசும் என, நான் உறுதியுடன் நம்பினதால்தான், உன்னைப் பற்றிக் கவலையேப் படவில்லை.

      நீ ஏன் கலங்குகிறாய் என் செல்வமே. என்பது போல், அந்த மண்டை ஓடும், இதயக் கூடும், பிரிப்பவர்கள் கை பட்டு ஆடுவதை உணர்ந்தேன்.

மீண்டும் எழுதுவேன்,
பா.கணேசன்.

விதி என்னும் குழந்தை கையில் உலகம் தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கை அன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
வீழ்த்திவிடும் மேல்கீழாய் வியந்திடாதே


       பொறியியல் படித்துப் பொதுப் பணித் துறையில் புகுந்து, அங்கிருந்து இராணுவத்தில் நுழைந்து, 2/LT ஆகப் பணியினைத் துவக்கி, கேப்டனாக வளர்ந்து, இன்று கர்னல் ஆக உயர்ந்து நிற்கிறார் கர்னல் கணேசன்.

      இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இன்று 73வயது இளைஞராக உலகை வலம் வருகிறார் கர்னல் கணேசன்.

கர்னல் கணேசன் 
அவர்களைப் போற்றுவோம்


61 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  தாய் நாட்டை தனது இருகண்கள் போல் பாதுகாத்து ஒரு சரித்திரம் படைத்த மனிதர் பற்றி சொல்லிய விதம் சிறப்பு ஐயா...அதுவும் தங்களின் உரை நடையில் சொல்லியது யாவரைவும் நிச்சயம் கவருகிறது. எப்போதும் போற்றுவோம்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கர்னல் அவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம். நாட்டுப்பற்றையும், வீட்டுப்பற்றையும் ஒருங்கே மனதில் கொண்டு அயராத உழைப்பினால் அரும் சாதனை படைத்த அவரை வாழ்வில் முன்மாதிரியாகக் கொள்வோம். சாதனைகளைப் படைக்க முயற்சிப்போம். அரிய மனிதரைப் பற்றிய பகிர்வுத்தொடருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வாழ்க்கை ஒளி வீசும்....பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. வேதனை தரும் பதிவு ...
  முகநூலில் பகிர்கிறேன்
  தம

  பதிலளிநீக்கு
 5. வாழ்க கர்னல் கணேசன்!

  பதிலளிநீக்கு
 6. நம்பொருட்டு எல்லை காக்கும் மாவீரர்களின் வாழ்வில் தான் -
  எத்தனை எத்தனை சோகங்கள்!..

  என் தந்தையும் ராணுவ வீரரே..
  அவர்தம் நினைவுகளில் ஆழ்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 7. வேதனையான தான். விதியா? அதன் விளையாட்டு,,,,,,, தாயின் முகம் பார்க்க முடியாமல் அவர் பட்ட வேதனைகள்,,
  அருமையான பகிர்வு சகோ, அவர் வாழும் நாளில் நாமும் எனும் போது, பெருமையாக இருக்கிறது.
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. நெகிழ வைக்கும் நிகழ்வு. அன்னையின் ஆசிர்வாதத்தினால் மேலும் வாழ்வில் உயர்ந்திருக்கிறார். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. Thanks a million to Mr.Jayakumar for re producing my letters adding his own expertise here and there.Readers may wonder how I got my own letters.I was in the habit of writing diary and letters since 1964.My elder brother who was an outstanding genius kept many of my letters and handed over to me on my retirement just to see myself the yester years hills and valleys as to how they look.
  My mothers death and events that happened before and after her death were unimaginable and perhaps destiny's effort to prepare myself mentally, physically and psychologically to take up higher assignements
  Thanks to all readers who had expressed sentimens and closely followed,"Urai pani ulahil" and this "Ellaip purathil"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது
   நன்றி ஐயா

   நீக்கு
  2. உங்களைப் பற்றி அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி ஐயா. வணக்கங்களுடன் நன்றியும்!

   பகிர்ந்த ஜெயக்குமார் அண்ணனிற்கும் நன்றி.

   நீக்கு
 10. கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்கும் போது சில நேரங்களில் அத்தனை இடர்களையும் தாண்டிவந்த உணர்வு வேதனைகளிலும் ஒரு வித மகிழ்ச்சியைத் தரும் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அவர்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 12. படிக்கும்போது மனம் கலங்குகிறது. என்ன அதிகாரிகளோ...

  பதிலளிநீக்கு
 13. மிகவும் வேதனையான ஒரு நிலைமை. இப்படிப்பட்டவர்கள் அதிகாரிகளாக வருவதற்கே லாயக்கில்லாவதவர்கள்.

  பதிலளிநீக்கு
 14. திரு. கர்னல் கணேசன் அவர்களின் கடிதம் படித்து கண்கள் கசிந்து விட்டது நண்பரே நாட்டுக்காக உழைத்த அவர் வாழும் திசையை நோக்கி அவருக்கு ஒரு சல்யூட் வைக்க வேண்டும் போல் இருக்கின்றது.
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 15. அன்புள்ள கரந்தையாரே,

  ‘பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
  பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
  வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
  மேதினியில் நாம் வாழ செய்தாள்

  அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...’

  பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன...!

  தாய்நாட்டைக் காக்கச் சென்றவருக்கு தன்னை ஈன்ற தாய் கடைசி காலத்தில் பார்க்க அனுமதி இல்லையா...? எவ்வளவு கொடுமை!

  சில நேரங்களில் சில மனிதர்கள்...!

  த.ம.6


  பதிலளிநீக்கு
 16. நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்த வீரருக்கு எப்பேர்பட்ட சோகம், மனம் பாரமானது.

  பதிலளிநீக்கு
 17. திரு கர்னல் கணேசன் அவர்கள் பற்றி அறிந்து கொண்டோம். மிக்க நன்றி. அவருக்கு ஒரு சல்யுட்!
  பகிர்ந்துக் கொண்டதற்கு என் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 18. கர்னல் கணேசன் அவர்களைப் போற்றுவோம்
  அவர்களின் பணியைப் பாராட்டுவோம்
  இத்தொடர் பதிவை மின்நூலாக்கிப் பகிர்ந்தால் மிகவும் பயன்தரும்.
  பலருக்கு வழிகாட்டலாகவும் அமையும்.

  பதிலளிநீக்கு
 19. சரித்திர நாயகனைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா...
  வரலாறுகளை எழுதும் போது தங்கள் எழுத்தில் இன்னும் அதிகமாய் ஈர்ப்பு ஏற்படுகிறது...
  அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 20. படிக்கும்போதே அண்மையில் இறந்து போன எனது அம்மாவின் நினைவு கண்ணீருடன் வந்தது. அந்த நேரம் கர்னல் கணேசன் எப்படியெல்லாம் மனம் வேதனைப்பட்டு இருப்பார் என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   ஈடுசெய்ய இயலாத இழப்பல்லவா
   நன்றி ஐயா

   நீக்கு
 21. எப்படிப்பட்ட இழப்புகளைத் தாங்கிக் கொண்டு நாட்டுக்காக தம்மை அர்ப்பணிக்கின்றனர்.நிச்ச்யம் போற்றுவோம்!

  பதிலளிநீக்கு
 22. சிறந்த வீரன் செயல்வீரன் அவருக்கு என் வாழ்த்துக்கள் !
  உயரதிகாரிகளில் தவறுகள் இருக்கலாம் ஆனால் அவர்களையும் தவறாக வழிநடத்தும் பொய்யான சிலரது வேண்டுகைகளால் பலரது உண்மையான வேண்டல்கள் புறந்தள்ளப் படும் உண்மையே

  தொடர வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 23. எழுபது இளைஞருக்கு என் வீர வணக்கம்..அறிமுகப்படுத்திய உங்களுக்கு என் அன்பின் வணக்கம் அங்கிள்..( தேர்வுகள் அங்கிள்..அடிக்கடி வந்து போக முடியாது ஆனால் அவ்வப்போது வருவேன்..ஆனால் என் பதிவைப் பார்த்து மதிப்பிடுங்கள்..நான் வளரனும் ல..)நன்றி அங்கிள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வரவு கண்டு மகிழ்ந்தேன் சக்தி
   தங்களின் தளத்திற்குத் தொடர்ந்து வருவேன்
   நன்றி

   நீக்கு
 24. உள்ளம் உருக்கும் அர்ப்பணிப்பு !

  பதிலளிநீக்கு
 25. அங்கிள்..நற்றமிழ் கரந்தை அதில் கொஞ்சம் போஸ்டிங் இருந்தது ஆனால் பாலோயர்ஸ் 10 பேர் தான் இருந்தது, நான் சந்தேகப்பட்டது சரிதான். அதில் நீங்கள் இயங்கவில்லை போல..ஆனால் நான் அதில் கொஞ்சம் கமெண்ட் போட்டேன்..பாருங்க..உங்கள் கருத்துக்கள் அருமை அங்கிள்..என் வலை தளம் வாங்க

  பதிலளிநீக்கு
 26. உருக்கமான கடிதம்.கரடு முரடான உண்மையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் ராணுவத்தில் அதிகம் போலும்.

  பதிலளிநீக்கு
 27. கரந்தைசரவணன்26 டிசம்பர், 2015

  என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  நம்மிடையே பலருக்கு இராணுவத்தில் பணியாற்றும்/பணியாற்றிய எண்ணிலடங்கா பலரின் தியாகம் தெரியாமல் இருந்து விடுகிறது. கர்னல் கணேசன் அவர்கள் தன்னைப் பெற்ற அன்னையின் இறுதி யாத்திரையில் கலந்துக் கொள்ள முடியாத நிலை உலகில் யாருக்கும் நிகழக் கூடாத ஒன்று. அத்துயரத்தை அவர் எவ்வாறு தாங்கினார் என்று நினைக்கும் பொழுதே நம் தொண்டை அடைக்கிறது. அவருடைய பல தீரமான செயல்களையும் அவருடைய தியாகங்களையும் மிகவும் விளக்கமாக எளிய நடையில் பதிவிட்ட தங்களின் செயல் போற்றுதலுக்கு உரியது.

  பதிலளிநீக்கு
 28. கர்னல் கணேசன்
  அவர்களைப் போற்றுவோம்
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 29. படிக்கும் போதே மனம் கலங்கிவிட்டது நண்பரே! மனிதம் சிறிதும் இல்லாத அதிகாரிகளை என்னவென்று சொல்ல??

  எத்தனை இடர்கள், மன அழுத்தங்களைக் கடந்து பணிபுரிந்துள்ளார் கர்னல். அவர்களை நாம் எல்லோரும் போற்றுவோம்...

  பதிலளிநீக்கு
 30. அன்பு நண்பரே,
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு