28 அக்டோபர் 2017

பெருந்தன்மை



      ஆண்டு 1952.

      உயர் அதிகாரி அவர்.

      அன்று அஞ்சலில் வந்த அழைப்பைப் பார்த்ததும் திடுக்கிட்டுத்தான் போனார்.


     விழா அழைப்பிதழ் அது.

      படத் திறப்பு விழாவின் அழைப்பிதழ்.

      படத்தினைத் திறந்து வைக்க இருப்பவர், தமிழ் நாட்டின் முதல்வர்.

      தமிழ் நாட்டின் முதல்வர், சீரியப் பணியாற்றிவரும், உயர் அலுவலர் ஒருவரின் படத்தினைத் திறந்து வைக்க இருப்பதை அறிந்து, இவர் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும், என்ற கேள்வி எழுகிறதல்லவா?

      காரணம் இருக்கிறது.

      முதல்வர் திறந்து வைக்க இருப்பது, இவரது படத்தைத்தான்.

      சென்னை, வண்ணாரப்பேட்டை, சர் தியாகராயர் கல்லூரியில், இவரது படத் திறப்பு விழா.

      அரசு ஊழியர் ஒருவரின் படத்தினை, அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலத்திலேயே, முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார்.

      அன்றே முதல்வரைச் சந்தித்தார்.

நான் வேலையில் இருக்கிறேன். தாங்களோ எங்கள் முதல் அமைச்சர்.

நான் ஓய்வு பெறும்போதோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ, என் உருவப் படத்தைத் திறந்து வைத்தீர்கள் என்றால், யாரும் குற்றம் குறை காணமாட்டார்கள். இப்பொழுது அப்படிச் செய்வது சரியாகப் படவில்லை.

கல்லூரியை நடத்துபவர்கள், என்னைக் கேட்காமலே, இப்படிச் செய்துவிட்டார்கள். தயவுசெய்து அவர்களைக் கூப்பிட்டுச் சொல்லி விடுங்கள், இவ்விழா வேண்டாம் என்று.

தயவுசெய்து, தாங்களும், இவ்விழாவிற்குப் போக வேண்டாம்.

       முதல்வரோ, ஒரே ஒரு வார்த்தையில் பதில் அளித்தார்.

இருக்கட்டும்.

      முதல்வர் விழாவிற்குச் சென்றார்.

      படத்தினைத் திறந்தும் வைத்தார்.

ஸ்ரீமான் சுந்தரவடிவேலு கருப்பா, செவப்பா என்று கூட எனக்குத் தெரியாது.

நான் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவராக இருந்தபோது, பலர், கல்வித்துறை சம்பந்தமா, என்னிடம் வந்திருக்கிறார்கள்.

பள்ளிக் கூட நிர்வாகி வந்தாலும், நெ.து.சு வுக்குச் சொல்லுங்கள், அவர் உதவியாக இருப்பார் என்பார்கள்.

ஆசிரியரகள், நிர்வாகிமேல் புகார் கொண்டு வந்தாலும், நெ.து.சு கண்டிப்பானவர், நியாயமானவர் என்று சொல்வார்கள்.

ஆசிரியர்கள் இவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நிர்வாகிகளும் இவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மாணவர்களும் இவரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருப்பதால், இவரை இயக்குநராக நியமித்தோம்.

படம் திறக்கிறது, இவரைப் பெருமைப் படுத்த அல்ல.

கிராமத்தில், சாதாரண விவசாயி வீட்டில், பிறந்தவர் கூட, பெரிய நிலைக்கு வரலாம் என்பதை நினைவுபடுத்தி, இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகத்தான்.

       


நெ.து.சுந்தரவடிவேலு
பொதுக் கல்வித் துறை இயக்குநர்.

இவரது படத்தினைத்தான், அன்றைய முதல்வர் திறந்து வைத்தார்.

அரசு ஊழியரின் படத்தினைத் திறந்து வைத்த முதல்வர்


கல்விக் கண் திறந்த
கர்ம வீரர் காமராசர்.




29 கருத்துகள்:

  1. மதிய உணவு திட்டத்தில் இவர் பங்கு அதிகம்...கர்ம வீரரின் செயல்களுக்கு இவர் உறுதுணையாய் இருந்தார்..

    பதிவுக்கு நன்றி....

    வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. தனது திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவருக்கு நன்றிக்கடன் செலுத்திய கர்மவீரரை போற்றுவோம்

    தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கனவிலும் இனிமேல் இது போன்ற நிகழ்வுகளை நினைத்து பார்க்க இயலாது.போற்றுவோம் நல் உள்ளங்களை.

    பதிலளிநீக்கு
  4. மாமனிதர்களின் அரிய செயல்களைத்தேடிப் பிடித்துப் பகிர்கின்ற உங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கதாகும். கருப்பா சிவப்பா என்றுகூட தெரியாது..இதைப்போன்ற சிந்தனைதான் பெருந்தலைவரை இன்னும் நாம் நினைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான மனிதர் பற்றிய சிறப்புப் பகிர்வு. நன்றி ஐயா.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  6. அறியாத தகவல் !! பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. தெரிந்த செய்தி! விபரமாகப் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மாமனிதர்கள் வாழ்ந்த அந்தக் காலம் கண் முன் வந்து நின்றது..

    பதிலளிநீக்கு
  9. உயரிய மனிதர்கள் பற்றிய அறிய கருத்து, அறிந்திடாத கருத்தும் கூட.

    பதிலளிநீக்கு
  10. சிறந்த அறிஞரை அறிய வைத்த தங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு தகவல் ஐயா...
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. விழாவில் கலந்து கொண்டதாக நினைவு!

    பதிலளிநீக்கு
  13. நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைப் பற்றிய சிறப்பான பதிவு. - நெ.து.சு அவர்கள் சாதாரண பாமர மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று திட்டங்கள் தந்தவர்; பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த பள்ளி பிள்ளைகளுக்கான மதிய உணவு திட்டம் சிறப்பாக நடைபெற செயல்பட்டவர்; கலப்புமணம் செய்து கொண்டவர் - உங்களுடைய இந்த பதிவு, அவரைப் பற்றி அறியாதவர்கள், மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டு பண்ணும்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்கிற காலத்தில் கிடைக்கப்பெறுகிற பாராட்டு காலப்பெருமிதம்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான மனிதரையும், அருமையான தலைவரையும் நினைவுபடுத்திய பதிவு அருமை.
    விமலன் அவர்கள் சொன்னது போல் வாழ்கிற போது கிடைக்கிற பாராட்டு காலப்பெருமிதம் தான்.

    பதிலளிநீக்கு
  16. சிறப்புப் பகிர்வு. நன்றி
    tamil manam .10
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  17. இதுவரை அறிந்திராத மனிதர். அவரை பற்றிய தகவலும் அருமை

    பதிலளிநீக்கு
  18. பாராட்டுக்குரியவரை(நே.து.சு.) , பாராட்டுக்குரியவர், பாராட்டி பெருமை சேர்த்த தகவலை பலரும் பாராட்டும்படி பகிர்ந்தமை உண்மையில் பாராட்டுக்குரியது.

    பெருந்தலைவர் எனும் அடைமொழியின் அர்த்தத்தின் ஆழம் இதன் மூலமும் நன்கு அறியமுடிகிறது.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  19. உயிரோடு இருப்பவர்களின் படங்களை ப்ளஸ் பேனரில் போடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு இப்போது அரசியல் கெட்டு விட்டது :)

    பதிலளிநீக்கு
  20. ஓர் ஆசிரியரின் அருமையானப் புகழஞ்சலி!

    பதிலளிநீக்கு
  21. சிறந்த பதிவு. நன்றி கலந்த வாழ்த்துக்கள்...அரசாங்க உத்தியோகத்தா்கள் பணம் பொருளுக்கு அடிமையாகாமல் மட்டுமல்ல...புகழுக்கும் அடிமையாகாமல் பணியாற்ற வேண்டும்..

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு