பத்து முதல் அதிக பட்டசமாய் 15 அடி அகலமே உள்ள
மலைப் பாதை.
வளைந்து, வளைந்து மெல் நோக்கிச் செல்லும் பாதை.
வழியெங்கும் சிறியதும், பெரியதுமான கற்கள், பாறைகள்.
நடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான்.
வழுக்கும் கற்கள்.
நாம் சாதாரணமாய் பயணிக்கும் இரு சக்கர வாகனத்திலோ
அல்லது மகிழவுந்திலோ இப்பாதையில் பயணிப்பது என்பது இயலாத காரியம்.
இரு சக்கர வாகனம், நிச்சயம் நம்மைக் கீழே தள்ளி
விட்டுத், தள்ளி நின்று சிரிக்கும்.
சாதாரண, நான்கு சக்கர வாகனமோ, வழியிலேயே அச்சு
முறிந்து, வலி தாங்காமல், அழத் தொடங்கிவிடும்.
ஜீப்
வாடகை ஜீப் மட்டுமே, மூச்சைப் பிடித்துக் கொண்டு,
தள்ளாடித் தள்ளாடி மலையேறுகிறது.
வழியெங்கும் கற்பாறைகள்
இடது புறம் சாய்ந்த ஜீப், நாம் சுதாரிப்பதற்குள்,
வலது புறம் வேகமாய் சாய்கிறது.
வலப்புறம கைகளை வலுவாய் ஊன்றினால், திடீரென்று,
பள்ளத்திற்குள் இறங்கி, நம்மை முன்னே தள்ளுகிறது.
கொஞ்சம் அசந்தாலும், நம் மூக்கு உடைபட்டு,
உதிரம் நிச்சயமாய் வெளியே வந்து, எட்டிப் பார்க்கும்.
பேசும்போது கூட கவனமாய் பேச வேண்டியிருக்கிறது
திடீரென பள்ளத்தில் வண்டி இறங்கும்போதும்,
தொடர்ந்து குலுங்கிக் குலுங்கியேச் செல்லும் போதும், நம்மையறியாமல், நமது நாக்கினை,
நமது பற்களே, பதம் பார்த்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம், குலுக்கல்
என்றால் அப்படி ஒரு குலுக்கல்.
உடல் களைத்துத்தான் போய்விட்டது.
ஒரு நிமிடம், ஒரு நொடி, இருக்கையில் நிம்மதியாய்
அமர முடியவில்லை.
முன்னும், பின்னும், இடதும், வலதுமாய் விழுகிறோம்.
ஆங்காங்கே நீர் நிரம்பியோடும், சிற்றாறுகள்
குறுக்கிடுகின்றன.
தண்ணீரில் வேகமாய் இறங்கி, குலுங்கிக் கரையேறுகிறது
வண்டி.
ஊட்டி, கொடைக்கானல் என உயரமான, பல மலைகளில்
மகிழ்வுந்தில் பயணிக்கும் போது கிடைக்காத, ஒரு புது அனுபவம், இம் மலையில் நிச்சயமாய்
கிடைக்கும்.
மலைப் பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமில்லை,
ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர்கள்தான்,.
பயணிக்கும் நேரம் அதிக பட்சம் ஒரு மணி நேரம்.
ஆனாலும் மறக்க இயலாத பயணமாய் இப்பயணம் அமையும்.
குண்டாறு.
---
கடந்த இருபது வருடங்களாக, நானும் எனது ஆசிரிய
நண்பர்களும், ஆண்டுக்கு ஒரு முறை, குற்றாலத்திற்குச் செல்வதை வழக்கமாய் வைத்திருக்கிறோம்.
நானும், நண்பர்கள் திருவாளர்கள் ஜி.குமார்,
எஸ்.சரவணன், ஜி.விஜயக்குமார், டி.பாபு, எஸ்.சக்திவேல், வழக்கறிஞர் திரு ஜெயச்சந்திரன்
ஆகிய எழுவர், கடந்த 30.6.2017 வெள்ளிக் கிழமை இரவு, தஞ்சையில் இருந்து, ஒரு டெம்போ
டிராவலர் வண்டியில் புறப்பட்டோம்.
சனிக் கிழமை அதிகாலை குற்றாலம்.
பாண்டுரங்க விலாஸ்
குற்றாலத்தில் எங்களது வசந்த மாளிகை
தஞ்சையினைச் சார்ந்த அன்பர் ஒருவர், குற்றாலத்தின்
மையப் பகுதியில், குற்றாலத்தின் மெயின் அருவிக்கு எதிரில், ஐம்பது அறைகளை வாடகைக்கு
விட்டு வருகிறார்.
அறையென்பது கூட தவறு,
சிறு சிறு வீடுகள்.
முதல் நாள் அலைபேசியில் அழைத்து தெரிவித்து
விட்டால், அடுத்த நாள் காலை, எங்களின வரவினை எதிர்பார்த்துத், தங்குமிடம் தயாராய் காத்திருக்கும்.
பாண்டுரங்க
விலாஸ் ( 94426 23825)
சொன்னால் நம்ப மாட்டீர்கள்,
குற்றாலத்தில் யோகா செய்தோம் என்றால் நம்புவீர்களா?
மறுநாள் அதிகாலையிலேயே மூலிகை வனத்திற்குச்
சென்று திகட்டத் திகட்டக் குளித்தோம்.
குண்டாறு
குற்றாலத்திற்கு அடுத்துள்ள, செங்கோட்டைக்கு
அருகிலேயே, குண்டாறு நீர்த் தேக்கம்.
மலையின் மேலே, ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்பது அருவிகள்
இருக்கின்றன,
ஒன்பது அருவிகளுள், லக்கி அருவி எனப் பெயர்
பெற்ற ஒரு அருவி மட்டுமே, பொதுவான அருவியாகும்.
மற்ற எட்டு அருவிகளும் தனியாருக்குச் சொந்தமானவை.
முதலில் வியப்பாகத்தான் இருந்தது.
அருவி எப்படித் தனியாருக்குச் சொந்தமாக இருக்க
முடியும் என்று புரியவில்லை.
மலையில் தனியாருக்குச் சொந்தமான பல்வேறு எஸ்டேட்டுகள்
உள்ளன.
இந்த எஸ்டேட்டுகளில் இருக்கும் அருவிகள் அவர்களுக்கே
சொந்தமாம்.,
இந்த அருவிகளில் குளிக்க வேண்டுமானால், கட்டணம்
செலுத்தியாக வேண்டும்.
இந்த அருவிகளுள் ஒன்றினைக் காணத்தான் எங்களது,
இந்த மலைப் பயணம்.
பொதுவான அருவி. கட்டணம் கிடையாது.
பயணம் தொடர்ந்தது.
கருங்கற் பாறைகளில் முட்டி மோதி, சளைக்காமல்
ஜீப் மேலே, மேலே பயணித்தது.
இதோ தனியாருக்குச் சொந்தமான அருவியின் நுழை
வாயில்.
சுற்றுச் சுவருடன் கூடிய நுழைவாயில்.
கீழ் நோக்கிச் செல்லும் படிகள், எங்களை இறங்கு
இறங்கு என்றது.
மெல்ல இறங்கினோம்
மனதைக் கவரும் சூழல்
அருவியின் உயரம், பதினைந்து அடிதான் இருக்கும்.
நீர் வழிந்தோடுகிறது
பத்துபேர்தான் குளித்துக் கொண்டிருந்தனர்.
குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற அருவி.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளித்து மகிழலாம்.
தள்ளு முள்ளு என்பதே கிடையாது.
பல நிமிடங்கள், நின்று அருவியை ரசித்தோம்.
பெரும் பாறையினை உறுதியாய் பற்றி உயர்ந்து நிற்கும் மரங்கள் நம்மை வியப்பில் ஆழத்துகின்றன.
இந்த அருவிக்கு எதிரிலேயே மேலும் ஒரு சிற்றருவி.
குற்றாலம் செல்பவர்கள், அவசியம் ஒரு முறையேனும்,
குண்டாறு அருவியைக் காணவேண்டும்.
மலைப் பயணம் நிச்சயம், மகிழ்வினை வாரி வழங்கும்.
இரவுக்குள் தஞ்சை திரும்பியாக வேண்டும்.
நாளை பள்ளிக்குச் சென்றாக வேண்டும் என்ற நினைவு
வரவே, ஜீப்பிற்குத் திரும்பினோம்.
குண்டாறு அருவி.
நிச்சயம் புத்துணர்ச்சியையும், பெரு மகிழ்வினையும்
வழங்கும்.
நண்பர்களே, அடுத்த முறை குற்றாலத்திற்குச்
செல்லும்போது, நீங்களும், குண்டாறு அருவியில் குளித்துத்தான் பாருங்களேன்.
