முன்னோர் பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னோர் பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூன் 2025

இருபதே நாளில் ஒரு பாலம்

 


     நாச்சியார் கோயில்.

     கும்பகோணம்.

     பொதுப் போக்குவரத்து தொடங்கப் பெற்றக் காலம்.

     நகரப் பேருந்து எண் 4.

23 ஜனவரி 2022

கூடலூர் வே.இராமசாமி வன்னியர்

 


     செந்தமிழ்ப் புராணங்களை,

     தமிழ்ப் புலவர்கள் வரலாற்றை,

     செந்தேன் சிந்திடும் தனிப் பாடல்களை, கேட்போர் உளம் குளிர எடுத்துரைக்கும் பாங்கு.

     சிலப்பதிகாரச் செல்வத்தின், செந்தமிழ்ப் பாடல்களை, தாளத்தோடும், இராகத்தோடும் பாடி, கேட்போரை மதுரைக்கே அழைத்துச் செல்லும் திறமை.

    

02 ஆகஸ்ட் 2020

சொற்களே பூக்களாய்


 

     கணவன் பொருள் தேட, வெளியூர் கிளம்புகிறான்

     மனைவியோ, விடை தர மறுக்கிறாள்

     உள்ளே குமைகிறாள்.

27 ஜூலை 2020

பொழுதளந்தவர்கள்




     கி.பி. 1510 ஆம் ஆண்டு.

     பீட்டர் ஹென்கின்.

     ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பூட்டு செய்யும் தொழிலாளிக்கு திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் வெட்டியது.

     எண்ணத்திற்கு உருவம் கொடுத்தார்.

19 ஜூலை 2020

காட்டி மோகம்




மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கை வளை
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து

இந்நான்கு வரிகள் பாடலின் தொடக்கம்தான். சூடகம், செம்பொன் வளையல்கள், நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பவழ வளையல்கள், வீரச் சங்கிலி, தொடர் சங்கிலி, இந்திர நீலத்துடன் இடையிடையே வயிரங்கள் பதித்துக் கட்டபெற்ற தோடுகள் என, கோவலனின் வரவிற்காகக் காத்திருந்த மாதவி தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பயன்படுத்திய தங்க, வைர நகைகளின் பட்டியல், இப்பாடலின் வழி, நீண்டு கொண்டே போகிறது.

10 பிப்ரவரி 2018

ஞான சம்பந்தர்



     கீழ் பவானி திட்டம்.

      சத்தியமங்கலம், பவானி, கோபி செட்டிப் பாளையம், ஈரோடு, பெருந்துறை, மற்றும் காங்கேயம் பகுதிகளின் விவசாய முன்னேற்றத்திற்காக, தண்ணீர் பற்றாக் குறையினைப் போக்குவதற்காக, உருவாக்கப்பட்ட திட்டம்தான் கீழ் பவானி திட்டம்.

     1834 ஆம் ஆண்டிலேயே, புகழ் பெற்ற ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தூர் காட்டன் அவர்களின் உள்ளத்தில் உதித்த திட்டம்தான் இந்த, கீழ் பவானி திட்டம்.

16 டிசம்பர் 2017

காசு




    சிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.

    இன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.

    ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.

     இபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

18 நவம்பர் 2017

நீர்த் தூம்பு



                            நீர்த் தூம்பு


    சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, பாசனப் புலமை வாய்ந்த இனம், நம் தமிழினம்.

     வானிலிருந்து பெய்யும் மழையானது, ஆற்றின் வழி பயணித்து, கடலில் கலந்து பயனின்றி பாழ்படுவதைத் தடுத்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு, நம் முன்னோர் செய்த ஏற்பாடுதான் ஏரிகளும், குளங்களும்.