காவல் நிலையத்தை விட்டு வெளியே வருகிறார்,
அந்த ஆங்கிலேய அதிகாரி.
காவல் நிலையத்திற்கு அருகில் நின்று,
நோட்டம் விட்டுக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், சைகை காட்டுகிறார். அவர் சைகை காட்டிய
திசையில் இருந்து மூன்று இளைஞர்கள், மெதுவாக, மிக மெதுவாக, இயல்பாக நடந்து, காவல்
நிலையத்தை நெருங்குகிறார்கள்
மொட்டை அடித்து மீசையினையும் மழித்து,
அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்த, அந்த இளைஞன், தனது உடையில் மறைத்து
வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுடுகிறார்.
ஆங்கிலேய அதிகாரி இரத்த வெள்ளத்தில்
சரிகிறார். சில நொடிகள்தான், அவரது உயிர் உடலை விட்டுப் பிரிகிறது.
காவல் நிலைய வாயிலிலேயே சுட்டுக் கொல்லப்
பட்ட, அந்த ஆங்கில அதிகாரியின் பெயர் சாண்டர்சு. காவல் துறை உதவிக்
கண்காணிப்பாளர்.
இளைஞர்கள் கொல்ல வந்தது என்னவோ, மூத்த காவல்
துறைக் கண்காணிப்பாளர் ஸ்காட் என்பவரைத்தான். ஆனால் அன்றைய தினம், அவர் அலுவலகத்திற்கு
வராததால், உதவிக் கண்காணிப்பாளரை, ஸ்காட் என்று எண்ணிச் சுட்டனர்.
அந்த இளைஞர்களைப் பொறுத்தவரை இவரும்
கொல்லப்பட வேண்டியவர்தான்.
லாலா லஜபதிராய் அவர்களின்
மரணத்திற்கு பழிக்குப் பழி வாங்கவே, இந்த துப்பாக்கிச் சூடு.
இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற, சைமன்
கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில், தடியடி நடத்தி, லாலா லஜபதிராயின் மண்டையைப்
பிளந்தவர்கள் அல்லவா இவர்கள் இருவரும்.
லாலா லஜபதிராய் நவம்பர் 17 இல் மறைந்தார்.
சரியாக ஒரே மாதம், அதே தேதியில், டிசம்பர் 17இல் சாண்டர்சு சுட்டுக் கொல்லப்
பட்டார்.
சாண்டர்சுவைச் சுட்டவர் யார் தெரியுமா?
உடன் இருந்தவர்கள் ராஜ குரு, ஆசாத்
மற்றும் ஜெய் கோபால்.
சாண்டர்சுவைக் கொன்றதோடு விடாமல், ஊர்
முழுக்க போஸ்டர் அடித்தும் ஒட்டினார்கள்.
ஆங்கிலேய அரசு விடுமா? லாகூரையே சல்லடை
போட்டு சலித்தது.
பகத் சிங்கும் அவரது நண்பர்களும், தங்களது
நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தனர். ஆனால் அந்த நண்பரோ கல்கத்தா சென்றிருந்தார்.
நண்பரின் மனைவிதான் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுத்தார்.
எப்படியாவது லாகூரை விட்டு வெளியே சென்றாக
வேண்டும்.
நான் உதவுகிறேன் என்றார் நண்பரின் மனைவி.
இவர் யார் தெரியுமா?
---
லாகூர் புகை வண்டி நிலையம். எங்கு
பார்த்தாலும் காவலர்கள், காவலர்கள். புகை வண்டியில் பயணிக்க வந்தவர்களை விட,
பகத்சிங்கைப் பிடிக்க வந்த காவலர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
ஆங்கிலேய அதிகாரி சண்டர்சுவைக் கொன்றவர்களை
தப்ப விடக் கூடாது, பிடித்தே ஆக வேண்டும். கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு
காவல் துறை தேடிக் கொண்டிருந்தது.
ஒரு ஆங்கிலேய அதிகாரி, தொப்பியுடன்,
நிமிர்ந்த நெஞ்சும், நேர் கொண்ட பார்வையுமாய், அலட்சிய நடை நடந்து, புகை வண்டி
நிலையத்திற்குள் வருகிறார். காவலர்கள் ஒதுங்கி வழி விடுகின்றனர்.
அருகிலேயே அவரது மனைவி. விலை உயர்ந்த ஆடை,
குதிகால் உயர்ந்த செறுப்பு, மிடுக்கான பார்வை.
இருவரையும் பின் தொடர்ந்து, ஒரு பணியாள்.
இவர்களது குழந்தையையும், உடமைகளையும் சுமந்தவாறு, பணிவோடு பின் தொடர்கிறார்.
முதல் வகுப்புப் பெட்டியில் ஏறுகின்றனர்.
புகை வண்டி புறப்படுகிறது.
கல்கத்தா சென்றாக வேண்டும். ஆனாலும்
கான்பூரிலேயே இறங்குகிறார்கள். அருகில் உள்ள விடுதியில் தங்கி, மறுநாள் பயணத்தை
தொடருகின்றனர்.
---
கல்கத்தாவில் வசித்து வரும் சுசீலாவிற்கு, அவரது
சகோதரியிடமிருந்து, அப்பொழுதுதான் அந்த தந்தி வந்தது. பிரித்துப் படிக்கிறார்.
சகோதரருடன்
வருகிறேன்.
சுசீலா குழம்பித்தான் போனார். சகோதரனா?
எங்களுக்கு ஏது சகோதரர்?
கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசு
மாநாட்டில், கலந்து கொள்வதற்காக வந்து, தன் மனைவியின் சகோதரியின் வீட்டில்
தங்கியிருந்த, அந்த வாலிபரும், தன் மனைவியின் தந்தியைப் படித்து குழம்பித்தான்
போனார்.
என்
மனைவிக்குத்தான் சகோதரர் யாரும் இல்லையே.
குழப்பம் அடுத்த நாள் தீர்ந்தது.
புகை வண்டியில் பயணித்த ஆங்கிலேய
அதிகாரியும், அவரது மனைவியும், குழந்தையும் மற்றும் பணியாளரும், வீட்டிற்குள்
காலடி எடுத்து வைத்த, அடுத்த நொடி, குழப்பம் மறைந்து, மகிழ்ச்சி மலர்ந்தது.
ஆங்கிலேய அதிகாரியாய் வந்தவர் பகத் சிங்.
பணியாளராய் வந்தவர் ராஜ குரு.
![]() |
பகவதி சரண் வோரா. |
பகத்சிங்கின் மனைவியாய் வந்தவர், பகவதி
சரணின் அன்பு மனைவி, காதல் மனைவி.
குழந்தை இவர்களது காதலில் மலர்ந்த அரும்பு.
மூன்றே மூன்று வயதுடைய மழலை சச்சீந்திரா.
பகவதி சரண் அவர்களின் மனைவி யார் தெரியுமா?
---
1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8. நாடாளுமன்றத்தில்
வெடி குண்டுகள் வீசப் பட்டன. வெடி குண்டினை வீசிவிட்டு, தப்பி ஓடக் கூட
முயற்சிக்காத, பகத் சிங்கும் அவரது நண்பரும் கைது செய்யப் பட்டனர். பின்னர் அவரது
நண்பர்கள் ஒவ்வொருவராய் கைது செய்யப் பட்டனர்.
ஆங்கிலேயருக்குப் பிடிபடாமல் மறைந்து
வாழ்ந்து வந்த, பகவதி சரண் வோரோ அவர்களின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, எரிமலையாய்
கொந்தளித்துக் கொண்டிருந்தது.
பகத் சிங்கையும் நண்பர்களையும் மீட்டாக
வேண்டும். எப்படி மீட்பது?
சிறைச் சாலையில் இருந்து, நீதி
மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது, வெடி குண்டு வீசுவேன், தோழர்களை
மீட்டே தீருவேன்.
தனது தோழர்களுடன் ஒருங்கிணைந்து,
வெடிகுண்டு தயாரிக்கத் தொடங்கினார் பகவதி சரண் வோரா.
காட்டுப் பகுதியில், ராவி நதிக் கரையில்
குண்டு தயாரித்து, வெடித்தும் சோதனை செய்தார். பயிற்சியும் செய்தார்.
பகத் சிங்கை மீட்டே ஆக வேண்டும்.
ஆனால், வெடிகுண்டு சோதனையின் போது, அந்த
பரிதாபம் அரங்கேறியது. தவறுதலாய் வெடித்த ஒரு குண்டு, பகவதி சரண் வோராவை, நார்
நாறாய் கிழித்து எறிந்தது.
செய்தி அறிந்து ஓடி வந்த அவரது மனைவியால்,
வாய் விட்டு அழக்கூட முடியவில்லை. ஊரறிய இறுதிச் சடங்கு கூட செய்ய முடியவில்லை.
பகத் சிங்கை மீட்டாக வேண்டும். வெடி குண்டு
செய்தி பரவினால், ஆங்கிலேயர்கள் சுதாரித்துக் கொள்வார்கள், நிலைமை மாறிவிடும்.
என்ன செய்வது?
மீதமிருக்கும் தோழர்களைக் கொண்டு, பகத்
சிங்கை மீட்டே ஆக வேண்டும்.
என்ன செய்வது?
மனதைக் கல்லாக்கிக் கொண்டார்.
யாராலும் கனவில் கூட நினைத்துப் பார்க்க
இயலாத ஒரு செயலைச் செய்தார்.
பகவதி சரண் வோரா தன் மனைவி, மகளுடன் |
எத்துனை நெஞ்சுரம் வேண்டும்?
இவர் யார் தெரியுமா?
---
வெடி குண்டினால் மீட்க முடியாத பகத் சிங்கை,
காந்தியுடன் பேசி மீட்டிடலாம் என்று எண்ணினார் பகவதி சரண் வோராவின் வீர மனைவி.
காந்தியைச் சந்தித்தார். பேசினார், பேசினார்
நீண்ட நேரம் பேசினார்.
நிமிடக் கணக்கில், மணிக் கணக்கில் நீண்டது
விவாதம்.
புரட்சியைக் கைவிட்டு, அனைவரும் காவல்
துறையினரிடம் சரணடையுங்கள் என்றார் காந்தி.
புரட்சியைக் கைவிடுதல், எம்
தற்கொலைக்குச் சம்ம் என்று காந்தியின் முகத்திற்கு எதிரிலேயே முழங்கி,
வெளியேறினார் இவ்வீரப் பெண்.
நண்பர்களே, இவர், பகவதி சரண் வோராவின் மனைவி
யார் தெரியுமா?
---
பகத் சிங், ராஜ குரு, சுக தேவ் மூவரும்
தூக்கிலடப் பட்டனர்.
புரட்சித் தோழர்கள் ஒவ்வொருவராய் தங்களின்
இன்னுயிரை, நாட்டுக்காக இழந்த போது, இப் புரட்சிப் பெண்ணின் தனிமை வாழ்வு
தொடங்கியது.
ஆயினும் தளரவில்லை இவர்.
1939 இல் சென்னை, அடையாறு, மாண்டிசோரி
கல்வி நிலையத்தில், ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆசிரியரானார்.
1940 ஆம் ஆண்டு லக்னோ நகரில் ஆரம்பப் பள்ளி
ஒன்றினைத் தொடங்கினார். நான்கே, நான்கு மாணவர்களைக் கொண்டுதான் அந்த ஆரம்ப்ப்
பள்ளியைத் தொட்ங்கினார்.
அந்த ஆரம்ப்ப் பள்ளி சில ஆண்டுகளிலேயே,
2500 மாணவர்களைக் கொண்ட, தனிப் பெரும் கல்லூரியாய் விரிவடைந்தது.
புரட்சியில் அரசியல் புரட்சி, சமூக
புரட்சி, இரண்டில் எது நடந்தாலும், எப்போதும், அதில் ஒரு அழகு பிறக்கிறது.
மகிழ்ச்சியையும், பேரழகையும் புரட்சி பிரசவிக்கிறது என்றார் இவர்.
நண்பர்களே,
இவர்தான்
இந்தப்
புரட்சிய வாதிதான்
இந்த
வீரமிகு பெண்ணியவாதிதான்
துர்கா
தேவி.
ஈடு
இணையற்ற நாட்டுப் பற்று
அசாதாரணத்
துணிச்சல்
தியாகத்தின்
திருவுரு
இவற்றின்
மறுபெயர்தான்
துர்கா
தேவி.
இவர்
இவ்வுலக வாழ்வினைத் துறந்தது, சமீபத்தில்தான், மிகச் சமீபத்தில்தான்.
1999
ஆம் ஆண்டு,
அக்டோபர்
15 ஆம் நாள்தான்
தனது
92வது வயதில்
ஓய்வெடுக்கத்
தொடங்கினார்.
துர்கா
தேவி பிறந்த
அக்டோபர்
7 ஆம் நாளும்
மறைந்த
அக்டோபர்
15 ஆம் நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வுலகு
மறந்த
துர்கா
தேவியின்
நினைவினை
நாமாவது போற்றுவோம்
மும்மூர்த்திகளின் மும்முரமான செயல்பாடுகளுக்கு முழுமுதற்காரணம் துர்கா தேவி என்பதை அறிந்தேன். திரைப்படம்போல் நிகழ்வுகளைப் படம்பிடித்துக்காட்ட உங்களால் மட்டுமே முடியும்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபோற்றுதலுக்குரியவர்.
பதிலளிநீக்கு200 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
நன்றி நண்பரே
நீக்கு200 வது அதிவிற்கு வாழ்த்துக்கள் . அதிகம் அறியப்படாத துர்காதேவிபற்றி அறிந்தேன். அருமை ஐயா
பதிலளிநீக்குஅருமையான சரித்திர நிகழ்வை கண்முன் நிறுத்தியமைக்கு முதற்கண் நன்றி நண்பரே
நீக்கு200 வது பதிவுக்கு எமது வாழ்த்துகள்
தமிழ் மணம் 3
நன்றி ஐயா
நீக்குஅருமை அருமை ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துகள் 2000
நன்றி ஐயா
நீக்குசந்தோஷமாக 200 வது வலைப்பதிவு பிறந்த நாள் வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபுரட்சிக் குயில் என்றே இவரை அழைக்கலாமே !
பதிலளிநீக்குவாழ்த்துகள் ,இருநூறைத் தொட்டமைக்கு :)
நன்றி நண்பரே
நீக்குஅருமையான தகவல். இதுவரை அறிந்திராத ஒன்று...
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!
நன்றி நண்பரே
நீக்குதகவல்கள் அருமை ஐயா! 200 பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையான தகவல். நன்றி
பதிலளிநீக்குசில நிமிடங்கள் செயலற்று இருக்கும்படியானது..
பதிலளிநீக்குஇந்த தியாக வரலாற்றினைத் தந்தமைக்கு நன்றி..
நன்றி ஐயா
நீக்குஅன்புச் சகோதரர் அவர்கள் இன்னும் பல நூறு பதிவுகள் தந்திட வாழ்த்துகின்றேன்!..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதங்களது 200 ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwhat a great history narrated in simple way.When I was standing at the memorial of Bhagat sing,Rajaguru and sugdev at Husainiwala,in punjab way back in 1986,I literally collapsed due to emotional outburst.I was aware of this complete events.How ever I was not aware of Durgadevi.Thanks for this.Cogratulations for the 200th blog.You can think of bringing out all these as one or two volumes of publications.Well done.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்குவரலாற்றுப் பெட்டகமாகத் தங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன் நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு200ஆவது பதிவு, முத்தாய்ப்பான பகிர்வு. வாழ்த்துக்கள். துர்காதேவி பற்றி சிறிதளவே அறிந்திருந்தேன். தங்களது பதிவு வரலாற்றை முன் நிறுத்தியது. நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவணக்கம் ஐயா!!! தங்கள் தளத்திற்கு புதியவன்! தங்களின் 200வது பதிவு க்கு நல்வாழ்த்துக்கள்!! துர்க்கதேவி பற்றிய தகவல்கள் அருமை! இனி தொடர்வேன்! ஐயா நன்றி!!!
பதிலளிநீக்குதங்களின் வரவு நல் வரவாகுக
நீக்குநன்றி நண்பரே
200 வது பதிவு மிகவும் சிலிர்க்க வைக்கிற
பதிலளிநீக்குபதிவாய் அமைந்து போனதுதான்.
இது போலான பதிவுகள்நல்ல வரலாற்று பதிவாயும்
நினைவுகளின் மீட்டுருவாக்கங்களாயும்/ நன்றி வணக்கம்/
நன்றி நண்பரே
நீக்குதுர்காதேவிபற்றி அறிந்தேன். அருமை
பதிலளிநீக்குஎழுதிய விதமும் அழகு
நன்றி சகோதரியாரே
நீக்குஇத்தகைய அரிய தகவல்களை
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துக்களில் வாசிக்கையில்
மனம் நெகிழ்கிறது.
200 பதிவுக்கும் இனி வரப்போகும் பல சிறப்பான
பதிவுகளுக்கும் வாழ்த்துகளுடன்
மிக்க நன்றி அய்யா.
நன்றி நண்பரே
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குமாவீரன் பகத் சிங், ராஜ குரு, ஆசாத் மற்றும் ஜெய் கோபால் வீர வரலாற்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டினீர்கள்.
வீரத்திருமகள் துர்கா தேவி தன் கணவனின் உடலை ஓடும் நீரில், மூழ்கச் செய்து, நீர் சமாதி செய்தார். துணிச்சல்தான் என்னே!
புரட்சியைக் கைவிட்டு, அனைவரும் காவல் துறையினரிடம் சரணடையுங்கள் என்றார் காந்தி.
புரட்சியைக் கைவிடுதல், எம் தற்கொலைக்குச் சம்ம் என்று காந்தியின் முகத்திற்கு எதிரிலேயே முழங்கி, வெளியேறினார் இவ்வீரப் பெண்.
ராயல் சல்யூட்.
நன்றி.
த.ம. 10
துர்கா தேவி போற்றப்பட வேண்டியவர்
நீக்குநன்றி ஐயா
வாழ்த்துக்கள் சகோ,
பதிலளிநீக்குஅருமையான செய்தியை முன்வைத்தீர், போற்றப்படவேண்டியவர்,,,,,
வாழ்த்துக்கள் சகோ,,,,,,
நன்றி சகோதரியாரே
நீக்குஇதுவரை நான் அறியாத செய்தி. உங்களுக்கே உரித்தான நடையில் கண்டு மகிழ்ந்தேன் . இவற்றையெல்லாம் படிக்கும் போது உணர்ச்சி வசப் படுகிறோம் . இருந்தாலும் அந்த கால கட்டத்தில் அவர்கள் தீவிர வாதிகளே. அவர்களது புகழ் வலுப்பது நாட்கள் ஆக ஆகத்தான் . இதேபோல் காலிஸ்தான் தீவிரவாதிகளும் பின் ஒரு காலத்தில் போற்றப் படலாம் எந்த நேரத்திலும் அஹிம்சையைப் போதித்த காந்திவழி நான் நினைக்கிறேன் புரட்சிகள் நடந்து முடிந்து பின் வெற்றி அடைந்தால் சரித்திரம் ஒரு மாதிரியாகவும் தோல்வி அடைந்தால் வேறு மாதிரியாகவும் எழுதப் படும்
பதிலளிநீக்குபகத் சிங் அவர் வாழ்ந்த காலத்திலேயே போற்றப் பட்டவர்தான் ஐயா
நீக்குநன்றி ஐயா
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்கு200....300...400..500..1000 என்று தங்களுடைய பதிவுகள் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன், அவற்றை நாங்கள் அனைவரும் வாசித்துக் கொண்டே வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். ’துர்காதேவி’ பற்றிய பதிவினை அனைத்து வயது பெண்களும் ஏன் ஆண்களும் படித்து நம்பிக்கையும் உத்வேகமும் பெற வேண்டும். தங்களின் அனைத்துப் பதிவுகளும் மிகப் பெரிய பொற்குவியலாக திகழப் போவது திண்ணம்,
நன்றி நண்பரே
நீக்குஎல்லாம் புதிய விஷயங்கள். தகவல்களுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகதை போலச் சொல்லிச் சென்ற விதம் அருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவீரப் பெண் துர்கா தேவியின் வரலாறினை அறியமுடிந்தது... நன்றி!
பதிலளிநீக்கு200-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்...
நீக்கு1000-மும் விரைவில், இறை நாட்டத்தினால்...
நன்றிநண்பரே
நீக்குநன்றி நண்பரே
நீக்குஅன்பின் கரந்தை ஜெயக் குமார்
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பிஉக்கிறேன்..200 வது பதிவினை படித்து விட்டேன். அரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். மிக மிக மகிழ்ந்கேன். இனி அத்தனை பதிவுகளையும் படித்து மகிழ்கிறேன். தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் கரந்தை ஜெயக் குமார்
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பிஉக்கிறேன்..200 வது பதிவினை படித்து விட்டேன். அரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். மிக மிக மகிழ்ந்கேன். இனி அத்தனை பதிவுகளையும் படித்து மகிழ்கிறேன். தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குஅன்பின் கரந்தை ஜெயக் குமார்
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பிஉக்கிறேன்..200 வது பதிவினை படித்து விட்டேன். அரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். மிக மிக மகிழ்ந்கேன். இனி அத்தனை பதிவுகளையும் படித்து மகிழ்கிறேன். தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குமுதலில் 200ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதொடர்ந்து ஆயிரக்கணக்கில் எழுதுங்கள்
வாசிக்க நாம் வருவோம்!
இவ்வாறான நாட்டுபற்றாளர்களை
நாளைய தலைமுறைக்கு
எடுத்துச் சொல்வது பாரிய பணி!
தொடருங்கள்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குநல்ல தகவல்
பதிலளிநீக்குஇனிய நன்றி சகோதரா.
சொல்ல வந்த செய்தியும் சொல்லிய விதமும் உங்களுக்கே உரியது!அழகு அழகு!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குபகவதி சரண் வோராவுக்குப் பின்னால் இவ்வளவு செய்திகள் இருப்பதை இன்றே அறிந்தேன். துர்காதேவியையும் இன்றே அறிந்தேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். அரிய தகவல்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குதாமதமானால் என்ன சகோதரியாரே
நீக்குநன்றி
உங்களையல்லாமல் இப்படி உணர்ச்சிகளைக் குழைத்து ஒரு பதிவை எழுதுபவரை நான் கண்டதில்லை. உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.
பதிலளிநீக்கு200 க்கும் இன்னும் பல ஆயிரத்திற்கும் வாழ்த்துகள்.
தம கூடுதல் 1
தங்களின் அன்பிற்கு நன்றி நண்பரே
நீக்குபோற்றுதலுக்குரிய ஒரு பெண்மணி பற்றிய பதிவு தங்களது 200-வது பதிவாக மலர்ந்திருப்பதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபாராட்டுகள் ஐயா.
நன்றி ஐயா
நீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஒரு வீரப் பெண்ணின் வரலாறு வாசிக்கையில் மெய் சிலிர்க்கிறது
அவரின் நினைவுநாளில் பகிர்ந்தமைக்கு நன்றிகள்
தொடரட்டும் தங்கள் பணி வாழ்க வளமுடன்
தம +1
அரிய அறியாத தகவல்கள். சுவராஸ்யமாகவும் எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குதுர்க்கா தேவி பற்றிய எழுத்துரு ரெம்ப விறுவிறுப்பாக அமைந்து மனதில் பதிந்து விட்டது. வாழ்த்துக்கள்...உடுவை
பதிலளிநீக்கு