04 நவம்பர் 2017

நல் உள்ளம்
     வயது அதிகமாகிவிட்டது.

     முதுமை உடலின் உள் புகுந்து அடைக்கலமாகிவிட்டது.

     உடல் தளர்ந்துவிட்டது

     கைகளில் லேசான நடுக்கம், உடன் பிறப்பாய் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.


     ஆனாலும் எழுதுவதை நிறுத்தினார் இல்லை.

     இவர் தமிழுக்குப் பல திறனாய்வு நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும் வழங்கியவர்.

      வயதானபோதும், நடுக்கம் வந்தபோதும், தனக்கு வரும் புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் ஒன்று விடாமல் படித்து விடுவார்.

     பாராட்டுக்களை, விமர்சனங்களை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்புவார்.

     இவரது அஞ்சல் அட்டையினை, விருதினும் மேலாய் பாதுகாத்து வருபவர்கள், ஏராளம்..

     இது மட்டுமல்ல, இவரது வாழ்த்தினைப் பெற்றதாலேயே, மிகத் தீவிரமாய் எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் ஏராளம், ஏராளம்.

     முதிர்ச்சி தேடி வந்தபோதும், கடிதங்கள் எழுதுவதை இவர் நிறுத்தவே இல்லை.

      நண்பர்கள் உரிமையோடு கண்டித்தனர்.

      அரை மணி நேரம் எழுதுவேன், பிறகு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக்குவேன். அப்படியே, கொஞ்சம் கொஞ்சமா எழுதிடுவேன்.

       நண்பர்கள் விடவில்லை.

       கடிதங்களுக்குப் பதில் எழுத, ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்.

       நண்பர்கள் தொடர்ந்து வற்புறுத்தினர்.

       ரோட்டுல நடந்து போறோம். எதிர்த்தாப்ல ஒருத்தர் வர்றார். நம்மளப் பார்த்து வணக்கம் சொல்றார். ஒரு மரியாதைக்குத் திருப்பி நாமளும் வணக்கம் சொல்லனுமா? வேண்டாமா?

       கடிதங்களும் அப்படித்தானே.

நண்பர்களே, இவர்தான்,


சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர்

தொ.மு.சி.ரகுநாதன்.

31 கருத்துகள்:

 1. பாராட்டுக்குரிய அரிய மனிதரைப் பற்றிய பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. புதிய செய்தி. பாராட்டு.

  பதிலளிநீக்கு
 3. படிக்கும்போதே இவராக இருக்குமோ என நினைத்தேன். இவருடைய இளங்கோவடிகள் யார் புத்தகம் படிக்கப் பல ஆண்டுகளாக ஆவல்! இவர் தமையனார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் மகள் வழிப் பேத்தி அமெரிக்காவில் எங்கள் குடும்ப நண்பராக இருந்தார்! இப்போது தொடர்பில் இல்லை. :)

  பதிலளிநீக்கு
 4. எழுத்தாளர்

  தொ.மு.சி.ரகுநாதன் அவர்களை அறிந்துக் கொண்டேன்...

  மேன் மக்கள் மேன் மக்களே....என்றும்

  பதிலளிநீக்கு
 5. மனிதம் உள்ள மாமனிதர்
  நல்லதொரு விடயம் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நல்ல மனிதர் . அவர் சொன்னது அருமை.
  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 7. அறியாத செய்தி.
  பாராட்டுக்குரிய மனிதர் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. புதியதா செய்தி. எழுத்தாளர் தொ மு சி பற்றி அறிந்துகொண்டோம். பகிர்விற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான மனிதரை அறியத்தந்தமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 10. நல்ல பதிவு. வாழ்த்துகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 11. நல்லதொரு மனிதர் பற்றிய அருமையான பகிர்வு

  பதிலளிநீக்கு
 12. தொ.மு.சி.ரகுநாதன் என்று எழுத்தாளர் ஒருவர் இருந்தார் என்பது மட்டும்தான் தெரியும். அந்த அரிய உள்ளம் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அற்புதமான மனிதரை தெரிந்து கொண்டேன். நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 14. படித்திருகிறேன் !நல்ல எழுத்தாளர்!

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ...அறிந்து கொண்டேன் பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 16. ரகுநாதன் ஐயாவை பத்தி இப்பதான் கேள்விப்படுறேன்ண்ணே

  பதிலளிநீக்கு
 17. அறிந்திராத தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரைப் பற்றி படித்து இருக்கிறேன். ஏனோ, இவரது நூல்களைப் படிக்க சந்தர்ப்பம் அமையவில்லை. அந்த இலக்கிய மனிதரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. நான் எழுதிய பின்னூட்டம்காக்கா ஊச்

  பதிலளிநீக்கு
 20. தொ.மு.சி.ரகுநாதன் அவர்களைப் பற்றி அழகாக அறியத் தந்தமைக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 21. பதிவுகள் தொடரட்டும் தோழர்

  பதிலளிநீக்கு
 22. பதிலுக்குப் பதில் உபகாரம்.. வழமைபோல பதிவு அருமை..

  பதிலளிநீக்கு
 23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. எழுத்தை ஆத்மார்த்தமாய் ஆகர்சிப்பவர்களுக்கு
  உடல் நலிந்து போவது தெரியவில்லை,

  பதிலளிநீக்கு
 25. ஆச்சரியம் மிகச் சிறிய பதிவாக இருந்தது.
  நன்று.
  tamil manam- 13
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 26. மரியாதைக்குரிய மனிதர். வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு