13 செப்டம்பர் 2015

விசையினிலே தமிழ் விரைவில் வேண்டும்




கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரையில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
                              மகாகவி பாரதி

    கல்தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளொடு முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்க் குடி என்பர் நம் முன்னோர்.

       இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, இலத்தீன், சமஸ்கிருத மொழிகள் இன்று வழக்கில் இல்லை. ஆயினும் அதற்கும் முன்னரே, இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நம் மொழி, நம் தமிழ் மொழி, நம் செம்மொழி இன்றும் பேச்சில், எழுத்தில், அச்சில் நிலைத்து நிற்கின்றது.


      நிலைத்து நிற்பது மட்டுமல்ல, வரி வடிவத்திலும், இலக்கண அமைப்பிலும் மாறாமல், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்து, நீடித்து நிற்கும் மொழியாகவும் தம் மொழி விளங்கி வருகின்றது.

    களி மண் ஓட்டில், கற் பாறைகளில், பனை ஓலைகளில், ஏட்டில், அச்சில் என வளர்ந்து வந்த, நம் மொழி, நம் தமிழ் மொழி, இன்று கணினியிலும் கால் பதித்து, இணைய மொழியாகவும் உயர்ந்துள்ளது.

     கணினிப் பயன்பாட்டில், உலக மொழிகளில், தமிழ் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது என்கின்றனர். மெய்யோ, பொய்யோ ஆயினும், உலக மொழிகளில் தமிழ் தவிர்க்க இயலாத இடத்தினை, கணினியில் அடைந்துள்ளது என்பது மட்டும் மறைக்க இயலாத உண்மையாகும்.

      ஆனாலும் மென் பொருள் உருவாக்க முறைகளிலும், பயன்பாட்டு நிலைகளிலும்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள், குழப்பங்கள்.

       நான் ஒரு கணித ஆசிரியர். கடந்த சில வருடங்களாக, இணையப் பயன்பாட்டில், காலடி எடுத்து வைத்து, நடை பயிலக் கற்று வருபவன்.

     என் இல்லத்திலும், என் பள்ளியில் அலுவல் சார்ந்த கணினி செயற்பாட்டிலும், நான் எதிர்கொண்டு வரும் இன்னல்கள் குறித்துப் பகிர்வதும், தீர்வு தாருங்கள் என கணினி வல்லுநர்களிடம் வேண்டுவதுமே எனது எழுத்தின் நோக்கமாகும்.

     கணினித் தமிழ் செயல்பாட்டின் அடைப்படை விசைப் பலகையாகும்.
     

தமிழர்களும், தமிழ் முற்றக் கற்றுணர்ந்த தமிழாசிரியர்களும், தமிழையும் கற்காமல், கணினியையும் அறியாமல், இரண்டையுமே எட்ட நின்றே நேசிக்கும் என் போன்ற கணித ஆசிரியர்களும் தடுமாறும் இடம் இந்த விசைப் பலகையே ஆகும்.

        ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும், போகிற போக்கைப் பார்த்தால் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு வகையான விசைப் பலகைச் செயற்பாடுகள் கொடி கட்டிப் பறக்கின்றன.

    சில இடங்களில் தட்டச்சு முறைச் செயல்பாடு, சில இடங்களில் ஒலிக் குறிப்பு முறைச் செயல்பாடு. குழப்பம்தான் மிஞ்சுகிறது.

    தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான கணினிகள் நுழைந்தும், ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வீட்டிலும் கணினி நுழைந்தும், பயன் என்ன? இன்றும் ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய விசைப் பலகைதானே விலைக்குக் கிடைக்கின்றது.

      எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறோம், கணினியில் இவ்வார்த்தைகளை, உரத்து முழங்குவதற்குக் கூட, ஆங்கில விசைப் பலகைதான் தேவைப் படுகிறது.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி
என்று முழங்குவான் பாரதி, கணினி விசைத் தமிழ் ஆயிரமாயிரம் இருந்தாலும், ஆங்கில விசைப் பலகை அன்றோ, நம் தமிழை இன்றும் ஆள்கிறது.
     

தமிழ் எழுத்துக்களைக் கொண்ட, கணினித் தமிழ் விசைப் பலகைகள் நம் இல்லங்களில் நுழையும் நாள் எந்நாளோ?

       தமிழில் விசைப் பலகைகள் உருவாகாதமைக்குக் காரணம், கணினி தமிழ் எழுத்துருவாக்கங்களில் நிலவும் வேறுபாடுகளும், சிக்கல்களுமே எனலாம்.

      அலுவலகப் பயன்பாட்டில், அனைத்து துறைகளிலும் இன்று கணினி வந்து விட்டது. ஆனாலும் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு எழுத்துருவைப் பயன்படுத்துகிறது.

      துறைசார்ந்த செய்திகளைப் கணினியில் படிக்க முடிகின்றது. ஆனால் அச்சிட முயன்றால், விநோத குறியீடுகள் அச்சேறி, வெளி வந்து நம்மை பயமுறுத்துகின்றன.

      பல ஆண்டுகளுக்கு முன், கணினியில் சேமித்து வைத்த, செய்திகளை, கட்டுரைகளை இன்று படிக்க முடிவதில்லை. காரணம் அன்றைய எழுத்து இன்று கணினியில் இல்லை.


      இக்குறைகளை எல்லாம் என்று நாம் களையப் போகிறோம். இந்த பூமிப் பந்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியுள்ள, நம் தொப்புள் கொடி உறவுகள், அனைவரும் பயன் படுத்தும் வண்ணம், ஒரு பொதுவான, எளிமையான விசைப் பலகையினை என்று நாம் உருவாக்கப் போகிறோம்.

     கணினித் தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் மேன்மை பெற்று விளங்கும், பன்னாட்டுத் தமிழறஞர்கள் ஒன்று கூடி, ஆய்ந்து, ஒற்றுமையாய் ஒரு முடிவெடுத்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் போல், உலகத் பொதுக் கணினி தமிழ் எழுத்து முறையினை, உருவாக்கிட வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.

வெல்க தமிழ்.

------------------

நண்பர்களே,
வலைப்பதிவர் திருவிழா-2015
மற்றும்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
நடத்தும்
மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது
இதற்கு முன் வெளியான படைப்பல்ல,


கணினியைத் தொட்ட நாள் முதல்
உள்ளத்தில் தேங்கியிருக்கும்
என் எண்ணம்
என் எதிர்பார்ப்பு
என் விருப்பம்
இது.


79 கருத்துகள்:

  1. சிறந்த கருத்துக்களை முன் வைத்திருக்கின்றீர்கள்..

    சீர்மிகும் எண்ணம் - சிறப்புடன் வெல்க!..

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கருத்து நண்பரே விரைவில் நிறைவேற்ற அரசு முன்வரும் என்று நம்புவோம் வாழ்க தமிழ்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. ஆசை சீக்கிரம் நிறைவேறட்டும்.
    தம +1

    பதிலளிநீக்கு
  4. இது சீக்கிரம் நடக்க வேண்டும் ஜெயக்குமார். தமிழில் மட்டும் கீபோர்ட் வந்துவிட்டால் அமுதம் தான். கனவு மெய்ப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. கணினித் தட்டச்சு செய்யத் தொடங்கிய நாள் முதல் என் ஆசை இதுவே. நம் இந்த எண்ணம் ஈடேறும் நாளை ஆவலோடு நான் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நமது எண்ணம் ஈடேறும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  6. கனவு மெய்ப்பட வேண்டும். வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  7. விரைவில் வெளிப்படும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  8. விரைவில் வெளிப்படும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  9. விரைவில் வெளிப்படும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அய்யா
    தங்களின் ஆதங்கம் மிகவும் ஏற்புடையது. அன்னைத் தமிழில் எழுதுவதற்கே அடுத்த மொழியை நாட வேண்டிய அவலநிலை என்று மாறும் என்று நானும் பல சமயங்களில் யோசித்தது உண்டு. அழகான சிந்தனைக்கு வித்திட்ட பகிர்வுக்கு நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு
  11. தமிழ் கீ போர்டு வந்து விட்டது என்றாலும் நாம் இன்னும் அதற்கு பழகவில்லை என்பதே உண்மை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் விசைப் பலகை இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றே எண்ணுகின்றேன் நண்பரே

      நீக்கு
  12. தேவையான கருத்து தான். ஆனால் தமிழ் விசைப்பலகை ஏற்கெனவே இருக்கிறதாய் அறிகிறேன். தமிழ்த்தட்டச்சில் பழகியவர்களுக்கே அதில் அடிக்க முடியும். இந்த இ கலப்பையில் தங்கிலீஷிலும் அடிக்கலாம். ஆகையால் பெரும்பாலோருக்கு இது வசதி என்றாலும் கௌ, சௌ, ஔ போன்றவற்றை அடிக்க இதில் கொஞ்சம் மெனக்கிட வேண்டும். தமிழ் விசைப்பலகையில் அந்தப் பிரச்னை இருக்காது என நம்புகிறேன். பார்த்தது இல்லை. ஆனால் தமிழ்த் தட்டச்சு கற்கையில் "யளனகபக" அடித்துப் பழகுகையில் பார்த்திருக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பார்த்தது இல்லை. ஆனால் தமிழ்த் தட்டச்சு கற்கையில் "யளனகபக" அடித்துப் பழகுகையில் பார்த்திருக்கிறேன். :)//

      //கணினியில் பார்த்தது இல்லை. ஆனால் தமிழ்த்தட்டச்சுக் கற்கையில் தட்டச்சு மிஷினி பார்த்திருக்கேன்.//
      இப்படி வந்திருக்கணும். எழுத்துகள் விடுபட்டுப் போய்விட்டன. :) மன்னிக்கவும்.

      நீக்கு
    2. //மிஷினில்//
      விசைப்பலகையில் சில எழுத்துகள் சரிவர வருவதில்லை. :)

      நீக்கு
    3. பல விதமான விசைப் பலகைகள் பரிசீலிக்கப் பட்டதாகவும்
      ஆனால் ஒற்றுமை ஏற்பட வில்லை என்று படித்ததாக நினைவு சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  13. எண்ணம் போல் எல்லாம் நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  14. விரைவில் நிறைவேறும். நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள்! நண்பரே!

    பதிலளிநீக்கு
  15. தமிழ் விசைப்பலகை இருக்கின்றதே நண்பரே! தமிழ் தட்டச்சு கற்றிருக்கின்றோம்....

    இப்போது ஆங்கில விசைப்பலகையில் அழகி மென்பொருள் பயன்படுத்தி அடிப்பது எளிதாகத்தான் இருக்கின்றது என்றாலும் சிறிய சிறிய உதாரணத்திற்கு மெய்யெழுத்துகள்/மிகும் இடங்களில் அடிக்கும் போது சில சமயம் கூடுதலாக மிகுந்து பொறுமையைச் சோதிக்கும் ...அவ்வளவே..என்றாலும் தமிழில் விசைப்பலகை பயன்படுத்தும் வகையில் வந்துவிட்டால் மிக மிக நல்லதே....நீச்சல்காரனிடம் தீர்வு இருக்கும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      நான் தமிழ் ஆங்கிலம் இரண்டும் தட்டச்சுக் கற்றவன்.
      இரண்டிலுமே ஹையர் தேர்வு தேறியிருக்கின்றேன்
      இப்பொழுது ஆங்கில விசைப் பலகையில்,தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சு செய்து வருகின்றோம்
      தமிழ் விசைப் பலகை வெளிவரும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  16. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தங்களின் ஆசையே எங்களின் ஆசையும். நிறைவேறும் காலம் வெகு அருகில் என்று எண்ணி காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  17. இனிய தமிழில் கீ போர்ட் இருக்கிறது,ஆனால் தாங்கள் வெளியிட்டுள்ள தமிழ் கீ போர்ட் படத்தைப்பார்க்கும் போது எழுத்துக்கள் குழப்புகிறது போல் உள்ளது,ஒரு வேலை பழகினால் சரியாகிப்போகலாம்/எதுவுமே பை பிராக்டீஸ்தானே,,,?

    பதிலளிநீக்கு
  18. friends, as the keyboards cheat me, i write this in English. pardon me. When computers were invented, IBM launched mainframe computer and IIT Madras the only place where all the commercial companies used it for commercial purpose. In 1970s there were no monitors. we had to input each letter in a separate card by punching machine. they were taken in a tray to a card reader which read them and the result will come as a print out in a Console. we have to make corrections and again feed them. i had a training there when there was no comp. courses available. In Tamil University in 1982 myself and prof.KK.Chellamuthu established a computer center when monitors came in but the O.S. was DOS only. No cursors or mouses were available. In dot matrix printer, we made some program to bring out tamil alphabets. we succeeded. but letters were not beautiful. I conducted the first National computer seminar, bu tnobody could understand. But UNESCO AND INDIAN NATIONAL LIBRARY commended our service. we have brought out 5 vols. of International ctalogue of Tamil Palmleaf manuscripts 5 vols. in english and 5 vols. in Tamil. but they were no recognized as the tamil letters were not beautiful. By that period one Mr. srinivasan from Bangalore came out with a keyboard using his software ADAMI. It was better. soon for DTP many other fonts have come out.. still there is no uniformitiy. IT IS A PITY TO SEE MOBILE MICROMAX 2 comes with tamil fonts and if we type in tamil and send sms , at the oter end, they can read it in English. COMPUTER AGE GAS GONE. MOBILE AGE IS DOMINATING. They bring CPU, processors and other applictions only in mobile cel phones. YOU MUST KNOW THAT THERE IS A SOFTWARE KEDIT. U can download and install it. while entering data line by line u have to use the ttf font Helvetica Ananku. In K Edit just like MS Word u can type in tamil . after ur finish typing few pages, at the bottom a line will appear...... search for.... if u say all/ karanthai all the lines in ur article with the word karanthai will be shown in black letters. this can be used as a software to search from 1000s of entries to search a particular word. this helvetica ananku keyboard will be like the previous Tamil trypewriting keyboard. u can try urself as a search software in Tamil. But Uniformity of English keyboards to be used as Tamil keyboards should be insisted and standardization should be arrived at. Prof. Dr. T. Padmanaban, Tamil research I.T.Center 13 sep. 2015. I have entered a tamil database of all talkie tamil cinema books and entered in this software that is from 1930s to 1990s in K Edit. I have all tamil cine songs from 1951 to 1960.- in mp3 format. our friends can call me 9443617851 or mail to drtpadmanaban@gmail.com for songs or film history.Service minded people should unite and do some help for the society otherwise our tamil culture will be spoiled.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அயரா பணி போற்றுதலுக்கு உரியது ஐயா
      நீண்ட கருத்துரைக்கும் வருகைக்கும்
      மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  19. உண்மைதான் ஐயா! கனவுகள் கட்டயாம் மெய்ப்படும்!
    நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

    த ம+1

    பதிலளிநீக்கு
  20. ஆஹா!! சிங்கம் ஒன்று புறப்பட்டுவிட்டதே!!! வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  21. தமிழ் தட்டச்சு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குதமிழ் ஆங்கிலம் இரண்டும்
      தட்டச்சு தெரியும் ஐயா
      இரண்டிலுமே ஹையர் தேர்வு தேறியிருக்கின்றேன்
      ஆனாலும் ஆங்கில விசைப் பலகையில் அல்லவா
      தமிழினைத் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது
      நன்றி ஐயா

      நீக்கு
  22. நல்ல கருத்துதான். தங்களின் ஆசை சீக்கிரம் நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  23. எடுத்துக்காட்டாக
    பாரதி பாடல் கூறி

    "தமிழ் எழுத்துக்களைக் கொண்ட, கணினித் தமிழ் விசைப் பலகைகள் நம் இல்லங்களில் நுழையும் நாள் எந்நாளோ?" என்ற சிறந்த அறிவியல் பதிவினைத் தந்து எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

    "தமிழ் எழுத்து முறையினை, உருவாக்கிட வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்." என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

    சிறந்த ஆய்வுப் பதிவு
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  24. உண்மையைச் சொல்லும் உங்களின் ஆதங்கம் புரிகிறது.நமது தலைமுறையிலேயே எல்லாவற்றுக்கும் வழி கிடைத்துவிடும்

    பதிலளிநீக்கு
  25. நல்ல பகிர்வு சகோ,
    விசைப் பலகை இருக்கிறது. இது பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை,நாம் விசைப்பலகையை செயலாக்க பழக வேண்டும், ஆனால் அவை வேறு வேறான முறையில் இருப்பது தான்,
    தங்களின் எதிர்பார்ப்பே அனைவருக்கும், தொடங்கிவிட்டீர்,,,,
    நம்புவோம். நன்றி சகோ,

    பதிலளிநீக்கு
  26. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்....!..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
      ஓர் உன்னத குறிக்கோள் ஐயா
      நிறைவேறும்என்று எதிர்பார்ப்போம்

      நீக்கு
  27. நிறையவே சாதக பாதகங்கள் இருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒத்த கருத்து ஏற்படாததால்
      முயற்சி பாதியிலேயே நிற்பாதாக கூறுவார்கள் ஐயா
      நன்றி

      நீக்கு
  28. தமிழ் எழுத்துருச் சிக்கலுக்குத் தக்க தீர்வாக இந்த பதிவா் சந்திப்பு அமைய முயற்சி மேற்கொள்வோம் நண்பரே.

    பதிலளிநீக்கு
  29. பலருடைய ஆதங்கத்தையும் அழகாக வடித்த கட்டுரை.. இக்கட்டுரை வாயிலாய் சிறப்பான முன்னெடுப்புகள் துவங்கப்பட்டால் அது பலருக்கும் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  30. ஆஹா! அண்ணா, முதலில் வெற்றிபெற வாழ்த்துகள்!
    உடனே பதிவிட்டுப் போட்டியைத் துவக்கி வைத்துவிட்டீர்கள் :)
    அருமையான கட்டுரை

    பதிலளிநீக்கு
  31. உங்கள் கட்டுரையின் நல்ல நோக்கம் நிறைவேறட்டும். ஒரு காலம் வரும். எங்கள் தமிழ் வெல்லும்! வெல்லும்!

    பதிலளிநீக்கு
  32. மொத்தம் ஐந்து வகைகளில் போட்டிக் கட்டுரைகள் உள்ளன... அதில் எந்த வகை என்பதை மறவாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழ் கொடுக்கவும்... நன்றி...

    மேலும் இதுவரை வந்த கட்டுரைகளை காண சொடுக்குக இங்கே --> சபாஷ்... சரியான போட்டி...!<---

    புதுக் கோட்டை விழாக் குழுவின் சார்பாக
    திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  33. Anna muthal katturrai muthal viruthai vetri pera valthukal.ungal aasai niraiverattum...anna

    பதிலளிநீக்கு
  34. உலக பொதுக்கணினித் தமிழ் எழுத்து முறை விரைவில் உருவாகும். தங்கள் கனவும் மெய்ப்படும். உலகம் முழுமையுள்ள தமிழ்க் குமுகாய்ம் பயனுற்று மகிழும்.

    பதிலளிநீக்கு
  35. your uripani ulakil katturai very interstly 9 th part not recevied my net or wrongly delited plese re send it
    thank you


    yours
    P vellaidurai

    பதிலளிநீக்கு
  36. your uripani ulakil katturai very interstly 9 th part not recevied my net or wrongly delited plese re send it
    thank you


    yours
    P vellaidurai

    பதிலளிநீக்கு
  37. சரியான நேரத்தில் சரியான பகிர்வு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோ. :)

    பதிலளிநீக்கு
  38. மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம்.தங்களது கட்டுரை சிந்திக்க வைக்கும்விதமாக அமைந்துள்ளதுங்க.அதே சமயம் தங்களது கட்டுரையில்,
    ''தமிழர்களும், தமிழ் முற்றக் கற்றுணர்ந்த தமிழாசிரியர்களும், தமிழையும் கற்காமல், கணினியையும் அறியாமல், இரண்டையுமே எட்ட நின்றே நேசிக்கும் என் போன்ற கணித ஆசிரியர்களும் தடுமாறும் இடம் இந்த விசைப் பலகையே ஆகும். என்று உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளீர்.தமிழ் முற்றாக கற்றுணர்ந்த தமிழாசிரியர்களே கணினியின் பக்கம் வருவது இல்லை'' என்பதற்கு தற்போதைய கட்டுரைப்போட்டிகளில் எத்தனை படைப்புகள் வந்துள்ளன? என்ற எண்ணிக்கையே சான்றாகும். அதேபோல தங்களது பதிவில்,''சில இடங்களில் தட்டச்சு முறைச் செயல்பாடு, சில இடங்களில் ஒலிக் குறிப்பு முறைச் செயல்பாடு. குழப்பம்தான் மிஞ்சுகிறது.எனவும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்.ஆனால் இந்த முறையில் குழப்பத்தை தவிர்க்கவே ,தமிழ்நெட்'99 முறை சிறப்பான தட்டச்சுமுறை என்பதை தாங்கள் உட்பட தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டியதாகும்.ஓட்டுநர் பணி புரியும் நானே தமிழ்99 முறையால்தாங்க இந்தளவு சிறப்பாக கணினியையும்,இணையத்தையும் கையாள முடிகிறது.ஆதலால் தமிழ்99 ஒலிப்பியல் முறை பற்றி நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும்.அதன் எளிமை,இலக்கணத்துல்லியம் பற்றி பரப்புரை செய்ய வேண்டும். அதைத்தாங்க நான் பள்ளிகள் தோறும் செய்து வருகிறேன். வாழ்த்துக்களுடன்,
    அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    Face Book ID : parameswaran driver
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    பதிலளிநீக்கு
  39. சிந்திக்க வைத்தச் சிறப்பான கருத்துக்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  40. கனவுகள் கண் முன்னே தோன்றும் வெகு விரைவில்.
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  41. சகோ சீர்மிகு சித்தர்கள் உருவாகிக்கொண்டேஇருக்கின்றனர் குறைகள்
    தீரவெகுநாட்களில்லை, அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  42. தட்டச்சு, கணினி இரண்டிலும் ஆங்கில மொழியை சுலபமாகக் கையாளுவது போல தமிழ்மொழியை கையாள முடியவில்லையே என்ற கவலை எனக்கும் உண்டு... உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு