02 அக்டோபர் 2015

வாருங்கள், புதுகையில் சங்கமிப்போம்



கூடுங்கள் பதிவர்களே, அனைவருமே ஒன்றாய் – நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே.
                                  புலவர் சா.இராமாநுசம்

    ஒரு திருமண விழா என்றால், இரு குடும்பத்தினரும், மணமக்களின் நண்பர்களும் உற்சாகம் பெறுவர். ஓடியாடி உழைப்பர்.

     ஓரு ஊரில் ஒரு கட்சியின் கூட்டம் என்றால், அந்த ஊரில் மட்டும், அன்று மட்டும் பரபரப்பு காணப்படும்.

     கட்சியின் மாநாடு என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், அக் கட்சியைச் சார்ந்த கட்சிக்காரர்கள் மட்டும் விறு விறுப்புடன் காணப்படுவர்.

     சட்ட மன்றத் தேர்தல் என்றால் தமிழகம் மட்டும் பரபரக்கும்.

     நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்தியா மட்டும் பரபரக்கும். மற்ற நாடுகளோ அமைதியாக உற்று நோக்கும்.


     ஒரு ஊரில், ஒரு திருமண அரங்கில் ஓர் விழா. கூச்சல் போட்டு பழக்கமில்லாத, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கொடி பிடிக்காத, எந்த ஒரு சாதிய அமைப்பிற்கும் ஒத்து ஊதாத, சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தை என்றுமே முடக்கி அறியாத, மனிதர்கள் சங்கமிக்கும் ஓர் விழா.

     ஆனால் இந்த விழாவிற்காக, உலகே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது. இந்த பூமிப் பந்தில், சற்றேறக்குறைய 144 நாடுகளில் வாழும் தமிழர்கள், இவ்விழாவினைக் காண, இப்பொழுதே தயாராகி விட்டார்கள். பலர் இந்தியாவிற்கு வர வானூர்திப் பயணச் சீட்டோடு, நாட்காட்டியில் மாறும் தேதிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். மீதமுள்ள தமிழினமோ, கணினியில் விழாவினைக் காண, துடிப்புடனும், ஒருவித தவிப்புடனும் காத்திருக்கிறது.

இணையம் வழி இணையும் தமிழர்கள்
இதயம் வழி இணைவதோடு
இனிய தமிழ் வழியும் இணைய
என் வாழ்த்துக்கள்
என நம்மையெல்லாம், ஏற்கனவே வாழ்த்தி விட்டார் மகா கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

நண்பர்களே,
தமிழ் வழி இணைவோமா
புதுகையில் சங்கமிப்போமா
சங்கமித்துத்தான் பார்ப்போமா
புதுகையை புரட்டிப் போட்டுத்தான் காட்டுவோமா
தமிழுலகையே திரும்பிப் பார்க்கத்தான் வைப்போமா





சங்கமிக்க வேண்டிய நாள்
11.10.2015

சங்கமிக்க வேண்டிய களம்
ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்
புதுகை

கவிதை – ஓவியக் கண்காட்சி
பதிவர் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை
தமிழிசைப் பாடல்கள்
பதிவர் அறிமுகம்
நூல் வெளியீடுகள்
போட்டிகள் பரிசு வழங்கல்
வலைப் பதிவர் கையேடு வெளியிடல்
விருதுகள் வழங்கல்
என திகட்டத் திகட்ட நிகழ்வுகள் அரங்கேற இருக்கின்றன.

உலகறிந்த தமிழ் எழுத்தாளர்
திரு எஸ்.இராமகிருஷ்ணன்

கட்டற்ற தகவல் களஞ்சியமான
விக்கிமீடியாவின்
இந்தியத் திட்ட இயக்குநர்
திருமிகு அ.இரவிசங்கர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்
துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா

புதுகை மாநகரினையே, வலையில் வீழ்த்திய வித்தகர்
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா.அருள் முருகன்

இவர்களோடு
நீச்சல்காரரும்

மாலையில்
பதிவர்களுக்கு
இன்ப அதிர்ச்சிக்
கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன்
முக்கியமான நண்பர்கள் பலரும்
மேடையேறி முழங்கக் காத்திருக்கிறார்கள்.



கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின்
தலைமையில்
திருமிகு
தங்கம் மூர்த்தி,
இரா.ஜெயலட்சுமி,  மு.கீதா,  ச.கஸ்தூரி ரங்கன்,
பொன்.கருப்பையா,  கு.ம.திருப்பதி,  க.குருநாத சுந்தரம்,
வைகறை,  மீரா.செல்வகுமார்,  ராசி.பன்னீர் செல்வம்,
பா.ஸ்ரீ.மலையப்பன்,  மகா.சுந்தர்,  ஆர்.நீலா,
அ.பாண்டியன்,  மைதிலி,  கா.மாலதி,
த.ரேவதி,  ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன்
சு.இளங்கோ, எஸ்.ஏ.கருப்பையா,  தூயன்,
கார்த்தி,  நாக.பாலாஜி,  சு.துரைக்குமரன்,
நண்பா கார்த்திக்,  சோலச்சி,  சரேஷ்மான்யா,  சிவா.மேகலைவன்
முதலான புதுகைப் பதிவர்களின்
தளரா முயற்சியால், கண் துஞ்சா களப் பணியால்
அலைந்து, அலைந்து
புதுகையினையே
வேர்வையில் நனைத்திட்ட இந்நண்பர்களின்
ஓயா உழைப்பால்
அரங்கேறும்
இந்த நல் விழாவில்,

மேலாடை கூட கசங்காமல், மேடையேறி எனது நூலொன்றினை
வெளியிட இருக்கின்றேன்.

புதுகைக் குழுவினருக்கு
எப்படி
நன்றி சொல்வதென்று
புரியவில்லை, தெரியவில்லை.

நன்றி சொல்ல
தேவையான, போதுமான
வார்த்தைகளும் என்னிடம் சிறிதும் இல்லை.


வித்தகர்கள்
தங்களது துறையில் உச்சம் தொட்ட மாமனிதர்கள்
ஐவரைப் பற்றிய
ஒரு சிறு நூல்.

வித்தகர்களில் ஒருவரான,
கர்னல் பா.கணேசன் அவர்கள்
தலைமையில்,

சோழ நாட்டில், புத்த மதத்தினைத் தேடுதலையே
தன் வாழ்வாக வாழ்ந்து வரும்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்
முன்னிலையில்,

சிறு கதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்
முனைவர் ஹரணி அவர்கள்
வெளியிட,

எனது நண்பரும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான
திரு வெ.சரவணன் அவர்கள்
முதற் படியினைப் பெற இருக்கிறார்.

புதுகையில் சங்கமிப்போம்
வாருங்கள் தோழர்களே.


நண்பர்களே,
ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்
ஒரு செய்தியைச் சொல்ல மறந்து விட்டேன்.

வலைப் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 11.10.2015 ஞாயிற்றுக் கிழமை காலை, எனது குடும்பத்தினரும், முனைவர் ஹரணி அவர்களது குடும்பத்தினரும், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களது குடும்பத்தினரும், திரு வெ.சரவணன் அவர்களது குடும்பத்தினரும், மேலும் வலைப் பதிவரும்,
நாவல் ஆசிரியரும், குறும் பட இயக்குநருமான,
குடந்தையூர் சரவணன் அவர்கள் குடும்பத்தினரும்
என
குடும்பம், குடும்பமான
சுமார் 25 பேர்
ஒரு வேனில் புறப்படுகிறோம்.

என்ன நண்பர்களே, தாங்களும்
புதுகை  நோக்கிப்  புறப்படத்  தயார்தானே.

வாருங்கள்
புதுகையில் சந்திப்போம்
பு து கை யி ல்   ச ங் க மி ப் போ ம்.



தங்கமது செய்யாத நன்மைகளைக் கூட – ஏதும்
தடையின்றி தேடிவந்து நம்மிடமே நாட
சங்கமென ஒன்றிருந்தால் ஆகும் என்றே – முன்னே
சான்றோர்கள் சாற்றியதை அறிவோம் நன்றே

பொங்கிவரும் அலைபோல புதுக்கோட்டை வந்தே –                                            முதிய
புலவனின் வேண்டுகோளை நிறைவேற்றி தந்தே
எங்குமுள நம்தமிழர் வாழ்த்தவழி காண்போம் –                                                வலிமை
ஏற்றமுற சங்கமென உறுதிமொழி பூண்போம்.
                    
                        புலவர் சா.இராமாநுசம்.


76 கருத்துகள்:

  1. தங்களின் பங்களிப்பு அருமை நண்பரே தங்களது புத்தக வெளியீடு சிறப்புற எமது வாழ்த்துகள்
    நாள் நெருங்க, நெருங்க எனது மனம்தான் பாடுபடுகிறது
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே
      நன்றி

      நீக்கு
  2. அருமையாக பதிவிட்டு அழைத்த விதம் வெகுசிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஒரு அழைப்புப் பதிவு! சந்திப்போம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை சகோ. அழைப்பு கனகச்சிதம். என் வலைப்பூவிலும் உங்கள் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்தி இருக்கிறேன். சகோ. விழா சிறப்புறட்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ தங்களின் வலைப் பூவிற்கு வருகின்றேன்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  5. just great! I sall be leaving chennai on 10 th morning.See my younger sister at Trichy and proceed to pudukkottai by evening.Night halt at pkty on 10th and 11th.12 th morning proceed to Tiruvarur via Aranthangi.wish the function great success.
    Really exited and awaiting to meet great scholars.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைக் கேட்காமலேயே
      ஓர் ஆர்வத்தில், தங்களின் தலைமையில் புத்தக வெளியீட்டு விழா என்று அறிவித்து விட்டேன் ஐயா
      தாங்கள் தலைமையேற்றுச் சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன்
      அழைக்கின்றேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  6. விழாவினை அற்புதமான விளக்கியதோடு அருமையான அழைப்பும் விடுத்திருக்கிறீர்கள் அய்யா. விழாவில் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன். புத்தக வெளியீட்டுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  7. அழைப்பின் மகிழ்வு அற்புதம்!..

    தங்களின் நூல் வெளியீடு - சிறக்க நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    புதுகையில் நடைபெறும் வலைப் பதிவர் மாநாடு பற்றிய தங்களின் பதிவினைப் படித்தவுடன் நானும் என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் ஆவலையும் பெற்றோம். மாநாடு சுரம் எங்களையும் பற்றிக் கொண்ட்து. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அருமையாக சொன்னீர்கள் சகோ,
    நூல் வெளியீடும் அழகாக நடக்கும்,,,,,
    வாழ்த்துக்கள் சகோ,

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள கரந்தையாருக்கு,

    அழைப்பு கண்டு மகிழ்ந்தேன். வித்தகக் கவிஞர் ‘வித்தகர்கள்’ பற்றி எழுதிய முத்தான நூல் வெளியிடுவதை அறிந்து மிகவும் மகிழ்கிறேன்.

    நன்றி.
    த.ம. 6

    பதிலளிநீக்கு
  11. கரந்தையாருக்கு வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  12. அற்புதமான பதிவு
    புதுகையில் சங்கமிப்போம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  13. நிகழ்வுகளைப் பட்டியலிட்டு அருமையாக அழைப்பிதழைத் தயாரித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள். உங்கள் புத்தக வெளியீடும் சிறப்பான முறையில் நடைபெற வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா! புதுமையான அழைப்பு! மிக்க மகிழ்ச்சி! தங்கள் புத்தகம் வெளுயிடவும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்! அனைவரையும் அழைத்த விதம் அழகு! நன்றி

    பதிலளிநீக்கு
  15. அருமை. உங்கள் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள். விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    ஐயா
    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் த.ம 8
    நிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...
    எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்
    Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் தங்களின்நூலினை வாங்கிப் படிப்பேன்
      அவசியம் எழுதுவேன் நண்பரே
      நன்றி

      நீக்கு
  17. ஆஹா அருமையா எழுதி இருக்கீங்க அண்ணா அனைவரையும் அழைத்து வாங்க அசத்த நாங்க இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  18. விரிவாக விழா நிகழ்வுகளை விவரித்து பதிவிட்டுள்ளீர்கள்! புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்! இந்த முறையும் விழாவுக்கு வர இயலாமல் தட்டிப் போகிறது! பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்திக்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்தேன் நண்பரே
      முயன்று பாருங்கள்

      நீக்கு
  19. தங்கள் பதிவு அனைத்துமே நூலாக வெளிவரவேண்டும் என்பதை என் ஆசை! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. பதிவர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பமும் கலந்து கொள்கிறது என்பதை கேள்விபடும் போது அது மிக சந்தோஷத்தை தருகிறது. அதுதான் வலைத்தள பதிவர்களின் பெருமையும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      இது நம் குடும்ப விழா அல்லவா
      தங்களின் முகம் காண ஆசைநண்பரே

      நீக்கு
  21. உங்களின் புத்தகம் பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் கண்டிப்பாக இடம் பெற வேண்டியவைகள். பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் வெற்றி பெற்ற மாணக்கர்களுக்கு பரிசு தரும் போது அந்த பரிசில் உங்கள் புத்தகம் கண்டிப்பாக இருக்கும் படி செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை

    பதிலளிநீக்கு
  22. அன்பின் கரந்தை ஜெயக் குமார்

    அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

    புதுகையில் வலைப்பதிவர் திருவிழா 2015 - 11.10.2015 - ஞாயிறு காலை 9 மணி முதல் 5 மணி வரை நடை பெற இருப்பது தங்களுக்குத் தெரிந்த தகவல் தான். அங்கு சந்திப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  23. அழைப்பும் அழைத்தவிதமும் அருமை ஐயா!

    விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !இவ்விழாவில் எல்லோரும் ஒன்று கூடி எண்ணம் போல் மகிழ்ந்திருக்க மற்றுமொரு வாழ்த்து இங்கே உரித்தாகட்டும் !

    பதிலளிநீக்கு
  25. அன்பின் முத்து நிலவன்

    அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

    வருகிற 11.10.2015 அன்று காலை நானும் என் துணைவியும் புதுக்கோட்டை வருகிறோம். பதிவர் திருவிழாவில் கலந்து கோண்டு மகிழ்ந்து சக பதிவர்களோடு கலந்துரையாடி மகிழ்ச்சியுடன் மதுரை திரும்புவோம்.

    திருவிழா சிறப்புடன் நடை பெற நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்காக புதுகை காத்திருக்கிறது ஐயா

      நீக்கு
  26. அன்பின் முத்து நிலவன்

    அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

    வருகிற 11.10.2015 அன்று காலை நானும் என் துணைவியும் புதுக்கோட்டை வருகிறோம். பதிவர் திருவிழாவில் கலந்து கோண்டு மகிழ்ந்து சக பதிவர்களோடு கலந்துரையாடி மகிழ்ச்சியுடன் மதுரை திரும்புவோம்.

    திருவிழா சிறப்புடன் நடை பெற நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்காக புதுகை காத்திருக்கிறது ஐயா

      நீக்கு
  27. anbulla jayakumar

    vanakkam. nanrikal. kaathirukkiren. thangkalin anbirku nekizhkiren.

    பதிலளிநீக்கு
  28. மாநாட்டில் சிந்திப்போம் ஐயா...

    பதிலளிநீக்கு
  29. விழாவில் தங்கள் புத்தக வெளியீடு குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா...
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. உங்கள் நூல் வெளியீட்டிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமாதமான ஏற்பாடுகள்! அதை அழகாய்ச் சொல்லும் உங்கள் அழைப்பிதழ்! நன்றி அண்ணா

      நீக்கு
  31. விழாவுக்கு அழைத்தவிதம் அருமை மனம் திண்டாடுது வரமுடியாத தூரத்தில் தங்களின் நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  32. அருமையான அழைப்பிற்கு நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!
    நூல் வெளியீடு சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  33. மகிழ்ச்சியும் எழுச்சியும் ஊட்டும் தருணங்களுக்காக காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது காத்திருத்தலுக்கான நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது ஐயா
      நன்றி

      நீக்கு
  34. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம்அறம்

    நன்றி

    பதிலளிநீக்கு
  35. உங்கள் ஆர்வமும் ஆதரவும் நன்று

    பதிலளிநீக்கு
  36. உங்கள் ஆர்வமும் ஆதரவும் நன்று

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு