30 டிசம்பர் 2017

உணர்வு விழா



     கரந்தை.

     மாலை 5.30 மணி

     24.12.2017 ஞாயிற்றுக் கிழமை

     மூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.

     வாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல் வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல இறங்குகிறார்.


     நாற்பது வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த அன்பர், எங்கிருந்தோ ஓடிவந்து, குனிந்து, அம் மூதாட்டியின் பாதம் தொட்டு வணங்கி வரவேற்கிறார்.


ஆசிரியை வத்சலா

     சற்றேரக்குறைய முப்பது வருடங்களுக்கு முன், அந்த அன்பருக்குத், தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாய் இருந்தவர்.

     சிறுவயதில் தன் கரம் பற்றி, அ, ஆ என எழுதச் சொல்லிக் கொடுத்த, ஆசிரியையின் கரம் பற்றி, மகிழ்வோடு அழைத்துச் சென்று, விழா அரங்கில் அமர வைக்கிறார்.

     சிறு வயது நினைவுகள், மனதில் திரைப்படம் போல் ஓடுவதை, அன்பரின் முகம், பளிச்செனக் காட்டுகிறது.

     முகத்தில் அத்துனை ஆனந்தம்.

    


சிறிது நேரத்தில், ஒரு சிறு மகிழ்வுந்து, விழா அரங்கின், மேடைக்கு அருகிலேயே வந்து நிற்கிறது.

      முன் இருக்கையில், வயது முதிர்வின் காரணமாக, ஒத்துழைக்காத கால்களுடன், அன்பும், தமிழும் தவழும் முகத்தோடு, புலவர் பெருமகனார் அமர்ந்திருக்கிறார்.

       இப்புலவர் பெருமகனார், அன்பருக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆசான்.

       இன்று வலைப் பூவில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், அவ்வெழுத்துக்களின் தூண்டுகோல் இவர்தான்.

       கணித ஆசிரியரான எனது கரங்களில், தமிழ் எழுதுகோலைத் திணித்தப் புலவர் இவர்.


புலவர் மீனா. இராமதாசு அவர்கள்

        ஒரு இருக்கையினை, மகிழ்வுந்திற்கு அருகில் வைத்து, புலவரை பூப்போல் மகிழ்வுந்தில் இருந்து இறக்கி, இருக்கையில் அமர வைக்கின்றனர்.

       பின்னர் இருக்கையோடு புலவரையும் சேர்த்து, விழா மேடைக்குத் தூக்கிச் செல்கின்றனர்.

       வயது முதிர்வு உடலுக்குத்தானே தவிர, தமிழையே என்றென்றும் சுவாசமாய் சுவாசிககும் எனது உள்ளத்திற்கு அல்லவே, என் இதயம் என்றும் இளமைதான் என்பதுபோல், தமிழ்ப்பெரு மன்ற மேடையில் அமர்ந்ததும், ஒரு மகிழ்ச்சி, ஒரு எழுச்சி, ஒரு பெருமிதம் புலவருக்கு.

நூல் வெளியீட்டு விழா

     மும்பை, இவர் வாழிடமாய் மாறிப் பல்லாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், தனது நூலினை, தான் பிறந்து, தவழ்ந்த கரந்தையில், தான் பயின்ற கரந்தை மண்ணில் வெளியிட வேண்டும், சங்கத் தமிழ்ப்பெரு மன்ற மேடையில்தான் வெளியிட வேண்டும், வெளியிட்டேத் தீர வேண்டும், என்ற அளவிலா ஆர்வத்தோடு, களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார், இந்த அன்பர், என் நண்பர்.

மும்பை இரா.சரவணன்

     தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் எஸ்.முத்துக்குமார் அவர்கள். வரலாற்று ஆய்வாளர், குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு இரா.சுந்தரவதனம் அவர்கள், பொருளாளர் புலவர் ம.பாலசுப்பிரமணியன் அவர்கள், கரந்தைக் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராசாமணி அவர்கள்,. கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சண்முகம் அவர்கள், வலைப் பூ எழுத்தாளரும்., ஓய்வு பெற்ற, தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைப் பதிவாளருமாகிய முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்,  என ஒவ்வொருவராய் விழா அரங்கிற்கு வருகை தர. விழா களை கட்டத் தொடங்கியது.



















புலவர் மீனா.இராமதாசு அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்க,
தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர்
முனைவர் எஸ்.முத்துக்குமார் அவர்கள்,
இந்தியாவின் மகள்,பாகம் 2
நூலினை வெளியிட,
குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்
நூலின் முதற் படியினைப் பெற்று மகிழ்ந்தார்.




      
விழா நிகழ்வுகளை, இவரது நண்பர் திரு கோதண்டராமன் அவர்களின் மகளும், மற்றும் கோதண்டராமனின் உறவினர் மகளும் ஆகிய செல்வி திவ்ய பாரதி மற்றும் செல்வி அபிராமி ஆகியோர் சுவைபட தொகுத்து வழங்கினர். 




இவ்விழாவானது வெறும் நூல் வெளியீட்டு விழாவாக மட்டும் அமைக்காமல், தான் பயின்ற பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக, தனக்குப் பாடம் போதித்த ஆசிரியர்களுக்குப் பெருமிதம் சேர்க்கும் விழாவாக, பள்ளிக்கால தோழமைகளை ஒன்றிணைக்கும், சங்கம விழாவாக, உணர்வுப் பூர்வ விழாவாக, அரங்கேற்றி, அனைவரையும் நெகிழ வைத்துவிட்டார், நண்பர் மும்பை இரா.சரவணன் அவர்கள்.

வாழ்த்துக்கள் சரவணன்.
-----------------



     

32 கருத்துகள்:

  1. உணர்வு பூர்வமான நிகழ்வு. மும்பை இரா சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    தம +1

    பதிலளிநீக்கு
  2. தங்களது நண்பர் மும்பை திரு.இரா.சரவணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்....
    தொடரட்டும் சாதனை.

    பதிலளிநீக்கு
  3. மனம் நெகிழ்கின்றது.. மகிழ்கின்றது..

    பதிலளிநீக்கு
  4. நெகிழ்வு.

    தங்களது நண்பர் திரு சரவணன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர்களைக் கௌரவித்தமைக்கும் நூல் வெளியீட்டு விழாவுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். ஆசிரியர்களின் சிரம் தாழ்ந்து பணிகிறேன். எத்தகைய அர்ப்பணிப்பு உணர்வோடு கற்பித்திருப்பார்கள் எனப் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. உணர்வுப் பூர்வமான விழா. வண்ணப் படங்களுடன் பதிவிட்டமைக்கு நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. உண்மையில் உணர்வு விழாதான். கலந்துகொண்ட நான் அதை முழுமையாக உணர்ந்தேன். நீங்கள் அந்த உணர்வுகளின் வெளிப்பாடுகளை மிகச் சிறப்பாகப் பதிந்துள்ளீர்கள். உங்களைப் போன்ற நண்பர்களின் வாழ்த்துகள் அவரை மென்மேலும் எழுத வைக்கும். அவர் மேலும் சாதிப்பார்.

    பதிலளிநீக்கு
  8. வெறும் நூல் வெளியீட்டு விழாவாக மட்டும் அமைக்காமல், தான் பயின்ற பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக, தனக்குப் பாடம் போதித்த ஆசிரியர்களுக்குப் பெருமிதம் சேர்க்கும் விழாவாக, பள்ளிக்கால தோழமைகளை ஒன்றிணைக்கும், சங்கம விழாவாக, உணர்வுப் பூர்வ விழாவாக, அரங்கேற்ற, வெகு சிலருக்கே இம்மாதிரி உணர்வுகள் வருகிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. அஹா அன்பும் வாழ்த்துக்களும் மும்பை சரவணன் அவர்கட்கும், அவர்தம் ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் சகோ

    பதிலளிநீக்கு
  10. மனம் நெகிழ வைத்தது படித்து,
    அருமையான விழா
    உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டிய பதிவு. பதிவே இப்படியென்றால், விழாவை நேரில் பார்த்தவர்கள் எப்படியெல்லாம் உணர்ந்திருப்பார்கள்! சரவணனும் கரந்தை தமிழ்ச்சங்கமும் பல்லாண்டு வாழ்க!

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
  12. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, நண்பர் மும்பை திரு.சரவணன் அவர்களின் இந்தியாவின் மகள் 2 நாவல் வெனியீட்டு விழாவினை சிறப்பாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மனதுக்கு மகிழ்வை தந்த பதிவு அண்ணா .இப்படிப்பட்ட அன்பான மாணவர்களை உருவாக்கிய அந்த ஆசிரியர்களுக்கு வணக்கங்கள் .

    பதிலளிநீக்கு
  14. பலரது உள்ளங்களைத் தொடும்
    உணர்வுபூர்வ நூல் வெளியீட்டு விழா!
    அருமையான கண்ணோட்டம்

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  15. அருமையான விழா. இரா சரவணன் அவர்களிடம் .. ஆர்த்தியின் கணவர் கணேஸ்??:) இன் முகச் சாயல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே!

    பேரறிஞர் கூடல் பெருமையே! காட்சிகள்
    சீரழகு என்பேன் சிறப்பு!

    இனிய உணர்வுக் கூடல் விழா!
    உளம் நிறைந்தது! நல்ல பகிர்வு! நன்றி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. அறிஞர்கள் கூடிய உணர்வு பூர்வமான விழா!! திரு இரா சவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. அன்பு மிகுமாணவர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்!சிரம் தாழ்ந்த வணக்கங்களும்!

    பதிலளிநீக்கு
  19. 600வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  20. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    இனிய பதிவு! உங்களின் நண்பரது சாதனைக்கு நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  22. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
  23. கரந்தைத் தமிழ் சங்க கல்லூரியில்தான் என் சித்தப்பா படித்தார்கள் . நிறைய எங்களிடம் சொல்லியிருக்கிறார் .பழைய நினைவுகள் வந்தன.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. அனைவரும் வாழ்த்துக்கு உரியவர் வாழ்க வாழ்க!

    பதிலளிநீக்கு


  25. சிறப்பான விழா...

    மேலும் இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  26. ஐயா வணக்கம்,

    நான் முத்துசாமி. சென்னை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    இன்று தங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். சில பதிவுகளை விரும்பிப் படித்தேன். என் பதிவுகளையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

    https://agharam.wordpress.com

    நேரமிருக்கும்போது வருகைதர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. அன்பு நண்பரே...
    தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்து இருக்கிறேன் பங்கு பெற அழைக்கிறேன் எமது தளம் வந்து அறிந்து கொள்க நன்றி

    பதிலளிநீக்கு
  28. சிறப்பான விழா மட்டுமில்லை பலருக்கும் சிலிர்ப்பான விழாவாகவும் இஃது அமைந்திருக்கும் என நம்புகிறேன்! உங்கள் வருணனை அருமை!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு