மறு ஜென்மம்
ஓர் மனித உடல்.
பனியில் சற்றேறக்குறைய
முழுவதுமாய், புதைந்து போன நிலையில், விறைத்துப் போன ஓர் உடல்.
அவசர அவசரமாகப் பனியினை
அகற்றி, உடலினைத் தூக்க முயன்றனர். முடியவில்லை. உடலோடு பனியானது
அகற்ற இயலாத நிலையில் ஒட்டிக் கொண்டிருந்தது. தலையும், இரு கைகளும் மட்டுமே
வெளிப்புறம் தெரிந்ததே தவிர, உடலானது, பனிக் கட்டிக்குள் முழுவதுமாய் மறைந்திருந்தது.
லேசாக, மிகவும் லேசாக, இளம்
சூடாய், மிகவும் இளம் சூடாய், மெதுவாக, மிக மெதுவாக மூச்சுக் காற்று வந்து
கொண்டிருந்தது.
உயிர் இருக்கிறது. காப்பாற்றி
விடலாம்.
சுதாகர் ராவ் அவர்களின் இரு
கைகளையும், ஆளுக்கொரு கையால் பிடித்து இழுத்தனர். உடல் மட்டும் வரவில்லை. உடலோடு
ஒட்டியிருந்த பனியும், ஒரு பெரு மூட்டையாய், ஒடலோடு ஒட்டியவாரே வந்தது.
இருவரும், ஆளுக்கு ஒரு
கையால் சுதாகர் ராவ் அவர்களையும், மற்றொரு கையால் நைலான் கயிற்றினையும் பிடித்துக்
கொண்டு, பனி மூட்டைக்குள் புதைந்திருந்த சுதாகர் ராவ் அவர்களை, பனியோடு இழுத்துக்
கொண்டு ஏணி வரை வந்தனர்.
அதற்குள் மற்றவர்களும் ஏணி
வழியே எட்டிப் பார்க்கவே, அனைவரின் உதவியுடனும், ஏணியில், சுதாகர் ராவை மெதுவாக
மேலே ஏற்றினர். பின் ஆய்வுத் தளத்திற்குள் இறக்கினர்.
ஆய்வுத் தளத்திற்கு வெளியே
அதிக நேரம் இருப்போமேயானால், குளிரினாலும், பனிக்
காற்றினாலும், உடலின் வெளிப் பாகங்களிலும், பனி உடையின் மேற்புறத்திலும் பனி
உறையத் தொடங்கி விடும்.
முகம், மீசை, தாடி, கண் இமை
போன்ற இடங்களில் பனி உறைந்து கட்டியாகிவிடும். கண் இமையினை மூடக் கூட இயலாது.
இப் பனியை கைகளாலும் அகற்ற
இயலாது. கைகளால், உடலில் உறைந்திருக்கும் பனியை நீக்க முயன்றால், முகம்,
தோல், முடி இவையெல்லாம், பனியோடு சேர்ந்து பிய்த்துக் கொண்டு வந்து விடும்.
எனவே இப்பனியினை
நீக்குவதற்கான ஒரே வழி, இவற்றை உருக வைப்பதுதான்.
![]() |
பாராட்டுக் கடிதம் |
மேலும் ஆய்வுத் தளத்தில் 24
மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும், ஜெனரேட்டரின், விசிறியின் மூடி
திறக்கப்பட்டது. அதன் அருகில் சுதாகர் ராவ் நிற்க வைக்கப்பட்டார்.
ஜெனரேட்டரின் விசிறியானது
வெப்பத்தை வெளித் தள்ளும். எனவே மின் விசிறியின் வெப்பத்தால், சுதாகர் ராவ்
அவர்களின் உடலில் ஒட்டியிருந்த, பனி மூட்டை, கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்தது.
உடலும் கொஞ்சம் கொஞ்சமாக,
சூடேறத் தொடங்கியது.
சுதாகர்
ராவ் மெல்லக் கண் விழித்தார்.
ஆய்வுக் குழுவினர் நிம்மதி
பெரு மூச்சு விட்டனர்.
ஆய்வுக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்ட, சில நாட்களில், இரவில், வானில் அந்த அதிசயம் அரங்கேறியது.
தொடரும்
இப்பொழுதான் எனக்கும் மூச்சு வந்தது நண்பரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅப்பாடா..... நல்ல வேளை பிழைத்துக் கொண்டாரே.....
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி ஐயா
நீக்குபிழைத்தது ஆச்சர்யமாக உள்ளது. வான் அதிசயத்திற்காகக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅப்பாடா...!
பதிலளிநீக்குஅதிசயம் காண ஆவலுடன் உள்ளேன்...
நன்றி ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
படித்த போது வியப்பாக இருந்தது.. அறிய வேண்டிய தகவல்... பகிருங்கள் ஐயா.. த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குகாப்பாற்றப்பட்டு விட்டாரே அதுவரையில் போதும்!
பதிலளிநீக்குதொடருகிறேன் ஐயா!..
நன்றி சகோதரியாரே
நீக்குappaada nimmathi.. :)
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅப்பாடா, ...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅப்பாடா, ...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅப்பாடா, ...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகாப்பாற்றியாச்சு. அதிசயம் அறிய தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஆஹா, திகில் கதை. படித்து விட்டு இரவில் பயங்கர கனா காணவேண்டுமே? ஐயோ, பயமாக இருக்கிறதே?
பதிலளிநீக்குபயமா?
நீக்குதங்களுக்கா?
நன்றி ஐயா
அப்பாடி... இப்போதுதான் எங்களுக்கும் மூச்சு வருகிறது.
பதிலளிநீக்குதம +1
நன்றி நண்பரே
நீக்குபடபடக்கின்ற நெஞ்சுடன் வாசித்தேன்.. அந்த உயிர் காப்பாற்றப்பட்டதும் தான் நிம்மதி..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதிகில் கதை போல உள்ளது..சுவாரசியமாக உள்ளது
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅவர் க்ண் விழித்தார்;நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசரியான நேரத்தில் புதைந்து கொண்டிருந்த சுதாகர் ராவை காப்பாற்றிய கல்னலுக்கும் அவர் குழுவினருக்கும் பாராட்டுகள். தொடர்கிறேன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅதிசயம் காண ஆவலோடு இருக்கிறேன் !
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇது ஒரு மனித உடல் அற்புதம் அய்யா...
பதிலளிநீக்குஅவர் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சரியான முதலுதவி தரப்பட்டு காப்பற்றப்பட்டிருக்கிறார்.
செமையான விவரணை
தொடருங்கள்
நன்றி நண்பரே
நீக்குதம +
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம் அய்யா !
பதிலளிநீக்குவியக்கும் தொடர் ! பனியோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கின்றோம் அருமை ஐயா வானில் நடக்கும் நிகழ்வையும் பார்க்கும் ஆவலுடன் !
வாழ்க வளமுடன்
தம +1
நன்றி நண்பரே
நீக்குசுதாகர்ராவ் காப்பாற்றப் பட்டார்.அடுத்து என்ன அதிசயம்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்குசிலிர்க்க வைக்கிறது அவர் ஆபத்திலிருந்து உயிர் பிழைத்த விதம்!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஇறை அருளால் சுதாகர் ராவ் பிழைத்த விஷயத்தை அறிந்து கொண்டு மெய் சிலிர்த்தேன். நிச்சயம் இது ஓர் அதிசயம் தான். அனைவரும் சேர்ந்து உழைத்த உழைப்பு வீண் போகவில்லை.
பதிலளிநீக்குதெய்வாதீனமாக தப்பினேன் என்பார்கள். சுதாகர் ராவ் தப்பியதும் இவ்வாறுதானோ? அவர் இப்போது தமிழ்நாட்டில் இருந்தால் அவரை பேட்டி எடுத்து ஒரு பதிவு எழுதுங்கள்.
பதிலளிநீக்குthank you sir thodarin oru paguthi vedupattu poi vedumennru nenaithen tharpothu padithu vittan nantri
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குதிரு.சுதாகர் ராவ் அவர்களை காப்பாற்றிய குழுவினை மனமார பாராட்டுவோம்.