குண்டாறு அருவியைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு..
பதிலளிநீக்குஅதைப் பற்றிய விவரங்கள் பிரமிப்பு..
அழகான படங்கள்.. பயண அனுபவத்தை விவரித்தபோது நானும் பயணம் செய்த உணர்வு..
வாழ்க நலம்..
சுற்றுலா என்பது எப்போதுமே மனதுக்கு உற்சாகம் அழிப்பது. உடலுக்கும் உற்சாகம் அளிக்க யோகாவுமா? சூப்பர்.
பதிலளிநீக்குதம இரண்டாம் வாக்கு.
அளிப்பது அழிப்பதாகி விட்டது. மன்னிக்கவும்!!
நீக்கு:))
அழகாழ படங்களும் விரிவான விடயங்களும் குண்டாறு காணும் ஆவலைத் தூண்டுகிறது நண்பரே...
பதிலளிநீக்குத.ம.
அழகான இடம்...படங்களும் அருமை. குற்றாலம் சென்றிருக்கிறோம்...இதையும் குறித்துக் கொண்டாயிற்று. வா வா என அழைக்கிறது அருவி!!! லக்கி அருவி லக்கி தான்..லக்கி நீங்கள் பார்த்த அருவி தனியார் அருவி அதுவா லக்கி அருவி? லக்கி அருவி பொதுவானதுதான் இல்லையா? மக்கள் நிறையப் பேர் குளிக்கிறார்களே அதுதானே லக்கி அருவி? அந்தச் சின்ன அருவி நீங்கள் இருக்கும் புகைப்படம் அந்த அருவி எஸ்டேட் அருவி இல்லையா?
பதிலளிநீக்குஎஸ்டேட்டிற்குள் இருக்கும் அருவிகளில் வெளி மக்கள் குளிக்க முடியாதுதான்...அப்படி நிறைய அருவிகள் உள்ளே செல்லக் கூட அனுமதி இல்லாமல் இருக்கின்றன..
மிகவும் ரசித்தோம் பதிவை
படங்களுடன் நேரடிக் காட்சிகளும் அருமை..
பதிலளிநீக்குகுண்டாறு அருவியில் குளித்து மகிழ்ந்தேன் தங்களின் கட்டுரையின் வாயிலாக இது போன்ற பல இடங்களுக்கு செல்ல காத்திருக்கிறேன் தங்களின் கட்டுரைப்பயணத்துடன்.நன்றி.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குஅருமை ஐயா வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆஹா.... அற்புதமான பயணம் வாய்த்திருக்கிறது உங்களுக்கு. ஒவ்வொரு வருடமும் குற்றாலம் பயணமா! வாவ்.... எனக்கும் அங்கே செல்ல விருப்பம் உண்டு. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறது என! ஒவ்வொரு முறை திட்டமிடும்போதும் ஏதோ தடங்கல்....
பதிலளிநீக்குஇதை படிக்கும் வேளையில் (ஆகஸ்ட் 19 மதியம் 2 மணி) மும்பையில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. கட்டுரையில் அருவியும் நீரும், மக்கள் குளிப்பதையும் பார்க்கும் போது அப்படியே வெளியில் பொழிந்து வரும்மழையில் தலையை கொடுக்கலாமா என்ற எண்ணம் வருகிறது. குண்டாறு கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.
பதிலளிநீக்குநல்ல தகவல் அய்யா ...நன்றிகள்
பதிலளிநீக்குஅப்புறம்
அருவியின் எதிரே மிளகுக்கொடிகள் நடுவே உங்களின் படம் ஜோர் பாஸ்
படங்கள் அருமை! த ம 6
பதிலளிநீக்குஅங்கு போக சீசன் இருக்குமே. தென்காசிக்கு ஒருதிருமணத்துக்குச்சென்று குற்றாலத்தில் குளிக்கச் சென்றால் அங்கு அருவியே காணோம் வீட்டில்குழாயில் நீர் வருவதுபோல் அருவி இருந்தது நீரில்லா அருவியைப்புகைபடமெடுத்து வைத்திருக்கிறேன்
பதிலளிநீக்குஅண்ணே இடம் அருமையா இருக்கு.
பதிலளிநீக்குகுற்றாலத்துல யோகா செஞ்சதை ஒப்புக்குறோம்...
குண்டாறு பேரே வித்தியாசமா இருக்கு
பதிலளிநீக்குஉங்கள் பயண அனுபவத்தைப் பார்த்தால் ,குண்டாறு அருவியில் சுகமாய் குளித்து விட்டு இரண்டு நாள் ஓய்வு எடுத்தால்தான் வேலைக்கு போக முடியும் போலிருக்கே :)
பதிலளிநீக்குபுதிய செய்தி.சிறப்பான படங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே.
தமிழ்நாட்டில் தனியாருக்கு சொந்தமான அருவிகள். புதிய தகவல். படங்களும், காட்சிகளும் பார்க்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபடிக்கவே ரொம்ப நல்லா இருக்கு. இப்படி நீங்கள் திட்டமிடும்போது அதில் பிறரும் நுழைவதற்கு அநுமதி உண்டா? இன்னும் ரெண்டு மூன்று பகுதிகளாக எழுதியிருக்கலாம்.
பதிலளிநீக்குஉங்கள் வாகன அனுபவத்தை படிக்கும் போது...நாங்களும் உடன் வரும் அனுபவம்..அருமை
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும் போது காண வேண்டிய இடம்...குண்டாறு
விவரித்த விதம் மிக அழகு
பதிலளிநீக்குஅருமையான பயணம்.
பதிலளிநீக்குமனவளகலை யோகா போல் இருக்கே!
நான் ஆசிரியர் பயற்சி எடுத்து இருக்கிறேன், அது தான் கேட்டேன்.
படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குமிக அருமை. எங்கள் திருமங்க்கலத்தில் ஓடும் ஆறுக்குக் கூட குண்டாறு என்ற பெயர் இருந்தது.
பதிலளிநீக்குஅது வேறயோ என்னவோ.
மிக அருமை.
பதிலளிநீக்குஇரசனை
https://kovaikkothai.wordpress.com/
இந்த அருவிக்கு இன்னும் செல்லவில்லை. தங்கள் பதிவு அங்கு செல்லும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளது. நன்றி.
பதிலளிநீக்குpukaippadangkalum aruviyum arumai. etho oru kerala actress kooda than appavukku oru anaikkattu sontham endru sonathaka papper il padithirukiren. :)
பதிலளிநீக்குபடங்களுடன் பகிர்வு அருமை ஐயா...
பதிலளிநீக்குஎனக்கும் சற்று உடம்பு வலிக்கிறது; உங்களுடன் ஜீப்பில் பயணித்ததால்!
பதிலளிநீக்குபடங்களும் பயண விபரிப்பும் அழகு ஐயா. என்றாவது ஒருநாள் போகலாம் என்ற நம்மிக்கை உண்டு!
பதிலளிநீக்குgood sharing
பதிலளிநீக்குஅருமையான பயணவிவரக்குறிப்புகள்,குற்றாலம் போய்வந்த உணர்வு,வாழ்த்துக்கள்,நன்றி வணக்கம் சார்/
பதிலளிநீக்குதகவல்களும் படங்களும் அருமை.இந்த பிறவியில் வாய்ப்பில்லை. அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளுகிறேன்
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குகுண்டாறு அருவிக்கு நம் பள்ளி ஆசிரியத் தோழர்களுடன்
தாங்கள் சென்று வந்ததை இந்தப் பதிவில் நீங்கள் விவரித்த விதம் அதனை படித்த எங்களுக்கும் இடுப்பு வலியை ஏற்படுத்தி விட்டது. அருமை. வாழ்த்துக்கள்.
நான் நெல்லையில் பிறந்து வளர்ந்தவன். தென்காசியில் ஐந்தாம் நிலை பயின்றவன்.பல முறை குற்றாலம் சென்றுள்ளேன். இப்போது தான் குண்டாறைப் பற்றி அறிந்தேன். தகவலுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குமரியாதைக்குரிய ஐயா,
பதிலளிநீக்குவணக்கம்.தங்களுடைய பதிவினைப் படித்தபோது என்போன்றவர்களுக்கு குண்டாறு போன்ற தாங்கள் அனுபவித்த இடங்களுக்கு நேரத்தையும்,பணத்தையும் செலவிடாமலேயே அதாவது எங்கள் இருப்பிடத்திலிருந்தபடியே அனுபவித்த சுகம் கிடைத்தது..வாழ்த்துகிறோம் ஐயா!...
மிக அருமை
பதிலளிநீக்குஆஹா.... அற்புதமான பயணம். தங்களின் எழுத்தோவியத்தால் நானும் அங்கு சென்று வந்ததைப் போன்ற இனிய உணர்வு....
பதிலளிநீக்கு