06 ஜனவரி 2018

உதிரிலைகள்என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப் பட்டது……..

     படிக்கும்போதே மனம் திடுக்கிட்டுப் போகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து நகரும் வாழ்வு. கால் நூற்றாண்டாய் கணிசமான மாதச் சம்பளம். ஆனால் சேமிப்பு? விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துகிறது கவிதை.

அப்பா இறந்துபோன பின்
எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது
அப்பா இருந்த காலத்தில் செய்ததைப் போலவே
இப்போது அந்தப் பெரிய வீட்டில் அம்மாவும்
வைத்ததை வைத்த இடத்தில்தான் பேணுகிறாள்

ஆனால் அவளாலும் அதைப் பராமரிக்க முடியாதபடி
கன்னாபின்னாவென்று வீடெங்கும்
இறைந்து கிடக்கிறது தனிமை.

     பல நிமிடங்கள் நெஞ்சம் நினைவற்றுப் போகிறது. இதயத் துடிப்புக்கூட, சற்றுத் தட்டுத் தடுமாறித்தான் துடிக்கிறது. பிரிவின் துயரை, அத் துயரால் விளையும் தனிமையை நினைத்துப் பார்த்தாலே, நெஞ்சம் கலங்கித்தான் போகிறது.

முதல் திதி
என்பதால் முன்கூட்டியே
வந்திருந்தார்கள்.

பெரியக்கா
நடு அக்கா
சின்னக்கா
கடைசித் தம்பி
அவர்கள் குடும்பங்களுடன்,

…………………………
………………………..
எல்லாம் முடிந்து அவரவர்
ஊருக்குத் திரும்புமுன்
சொல்லிவிட்டுப் போனார்கள்.

கடைசி வரைக்கும் அப்பா
அவனுக்குத்தான் எல்லாம்
செஞ்சாரு ………… பென்ஷன் உட்பட.

வீட்டுக்காக வாங்கிய
வங்கிக் கடன்
அப்பா மருத்துவமனைச்
செலவுக்காக வாங்கிய
கூட்டுறவுச் சங்கக் கடன்
பி.எஃப்., கடன் என
எல்லாக் கடன்களும்
பிடித்தமாக வருவது
பிடித்தமில்லை என்பதை
எப்படியுரைக்க முடியும்?
என மௌனித்திருக்க

மௌம் சம்மதம் என்று
போகிறார்கள் ……..

      ஒரு சில வரிகளில், ஒரே பக்கத்திற்குள், வாழ்வின் சாரத்தை, உறவுகளின் ஒட்டாத இதயத்தை, தேவைப்படும்போது எல்லாம், விலகியே இருந்துவிட்டு, எல்லாம் முடிந்தபின், ஏதுமறியாதது போல், எட்டிப் பார்த்து, எல்லாம் தனக்குத்தான் என எதிர்பார்க்கும், உறவுகளை, எழுத்துக்களால், இவர் காட்சிப் படுத்தும் விதத்தைக் காணும்போதே, தெரிந்து விடுகிறது, இவர் வாழ்வும் இப்படித்தான் காயப் பட்டிருக்கிறது என்பதும் புரிந்து விடுகிறது.

பூர்வீக வீடு சிதைந்து கொண்டிருந்தது.

விரைவில் மாற்றிவிடுங்கள் என்று
சொல்லிவிட்டுப் போனார் பெரியப்பா ….

இடித்துவிட்டு மனை பிரித்து
பாகம் பிரித்துக் கொள்ளலாம் என்பது
சித்தப்பாவின் கருத்து.

மனையாகப் போட்டால்
முன் மனை நமக்குத்தான்
பேசிக் கொண்டார்கள் மருமகள்கள்.

……………………………………………………………………
……………………………………………………………………….

ஆனாலும்
பூர்வீக வீடு சிதைந்து கொண்டிருந்தது
வாழ்ந்த காலத்தின் நினைவுகளோடும்
வாழும் சிலவற்றின் கனவுகளோடும்.

     படிக்கப் படிக்க மனம் கனத்துத்தான் போகிறது. இவர் மெத்தப் படித்ததனால், எழுந்த கவிதைகளாக, இவை தோன்றவில்லை. மாறாக, நித்தம், நித்தம் சந்தித்த சோதனைகளின், வேதனைகளின் வடிகால்களாகவேத் தோன்றுகின்றன.

எதையாவது செய்திருக்கிறீர்களா
உருப்படியாக என்று
அடிக்கடி கேட்கிறாள் …………

செய்துகொண்டுதானிருக்கிறேன்
ஆனாலும் மனசாட்சி
தருமம், நேர்மை
ஒழுக்கம் கடமை என்கிற
இவற்றையெல்லாம் கூச்சமில்லாமல்
உதறிவிட்டால், இந்த உலகத்தின்
உருப்படியாகி விடுவேனோ
என்னவோ ……….

         இந்நூலின் ஒவ்வொரு கவிதையும், நமது கருத்தை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறது. இவர் தன் வாழ்வின் சில பக்கங்களை, எழுத்தால் கோர்த்து, சொற்களாய் வடித்து, கவியாக்கி இறக்கி வைத்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்து போகிறது.

      இவர் படைப்புலகில், கவிதை, கதை., நாடகம், சிறுவர் இலக்கியம், பெண்ணியம், கட்டுரையியல் என்னும் கூறுகளில் விரிந்த படைப்பாளுமை உடையவர்.

      இவரது பெரும்பான்மையானப் படைப்புகள், ஆய்வாளர்களுக்கு, ஆய்வுக் களங்களாகவும், பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டங்களாகவும் இருக்கின்றன.


உதிரிலைகள்

     படிக்கப் படிக்க ஒவ்வொரு பக்கமும், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்குகின்றன. படித்து முடித்தபின் வெளி வருவதற்குத்தான் சற்று அதிக நேரமாகும்.

      நிச்சயமாக பொழுது போக்கு நூல் அல்ல.

      தன் பொழுதுகளை எல்லாம் நூலாக்கி இருக்கிறார் இவர்.

      இவர் தனிமனித ஒழுக்கம், நேர்மை, உண்மையான உழைப்பு, ஈடுபாடு, மனித நேயம், மனசாட்சிக்கு ஒப்ப நடத்தல் என்னும் அறவியல் நெறிகளில், தன்னை மட்டுமல்ல, தன் படைப்புகளையும் இறுகப் பிணைத்துக் கொண்டிருப்பவர்.

பேராசிரியர், முனைவர்,

கவிஞர் ஹரணி

28 கருத்துகள்:

 1. அருமையாக விமர்சித்து இருக்கின்றீர்கள்.
  கவிஞர். திரு. ஹரணி அவர்களுக்கு வந்தனம்.

  பதிலளிநீக்கு
 2. உதிரிலைகள் என்பதே வித்தியாசமான தலைப்பு. தந்தையின் மரணத்திற்குப் ஒரு மத்தியதரக் குடும்பஸ்தனின் நனவோட்டங்கள் எவ்வாறு செல்கின்றன என்பது கதை. தங்கள் விமர்சனம் சிறப்பாக உள்ளது. நன்றி..

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஹரிணி அவர்களுடைய கவிதை வரிகளால் மனம் கனக்கின்றது..

  பதிலளிநீக்கு
 4. எல்லாக் கடன்களும்
  பிடித்தமாக வருவது
  பிடித்தமில்லை என்பதை
  எப்படியுரைக்க முடியும்?
  ////
  இந்த வரி போதும் எழுத்தாளரின் திறமையை உரைக்க.....

  ஹரணிக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 5. புத்தகம் படிக்கும் ஆவல் வருகிறது. பகிர்ந்திருக்கும் கவிதை மனதில் தைக்கிறது.

  தம +1

  பதிலளிநீக்கு
 6. முதல் கவிதை வரிகள் மனம் தொட்டன. மற்றவற்றையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. எனக்கு கவிதை என்றாலே ரொம்பபிரியம்... அதிலயும் இப்படி மரபு சாராத ... குட்டிக்குட்டி வாழ்வியல் கவிதைகள் எனில் திரும்ப திரும்ப படிப்பேன்..

  இங்கு ஒவ்வொரு வரியையும் ரசிக்கிறேன்.. இப்புத்தகம் லிங் ஏதும் இருக்கோ? அல்லது வாங்கிப் படிக்கோணுமோ?

  ஹரிணி என்றதும் பெண் கவிஞர் என நினைச்சிட்டேன் ஆரம்பம்.. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. மனதைத் தொட்ட கவிதை! திரு ஹரணியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போத் தான் படிக்கக் கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. கவிதை வரிகளை தங்களுக்குள் இணைத்துப்பார்க்க வைக்கும் திறமை ஹரணி ஐயாவுக்கு உண்டு மேலு ம்பின்னூட்டங்களிலேயே அள்ளி வீசும் அவர் கருத்துகளும் பயன் தருபவை

  பதிலளிநீக்கு
 10. கவிஞர் வாழ்க!அருமை !கவிதைகள் இதயத்தில் இணைந்தன!தங்கள் மதிப்புரை மிக மிக நன்று

  பதிலளிநீக்கு
 11. அற்புதமான விமர்சனம் .
  //பூர்வீக வீடு சிதைந்து கொண்டிருந்தது
  வாழ்ந்த காலத்தின் நினைவுகளோடும்
  வாழும் சிலவற்றின் கனவுகளோடும்//
  மனதை கனக்க வைத்த வரிகள் .
  எங்கள் வீடும் ஏறக்குறைய என்னாகுமோ என்ற நிலையில்தான் ..அதை நினைவூட்டியது இவ்வரிகள்

  பதிலளிநீக்கு
 12. உங்கள் விமர்சனத்திற்கும் மதிப்புரைக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. இவர் தனிமனித ஒழுக்கம், நேர்மை, உண்மையான உழைப்பு, "ஈடுபாடு, மனித நேயம், மனசாட்சிக்கு ஒப்ப நடத்தல் என்னும் அறவியல் நெறிகளில், தன்னை மட்டுமல்ல, தன் படைப்புகளையும் இறுகப் பிணைத்துக் கொண்டிருப்பவர்."
  அவர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. புத்தகம் படிக்கும் ஆவல் வருகிறது.

  பதிலளிநீக்கு
 15. உணர்ச்சிகளின் குவியல் ....உதிரிலைகள்

  ஒவ்வொன்றும் நிதர்சனம்....

  வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 16. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, நண்பர் திரு. ஹரணி அவர்களின் உதிரிலைகள் கவிதை நூலினைப் பற்றிய தங்களின் பதிவு மிக யதார்த்தமாக உள்ளது. படிக்கும் பொழுது நமக்குப் பொருத்திப் பார்த்தால் பயம் ஏற்படுகிறது. கவிதையோ, கதையோ, கட்எடுரையோ எந்த வடிவத்தில் இருப்பினும் அதில் நடைமுறை சவால்களை உள்ளது உள்ளபடி சொல்வதில் திறமையானவர் நண்பர் ஹரணி என்கிற முனைவர்திரு. அன்பழகன் அவர்கள் என்றால் அது மிகையாகாது என்பதை இந்த கவிதை நூல் மூலம் மீண்டும் காட்டியுள்ளார்.வளர்க அவர்தம் இலக்கிய சமூகத் தொண்டு.

  பதிலளிநீக்கு
 17. பல வீடுகளில் நடக்கும் யதார்த்தம் .
  நானே நேரில் அனுபவித்திருக்கிறேன்
  கவிதையில் வடித்தவருக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 18. பல வீடுகளில் நடக்கும் யதார்த்தம் .
  நானே நேரில் அனுபவித்திருக்கிறேன்
  கவிதையில் வடித்தவருக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 19. பல வீடுகளில் நடக்கும் யதார்த்தம் .
  நானே நேரில் அனுபவித்திருக்கிறேன்
  கவிதையில் வடித்தவருக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 20. மேற்கோள் காட்டியிருக்கும் கவிதைகள் மனதைத் தொட்டன. கவிதைத் தொகுப்பினை வாசிக்கும் ஆவல் மேலிடுகிறது.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரர்!

  உங்களால் இங்கே உதிர்க்கப்பட்ட அந்த ஒன்றிரண்டு இலைகளே
  உள்ளத்தை அப்படியே ஊடறுத்துப் போகிறதே... அடடா!...
  சொல்ல வார்த்தை வேறு எனக்குத் தோன்றவில்லை.
  எளிமையாக மிக அருமையாக இருக்கிறது சகோதரர் ஹரிணி அவர்களின்
  கவிதை வரிகள். தேடிப் படித்திட ஆவலைத் தூண்டுகிறது!

  பகிர்வினுக்கு நன்றியுடன் உங்களுக்கும் சகோதரர் ஹரிணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. நூல் மதிப்புரை மிகவும் அருமை! கவிஞரின் வரிகள் மனதை தாக்கின!

  பதிலளிநீக்கு
 23. //மனையாகப் போட்டால்
  முன் மனை நமக்குத்தான்
  பேசிக் கொண்டார்கள் மருமகள்கள்.//

  இன்றைய எதார்த்தம். உணர்ந்து எழுதிய வரிகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 24. good post/ It reflects my life also. except: good income

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு